Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 21

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
சாத்விக் தன் ஆய்வகத்தில் முழுவீச்சில் செயல்பட்டிருந்தான்.

வாகீசனுக்கு மகனை எண்ணி 'பெருமை பிடிபடவில்லை!'

"வெல்டன் மை பாய் அப்பாக்கு ரொம்ப பெருமையா இருக்கு.எங்க நீ லவ் ஃபெயிலியர்னு அதுலையே முட்டாளா மூழ்கி கிடந்துட்டா அப்படின்னு ஒரு கவலை அப்பாக்கு இருந்தது.ஆனால் இப்போ உன்னோட எனர்ஜி லெவல் என்னை ரொம்ப கூல் பண்ணுது!" என்றார் அவர்.

"ஆமாம் என் பிள்ளை நேரம் காலம் பார்க்காம வேலை பார்க்கறது உங்களுக்கு சந்தோசமா தானே இருக்கும்!?" சங்கீதா அலுத்துக்கொள்ள.

"விடுங்க அம்மா அப்பாவும் கொஞ்சம் சந்தோசமா இருக்கட்டும்!" என்றான் ஒரு மாதிரி குரலில்.

"என்ன சாத்வி!?"

"இல்லங்கப்பா உங்களையும் சந்தோசமா வைக்கணும் சொன்னேன். உங்களோட இத்தனை வருட உழைப்புக்கு பலன் வேணும் சொல்றேன்பா!"பிள்ளை தந்தையின் அன்பில் கரைய.

"ஆனால் அவன் வார்த்தைக்குள் மூடு பொருள் உள்ளதாக தோன்றியது!" வாகீசனுக்கு.

"நீ அப்படி நினைத்தால் சந்தோசம் தான் கண்ணா!" என்றவர் மேலும் ஆய்வுகளை பற்றிய பேச்சினைத் தொடங்க.

"ஹையோ உங்க ரெண்டு பேருக்கும் அதைவிட்டா வேற பேச்சே கிடையாதா!?" பாவமாக கூறினாள் வர்ணி, நம் கீர்த்தி.

"உனக்கு தான் வேற வேலையே கிடையாது. அதுக்காக எங்களுக்கும் இல்லாமல் இருக்குமா என்ன!?" என்று வாரினான் அண்ணன்.

"டேய் மருந்து டப்பா ரொம்ப பேசாத!"

"ஹேய் நான் பெரிய மருந்து டப்பான்னா நீ சின்ன மருந்து டப்பா!" என்றான் சாத்விக்.

"டேய் நீ...!' என்று தங்கை ஒன்றை கூற

"நீ கூட...!" என்று அண்ணனும் தங்கையை விதவிதமாக சாட.

"ஐயோ உங்களை எல்லாம் நான் பெத்தேனா இல்லை,மாத்தி தூக்கிட்டு வந்தேன்னா!?" என்று கேள்வி எழுப்ப.

"சாரி மம்மி காலம் கடந்த சிந்தனை!" என்றனர் அடித்துக் கொண்ட இருவரும்.

"அதுதானே இதுக்கு மட்டும் கூட்டு சேர்ந்துப்பீங்களே!" என்றவர் கணவனை கவனிக்க தொடங்கினார்.

"அன்னைக்கு தந்தை மீதான அன்பையும் அன்னையின் மீது தந்தை கொண்ட காதலும் சாத்விக்கை மெய்சிலிர்க்க வைத்தது!"


மகன் தங்களை காண்பதை உணர்ந்து நிமிர்ந்த பெற்றோர் அவனைக் கண்டு ஜோடியாக புன்னகைக்க.

"தாயை கனிவோடு கண்ட மகனின் தலையை செல்லமாய் கலைத்த சங்கீதா வளர்ந்த பிள்ளையின் நாடி பிடித்துக் கொஞ்சி திருஷ்டி கழிக்க!"

