Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-09

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-09
2190


ஈஷ்வர் எழுந்திருப்பா.. டைமாயிடுச்சு. தன் கைகளை தேய்த்து, கண் விழித்தான் ஈஷ்வர்.
என்னப்பா.. இந்தா ஈஷ்வர் காபி குடிச்சிட்டு கீழே இறங்கிவாப்பா.

ஏன்ப்பா நீங்க எடுத்திட்டு வரீங்க நிலா இல்ல...

அது நிலாவுக்கு பிவர் ஈஷ்வர், அதான் எங்கிட்ட சொல்லிவிட்டா ஆபிஸ் டைம் ஆயிடுச்சு.. கதவை சாத்திவிட்டு கிளம்பினார் பார்த்தி.

என்னாச்சு இவளுக்கு.. நல்லாதானே இருந்தா.. சீக்கீரம் ரெடியாகி கீழே வந்தான்...

கமலாம்மா டிபன் எடுத்து வைக்க, யாரும் சாப்பிடலையா என்று கேட்டான்.

தம்பி, நிலா பாப்பாவுக்கு ஜீரமா இருக்கா அதான் யாரும் சாப்பிட வர மாட்டறாங்க.

இப்ப நம்ம சாப்பிட்டா, எனக்கு பாசமே இல்ல முத்திரை குத்திடுவாங்க. இருங்க கமலாம்மா, நான் போய் பார்த்திட்டு வரேன். ஈஷ்வர் உள்ளே வந்து பார்க்க, அங்கே பெட்டில் நிலா படுத்திருந்தாள் , பக்கத்தில் பார்த்தி உட்கார்ந்திருக்க, பவன் கால்களில் தைலம் தேய்த்துக் கொண்டிருந்தான்...

ராம் , பேமிலி டாக்டரை கூட்டிட்டு வர, என்ன ஈஷ்வர் , ஹவ் ஆர் யு.
யா பைன் டாக்டர்...
என்ன உங்க ஓய்ப் க்கு பேசிக்கொண்டே டெம்பரைச்சர் பார்க்க.. அவளை பரிசோதித்து ஓண்ணுமில்ல சாதாரண வைரல் பிவர்தான்.. த்ரி டேஸ்ல சரியாயிடும் ஈஷ்வர். கொஞ்சம் வீக்கா இருக்காங்க , இன்ஜக்ஷன் போட்டா சரியாடும்.

ஊசியா டாக்டர்.. என் பொண்ணு ஊசின்னா பயப்படுவா.

மேடம் ஊசி வேணாமே, டெப்லெட் கொடுங்க ப்ளீஸ். நிலா கெஞ்ச.. ஜான்ஸி ராணிக்கு ஊசின்னா பயமோ.. ஈஷ்வர் நினைக்க..

எல்லோரும் கொஞ்சம் வெளியே இருங்க ,ஈஷ்வர் நீ ஹெல்ப் பண்ணு..
.
நானா டாக்டர் ஆமாம்ப்பா... இந்த ஊசி இடுப்புல போடனும். ஏற்கனவே பயப்படுறா.. எங்கன்னா குத்தி செப்டிக் ஆயிடுச்சினா..

ம்ம் டிரஸை லூஸ் பண்ணு.. அவள் நைட் பேண்டை கீழே இறக்கி விட்டான் ஈஷ்வர் , அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.. மகி வேணாம் சொல்லு. குழந்தை போல் முகத்தை வைத்து, எனக்கு பயம்மா இருக்கு... என்று வயிற்றில் தன் முகத்தை புதைத்து கட்டிக்கொண்டாள்.

ஊசி போடும் போது அவள் கை அவன் முதுகை அழுத்த.அவள் ஸ்பரிசத்தை, அனைப்பை உணர ஆரம்பித்தான். பெண்ணவளின் முதல் தோடுகை ,அந்த தீண்டலில் அவன் ஆண் என உணர்ந்தான்.

ம்ம் போட்டாச்சு நிலா இதுக்கு போய் இவ்வளவு பயப்படுற...ஈஷ்வர் தேய்த்து விடு டாக்டர் கூற. கையை இடுப்பை நோக்கி எடுத்து சென்றான். அதற்குள் நிலாவே சரி செய்தாள். டாக்டர் கிளம்ப..

