“அதெல்லாம் இருக்கட்டும்த்தை. நான் சஹா, மகிழுக் கல்யாணத்தைப் பத்திக் கேட்டதைப் பத்தி நீங்களும், மாமாவும் முடிவு எடுத்துட்டீங்களா?“என்று அவரிடம் வினவினாள் வண்ணமதி.
அதில் தனக்குள்ளே இருந்த எதிர்பார்ப்பும், ஆசையும் மேலெழுந்தாலும் அதை அடக்கிக் கொண்டுத் தனது அத்தை, மாமாவின் முகத்தைப் பார்த்தான் மகிழம்பூவன்.
“அந்த விஷயத்தில் நாங்க ரெண்டு பேரும் மட்டும் இல்லை! உங்கப்பாவும் சேர்ந்து நேத்து ராத்திரியே முடிவு எடுத்தாச்சு”என்று புன்னகையுடன் பதிலளித்தார் கஸ்தூரி.
அதைக் கேட்டதும் தங்களது விழிகள் பெரிதாகித் தந்தையை நோக்கினர் மகவுகள் இருவரும்.
“அப்படியா ப்பா?”என்று ஆனந்தமாக கேட்டாள் வண்ணமதி.
“ம்ஹ்ம். ஆமா”என்றுரைத்து விட்டு,
தாங்கள் மூவரும் நேற்றிரவு கலந்துரையாடிய விஷயத்தை அவளிடமும், மகிழம்பூவனிடமும் கூறி முடித்தார் பால்ராஜ்.
“நீ இப்போதாவது எங்களை நம்புறியா?”என அவளிடம் கேட்டார் ரமணன்.
அதில் தர்ம சங்கடம் அடைந்து,”அச்சோ! நான் உங்களை நம்பாமல் எல்லாம் இப்படி கேட்கலைத்தை. உங்கப் பொண்ணு இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பாளான்ற சந்தேகத்தில் தான் இது அடிக்கடி கேட்கிறேன்”என்று அவருக்கு விளக்கினாள் வண்ணமதி.
உடனே,”நீ உன்னோட தம்பியோட வாழ்க்கைக்காகவும், சந்தோஷத்துக்காகவும் தான் இப்படி பேசுறன்னு எங்களுக்குத் தெரியும்மா! உன்னை மாதிரியே நானும் என்னோட தங்கச்சி மேல் நிறைய பாசம் வச்சிருக்கேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி அவளோட விருப்பத்தை நிறைவேத்தாமல் இருப்பேன்?”என்றவரோ,
அவர்களது பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியில் உறைந்து போய் விட்டிருந்த தன் வருங்கால மருமகனிடம்,”என்ன மாப்பிள்ளை சந்தோஷமா?”என்று கேட்டார் ரமணன்.
உடனே தனது உறைநிலையில் இருந்து விடுபட்டு,”எனக்கு ரொம்ப சந்தோஷம் மாமா! ஆனால் எனக்கும் ஒரு கோரிக்கை இருக்கு…”என்று தயங்கிய மகிழம்பூவனை இடைமறித்து,
“அது என்னன்னு உங்கப்பா எங்கிட்டே சொல்லிட்டார் மருமகனே! இந்தக் கல்யாணம் சஹஸ்ராவோட விருப்பத்தோட தான் நடக்கும்!”என்று அவனுக்கு வாக்களித்ததும் தான், இதழ் பிரித்துச் சிரித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
“இனிமேலாவது இப்படி சிரிச்சு, சந்தோஷமாக இரு!”என்று அவனுக்கு அறிவுறுத்தினாள் வண்ணமதி.
தன் மகிழ்ச்சிக்காகத் தமக்கை இவ்வளவு முயற்சி எடுக்கிறாள் என்பதை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து,
“ரொம்ப நன்றிக்கா!”என அவளுக்கு நன்றி தெரிவித்தான் மகிழம்பூவன்.
“ஆமா! ஏதோ வெளி ஆளுக்குச் சொல்ற மாதிரி தாங்க்ஸ்லாம் சொல்லிட்டுத் திரியுறான்! போடா அங்குட்டு!”என்று அவனைச் செல்லமாக கடிந்து கொண்டாள் வண்ணமதி.