"போதும் போதும்! அம்மாவும் மகனும் விட்டா நாள் முழுக்க நான் ஒருத்தி இங்க இருக்கதே தெரியாம கொஞ்சிப்பீங்களே தள்ளுங்க!" என்று அன்னையை தள்ளிக் கொண்டு சென்றவள்.

பின்னிருந்து தந்தையை கட்டிக் கொண்டு அவரின் தோளில் முகம் பதித்து பெற்றவளுக்கும் உடன் பிறந்தவனுக்கும் ஒழுங்கு காட்டினாள் கீர்த்தி.

"தங்கையை ஆதுரமாக கண்டான் அண்ணன்!" அவன்.

"சரி அம்மா நான் லேப் போறேன் சோ
எனக்கு மதியம் சாப்பாடு வேண்டாம். எனக்கு வொர்க் அங்க அதிகம் இருக்கு!" என்றதோடு தந்தைக்கு கண்களால் சேதி சொல்லிவிட்டு.

தங்கையின் தலையில் ஒரு 'கொட்டு' வைத்துவிட்டு நகர்ந்தான்.

"என்னங்க இந்த பையன் ஏன் ஒரு மாதிரியா பார்க்கறான்!?"

"என்ன சொல்றமா!?"

"ஆமாங்க இவன் பார்வையில என்னவோ வித்தியாசம் இருக்குங்க!?" என்று ஆணித்தரமாய் கூறினார் சூலை அறிந்த அன்னை.

"எனக்கு ஒன்னும் தெரியலை நான் அப்படியே கிளம்பறேன்.அவன் லேப் போறான் சோ நான் ஃபேக்டரி போய்ட்டு புரொடக்ஷன் வொர்கை பார்க்கறேன்!" என்றார் அவர்.


"மகன் பார்வைக்கு என்ன பொருள்!?" என்று புரியாது குழம்பி நாட்களை கழித்தார் சங்கீதா.


ரகசிய ஆய்வு கூடத்தில் ஆராய்ச்சி வெகு ஜரூராக நடைபெற்றது.


அப்துல்லா, ரபீக் உடன் ரகோத்வாவும் தாம் செய்வது ஆணி பிடுங்கும் வேலை என்பது தெரியாது ஆய்வு கூடத்தில் வேலையில் இருந்தனர்.

ஜோ,"அனைத்தும் தெரிந்தாலும் நண்பனின் நாடகத்திற்கு துணை நிற்க வேண்டுமே!" என்பதால் நடித்துக் கொண்டிருந்தான்.

"ஹலோ மாமா எப்படி இருக்கீங்க.அக்கா எப்படி இருக்கா அத்தை என்ன பண்றாங்க!?"

"எல்லாரும் ஃபைன் பிரவீன்....!"

தன் அக்காவின் கணவன் 'எதற்கோ?' தயங்குவது புரிந்து

"மாமா என்ன சொல்லுங்க!? செஞ்சுடலாம்!" என்று ஊக்கம் கொடுக்க.

"எனக்கு லேப் ஒர்க் இருக்கு பிரவீன் நீ கொஞ்சம் அதில் வந்து ஹெல்ப் பண்ண முடியுமா!?"

"கண்டிப்பா செய்றேன் மாமா.ஆனா எனக்கு அதைப்பத்தி தெரியாதே!"

"அதெல்லாம் சீக்ரெட் ஃபைல் பிரவீன் அதைமட்டும் நீ பாஸ் பண்ணினா போதும். இதுல உன் சேஃப்டி ரொம்ப முக்கியம்!" எச்சரிக்கை வேறு கொடுக்க.

"அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா!" என்றவன் "இப்பொழுதே அவன் அலுவலகம் வரவா!?" என்று கேட்க

நாளை காலை பத்து மணிக்கு அலுவலகம் வருமாறு கூறி அழைப்பை துண்டித்தவன் ரக்ஷனை அழைத்தான்.



"ரக்ஷா...!"

"சொல்லு மச்சான்!"

"நம்ம லேப் ஒர்க் எந்த அளவுக்கு முடிஞ்சுருக்கு!?"