நிலாவை பார்த்தான் , அவள் கண்களில் கண்ணீர் ,தேம்பினாள். ஈஷ்வருக்கு சிரிப்பு வந்துவிட்டது..அவளை பார்த்து சிரிக்க...

நிலா முகத்தை சுளித்துவிட்டு அந்த பக்கம் திரும்பி படுத்தாள்.உள்ளே வந்த ராம், நிலாக்குட்டி அழாதடா அப்பா இருக்கேன்ல, என் செல்லம் என மகளை சமாதான படுத்த அவள் அழுகை நின்றது ,மாமானின் பாசத்தை உணர்ந்தான். ஈஷ்வருக்கு ஓரு மாதிரி ஆயிற்று ,ச்சே நாம்ம அவள பார்த்து சிரிச்சிருக்க கூடாது.

நான் போய் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் ராம் செல்ல.

மகி , சாப்பிட்டீங்களா..

இனிமேதான் ...

மகி, சொல்லு நிலா

என் லவ் பேட்ஸ்க்கு சாப்பாடு வைக்கனும் , இல்லைன்னா கத்தும் மகி. அவங்க ரூம் பால்கனியில் வைக்கப்பட்ட கூண்டில் பறவைகளுக்கு தினையை போட்டான் ஈஷ்வர்.இன்று தான் அந்த பறவைகளை ரசித்து பார்த்தான். எவ்வளவு அழகா இருக்கு, பார்த்திட்டே இருக்கலாம் போல இருக்கே.

டைனிங் ஹாலுக்கு வந்து ,யாரும் ஏன் சாப்பிடாத இருக்கீங்க சாப்பிடுங்க. பவன் ஸ்கூல் டைம் ஆயிடுச்சு சாப்பிட்டு கிளம்பு.

அண்ணா இன்னிக்கு நான் லீவ் போட்டுட்டேன், அண்ணியை யார் பார்த்துப்பாங்க.

டேய் அவளுக்கு வைரல் பீவர்தான், பார்த்துக் நாங்க இருக்கோம், நீ கிளம்பு ஸ்கூலுக்கு. ரொம்ப ஓவரா பண்ணுறான்.

நிலா கீழே படுத்துக்கொண்டாள் ஜீரம் ஈஷ்வருக்கு தொற்றிவிட்டாள் என்று..

ஈஷ்வரால் தனியாக இருக்க முடியவில்லை தனது அறையில், ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள் நிலா.

இரவு மணி 9.30 நிலாவின் ரூமுக்கு வந்தான், அருகில் ராம் இருப்பதால் தயக்கமாக நிற்க, வாங்க மாப்பிள்ள என்று அழைத்தார்.

மாமா, நீங்க போய் தூங்குங்க நான் பார்த்துக்கிறேன்.

இல்ல ஈஷ்வர் , ரொம்ப படுத்துவா, இன்னும் மாத்திரை சாப்பிடல... தூங்கறா நல்லா.
கொடுங்க மாமா நான் பார்த்துக்கிறேன். ராமிடமிருந்து மாத்திரையை வாங்கிக் கொண்டு அவளருகில் உட்கார்ந்தான். ராம் சென்ற பிறகு, அவளை எழுப்பி மருந்தை கொடுத்து தூங்க வைத்தான்.

சிறிது நேரம் கழித்து, நிலாவை இரு கையால் தூக்கிக் கொண்டு மாடியேறினான்.
தண்ணீர் எடுக்க வெளியே வந்த ராம் தனது மகளை மாப்பிள்ளை தூக்கி செல்வதை பார்த்து ,மகிழ்ச்சி அடைந்தார். தன் மகள்மீது ஈஷ்வருக்கு அன்பு இருக்கு.

நிலாவை தனது கட்டிலில் படுக்க வைத்தான் .மருந்தின் வீரியத்தால் நிலாவிற்கு ஓன்றும் தெரியவில்லை. இப்போதுதான் திருப்தியாக இருந்தது ஈஷ்வருக்கு..நிலா தன்னுடன் இருப்பதை அவனுக்கு பிடித்திருந்த்து, அவள் முகத்திலிருந்த மூடியை ஓதிக்கிவிட்டு, அவளை பார்த்தான்.

