அத்தியாயம் 3. 2
அங்கு பூம்பொழில் கிராமத்தில் அதிகாலை செழிப்பாக விடிந்திருந்தது.
பனி படர்ந்த வயல்கள்… ஈரமான மண் வாசனை… தொலைவில் கேட்கும் மாட்டுமணி சத்தம்… ஒவ்வொரு வீட்டிலும் எழும் அடுப்புப் புகை… கோழிகள் கூவும் சத்தம்…
அந்த கிராமமே வேறொரு உலகம் போல இருந்தது.
அக்கிராமத்தின் நடுவே கோட்டை மாதிரி பெரிதாக நின்றது செல்வநாயகத்தின் வீடு.
பெரிய நுழைவுவாசல்… நீளமான திண்ணை… நடுவில் பெரிய முற்றம்… அதைச் சுற்றி அறைகள்… பின்னால் மாட்டுத்தொழுவம், களஞ்சியம், தோட்டம் என அந்த வீடே செல்வச் செழிப்பாக இருந்தது.
அந்த அதிகாலை நேரத்திலேயே வயலுக்குள் இறங்கியிருந்தான் கார்முகிலன்.
வெள்ளை வேட்டியை மடக்கிக் கட்டிக்கொண்டு, காலில் சேறு ஒட்டியபடி நடந்து கொண்டிருந்தான்.
அவன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தான் முத்துக்காளை.
“டேய்… கொஞ்சம் மெதுவா நடடா! உன்கிட்ட வேலை கத்துக்க வர்றதுக்குள்ள என் உயிரே போயிடும் போல…”
அதை கேட்ட கார்முகிலன் அவனை திரும்பிப் பார்த்தபடி, “இதுக்கே மூச்சு வாங்குற. நீ எப்படி பால் பண்ணை வைக்கப் போற? பண்ணை வைக்குறது என்ன ஈசின்னு நினைச்சியா?”
“டேய்… அது எல்லாம் நான் படிச்சு டபுள் டிகிரி முடிச்சவன்டா…”
“அதான் தம்பி… இங்கதான் பிரச்சனை. படிப்பறிவுக்கும் அனுபவ அறிவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு,” என்றான் கார்முகிலன்.
“நீங்க படிச்சவங்க எல்லாம் புத்தகத்துல இருக்குற மாட்டைத்தான் பார்த்திருப்பீங்க. நிஜ மாடு ஒரு எத்து எத்துனா நேரா விண்ணுல போயி இறங்குவீங்க,” என்றான் கிண்டலோடு.
அதை கேட்டவுடனே, அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அவனை பார்த்து சிரித்தனர்.
“டேய்… அவங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்தாதடா…” என்று முத்துக்காளை கடுப்பாகச் சொல்ல,
“உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கிறதுக்கு நான் என்ன பண்றது?” என்றான் கூலாக.
“பாரு பாரு… இப்படி பேசிப் பேசித்தான் நீ ஸ்கோர் பண்ணி என்னை காலி பண்ற!” என் வாழ்க்கையே உன்னால்தான் டா இப்படி இருக்கு…” என்று புலம்பினான்..
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்?” என கார்முகிலன் புருவம் சுருக்கி அவனைப் பார்த்தான்.
“எங்க அப்பனுக்கு இப்போ நான் மகனே இல்லடா… நீ தான் மூத்த வாரிசு மாதிரி! காலைல எழுந்ததுல இருந்து இராத்திரில படுக்குற வரைக்கும் ஒரே ‘கார்முகிலன் மாதிரி பொறுப்பா இரு… அவனைப் பார்த்து கத்துக்கோ…’ன்னு என் உயிரை வாங்குறாரு. நானும் எவ்வளவு நாளைக்குத்தான் இதைத் தாங்குறது டா?” என முத்துக்காளை பாவமாகச் சொன்னான்.
அதை கேட்ட கார்முகிலன் சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“அப்போ அவர் சொல்ற மாதிரி கொஞ்சமாவது உருப்படியா நடந்துக்க,” என்றான் அமைதியாக.
“அடப்பாவி! வெளியில இருக்குறவங்ககிட்ட இருந்து தப்பிக்கலாம்… ஆனா நண்பன் ரூபத்துல இருக்குற உன்னை மாதிரி எதிரிக்கிட்ட இருந்து தப்பிக்க முடியாதுடா!” என முத்துக்காளை தலையில் அடித்துக்கொண்டு அவனுக்கு முன்னே மாட்டுத்தொழுவத்துக்குள் வந்தான்.
அங்கே இருந்த பெரிய காளையைப் பார்த்ததும் முத்துக்காளை இரண்டு அடி பின்னால் நகர்ந்தான்.
“டேய்… இதுக்கு பக்கத்துல நிக்குறதுக்கே பயமா இருக்கு…”
“என்னவோ மாட்டை இப்போவே அடக்கிக் காட்டுறேன் பாருன்னு போல அம்புட்டு வேகமா வந்த…” என நக்கலாகக் கேட்டவன், அருகே இருந்த காளையை காட்டி, “இதுதான் நான் நேத்து சொன்ன கருப்பன்,” என்றான்.