"அது இன்னும் ஒன் ஆர் டூ ஸ்டெப்ல ஓவர் ஆகிடும்டா!"

"நீ உன் கூட பிரவீனை சேர்த்துக்கோ ரக்ஷா!"

"என்ன மச்சான் திடீர்னு அவன் சின்ன பையன்டா !?"

"இல்லை நானும் நீயும் மட்டும் தனியா வெளிய சுத்தினா கண்டிப்பா லேப்ல இருக்க குரூப் - ல - டூப்புக்கு சந்தேகம் வரும் அதுமட்டும் இல்லாமல் யாரோ நம்மளை டீப்பா வெளிய இருந்து வாட்ச் பண்ற ஃபீல்!" என்றான் ஷ்ரவன்.

"அப்போ ஓகேடா நானும் கூட வெளிப்படையா இதுல இறங்காம பிரவீன் வச்சு முடிக்கிறேன்!"என்றான் ரக்ஷன்.

"இது இன்னும் ஓகே தான் ஆனா நீ அவனுக்கு செக்யூரிட்டி மட்டும் நல்லா டைட் பண்ணிடு!"

"அதெல்லாம் பார்த்துக்கலாம் மச்சான்!"

வேங்கைகள் களம் காண இறங்க.ஒற்றை வேங்கையின் போரே பெரும் பாதிப்பை கொடுக்கும் என்றால் இங்கே வேங்கை கூட்டமே களத்தில் இறங்க.

"எதிரிகளான 'குள்ளநரி கூட்டம்' எவ்வாறு மீளும்!?"

"வாய்ப்பே இல்லை! இனி எதிரி எழவே முடியாத அளவிற்கு சக்ர வியூகம் அல்லவா அமைத்துள்ளான்!"ஷ்ரவன்.

"சகுனியின் சாதுர்யமா!? அல்லது கிருஷ்ணனின் சாமர்த்தியமா!? வெல்வது யாரென்று பார்க்கலாம்!"



இந்திய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் என்று சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தொடங்க.

அதை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி விழாவானது ஆரம்பமானது.

சில மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு முன்பு சங்கத்தால் அங்கீகரிக்கபடும். அவ்வாறு அங்கீகரிக்க பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டால் மட்டுமே அவை சந்தைபடுத்தும்.

அவ்வாறு சான்றுகள் இல்லாவிட்டால் அவை 'போலி' என்று முத்திரை குத்தப்பட்டு நீக்கம் செய்யப்படும்.

அவை கள்ள சந்தையில் அல்லது கருப்பு சந்தையில் விற்கபட்டாலும்; வெளியில் தெரிவதில்லை என்பது வேறு கதை.

அதற்குள் சென்றால்,"சமுதாய சீர்கேடும் வரும் சந்ததிகளின் நிலையும் எண்ணி மனம் நொந்து போவது தான் மிச்சமாகும்!" என்பதால் நாம் இந்த விழாவில் இணைந்து கொள்வோம்.


"அன்றைய அவமானம் இன்று நம்மவர்களுக்கு வென்று தருமா வெகுமானம்!?" என்று நாம் பகுமானமாய் காணலாம்.

அவரவர் பெயரிடப்பட்ட இடத்தில் அவரவர் அமர்ந்திருந்தனர்.

முதல் வரிசையில் சங்கத்தின் தலைவர், துணை தலைவர்கள், இணை தலைவர்கள், செயலாளர் என்று மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்களாக அமர்ந்திருக்க.

இரண்டாம் வரிசை தொடங்கி ஒவ்வொரு கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த நிறுவனங்களும் வந்திருந்தனர்.

அதில் தான் இரண்டாம் வரிசையில் தன் குழுவுடன் அமர்ந்திருந்தான் ஷ்ரவன்.

அவன் எப்படி தடை செய்யப்பட்டு அன்று விரட்டபட்டவன் எப்படி இங்கு வந்து அமர்ந்திருக்கிறான் சந்தேகம் தோன்றலாம்


விடை இங்கே

ஐ எம் ஏ அலுவலக தலைமை செயலருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

அதில் தெரிவிக்கப்பட்ட செய்திதான் இன்று ஷ்ரவனை இங்கே அமர்த்தி உள்ளது.

"அப்படி அந்த மின்னஞ்சல் தாங்கி வந்த செய்தி தான் என்ன!?"

"எதிரி நிறுவனம் தங்களது கண்டுபிடிப்பில் இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும்; அதனால் முன்னால் சமர்ப்பித்த ஒப்படைப்பை திரும்பப் பெறுவதாகவும் கூறி இருந்தது!"

'ஏனென்றால்!?'

"ஷ்ரவன் தான் கூறி இருந்தான் அல்லவா அவன் ஆய்வகம் உருவாக்கிய கண்டுபிடிப்பு முறையாக பதிவு செய்யப்பட்டது!" என்று.

"அதில் பயந்த 'கள்ளநரி' தன் கூட்டாளி உடன் சேர்ந்து இந்த செயற்கரிய செயலை செய்து தான் கண்டிப்பாக உங்கள் ஆய்வக குழுவில் தான் உள்ளேன்!" என்று வழிய வந்து வலையில் சிக்கியது.

"மறுநாள் வந்த மறுத்தளிப்பு மின்னஞ்சலை கண்டபின் தான் ஜோவிற்கு புரிந்தது!"

"தன் நண்பன் ஏன் அவ்வாறு கூறினான்!?" என்பது.


தன்னால் அவன் திட்டம் பாலாக கூடாது என்பதால்,"மச்சான் செமடா!" என்று ஜோ மெசேஜை தட்டிவிட்டான்.


"ஹோ ஆடு தானாக வந்து கசாப் கடைக்குள் விழுந்து தன் சாயத்தை வெளுக்க வைக்கவே நண்பன் முயன்றிருக்கிறான்!"என்று எண்ணிக்கொண்டான்.

இப்பொழுது,"ஆய்வகத்தில் யார் அந்த நரி!?" என்பதை அறிவது சுலபம்.இதுவே புரோடக்சனில் உள்ள ஆளாக இருந்திருந்தால் கண்டிப்பாக ஆய்வகத்தில் பேசிய தகவல் அவரை சென்று சேர்ந்திருக்காது அல்லவா.

ஆதலால் ஆடு கட்டாயம் ஆய்வகத்தில் தான் உள்ளது என்பது திண்ணம்.

இரண்டாம் வரிசையின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஷ்ரவன் தன் தந்தையின் கண்ணாடியை அணிந்திருந்தான்.

ஏனோ அவன் தந்தையே அவனுடன் இருப்பது போல் ஒரு தெம்பு.

என்றைக்கும் அமர்வதை விட ஒரு இன்ச் அதிகமாகவே நிமிர்ந்து அமர்ந்தான் தன் கருங்களிற்றில்.

அவன் தோரணை ஏனோ எதிரிகள் குழாமிற்கு சுந்தரமே நேரில் வந்ததை போன்ற படபடப்பு கொடுத்தாலும்,அவனின் ஃபார்முலாவை கொண்டு தாங்கள் வென்றதாக எண்ணிக் கொண்டனர்.

"பாவம் புயலுக்கு முன் தோன்றும் அமைதி ஆனந்தத்தை தராது என்பதை அறியாது போயினர்!"

ரகோத்வா முகத்தில் தான் எத்தனை புன்னகை!? எத்தனை பெருமிதம்!?

"பாவம்! ஷ்ரவன் செய்த செயல் புரியாது தன் முப்பத்தி ஐந்து வருட உழைப்பின் பலன் இன்று கிடைக்க போகும் பெருமிதத்தில் இருந்தார்"மனிதர்.

பல மாதம்.. பல போராட்டங்கள்.. கடந்து நடக்கும் இவ்விழாவில் சாத்விக்கும், வாகீசனும் தங்கள் உதவியாளர்கள் உடன் வந்து கலந்து கொண்டனர்.