ஓய் நிலா, சாதாரண பிவர் அதுக்கு என்ன அலும்பல் பண்ணறடி. ரொம்ப ஓவர்டி ,
நிலாவின் நெற்றியில் முட்டினான்...அவள் தூக்கத்தில் நெளிந்தாள்.

அடுத்த நாள் காலை, ஈஷ்வர் இந்தாங்க காபி என்று எழுப்ப..

என்ன நிலா உன் பீவர் சரியாயிடுச்சா...அங்கே லவ் பேர்ட்ஸ் கீச் கீச் கத்த.தோ வந்துட்டேன் நிலா வந்துட்டேன் குட்டீஸ். அதனிடம் செல்ல...

மகி.. ஓன் டே தான் பீவர், இப்ப சரியாயிடுச்சு - நிலா.
-------
முத்து அண்ணே நீங்க என்ன செய்ய சொல்லுறே ...

டேய் அந்த டீச்சர் தூக்கிடுங்கடா.. உயிரோடவோ, இல்ல பொணமாவோ ..வாட்ச்
பண்ணுட்டே இருங்க சமயம் வரும்போது தூக்குங்க... அப்பறம் தலைவர் ஜாமின்ல எடுக்க ஏற்பாடு செய்யறாரு..

சரியண்ணே , மூவரும் ஜெயிலில் முத்துவை பார்த்து பேசினர். பாபுவும், ஜானும்.
-------
நிலா எதுக்கு போன் செஞ்ச...அது மகி நம்ம ஊருக்கு போறோமில்ல அந்த மேரேஜூக்கு சின்ன ஷாப்பிங் போனோம், நான் போட்டா..

இல்ல, நீ தனியா எங்கும் போகாதே. நானே கூட்டிட்டு போறேன்... ஸ்கூலுக்கு வெளியே நில்லு நான் வந்துடுறேன்..

ஓகே மகி... பத்து நிமிடத்தில் ஈஷ்வர் அங்கே காரை நிறுத்த, எதிர் பக்கத்திலிருந்து நிலா ,ஈஷ்வரை பார்த்து ரோட்டை கிராஸ் செய்ய... ஈஷ்வரும் கீழே இறங்கி வர.. அவனை பார்த்துக்கொண்டே நடந்தாள்.

கார் வேகமாக வர, அதை பார்க்காமல் நிலா நடந்து வந்தாள், நிலா என்று கத்தினான் ஈஷ்வர். பின்னாடி வந்த பெரியவர் ஓருவர் நிலாவை பிடித்து இழுக்க, பயந்த நிலா மயங்கி கீழே விழுந்தாள். கார் வேகமெடுத்து சென்றதும்.

ஈஷ்வர் ஓடிச்சென்று நிலாவை தூக்கி தாங்க்ஸ் சார் என்று பெரியவரிடம் தன்னுடைய நன்றியை தெரிவித்தான்.

பரவாயில்ல தம்பி பார்த்து தூக்கிட்டு போங்க..

ம்ம் என்று காரில் நிலாவை உட்கார வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்தான். அவள் கண்ணத்தை தட்டினான். நிலா பாருடி. நிலா பாரும்மா.. நிலா கண்களை திறக்க, நாம உயிரோட தான் இருக்கிறோமா எண்ணினாள். உடனே ஈஷ்வர் அவளை அனைத்துக் கொண்டான்.

நிலா ஆர் யு ஆல் ரைட்... அவள் நிமிர்ந்து ஈஷ்வரை பார்க்க, நிலாவை விடுவித்தான். காரை ஸ்டார்ட் செய்தான் ... லூஸாடி நீ ஈன்னு என்னை பார்த்துக்கிட்டே வருவியா, அறிவிருக்கா உனக்கு பேசுடி. இப்ப பேச வாய் வராதே.