இங்கே அலுவலகத்தில், கடந்த இரண்டு நாட்களாக செய்யாமல் வைத்திருந்த வேலைகளையும், சரி பார்க்காமல் இருந்த கோப்புகளையும் முடித்து விடும் நோக்கத்தில் முனைப்புடன் இறங்கி விட்டிருந்தாள் சஹஸ்ரா.
தனது காரியதரிசியையும் வேலையில் பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
“மேம்! நம்ம கிட்டே இருந்த சீஸ் பொருட்களோட மொத்த ஸ்டாக்ஸ் ஒரு ஸ்வீட் கம்பெனி வாங்கிட்டதால் இப்போ நம்ம ஃபேக்டரியில் சீஸ் காலி ஆகிடுச்சு. அதோட புரொடக்ஷனை ஸ்டார்ட் பண்ணிடலாமான்னு மேனேஜர் கேட்கிறார்”என்றுரைத்த மோனிகாவிடம்,
“ம்ம். சீக்கிரம் ரெடி செஞ்சி வைங்க. அப்போ தான், அடுத்த ஆர்டர் வந்தவுடனேயே அனுப்பி வைக்க முடியும்! இதை எத்தனை தடவை சொன்னாலும் முதல் தடவை மாதிரியே இப்போ வரைக்கும் எங்கிட்டே அப்ரூவல் கேட்டுட்டே இருக்கீங்களே!”என்று சலித்துக் கொண்டாள் சஹஸ்ரா.
ஆனால் அவளிடம் மறு வார்த்தைப் பேசவில்லை அந்தக் காரியதரிசி.
ஏனென்றால் அவள் இவ்வாறு ஒருமுறை சலித்துக் கொண்டதால் அவளிடம் ஒப்புதல் பெறாமல் வேலையை ஆரம்பித்து விட்டிருந்தார் அந்த தொழிற்சாலையின் மேலாளர்.
அதை அறிந்ததும் தாம், தூமென்று குதித்து,”நான் அப்ரூவல் தராமல் நீங்க எப்படி வேலையை ஆரம்பிக்கலாம்? இந்தக் கம்பெனியோட ஓனர் நானா? இல்லை நீங்களா? நான் சொல்றதை மட்டும் செய்யத் தான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறேன். இனிமேல் இப்படி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணீங்கன்னா உங்களை வேலையை விட்டுத் தூக்கிடுவேன்!”என்று மிரட்டி அவரையும், மோனிகாவையும் ஒருவழியாக்கி விட்டாள் சஹஸ்ரா.
அதனாலேயே அவளிடம் ஒப்புதல் வாங்காமல் எதையுமே செய்ய மாட்டார்கள் அவளது அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் பணியாளர்கள்.
மதிய உணவு வேளையில்,
“மிஸ். மோனிகா, நீங்க போய் உங்க லன்ச்சை முடிச்சிட்டு வாங்க”எனக் கூறிக் காரியதரிசியை அனுப்பி வைத்து விட்டுத் தானும் காரிலேறி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் சஹஸ்ரா.
அவளது வரவை அறிந்ததும் மலர்ந்த முகத்துடன் அவளை வரவேற்றனர் குடும்ப உறுப்பினர்கள்.
“கரெக்டா மதிய சாப்பாட்டு நேரத்தில் வந்துட்ட சஹா! நாங்களும் இன்னும் சாப்பிடலை. உனக்காகத் தான் காத்திருந்தோம்”என்று மகளிடம் உரைத்தார் கஸ்தூரி.
“ம்ஹ்ம். இன்னைக்கு வேலை ரொம்ப அதிகமாகிடுச்சும்மா! அதனால் எனக்குப் பசியும் அதிகம் ஆகிடுச்சு”என்று அவரிடம் தெரிவித்தாள் சஹஸ்ரா.
அவளது பசியால் வாடிப் போயிருந்த முகத்தைப் பார்த்ததும் தனது மனம் இளகிப் போய் விட,”ஆமாம். உன் முகத்தைப் பார்த்தாலே ரொம்ப பசியில் இருக்கிறன்னுத் தெரியுது. நீ முதல்ல வந்து உட்கார்ந்து சாப்பிடு அழகி”என்று அவளிடம் அனுசரணையுடன் மொழிந்தான் மகிழம்பூவன்.
