Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-06

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-06
மகி ...மகி கொஞ்சம் எழுந்திரு, நிலா ஈஷ்வரை எழுப்பிக்கொண்டிருந்தாள். காலை மணி ஐந்தரை இருக்கும். அன்று முகூர்த்த நாள், காலையில் குளித்து விட்டு புடவையை தூக்கிக் கொண்டு அவன் முன்னால் நின்றிருந்தாள்.

மகி பிளீஸ், மகி இங்க பாரேன். அதிகாலை குளிரில் ஈஷ்வரை தூக்கவிடாமல் எழுப்பிக் கொண்டிருந்தாள். சினுங்கி சினுங்கி திரும்பி படுத்தான். மெதுவாக கண்னை விழித்து பார்க்க மணி ஐந்தரை காட்டியது கடிகாரம். இந்த நேரத்தில ஏன் லைட் போட்டுட்டு இருக்கா.
அவளை பார்க்க,என்ன வேனும் உனக்கு, இப்படி தூங்க விடாம கத்துற. மகி இந்த சில்க் சாரி கட்டவே முடியில.

அதுக்கு நான் என்ன செய்யறது நிலாவை பார்த்து கேட்டான் ஈஷ்வர்...

மகி எனக்கு கொஞ்சம் சாரி பிளீட்டை அட்ஜஸ்ட் பண்ண ஹெல்ப் செய்
என்னது... உனக்கு அறிவு இருக்கா, கமலாக்கா இருப்பாங்க போய் கேளு.

மகி கமலாக்கா இன்னும் வரல. மகி பிளீஸ் என் காலேஜ் பிரண்டுக்கு கல்யாணம் ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் மீட் செஞ்சோம்.6.30 மணிக்கு முகூர்த்தம் மகி.. நம்ம கடை சாரிதான் அடங்க மாட்டுது. கொஞ்சமா பிடிச்சு விடேன்,நிலா தன் முகத்தை சுருக்கி கெஞ்ச...

சரி என்ன செய்யனும் ஈஷ்வர் தூக்க கலக்கத்தில் கேட்க. வயிற்றில் சொருகி இருந்த சாரியை எடுத்து, மகி இதை ஒரு கையால் பிடிச்சிக்கோ,நான் அடுத்த பிளீட் எடுத்துத் தர பிடிச்சிக்கனும்,

தா... சேலையை பிடித்தான் அப்போதுதான் ... அவன் கண் அவள் இடுப்பை நோக்கி பாய்ந்தது. ஏதாச்சையாக தான் பார்த்தான் ஈஷ்வர். ஒவ்வொரு பிளீட் அவள் கொடுக்க நழுவி விடுவான்.

மகி ஒழுங்கா பிடி, அத கூடவா பிடிக்க தெரியில. அவள் பேசுவது எதுவும் அவன் காதில் ஏறவில்லை ஈஷ்வரோட பார்வையெல்லாம் நிலாவின் வழவழப்பான இடை மட்டுமே அவன் நினைவில். ஒரு வழியாக புடவை கொசுவத்தை சொருகினாள். ஓகே மகி ரொம்ப தேங்கஸ் நீங்க தூங்குங்க .

நிலா டிரஸ்ஸிங் டெபிளில் அமர்ந்து தலையை வாரினாள்.

அடிப்பாவி , நிம்மதியா தூக்கிட்டு இருந்தேன் ,காலையில இது என்னடா தரிசனம், பெட்டில் புரண்டு படுத்தான் அந்தப்பக்கம் கண்ணாடியில் நிலா தெரிய. சே அவ ஹிப்ப தொடாம விட்டோமே ஈஷ்வர் பெரிய இவனாட்டம் எனக்கு கல்யாணம் பிடிக்கல ,நிலாவ பிடிக்கல ஃபீலீம் ஓட்டன, மனசாட்சி காரித்துப்ப...

நிலா கல்யாணம் எந்த மண்டபம்...

குரோம்பேட் ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் மகி..

மாப்பிள்ள என்ன வேலை செய்யறாரு.ஏதோ மேனேஜராம் எந்த கம்பெனி சரியா தெரியில. தலையை தளர பிண்ணி , கண்ணுக்கு காஜல் இட்டு , லிப்ஸ்டிக் போட்டு. சற்று மிதமான ஒப்பனையில் தேவதைபோல் இருந்தாள் நிலா. வைர ஆரம் போட்டு காதில் சிமிக்கி கம்மல் அணிந்திருந்தாள்.

அவள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ஈஷ்வர்.
மகி ஒகேவா .... ரொம்ப ஓவரா தெரியுதா நிலா ஈஸ்வரிடம் திரும்பினாள்.
இல்ல கொஞ்சம் லிப்ஸ்டிக்கை கம்மியா போடு.

ரொம்ப அதிகமா இருக்கா மகி டிஷ்யூ எடுத்து துடைத்தாள், இப்ப பெர்பெக்ட் நானும் ஒரு மேரேஜ் அட்டன் செய்யனும் அந்த பக்கம்தான் போறேன் என்கூடவே வா.

மகி நீங்க இன்னும் ரெடியாகல, தாலி கட்டறத பார்க்க தேவையில்லையா. உங்க கூட வந்தா கல்யாணமே முடிச்சுடும். நாம போற வரைக்கும் தாலி கட்டாத இருப்பாங்களா. தலையில் மல்லிப்பூவை சூடினாள்.

திருமண மண்டபத்தில், மணமேடையில் பெண்ணின் தோழிகள் நிலாவும் சேர்ந்து நின்றிருந்தார்கள். ஐயர் மந்திரம் சொல்ல மண்டபத்தில் சலசலப்பு, முதலாளி வராங்க ஆள் ஒருவன் சொல்ல , மணமகனின் அப்பா ஓடிபோய் அவரை வரவேற்றார்.

எல்லோரும் திரும்பி பார்க்க, அங்கே சலசலப்பு அதிகமானது. நிலாவின் பக்கத்தில் இருக்கும் பெண் அவள் தோழியிடம் ஸார் எவ்வளவு ஹாண்ட்ஸம் கீதா... ஆனா இப்பதான மேரேஜ் ஆயிடுச்சு. அப்ப நம்ம பி.ஏ மதுபாலா நான் தான் கட்டிப்பேன் சொல்லி பின்னாடி சுத்திட்டு இருந்தா போச்சா.

யாருடா அந்த அப்ப டக்கர் நிலா நிமிர்ந்து பார்க்க நம்ம ஈஷ்வர் , அவளை பார்த்துக் கொண்டே வந்தான்.

அடப்பாவி இந்த கல்யாணத்துக்கு தான் வரேன் சொன்னியாடா அவனை முறைத்துக்கொண்டே இருந்தாள். ஆனா இந்த சிடுமூஞ்சிக்காக இவ்வளவு பில்டப்பு. வேஸ்ட்...

மேலே ஏறி வந்தான் ஈஷ்வர், யாருக்கும் தெரியாமல் நிலாவின் ஜடையை பிடித்து இழுத்து விட்டு எதுவும் தெரியாமல் கிப்ட் கொடுத்தான்.

திமிரு இவனுக்கு , மூனகிக் கொண்டே நின்றாள் நிலா. திரும்பி வரும்போது அவள் கையை பிடித்து அழைத்து கீழே இறங்கி தன் பக்கத்து சேரில் உட்கார வைத்தான். எல்லோரும் தன் மனைவி என்று சொல்லாமல் சொன்னான் ஈஷ்வர்.

காலை உணவு அருந்தும் போது பவன், ராம், பார்த்தி விழுந்து விழுந்து சிரித்தனர், அப்ப ஒரே கல்யாணத்துக்கு இரண்டுபேரும் தனித்தனியே போனீங்க, மொய்யும் இரண்டா.

போங்க மாமா. பார்த்திக்கு வடையை வைத்து, மாமா உளுந்து சரியே இல்ல, எல்லா மளிகை சாமானும் பூரணி பிராண்டா வாங்கியிருக்கிங்க. அந்த பூரணி உளுந்தே சரியில்ல மாமா ,நிலா சொல்ல சொல்ல பவன் பேசாதே என்று கண்ணை காண்பிக்க..

என்னடா பவன் என்ன சொல்ல வர, பவனின் பார்வை ஈஷ்வரிடம் இருக்க, நிலா ஈஷ்வரை பார்க்க, அவன் எரிப்பதுபோல் முறைத்தான்.

ஏன் இந்த மனுஷன் ஆங்கரி பேர்டா இருக்காரு, உளுந்து தானே சரியில்ல சொன்னேன் நினைக்க.

அம்மா நிலா, நம்ம கம்பெனியில் என்ன செய்யறோம் தெரியாதா. நிலா அப்பாவை பார்க்க,

பார்த்தி தொடர்ந்தார், பூரணி தான் நம்ம கம்பெனி பிராடக்ட் பெயரு, ஈஷ்வர் குரூப்ஸ் ..
ஐயோ சத்தியமா எனக்கு தெரியாது மாமா, ஏதோ கன்ஷரக்ஷன்ஸ் ஒர்க் நினைச்சேன். அப்ப மகி இன்ஜினியர் இல்லையா...

ஏன் படிக்காதவன் நினைச்சியோ, நானும் பாரின்ல எம்.பி.ஏ படிச்சவன்தான். இன்ஜினியர் மாப்பிள்ளை வரனும் நினைச்சிருப்ப, இந்த மசாலா,பருப்பு தயாரிக்கிற கம்பெனி நடத்திரேன் தெரியாத கட்டிக்கினியோ... ஈஷ்வர் கத்த, ராம் , பெண்ணை பார்த்து தலையில் அடித்துக்கொண்டான்.

ஈஷ்வரின் தன்மானம் அடிப்பட்டதாக நினைத்தான். அதிகாலையிலிருந்த சந்தோஷம் இப்ப இல்லை ஈஷ்வரிடம். நிலா ,மகியிடம் மன்னிப்பு கேட்க அது எனக்கு தேவையில்லை என்று கூறாமல் எழுந்து சென்றான் ஈஷ்வர்.
----------
ராகவ் , என்னடா ஈஷ்வர் மூட் அவுட்டா.

அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சான், ஈஷ்வர் செல் அழைக்க அதை உயிர்ப்பித்தான்.

ஈஷ்வர் நான் இன்ஸ்பெக்டர் கார்த்திக் பேசுறேன். சொல்லு கார்த்திக் என்ன விஷியம்.

இல்ல நன்பா தங்கச்சி, அதான் நிலா இங்க வந்திருக்கு .

என்ன அங்க வந்தாளா. ஈஷ்வர் அதிர்ச்சியாக கேட்க...

நீ உடனே வாப்பா..

சரி என்று போனை வைத்தான். என்னடா ராகவ் கேட்க

நிலா கிண்டி போலிஸ் ஸ்டேஷன்ல இருக்காலாம். வா கிளம்பலாம், என்ன பிரச்சனையை இழுத்திட்டு வந்திருக்காளோ தெரியல.

கார் G2 போலிஸ் ஸ்டேஷன் முன் நின்றது. ராகவும், ஈஷ்வரும் உள்ளே நுழைந்தார்கள்.
ஹாய் அண்ணா எப்படியிருக்கீங்க, நிலா ராகவ்வை பார்த்து கேட்க. நல்லாயிருக்கேன் டா, நீ எப்படியிருக்க.

ஓகே... என்று தலையை ஆட்டினாள். எங்க வந்து என்ன விசாரிக்குது பார் எல்லாம் என் தலை எழுத்து. நிலாவை பார்த்து முறைக்க, அதற்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

கார்த்திக்கின் எதிரில் அமர்ந்தார்கள். நிலா மேடம் கம்பளைன் கொடுத்திருக்காங்க அவங்க ஸ்கூல் பசங்களுக்கு இந்த இரண்டு பசங்க,18 வயது மேல் இருப்பார்கள், போதை பொருள் விற்கிறாங்க சொல்லி.

ஈஷ்வர் ,நிலாவை பார்க்க... ஆமாம் மகி தினமும் பசங்களுக்கு கொடுக்கறானுங்க , சின்ன பசங்க யோசிக்காத வாங்கி .யூஸ் பண்ணுறாங்க, அப்பறம் மிரட்டி பணக்கார பசங்கிட்ட பணம் வாங்கறான் இந்த பொறுக்கி , இதுல பெண் பிள்ளைங்களும் விட்டு வைக்கிறதில்ல.

அந்த இருவரும் குப்பத்து ஆளுங்க , அவனுக்கு தலைவன் முத்து ,பிடித்து வைத்திருந்தனர். எல்லா ஸ்கூல் முன்னாடி இந்த வேலையை செய்யறாங்க...

இவள் சொல்லும் போதே 30 வயது பெண்மணி அழுதுக்கொண்டே வந்தாள் , ஸார் என் புருஷனை விட்டுங்க ஸார், அவரு எந்த தப்பும் செய்யலை. அவள் கூட வந்த பையன்,அக்கா அழாதீங்க , இவங்கதான் கேஸ் கொடுத்திருக்காங்க நிலாவை கை காட்ட.

ஏய் நீ தான அது மரியாதையா கேஸ வாப்ஸ் வாங்குடி, அவள் ஏகுற...மலர் எதுவும் பேசாதே என்று அடக்கினான் முத்து...

ஈஷ்வருக்கு புரிந்துவிட்டது இவன் சப்பளையர் மட்டும்.. பின்னாடி யாருன்னு தெரியாத இவ வேற ஜான்ஸி ராணி போல தலையை விட்டிருக்கா... நம்மகிட்ட கேட்கனும் தோணிச்சா எரும... தான் தான் ஆடுறது...நிலாவை மனதுக்குள் வறுத்துக்கொண்டிருந்தான்.பிறகு

கார்த்திக் கேஸ் போடுங்க ஒண்ணும் பிரச்சனையில்ல, பிள்ளைங்க எதிர்காலமே ஸ்பாயில் ஆகுது, நிலா சொல்லறது சரிதான் ஈஷ்வர் சம்மதம் சொல்லி பார்மலிட்டிஸ் முடிச்சிட்டு வெளியே வந்தனர்.

கூடவே வந்த கார்த்திக் , ஈஷ்வரிடம், கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லுடா தங்கச்சிய, ரொம்ப பயங்கரம்மான ஆளுங்கடா என்று கிசுகிசுத்துட்டு சென்றான்.

அவள் ஸ்கூட்டி எடுத்து கிளம்ப ஸ்டார்ட் செய்தாள்... நிலா, கார்ல வா...

வேணாம் மகி , நான் அப்படியே ஸ்கூல் போவேன்...நீங்க போங்க சொல்லிட்டு கிளம்பினாள்...

அவள் பின்னாடியே காரில் பாலோ செய்தான். மச்சான் என்னடா சொல்லுற , கார்த்திக்கா சொன்னான். அப்போ நிலாவ கேர்புல்லா இருக்க சொல்லனும்டா.
அவ என் பேச்ச கேட்டுதான் மறு வேலை. பெரிய டிடக்டிவ் நினைப்பு , ஒரு மாசமா தீயா வேலை செஞ்சு கண்டுபிடிச்சலாம் இவங்களை, நம்ம பவன் ஹெல்ப் பண்ணானாம். அப்படி பீற்றல் நேத்து நைட்.. பெரிய ஜேம்ஸ் பாண்ட் மாதிரி . கடைசில ஸ்கூல் எதிர்க்க இருக்க கடைதான் அந்த முத்து வோடது. அங்கதான் வித்திருக்கான். நம்ம பவனுக்கு சில பசங்க போர்ஸ் செஞ்சாங்கலாம்.

நல்லதுதானே நிலா செஞ்சிருக்கு...

ஓகேடா இப்படியா வெளிய தெரியிற மாதிரி சொல்லனும்... அந்த ஏரியாவுல மொத்தம் ஐந்து பெரிய ஸ்கூல் இருக்கு எல்லா பிரின்ஸ்பாலும் சேர்ந்து கம்பளைன் செய்யனும் அப்ப பிரச்சனை வராது... இப்ப இவள சேப்பா பார்த்துக்கனும். ஒரு ஸ்கூட்டிய வச்சிட்டு நான் இதுல தான் போவேன் பில்டப்பு... சொன்னா புரிஞ்சிக்க மாட்டா....
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top