அனைவரின் முகங்களும் ஒருவித பதற்றத்தை சுமந்திருந்தது.



ஒவ்வொருவரின் படைப்புகளும் வரிசை படுத்தப்பட்டு காணொளியில் பிபிடி மூலம் காட்சிப்படுத்தப்பட.

ஒவ்வொருவராக வந்து விளக்கம் கொடுத்து சென்றனர்.

இப்பொழுது சாத்விக்கின் நிறுவனம் அழைக்கப்பட.

அவர்கள் அங்கே அழைக்கவும் விளக்கம் கொடுக்க கித்தாய்ப்பாய் ஒரு பார்வை ஷ்ரவனை நோக்கி வீசிவிட்டு தன் கோர்ட்டின் பட்டனை மாட்டிக் கொண்டே எழுந்தார் ரகோத்வா.

"இவர் எங்கே செல்கிறார்!?"என்று
அரங்கமே ஓர் நிமிடம் அதிர்ந்தது

'ஏனென்றால்!?'

வாகீசனின் நிறுவனமான வி.எஸ் நிறுவனமும், சுந்தரின் நிறுவனமான எஸ் த்ரி(S3) நிறுவனமும் எதிரெதிர் துருவம் என்று நாடறிந்த செய்தி.

அதிலும் எஸ் த்ரியில் தலைமை ஆய்வாளராக இத்தனை ஆண்டுகளாக இருந்தவர் ரகோத்வா.

அப்படி இருக்க இன்று வி. எஸ் நிறுவனத்தின் ஆய்விற்கான விளக்கம் கொடுக்க மேடை ஏறினால்

"அனைவருக்கும் அதிர்வு தோன்றும் தானே!"

முகத்தில் புன்னகை தவழ அவர் மேடை ஏற.

இந்த பெரும் துரோகத்தை கண்டும் காணாதது போக விரும்பாத மருத்துவ சங்கத்தின் தலைவர்

"ஏன் இந்த மாற்றம்!?" என்று கேள்வி எழுப்ப.

சென்ற முறை இவர்களின் மீது கண்டுபிடிப்புகள் திருடபட்டதாக வழக்கு வந்ததை குறிப்பிட்டவர்.

"நண்பன் சுந்தர் போல சுத்தமான கரம் அவர் மகனுக்கு இல்லை!"எனும் வீண் பழி சுமத்தியதோடு

"வாகீசனின் நிறுவனம் இரண்டாம் இடம் என்றாலும் கூட;உழைப்பால் உயரும் கொள்கை கொண்டது!" என்று குறிப்பிட்டு தான் இரண்டு மாதங்களுக்கு முன்பே வேலையில் இருந்து விலகியதாக கூறியவர்.

வாகீசன் ஆய்வக ஆராய்ச்சிக்கு தான் வழிகாட்டியாக இருந்ததாக கூறினார்.

அத்தோடு அவரின் ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் இளம் ஆராய்ச்சியாளனான கபிலை புகழ்ந்து தள்ளியவர் தன் படைப்பை பற்றி விளக்கி கூறி மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

"எல்லாம் ஜெயிக்கும் மமதையில் துள்ளினார்!"மனிதர்.


"ஆனால் மேடையில் வைத்து அவர் செய்த இந்த செயல் அவருக்கு எப்படி இருமுனை கத்தியாய் மாறி தாக்கப் போகிறது என்பது தான் பாவம் அவருக்கு தெரியவில்லை!?"


கடைசியாக மேடை ஏறினான் ஜோ.தங்கள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பை பற்றி விளக்க தொடங்கியவன் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி விளக்கம் கூறிவிட்டு மேடையில் இருந்து இறங்கினான்.


அனைவருக்கும் எஸ் த்ரீ நிறுவனத்தின் கண்டுபிடிப்பு அதிர்வை தந்தது.

இறுதி முடிவினை அறிவித்து சான்றிதழ்கள் வழங்க சங்கத்தின் தலைவர் மேடை ஏற.

அவரின் பதிலில் தான் உலகளாவிய அளவில் இந்தியாவின் மீதான மதிப்பு உயரும் தருணமும் அடங்கி இருந்தது.

"ஆம்!"

இவர்கள் அனைவரும் இத்தனை நாட்கள் செய்திருந்த ஆய்வு என்பது சாதாரணமானது அல்லவே

புற்று நோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய்.இந்த நோய்க்கு எத்தனை சிகிச்சை மேற்கொண்டாலும் கூட இறப்பின் நாட்களை மட்டுமே தள்ளிப்போட முடியுமே தவிர. நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது.

அப்படிப்பட்ட புற்று நோய்க்கு தான் நிரந்தர தீர்வு வழங்கி.

"வளரும் புற்று செல்களின் வளர்ச்சியை முற்றிலும் குறைக்கும் மருந்து இதுவரை எங்குமே கண்டறியப்படவில்லை!

அப்பேற்பட்ட ஒரு மருந்தை தான் நம் சுந்தர் கண்டறிந்து தன் குறிப்பில் எழுதி இருந்தார்!"

"இன்று தன் தந்தையின் விடாமுயற்சி காணப்போகும் விஸ்வ ரூப வெற்றியை காண தங்தையின் கண்களால் காண முடியாத வெற்றியை அவரின் கண்ணாடி உடன் கொண்டாட வந்திருந்தான் சுந்தர் பெற்ற செல்வமகன்!"

"இந்த கண்டுபிடிப்பை கண்டதும் மண்ணை கவ்வியது வாகீசன் மற்றும் ரகோத்வா குழு!"

ஆனால் சாத்விக் ஒன்றும் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை.

அவனோ,"முன்பே இதுதான் நடக்கும் என்பதை அறிந்தவன்!" போல அல்லவா அமைதியாக அமர்ந்திருந்தான்.

"வெற்றியை வாகையாய் சூடி ஆயிரம் கரங்கள் மறைத்தாலும்; மறையாத ஆதவன் போல சுந்தரின் பல வருட கண்டுபிடிப்பு அங்கே மகுடம் சூடியது!"

"அப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு ஷ்ரவன் மற்றும் நண்பர்கள் குழுவிடம்!"

"நேற்று இரவு தான் அப்துல்லா, ரபீக் மூவருக்கும் அலைபேசியில் தகவல் கொடுத்தான் என்பதால் அவர்களுக்கு 'கள்ளநரி யார்?' என்பது தெரிந்து இருக்க.

"ஷ்ரவன் ஆடிய நாடகத்தில் பாவம் இந்த கள்ளக்குழு தான் ஒன்றும் புரியாது மாட்டிக்கொண்டது!"

தத்ரூபம் எங்காவது இருக்க வேண்டும் அல்லவா நாடகத்தில் அதனால் தான் இறுதிவரை ரபீக் மற்றும் அப்துல்லாவை திரையில் மாந்தர்களாக்கி தான் திரைக்கு பின் நின்று ஆட்டுவித்திருந்தான்.

பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வெற்றி பெற்ற ஷ்ரவன் குழுவை விட ரகோத்வாவை தான் அதிகம் சூழ.

அவர் எவ்வளவு தான், "நோ கமெண்ட்ஸ்!" என தப்பிக்க முயன்றாலும்; ஈட்டியாய் பாய்ந்தது
பத்திரிக்கையாளர்களின் சாதுர்ய கேள்விக் கணைகள்.

"மேடையில் பக்கம் பக்கமாக பேசியவர் இப்பொழுது வார்த்தைக்கு பஞ்சம் கண்டார் போல!"

"ஆனால்,திடீரென்று அனைவரும் கைபேசியிலும் ஒளிபரப்பு செய்யப்பட்ட காணொளியால் ரகோத்வா, வாகீசன் உடன் சேர்ந்து அவருக்காக செயலாற்றிய அனைவரும் சிக்கிக் கொண்டனர்!"
 
Top