“கருப்பனா? இது கருப்பன் இல்லடா… எனக்கு எமன்டா!” என பயந்து போய் அதைப் பார்த்தான்.
கார்முகிலன் சிரித்தபடி அந்த காளையின் அருகே சென்றான். அது அமைதியாக அவன் கையை நக்கியது.
“பாத்தியா?” என்றான்.
“நீங்க ரெண்டு பேரும் ஏதோ ரகசியமா பேசிக்கிற மாதிரி இருக்கு…”
“மிருகத்துக்கு பாசம் காட்டுனா அது புரிஞ்சுக்கும்.”
“ஆனா இதுக்கு என்னைப் பார்த்தாலே கொலை வெறி வருதே?”
“உன் முகத்தைக் கிட்ட கட்டாதடா. அதான் பயந்து போய் இருக்கும்.”
“ஏதே… இவன் என்னைப் பார்த்து பயந்துட்டானாம்… சரிதான்! ஆமா… நான் இங்க தொழில் கத்துக்க வந்தேனா? இல்ல தினமும் உன்கிட்ட அவமானப்பட வர்றேனான்னு தெரியல…”
“இது ஆரம்பம்டா… போகப் போக பழகிடும்,” என்றான் கார்முகிலன்.
“ஏதே…!! உன்கிட்ட அவமானப்படுறதா??” என்றான் கொலைவெறியாக.
“ச்ச ச்ச… கருப்பன் கிட்ட அடிவாங்குறதை சொன்னேன்டா…” என்றான் நக்கலாக.
“ரொம்ப ஏத்தமா தான்டா பேசிட்டு திரியுற.. பாக்குறேன் நானும்… மொத என் அப்பனை டீல் பண்ணிட்டு உன்கிட்ட வரேன்…” என கடுப்பாகச் சொன்னான்.
அந்த நேரத்தில் வானம் மீண்டும் கருமையாக மாறத் தொடங்கியது.
இரவு பெய்த மழையின் ஈரம் இன்னும் மண்ணில் இருந்தது.
அங்கங்கே வரப்புகளில் தண்ணீர் தேங்கியிருந்தது.
தென்றல் காற்று வீசும்போதெல்லாம் ஈரமான மண் வாசனை மனதை நிறைத்தது.
மீண்டும் மழை வந்தால் இந்த பருவத்திற்கான வேலைகள் இன்னும் வேகமாக முன்னேறும் என்று வயலில் இருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கு வயலின் மறுபுறத்திலிருந்து ஒருவர் கார்முகிலனை நோக்கி ஓடிவந்தார்
“தம்பி!”
“என்ன சித்தப்பா?”
“சென்னைலிருந்து உன்ற மாமன் வந்து இருக்காப்புல தம்பி… தங்கச்சி உன்னைய வீட்டுக்கு சீக்கிரம் வர சொல்லுச்சுப்பா…” என்றுவிட்டு சென்றார்.
அந்த வார்த்தையில் கார்முகிலன் புருவம் சுருங்கியது.
“சென்னையிலிருந்தா?” என அதிர்வாக முனுமுனுத்தான்.
முத்துக்காளை உடனே “டேய்… உன் அம்மா நேத்து சொன்ன பொண்ணு வீட்டாரா? எங்க நீ மாட்டாம போயிடுவேன்னு கையோட கோழி அமுக்குறது போல அமுக்கிட்டு போக வந்துட்டாங்களா?” என கிண்டலாகக் கேட்டான்.
“வாய மூடு,” என்று அவனை அடக்கிவிட்டு வீடு நோக்கிப் புறப்பட்டான் கார்முகிலன்.
ஆனால் அவனுக்குள் ஏதோ சிறிய சந்தேகம் எழுந்தது.
‘இவ்வளவு சீக்கிரமா...?’
நேற்று இரவுதான் திருமணப் பேச்சு வந்தது.
அதற்குள் செந்தாமரை நேரில் ஊருக்கே வந்திருப்பது ஏனோ சாதாரணமாகத் தோன்றவில்லை.
ஏதோ முக்கியமான காரணம் இருக்க வேண்டும்.
ஆனால் அது என்னவென்று மட்டும் அவனால் யூகிக்க முடியவில்லை.
கார்முகிலன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்க...
சென்னையில், ரிஷவனைச் சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்தாள் நீள்மதி.
ஒருத்தி தனது காதலை நம்பிச் சென்றுகொண்டிருந்தாள்.
ஒருவனோ தன்னை நோக்கி என்ன வரப்போகிறது என்பதை அறியாமல் நடந்துகொண்டிருந்தான்.
இருவருக்குமே தெரியவில்லை...
அவர்கள் எடுக்கப்போகும் சில அடிகள், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, காலத்தின் ஓட்டத்தையே மாற்றப்போகிறது என்பதை.
இப்போது அவர்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் காலம் ஏற்கனவே அவர்களுக்காக வேறொரு பாதையை அமைதியாகத் திறந்துவைத்திருந்தது.
அந்த பாதை...
அவர்களை எங்கே கொண்டு செல்லப்போகிறது என்பதை இன்னும் யாரும் அறிந்திருக்கவில்லை.
தொடரும்...