ரோட எப்படி கிராஸ் செய்யறது தெரியாது இடியட். சின்ன பிள்ள கூட ஓழுங்கா கடந்து வரும். தன்னை திட்டுவதை கேட்டு அவள் கண்கள் காதலை உணர்ந்தது. மணம் சந்தோஷம் அடைந்தது. அமைதியாகவே வந்தாள்.

தன் பட்டு மாளிகை கடைக்கு அழைத்து சென்றான். போ .. போய் என்ன வேனுமோ எடுத்துக்கோ...

ம்ம் உனக்கு ஈஷ்வர்... எனக்கு வேணாம்... கல்யாண பெண்ணுக்கு பட்டு எடுத்துக்கோ. சரி மகி...

அடுத்த நாள், மகி இங்க பாரேன் , இந்த இரண்டு சட்டையில லைட் கீரின் நல்லா இருக்குல்ல, சூப்பரா இருக்கும் மகி அப்படியே நீ அலைபாயுதே மாதவன் மாதிரி இருப்ப...பச்சை நிறமே பச்சை நிறமே ....பாட்டு பாடினாள்.

ம்ம் அப்ப எனக்கு அது தேவையில்ல, இந்த ப்ளு செக்குடு தான் பிடிக்குது.

ஐய்யோ மகி நல்லாவே இல்ல உனக்கு, போ மகி ஓல்ட் மாடல்.

ஈஷ்வர் கீழே இறங்கி வர, படிகட்டில் நின்று பவனிடம் தோத்துட்டியா எடு நூறு ரூபா.
இந்தா மூன், அண்ணா ஏன் இந்த டிரஸ் போட்ட.

ஏன்டா, அந்த கீரீன் ஷர்ட் நான் எடுத்தது. இது மூன் எடுத்தது. நான் சொன்னே, அண்ணா எனக்கு புடிச்ச ஷர்ட்டை தான் போடுவாருன்னு பெட் வச்சேன். போ மூன்தான் ஜெய்ச்சது.

ஈஷ்வர் முறைக்க... என்ன லுக்கு.. நிலா .. வெண்ணிலா எனக்கே வா. மகி நீயெல்லாம் சின்ன பையன் இன்னும் வளரனும் தம்பி புரியுதா.

அடிங்க நான் தம்பியா உனக்கு...

நிலாவை துரத்த... அய்யோ புடிச்சிடுவான் போலயிருக்கே. மரியாதையா அடி வாங்கிக்க நிலா. பவன் பிடிடா ...

நிலா பார்த்தி பின்னே நிற்க..டேய், டேய் ஈஷ்வர் என்னடா இப்படி ஓடி பிடிச்சு விளையாடுற...

அப்பா அவ என்ன சொன்னா கேளு.....

நிலா என்னடா அவனை கிண்டல் செஞ்ச, கோவம் வருது பாரு ஈஷ்வருக்கு,

மாமா நான்... மகி நீங்க ஆக்டர் மாதிரி இருக்கீங்க சொன்னே மாமா, அதுக்கு அடிக்க வராங்க .. நீங்க வேணாம் பவனை கேளுங்க.

அடிப்பாவி.. பொய் பேசுற... பவன் சொல்லுடா ,ஈஷ்வர் கேட்க...

ஆமாம் ப்பா மூன் சொன்னதுதான் கரேக்ட் ஓகே. டேய் உன்ன பவனை அடிக்க, அண்ணா ப்ளீஸ் இல்லன்னா மார்க் போடாது மூனு, அப்பறம் பெயில் ஆயிட்டனு வை ,உன்னை தான் கூப்பிடும் சொல்லிட்டேன்.

பவன் சொல்லுவதை கேட்டு அனைவரும் சிரித்தனர். எவ்வளவு நாள் ஆச்சு என் ஈஷ்வர் சிரிச்சு பேசி, எல்லாம் மறந்து போயிருந்தான். எங்க வீட்டு மகாலட்சுமி நிலா... மனதில் நினைத்தார் பார்த்தி.
-------- நிலாவை பிடித்தேன்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Wow... lovely epi sis nila yella vishayathulayum perfect...eshwar manasukkulla nila vandhutanga... happy family padikkaradhukku nalla irukku...indha epi visual panna mudinchidhu??? i really enjoyed it
 
Top