அவனது அக்கறையான பேச்சைக் கேட்டதும் தனது கண்கள் இடுங்க அவனைப் பார்த்தவளது கவனத்தை ஈர்க்கத் தவறி விட்டிருந்தது அவனது,’அழகி'என்ற அழைப்பு!
ஆனால் மற்றவர்களின் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியும், உற்சாகமும் அவளது கவனத்தை முழுமையாக ஈர்த்து விட்டிருந்தது.
‘இவங்க எல்லாருக்கும் என்னாச்சு? இவங்க முகத்தில் வழக்கத்தை மீறி ரொம்ப சந்தோஷம் தெரியுதே’என்று எண்ணியவாறே சாப்பாட்டு மேசைக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் சஹஸ்ரா.
அவளுடனான தன் திருமணத்திற்கு அவளைத் தவிர மற்ற அனைவரின் சம்மதம் கிடைத்து விட்ட குதூகலத்தில் உரிமையாக அவளது அருகிலிருந்த நாற்காலியில் பதவிசாக உட்கார்ந்து விட்டான் மகிழம்பூவன்.
அதைக் கண்டதும் தனது கருவிழிகள் வெளியை தெறித்து விடும் அளவிற்கு அதிர்ச்சியும், வியப்பும் அடைந்து போய் அவனைக் குறுகுறுப்பாகப் பார்த்தவளைச் சிந்திக்க விடாமல்,
“நீங்களும் உட்காருங்க”என்று தங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களை அமர வைத்து விட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டுத் தங்களுக்கு உணவு பரிமாற உத்தரவிட்டார் கஸ்தூரி.
உடனே பணியாளர்களும் தங்களது வேலையைச் செவ்வனே செய்து முடித்து விட்டார்கள்.
“இன்னைக்கு ஆஃபீஸில் என்னவெல்லாம் நடந்துச்சு சஹா? அதை எங்க எல்லாருக்கும் சொல்லு”என்று மகளிடம் பேச்சுக் கொடுத்தார் ரமணன்.
“ம்ஹ்ம்”என்றவளோ, தனது தொழிற்சாலையில் ‘சீஸ்’ என்றப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் விற்றுத் தீர்ந்ததைப் பற்றி அனைவரிடமும் கூற, அதை அவளது தொழிற்சாலையில் எந்தெந்த உபகரணங்களைப் பயன்படுத்தி எப்படி தயாரிக்கிறார்கள் என்ற செய்முறையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள் வண்ணமதி.
உடனே,”சீஸைப் பாலாடைக்கட்டின்னும் சொல்லுவாங்க. அதைப் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும். ஏன்னா, நீங்களும் ஊரில் மாட்டுப் பண்ணையும், பால் பண்ணையும் வச்சிருக்கீங்க தானே! அதனால் உங்களுக்கு ஓரளவுக்கு இதைப் பத்தி தெரிஞ்சு இருக்கும்”என்றவளிடம்,
அதை ஆமோதிக்கும் விதமாக,“ஆமாம்மா. எங்களுக்கும் அதைப் பத்தின ஞானம் கொஞ்சம் இருக்கு”என்றார் பால்ராஜ்.
“இந்த ஊரில் ஃபேக்டரியில் சுத்தமான பால் கிடைக்கிறது கஷ்டம். அதனால் முடிஞ்ச அளவுக்குப் பால் கிடைக்கிதான்னுப் பார்ப்போம். இல்லைன்னா பாக்கெட்டை வச்சுத் தான் சீஸ் தயாரிப்போம்”என்றுரைக்க,
“அப்படியா? ஆனால் அதனால் நிறைய பாதிப்புகள் வரும் தானே சஹா?”என்று வருத்தத்துடன் கேட்டான் மகிழம்பூவன்.
“ஆமாம் மிஸ்டர். மகிழ். ஆனால் என்னப் பண்றது எங்களுக்குச் சுத்தமான மாட்டுப் பாலோ, எருமைப் பாலோ அடிக்கடி கிடைக்கிறது இல்லையே! அதான் பாக்கெட் பாலை யூஸ் பண்ண வேண்டியதாகப் போயிடுச்சு”என்று அவனிடம் சோகமாக கூறினாள்.
