Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 3

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
பேராண்மை 3

"யாஹ் ரக்ஷன்.. சொல்லு போன டைம் இருந்த அன்கம்பார்ட்ஸ் அண்ட் மைனஸ் பிளாக் மார்க்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சா!?"

ரக்ஷன் ஷ்ரவனின் தளபதி.

இவன் கேட்பதற்கு முன்பே அவன் கேட்க விரும்பும் தகவல்களை தயாராய் வைத்திருக்கும் திறமைசாலி மட்டுமல்ல; நம்பிக்கைக்கு பாத்திரமான உயிர் நண்பன்.

"எல்லாமே ரெடி ஷ்ரவா!"

"எல்லாத்தையும் தனி தனி டாகுமெண்ட்டா போட்டு வை. நெக்ஸ்ட் சீசன் புராடக்ட் மனுபேக்சர் ஸ்டார்ட் பண்றப்போ இதை எல்லாம் ரெசிஸ்ட் பண்ணிடனும் ரக்ஷா!"

"மீட்டிங் எப்போ ரெடி பண்ணட்டும் ஷ்ரவா!?"

"மெரிட்ஸ் அண்ட் டீ மெரிட்ஸ் அனலைஸ் பண்ணின ஃபுல் டாக்குமெண்ட்ஸ் எப்போ ரெடின்னு சொல்லு அன்னைக்கு ஈவ்னிங் நம்ம மீட்டிங் வச்சுடலாம் ரக்ஷா!"

"ஓகே ஷ்ரவா! அப்போ நான் போய் மத்த வேலைகளை பார்க்கிறேன்"

"ஓகே யூ கெட் பிசி!"

ஷ்ரவன் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால்கள்,செவி திறன் கருவி, ஊன்று கோள்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் இயந்திர சக்கர நாற்காலிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளான்.

இப்பொழுது அவன் ரக்ஷனிடம் கேட்டிருக்கும் தகவல்கள் எல்லாம் சென்ற முறை இவர்கள் தயாரித்து சந்தைக்கு வந்த இவர்களின் தயாரிப்புகளில் பயனர்கள் அனுபவிக்கும்

"இன்னல்கள் என்னனென்ன!?"

"தயாரிப்பில் உள்ள குறைகள் யாவை !?

"அவற்றில் பயனாளர்கள் உணரும் உபாதைகள் அல்லது அசௌகரியங்கள் என்னென்ன!?"

இப்படி முன்பு தயாரித்த பொருட்களின் குறைகள், நிறைகள் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு பொருட்களை அடுத்த ஆண்டு வடிவமைக்கும் வல்லமை கொண்டவன்.

இதற்காக தனியே இயங்கும் குழுக்கள் உள்ளன.

இவர்கள் அடுத்த ஆண்டிற்கான அல்லது அடுத்த அரை ஆண்டிற்கான தயாரிப்புகளை தயாரிக்கும் முன்பே; இந்த குழுக்கள் சீருடன் செயலாற்றி குற்றங்கள் குறைகள் இருந்தால் அவற்றை திறம்பட தொகுத்து ரக்ஷனிடம் ஒப்படைக்கும்.

அவனிடம் இருந்து நேரே ஷ்ரவன் ஒப்புதல் பெற்று அவற்றில் இருந்து இன்னும் சுருக்கி தொகுத்து இவர்களின் நிறுவனம் தங்கள் தயாரிப்பை தொடங்கும்.

"என்ன ரக்ஷா!?"

"டாகுமெண்ட் ரெடி!"

"தென்.. மீட்டிங் ஈவ்னிங் வைக்கலாம்..!"

"ஓகே ஷ்ரவா நான் போய் ஸ்டாப்ஸ்ட இன்ஃபார்ம் பண்ணிடுறேன்!"

அத்தோடு விடைபெற்றவன்

"ஹேய் கைஸ் லிசன் நிறுவனத்தின் உற்பத்தி குழு, சந்தை படுத்துதல் குழு என்று முக்கிய குழுவில் உள்ள மக்களை ஒன்றாக திரட்ட.

"எஸ் ரக்ஸன் சார் சொல்லுங்க!" என்று குழுமிய கூட்டத்தை நோக்கி,

இன்றைக்கு மாலை கூட்டம் என்பதை தெரிவித்தவன்; நேரம் என்ன என்பதை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதாக கூறி நகர்ந்தான்.

"ஹேய் அவரு போய் ரொம்ப நேரம் ஆச்சுடி மஞ்சு!"

"அவர் போய்ட்டாரு ஆனா அவரோட ஒன் மேன் ஷோ ஸ்மெல் இன்னும் இங்க இருந்து போகவே இல்லையே டி!?"

தோழியிடம் பதில் உரைத்த மஞ்சரி கண்களில் தான் எத்தனை ஏக்கம்
ரக்ஷன் மீது அவளுக்கு ஒரு தலைக் காதல்.

அவள் முதன்முதலாக அலுவலகம் வந்த பொழுது உதித்த உன்னத காதல்.

ஆனால் அதை ஆதரிக்க அவன் முன்வரவில்லை 'என்ன செய்வது?' பார்வையால் மட்டுமே அவனை மனதில் நிறைக்கும் வரம் பெற்றாள் போல மஞ்சு.


"பிளாக் மோட்டாரைஸ்ட் வீல் சேர்..

ஃப்ரேம் பிளாக், கலர் பிளாக்..

மெட்டிரியல் ஸ்டீல் ஆர் அலும்னியம்..

பவர் 200 டபிள்யு ..

ரேன்ஞ் 25 கிலோ மீட்டர் ..

யுனிவர்சல் சர்ஜிகல் எக்யூப்மென்ட்..


ஆர் 250 பயண சக்கர நாற்காலிகள் "

"சட்ட நிறம் கருப்பு

பயண வரம்பு 10 - 15 கிலோமீட்டர்/ சார்ஜ்

கியர் விகிதம் 32:1

சுமை திறன் 130 கிலோ எடை"

வாகனங்கள் பற்றியும்,மற்ற திறன் கருவிகள் பற்றியும் விரிவாக கூறி எந்த எந்த கருவியில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் எனும் விவாதங்களும் அங்கே நடந்து கொண்டிருந்தது.

நீள்வட்டமாக இருந்த மேசையில் சுற்றி இருபது குழுக்களின் தலைவர்கள் அவர்களின் துணை தலைவர்கள் அமர்ந்திருக்க.

பின்னால் அவர்களின் உதவியாளர்கள் நின்றிருக்க.

'வையத் தலைமை கொள்' அரிமாவாக நடுநாயகமாக கொண்டே கண்களால் சூழலையும்,ஒவ்வொருவரும் கொடுக்கும் விளக்கங்களையும் தன் கண்களால் 'எடை போட்டு' மனதிற்குள் குறிப்பெடுத்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.


"ஓகே கைஸ் இப்போதைக்கு நம்ம செய்யவேண்டியது என்ன அப்டின்னு இன்னைக்கு நைட் உங்களுக்கு ,டெரைவ் பண்ணி உங்களோட ஆபீஸியல் மெயில்ல இன்ஃபார்ம் பண்ணிடுவோம்!"

"நாளைக்கு உங்க உங்க டிபார்ட்மெண்ட் வொர்கை ஸ்டார்ட் பண்ணுங்க!"


"இன்னும் முக்கியமான ஒரு விசயம் என்னன்னா நம்ம கம்பெனி லோகோவை சேன்ஞ் பண்ணனும்.அதுக்கு ஒரு சூட்டபிள் கேண்டிட் இருந்தா ரெகமண்ட் பண்ணுங்க கைஸ் மீட்டிங் இஸ் அட்ஜன்ட்!"

என்றவன் தன் வலகரத்தால் கருங்களிற்றை இயக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

"ஆகா! அவன் அமர்ந்திருக்கும் போது அவன் அருகில் அங்கிருக்கும் யாரும் சரிசமமான உயரத்தில் இருப்பதாக தோன்றவில்லை!"

அவன் பேச்சில் சிறு 'பிசிறு' இல்லை; கண்களில் 'கூர்மை' குறையவில்லை.

தன்னை சுற்றிய உதவியாளர்களின் கேள்விகளுக்கும்; பிறர் மறந்தவற்றையும் ஞாபகம் செய்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் ஷ்ரவன்.

"நடக்க முடியாதவன் முடவன் அல்ல; மூளை இருந்தும் அதனை செயல் படவிடாமல் செய்பவனே அவனை பொறுத்தவரை முடவன்!"

கோபம் நிறைந்தவன் அவன் அளவில் வேலையில் குறைவு என்றால்;

அவன் அலுவலகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அதிகம்.

அவர்களுக்கு மரியாதையும் அதிகமாக வழங்கப்பட வேண்டும்.ஆனால் அதனை வைத்து தவறாக செயல்பட நினைத்தால் இவன் நரசிம்ம அவதாரத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

சுற்றி நடந்த இருபது நபர்களின் மத்தியில் அரசனாக பயணித்தான் பார்வேந்தன்.

ஷ்ரவன் தோரணையை ரசிக்கவே அங்கே பல பெண்கள் கூட்டம் உண்டு.

வெளி இடங்களில் மற்றவர்கள் பார்வைக்கு அவன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஊனமுற்றவன் எனும் எண்ணம்.

ஆனால் தொழில் முறையில் அவன் ஒரு "ஜாம்பவான்!"

அன்னைக்கு பாடம் சொன்ன கலியுக சுப்பன் அவன்.

தந்தையை இழந்து தாய் உலகம் அறியாது நின்ற போது; தந்தையின் கண்டுபிடிப்புகளுக்கு கிடைக்கும் தொகை மூலம் பள்ளி ஒன்றை வைக்க அன்னையை ஊக்கியவன்.

தந்தை தொடங்கிய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தைரியம் அற்று மறுத்த தாயைக் கொண்டு நிறுவிய நிர்மலன்.

"சௌந்தர்யா" எனும் சகாப்தத்தின் தொடக்க புள்ளி எதுவென்று அவரிடம் கேட்டால் கண்டிப்பாக தன் மகனை மட்டுமே காண்பிப்பார்.

'ஏனென்றால்!?'

அவன் தான் அவரை ஆளாக்கிய ஆசான்.

"கணவன் நிழலில் மட்டுமே வாழ்ந்த பெண்மணியை எங்கே செல்வது!? என்ன செய்வது!? ஒன்றும் அறியாது பேதையாய் நின்றவரை மேதையாய் மாற்றி அழகு பார்க்கும் தயாளன்!" அவன்.

வழி எங்கிலும் இரு மருங்கிலும் நெடுந்தோங்கி நின்றது செங்கொன்றை மரங்கள்.

பூமா தேவியின் முகம் தெரியாத அளவிற்கு அதன் இலைகளும் சருகுகளும் நிறைந்த தரையை காணும் போதே தெரிந்தது கண்டிப்பாக இங்கே ஆட்களின் நடமாட்டம் என்பது நின்றுபோய் காலங்கள் பல இருக்கும் என்பது.

வழி நெடுக பரவிக் கிடந்த இலையும் சருகும் காற்று வீசும் திசைக்கு ஏற்றார் போல அங்குமிங்குமாக பறந்திருந்தது.


அவ்விடத்தில் துருப்பிடித்த கதவுகளை சுமந்து கொண்டு அடுத்தவர் கரங்களை பதம்பார்க்க ஏதுவாக வாய் சிறிதாய் பிளந்து கிடந்த சாளரம் தெரிய.

அதனுள்ளும் கூட வெளியில் போலவே துருபிடித்த கதவும் தூசியும் கரையான் அரிப்புமே இருக்கும் என நம்பி எட்டிப்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே


"என்னை தொட்டால் உன் கைகாலை கிழித்தே தீருவேன்!"என்ற சாளரத்தை கண்டால் சற்று அச்சம் உண்டாக.

எங்கே அதனை திறந்தால் அதிலிருந்து வரும் சத்தம் நமக்கே எட்டப்பனாக மாறிவிடும் அபாயம் உள்ளதால்;

எனக்கு மட்டுமே தெரிந்த ரகசிய வழியில் உங்களை அவ்விடம் அழைத்து செல்கிறேன் வாருங்கள்..!

இனி ஒவ்வொருமுறை இங்கே வரும் பொழுதும் எங்கே துருப்பிடித்த சாளரக் கம்பியில் கையை கிழித்துக் கொள்வோமோ எனும் அஞ்சுதல் இல்லாமல் பயணிக்கலாம் மக்களே!

செங்கொன்றை மரங்களின் இடையே கும்பலாக புதர் போல் மண்டிக்கிடந்த செடி கொடிகளை சேதாரம் செய்திடாது மெதுவாக விலக்கி பார்த்தால்

அதன் இடையே சிறு துணிப்பை ஒன்று கந்தலும் கதக்களுமாக தொங்க அதனை மூன்று முறை பிடித்திழுக்க.

மூன்று முறை இழுத்து முடித்தால் 'வெட்டுக்கிளி' ஒன்று பட்டென்று பறந்து வந்து அந்த புதரின் வாயிலில் அமர்ந்தது.

"இது என்ன வெட்டுக்கிளி? ச்சூ... ப்போ... எங்களுக்கு வேலை உள்ளது!" என


சாதாரண 'வெட்டுக்கிளி' என்று வெறுமனே நினைக்க கூடாது.

'ஏனென்றால்!?'

அது நம் முகங்களை தன் கண் எனும் கேமிராவில் காணொளி பதிவு செய்து புகைப்படங்களை கிலுக்கி அதன் வேலை முடிந்த உடன் பறந்து சென்றுவிட்டது.

இது நமக்கு காத்திருப்பு காலம் நண்பர்களே..!

சென்ற வெட்டுக்கிளி சென்ற வேகத்தில் திரும்பி வந்து ஓரிடத்தில் அமர.

"என்ன ஆச்சர்யம்!?"

நமக்கான தரைத் தளக்கதவு சருகுகளின் இடையே தோன்றுகிறது.

அதன் வழியே கீழிறங்கி செல்லும் வகையில் கீழாக சென்ற படிகளை பயன்படுத்தி நாம் கீழிறங்கி செல்லலாம்.

இது மிகவும் ரகசியமான பாதை இதனை அறிந்த நபர்கள் வெகு சிலரே.ஆதலால் நீங்களும் கூட இந்த ரகசியத்தை ரகசியமாக கையாளவும்.

மெதுவாக படிகளை கடந்து உள்ளே நுழையும் வாயிலில் விழிப்பாவை சோதனை நடைபெற.

அதுமுடிந்த பின் சொர்க்க வாசல் இல்லை இல்லை;

அந்த ரகசிய இடத்தின் வாயிற்கதவு நமக்காக விரிந்து நம்மை உள்ளே வரவேற்றது.

நாமும் ஆர்வமாக உள்ளே நுழைந்தால் முன்பு கண்டது எல்லாம் உள்ளிருக்கும் ஆச்சர்யங்களின் சிறு பகுதி தான் என எண்ணும் அளவிற்கு விறுவிறுப்பாக இயங்கி இருந்தது அந்த ஆய்வகம்.


"என்ன ஆய்வகமா!?"

ஆம்! ஆய்வகம் தான் அதன் சுற்றத்தை காணும் போது வேதிப்பொருட்கள் அதனதன் அடுக்குகளில் வர்ண வர்ணமாய் அடுக்கபட்டிருக்க.

நுண்ணோக்கிகள் வரிசையாக மேசையை அலங்கரிக்க.

எலிகள் பல கூண்டுகளில் அடைந்திருந்தன.

பியூரட், பிப்பெட், சிரஞ்சுகள் என ஒரே அறிவியல் சார்ந்த அதிலும் குறிப்பாக உயிரி - வேதியல் சார்ந்த சார்ந்த கூடாரமாக இருந்தது அந்த ஆய்வுக் கூடம்.

அங்கே மர மேசை நடுவே இருக்க அதனை சுற்றி வெள்ளை அங்கியும்,முகக் கவசமும்,கண்களில் கண்ணாடியும், கைகளில் கையுறை அணிந்த நால்வர் நின்றிருக்க.ஒருவர் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.


மற்ற நால்வரும் அமர்ந்திருந்த நபரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அவர் கேட்கும் அனைத்தையும் அவரிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்க என்று பம்பரமாய் சுழன்று திரிந்தனர்.

ஐவரில் அமர்ந்திருந்த வயதான நபருக்கு தலையில் ஆங்காங்கே நரைத்த முடிகள் எட்டிப்பார்த்து பல் இளிக்க.

தலையில் இருந்து கிளம்பி காதின் ஓரத்தை கடந்து, கன்னக் கதுப்பை விடுத்து நடுநாடியில் வந்து நர்த்தனம் ஆடிய ஒற்றை வியர்வை முத்து 'விழுகவா?' 'வேண்டாமா?' என கபடி ஆடியது.

அம்முத்து சொல்லாமல் சொல்லியது அந்நபர் கொண்ட பதட்டத்தின் அளவீட்டை.

அவர் அருகில் நின்ற நான்கு இளைஞர்களில் ஒருவன் கையில் குறிப்பெடுக்க குறிப்பேடை வைத்துக் கொண்டு,

'இதுவரை என்ன செய்தோம்?' என்பதை எழுதியபடி.அடுத்தது குறிப்பெடுக்க தயாராக நிற்க.

ஒருவனோ தன் இடக்கையில் இருந்த நிமிட கைகடிகாரத்தையும், மேசையையும் மாற்றி மாற்றி பார்த்திருந்தான்.

அவன் வலகரத்தின் ஆள்காட்டி விரல் நிமிட கடிகாரத்தின் அடுத்த நொடி நேரத்தை நிறுத்தும் பட்டன் மீது படிந்திருந்தது.

இன்னும் ஒருவனோ இது வெற்றி இல்லை என்றால்; அடுத்ததாக ஒன்றை ஆய்வு செய்வதற்கு தேவையானதை தயாராக கைகளில் வைத்துக் கொண்டு நின்றான்.

கடைசியாக நின்றவன் தன் தலைமையாளரின் செயல்களை குறிப்பெடுத்து;

'இப்பொழுது யார் யார் என்னென்ன செய்துள்ளனர்?'என்பதை அதே இடத்தில் நின்று குறிப்பெழுதி இருந்தான்.

'நரைமுடியார்' தன் முன் வைக்கப்பட்டிருந்த நுண்ணோக்கியின் ஐ பீஸ் வழியே ஸ்லைடை பார்க்க.

அதன் அமைப்பு தெளிவாக தெரியாததால் ஐ பீசை மீண்டும் சரி செய்து என ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்த்தவர்.

இந்த ஸ்பெசிமன் 'சரி இல்லை' என்று வேறு ஒன்றை தயாராக வைத்திருந்தவன் புறம் கைநீட்ட.

அவனும் பயபக்தி உடன் அவர் கையில் அதனை அவரிடம் ஒப்படைத்தான்.

"தொண்டு செய்யும் அடியாரின் தோரணை தான் அங்கே!"

இப்பொழுதும் கூட ஐ பீசை சரி செய்து முன்பே விட உன்னிப்பாக கவனித்திருந்தார்.

அழுத்தமாய் பார்த்தவர் மெதுவாக தன் கண் கண்ணாடியை கழட்டி..
"அடுத்தமுறை பார்த்துக்கலாம் பாய்ஸ் இப்ப போய் ரிபோர்ட் ரெடி பண்ணுங்க!"என்றபடி முன்னால் நடந்தவர்.

'திடீரென்று' தன் நடையை நிறுத்தி;
"சிங்கில் இன்பர்மேஷன் மிஸ் ஆகக்கூடாது புரியுதா!?"

'இன்றைய கண்டுபிடிப்பு தோல்வியை தழுவியது!' என்பதை சொல்லாமல் சொல்லி அதை பற்றிய குறிப்புகளை எழுதிட கூறினார்.

தன்னை சுற்றி நின்ற இளைஞர்களுக்கு "வெற்றியும்,தோல்வியும் சமம் என்போம்!" என அனுபவ பாடம் வழங்கி சென்றார் அவர்.

இவர்கள் நால்வரும் வெளியில் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட குறைந்த சம்பளம் வாங்கும் ஆணாக, பெரும் தொழில் அதிபரின் மகனாக, ஊர் சுற்றும் வேலை இல்லா பட்டதாரி இளைஞனாக,

"எதோ ரகசியமா பண்றான்! ஆனா என்ன வேலை பார்க்கிறான்?" என்று வீட்டிற்கு கூட தெரியாத மாய பிம்பத்தின் பின்னே வாழும் அறிவியலாளர்கள்.


"டேய் ஜோ நேத்து உன் ஆளை பார்க்க வெளிய போனியே என்ன ஆச்சு !?"


தட்டச்சு செய்த இன்றைய குறிப்புகளை அடுக்கியவாரு ஶ்ரீதரன் ஆரம்பிக்க.

"அங்க போறதுக்கு முன்னாடியே மச்சானுக்கு சகுணம் சரியில்லை போல.
அவன் ஆளு அவங்க அப்பா,அம்மா கூட அவுட்டிங் போயாச்சு!" நக்கலாய் மொழிந்தான்.

நால்வரில் மற்றையவன் அப்துல்லா.

இவர்கள் நால்வரில் அப்துல்லாவிற்கு திருமணம் முடிந்திருக்க.

ஒருவனுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம்.

ஜோவிற்கு காலம் காதல்காலமாக இருக்க.
பாவம் ஒற்றை மரமாக தனித்து நின்றான் ஶ்ரீ தரன்.

"யார் முகத்துல முழிச்சுட்டு போனடா மாப்ள? அவன் கண்ணு தான் உன்னை தாக்கி இருக்கும்!" ஆருடம் கூறியது நான்காமவன் ரபீக்.

"மச்சான் உனக்கு கண்டிப்பா நான் பதில் சொல்லனுமா!?"

ஜோ சந்தேகமாக தாடியை தடவிக் கொண்டே ரபீக் முகத்தை ஒரு தினுசாக பார்த்தவாறு கேட்க.

"அஃப் கோர்ஸ் மாப்ள நாளப்பின்ன அவன் முகத்தை பார்க்காம அப்படிக்கா அப்பீட் ஆகலாம் பாரு அதுக்
குத்தான் கேட்கறது!" ரபீக் குறும்பாய் கூற.


"வேற யாரும் இல்ல மச்சான் சரியா உன் முகத்தை தான் பார்த்துட்டு கிளம்பினேன். அப்போ நீதானா அந்த பில்லி சூனியம் !?"
ஜோ ரபீக் காலை வாரிட.


"இந்த சாணி அடி உனக்கு தேவையா ராசா!?" என்ற ஶ்ரீ உடன் சேர்ந்து
'ஹை - ஃபை' கொடுத்து சிரித்தான் அப்துல்லா.
 
Top