“ஏன் நீயே மாட்டுப் பண்ணையை வைக்கலாமே? அதுக்கான இடமும், பணமும் தான் உங்கிட்ட இருக்கே?”
“எங்கிட்டே அதெல்லாம் இருக்கு தான். ஆனாலும் எனக்கு மாட்டுப் பண்ணையை நடத்துற அளவுக்குத் திறமை இல்லை. அதான், யோசிக்கிறேன்”என்றவளோ, தன்னால் கம்பெனி மற்றும் தொழிற்சாலைகளைத் திறம்பட செய்ய முடியும் என்றால் மத்ததையும் எளிதாக நடத்த முடியும் என்பது அவளுக்கே தெரியும்!
ஆனால் வேண்டுமென்றே தனது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவனிடம் காட்டிக் கொண்டாள் சஹஸ்ரா.
அதற்கும் அவளிடத்தில் ஒரு காரணம் இருந்தது. தான் அடுத்த தொழிற்சாலையை உருவாக்கும் வேலையில் முனைப்பில் இருந்ததால் பால் பண்ணையை உருவாக்கி, அதை நடத்துவதற்கு நேரம் கிடைக்காது என்பதால் தான் அதைப் பற்றி நன்கு தெரிந்து அதில் சிறு வயதிலிருந்தே ஊறிப் போயிருந்த மகிழம்பூவனிடம் மனம் வருந்திப் பேசினால் அவன் தனக்கு நிச்சயமாக உதவ முன் வருவான் என்று கணக்குப் போட்டிருந்தாள்.
அதேபோல், அவன் அவளது சகோதரி வண்ணமதியைப் போல் விவரமாக இல்லாமல் வெள்ளந்தியாக இருப்பதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்து இப்படி பேசி அவனது இரக்கத்தைச் சம்பாதித்துக் கொள்ள முடிவெடுத்து தற்போது அதன்படி நடந்து கொண்டிருக்கிறாள் சஹஸ்ரா.
அவள் எண்ணியதைப் போலவே அவளது வருத்தம் தோய்ந்த வார்த்தைகளையும், கலங்கிப் போன முகத்தையும் கண்டு அவன் மட்டுமின்றி, மொத்தக் குடும்பமும் அது உண்மை என்று நம்பி விட்டது!
ஆகவே,”நாங்க இருக்கும் போது நீ இந்த விஷயத்துக்குப் போய் இவ்வளவு வருத்தப்படனும்னு அவசியம் இல்லை சஹாம்மா! உனக்குப் பால் பண்ணை வைக்கிற விஷயத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் அதை எங்க கிட்ட தயங்காமல் கேளு! உனக்கு எப்போ வேணும்னாலும் நாங்க உதவி பண்ணுவோம்!”என்று அவளுக்கு உறுதி அளித்தார் பால்ராஜ்.
உடனே,”ஆமாம்! நான் இதில் உனக்கு எந்த உதவியாக இருந்தாலும், எப்போ வேணும்னாலும் செய்யத் தயாராக இருக்கேன்!”என்று தானும் தன் மாமன் மகளிற்கு வாக்களித்தான் மகிழம்பூவன்.
அவர்களைப் போலவே தங்களது மகளின் பேச்சைக் கேட்டு அவளுக்குத் தங்களாலான உதவிகளைச் செய்ய முன் வந்தார்கள் ரமணன் மற்றும் கஸ்தூரி.
ஆனால் இவர்கள் அனைவரையும் தவிர்த்து சஹஸ்ராவின் இந்தப் பேச்சுக்களைப் பொறுமையாக கேட்டு முடித்து விட்டு அவளையே சில நிமிடங்கள் தன் ஆராய்ச்சிப் பார்வையால் துளைத்துக் கொண்டு இருந்தாள் வண்ணமதி.
அவளுக்குச் சஹஸ்ராவின் வார்த்தைகள் உண்மையானதாக இருக்கும் என்று நம்பிக்கை இல்லை.
ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லி, அவளைக் கேள்வி கேட்பதன் மூலமாக மற்ற குடும்ப உறுப்பினர்களை வருத்தம் அடையச் செய்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை.
எனவே நடப்பதை மௌனமாக இருந்து வேடிக்கைப் பார்க்கலானாள் வண்ணமதி.
- தொடரும்

Last edited: