அதற்குப் பிறகு மதிய உணவை உண்டு முடித்து, தான் நினைத்தக் காரியத்தை கஷ்டமே இல்லாமல் நடத்தி விட்ட மமதையில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டுத் தன் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்று விட்டாள் சஹஸ்ரா.
ஆனால் அவள் கிளம்பிய அடுத்த கணமே,”உங்கிட்ட நான் கொஞ்சம் தனியாகப் பேசனும்டா”எனத் தம்பியிடம் உரைத்தாள் வண்ணமதி.
அவனோ,“ம்ம். வயிறு முட்ட சாப்பிட்டுட்டேன். ஒரு மாதிரி இருக்கு. அதனால் வெளியே புல் தரையில் நடந்துட்டே பேசலாமா?”என்று கேட்க,
“சரி. வா”என்று அவனுடன் வீட்டிற்கு வெளியே இருந்த புல் தரையில் நடை பயின்று கொண்டே,
“உனக்கு அழகியை ரொம்ப பிடிச்சிருக்குன்றதும், நீ அவளை விரும்புறன்றதும் எனக்கு மட்டும் இல்லை, நம்ம வீட்டாளுங்க எல்லாருக்குமே தெரியும். ஆனால் அவ உன்னைக் காதலிப்பாளா? அவ மனப்பூர்வமான சம்மதத்தோட உன்னைக் கட்டிக்க ஒத்துக்குவாள்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா?”என இளையவனின் முகத்தைப் பார்த்து வினவினாள் வண்ணமதி.
அதைக் கேட்டதும் முதலில் அவளது முகத்தை தீர்க்கமாகப் பார்த்து விட்டு,”எனக்கு என் காதல் மேலே நம்பிக்கை இருக்குக்கா. உனக்கு இதில் நம்பிக்கை இல்லையா?”என்று அவளிடம் தீர்க்கமாக இயம்பினான் மகிழம்பூவன்.
அதற்கு அவளும்,”எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு! உன் காதல் மேலேயும் நம்பிக்கை இருக்கு! ஆனால் அழகி மேலே தான் எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை!”என்றுரைக்க,
“அது எனக்கும் தெரியும்க்கா. ஆனால் உனக்கு என் மேலே, என் காதல் மேலே நம்பிக்கை இருக்கு தானே? அப்பறம் என்ன? நீ என்னை நினைச்சுக் கவலைப்படாதேக்கா!”எனத் தமக்கைக்கு அறிவுறுத்தினான் மகிழம்பூவன்.
அதைக் கேட்டு ஆச்சரியமடைந்து,”உனக்கு அழகி மேல் ஏன் இவ்வளவு காதலா? எதுக்காக அவ உன்னை ஏத்துக்க மாட்டாள்ன்னுத் தெரிஞ்சு இருந்தும் அவளை விரும்பிட்டு இருக்கிற?”என்றாள் வண்ணமதி.
“நான் அவளைக் காதலிக்கிறதுக்கு முதல் காரணம் நம்மளோட அம்மா! அவங்களோட ஆசை! அவங்க தானே எனக்கும், அழகிக்கும் கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்பட்டாங்க? ஆனால் அதுக்காக மட்டுமே நான் அவளை விரும்ப ஆரம்பிக்கலை! எனக்கு அவளைச் சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்! நீ நம்ம சின்ன வயசுல இருந்ததில் இருந்து இப்போ வரைக்கும் ஒரு விஷயத்தை யோசிச்சுப் பார்த்திருக்கியா? அவ உங்கிட்ட சரிக்குச், சமமாக சண்டை போட்டாலும் எங்கிட்ட அப்படி சண்டைக்கு நிற்க மாட்டாள்! நான் என்ன சொன்னாலும் அவளுக்கு அது சரின்னுப்பட்டு அவளோட பிடிவாதம் எல்லாம் காணாமல் போயிடும்!”என்றதுமே,
உடனே தானும் அதைப் பற்றிய யோசனையில் சில நிமிடங்கள் ஆழ்ந்து விட்டு,”அட ஆமாம்! அதை நானே நிறைய தடவை பார்த்திருக்கிறேனே! அப்போ அவளுக்கு உன் மேல் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாசமோ, மெல்லிய உணர்வோ இருக்கு தான்! ஆனால் அவளால் தான் அதை உணர முடியலை! அப்படித் தானே?”எனக் கேட்க,
“ம்ஹ்ம். அப்படித் தான்க்கா. அதனால் தான், எனக்கு அவ மேல் சந்தேகம் இல்லை! அதே மாதிரி எனக்கு அவ மேல் இருக்கிற காதலை நான் உணர்ந்த மாதிரி அவளும் ஒரு நாள் என் மேல் அவளுக்கு இருக்கிற காதலை உணருவாள்! அது வரைக்கும் நான் காத்திருக்கத் தயார்! ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளைத் தவிர நான் யாரையும் ஏழேழு ஜென்மத்திலும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!”என்று உறுதியாக கூறினான் மகிழம்பூவன்.
அவனது காதலைக் கண்டுப் பிரம்மித்துத் தான் போய் விட்டாள் அவனது உடன்பிறந்த சகோதரி.
“எனக்கு உன்னை நினைச்சா ரொம்ப பெருமையாக இருக்குடா மகிழு!”என்று அவனது தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு,
“உன்னோட காதலும், அது மேல் நீ வச்சிருக்கிற நம்பிக்கையுமே உன் அழகியை உங்கிட்டயே கொண்டு வந்து சேர்த்துடும்! அவளுக்கும் கண்டிப்பாக உன் மேல் கொள்ளைக் காதல் வரும்! அவளும் உன்னை மாதிரியே உன்னை உன்னை உருகி, உருகிக் காதலிப்பாள் பாரு!”என்று அவனிடம் பெருமிதத்துடன் கூறினாள் வண்ணமதி.
அவர்களது பேச்சை எதேச்சையாக அங்கே வந்து கொண்டிருந்த பால்ராஜ், ரமணன் மற்றும் கஸ்தூரியும் கேட்டு விட்டிருந்தார்கள்.
அதில் தங்களது மகளின் மேல் தங்கள் வருங்கால மருமகன் வைத்திருக்கும் அளவுகடந்த காதலை எண்ணி நெக்குருகிப் போயினர் சஹஸ்ராவின் பெற்றோர்.
“எங்கப் பொண்ணை உங்கப் பையன் தன்னோட கண்ணுக்குள்ளே வச்சுப் பார்த்துக்குவான்னு எங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சு மாமா! அதனால் நாங்க நாளைக்கே அவகிட்டே இந்தக் கல்யாணத்தைப் பத்திப் பேசுறோம்!”என்று பால்ராஜ்ஜிற்கு வாக்களித்தார் ரமணன்.
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை! தங்கச்சி!”என்று அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டுத், தாங்கள் கேட்டதை இளையவர்கள் இருவரும் அறிந்து விடக் கூடாது என்று மீண்டும் வீட்டினுள் சென்று விட்டார்கள் மூவரும்.
அவர்கள் தாங்கள் இருவரும் பேசியதைக் கேட்டதை அறியாத உடன்பிறப்புகள் இருவரும் வீட்டிற்குள் சென்று தத்தமது அறைக்குள் புகுந்து கொண்டனர்.
இதே நேரத்தில் தனது அலுவலக அறையில் உலகத்தையே வென்றதைப் போன்ற உவகையில் இருந்தாள் சஹஸ்ரா.
அவளது முன்னாலிருந்த கணினியில் அவளது பிறந்த ஊரின் வரைபடமும், அதன் பெயரும் காணக் கிடைத்தது.
தனது நீண்டநாள் ஆசை விரைவாகவே நிறைவேறப் போவதை எண்ணிக் கண்களில் செருக்குடன் திரையை வெறித்துக் கொண்டிருந்தவளது இதழ்களோ வெற்றிப் புன்னகையைச் சூடியிருந்தது.
‘நான் சொல்வதை எல்லாம் நீங்க ஏன் அப்படியே நம்பிட்றீங்க மிஸ்டர். மகிழன்?’என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே கணினியை அணைத்து விட்டு மற்ற வேலைகளைப் பார்த்து முடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் சஹஸ்ரா.
அதற்குப் பிறகு அனைவரும் உணவுண்டு விட்டு உறங்கி விட்டிருந்தனர்.
அடுத்த நாள் விடியலில் தங்களது மனதில் இருப்பதை மகளிடம் உரைத்து அவளது விருப்பத்தைக் கேட்பதற்காகத் துரிதமாக கிளம்பி வரவேற்பறையை வந்தடைந்தார்கள் பால்ராஜ், ரமணன், கஸ்தூரி மற்றும் வண்ணமதி.
தனது இதயம் தாறுமாறாகத் துடிப்பதை உணர்ந்து அதைக் கையை வைத்து நீவி விட்டுக் கொண்டுத் தானும் அவ்விடத்தை அடைந்திருந்தான் மகிழம்பூவன்.
“சஹாம்மா! நானும், உங்கம்மாவும் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும். அதனால் நீ இன்னைக்குக் கொஞ்சம் லேட் ஆக ஆஃபீஸூக்குப் போக முடியுமா?”என்று மகளிடம் கோரிக்கை விடுத்தார் ரமணன்.
அவரது குரலில் தெரிந்த தீவிரத்தை உணர்ந்து,”ஷூயர் ப்பா”என்று அங்கேயிருந்த குஷனில் அமர்ந்தாள் சஹஸ்ரா.
அவளது பார்வையோ முதலில் தந்தையைத் தொட்டு விட்டு மற்றவர்களையும் ஒரு சில நொடிகள் தழுவியது.
அவர்கள் அனைவரின் கண்களோ தன்னை எதிர்பார்ப்புடன் நோக்குகிறார்கள் என்பதையும், மகிழம்பூவனின் தடுமாற்றம் மற்றும் அவன் தனக்குள்ளேயே நிகழும் போராட்டத்தைச் சிகையைக் கோதுவதன் மூலமாக அடக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறான் என்பதையும் அவளது உள்ளுணர்வு எடுத்துரைத்தது.
ஆனாலும் விஷயத்தை தந்தையின் வாயிலாக அறிய முடிவெடுத்து ரமணனை ஏறிட்டாள் சஹஸ்ரா.
“நாங்க உனக்கும், மகிழுக்கும் கல்யாணம் செய்து வைக்க ஆசைப்பட்றோம். நீ அதைப் பத்தி என்ன நினைக்கிற? உனக்கு அதில் சம்மதமா?”என்று விஷயத்தைப் போட்டுடைத்து விட்டார்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் தந்தையைப் பார்த்தவளோ, அதே பார்வையுடனேயே மற்றவர்களையும் நோக்க,
அவர்களது முகங்களில் தெரிந்த பாவனைகளிலேயே தன்னைத் தவிர அவர்கள் அனைவருக்கும் இந்த விஷயம் முன்னரே தெரிந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள் சஹஸ்ரா.
அதேபோல், மகிழம்பூவனையும் பார்க்க, அவனோ அவளது கண்களை நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியாமல் தவித்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
உடனே ஆழ்ந்து மூச்செடுத்துக் கொண்டு,”இதுக்கு என்னால் உடனே எல்லாம் பதில் சொல்ல முடியாதுப்பா. எனக்கு யோசிக்க டைம் வேணும்”என்று அழுத்தமாக கூறினாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டவுடன்,’அவள் தனக்கு விருப்பமில்லை’என்று உடனே தனது மறுப்பைத் தெரிவிக்காமல் யோசிக்க நேரம் கேட்டதை எண்ணி மற்ற அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.
“நீ பொறுமையாக யோசிச்சு சொல்லு சஹா. நாங்க காத்திருக்கோம்”என்று அவளிடம் உரைத்தார் கஸ்தூரி.
“அதுக்கு முன்னாடி நான் மிஸ்டர். மகிழன் கிட்டே கொஞ்சம் தனியாகப் பேசனும்மா”எனக் கூறி அவனைப் பார்த்தாள் சஹஸ்ரா.
அதில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த ஆடவனிடம்,
“என்ன மிஸ்டர் மகிழன், நாம ரெண்டு பேரும் தனியாகப் போய்ப் பேசலாமா?”என்று அவனிடம் நேரடியாக வினவ,
அதற்கு,”ம்ஹ்ம். பேசலாம் அழகி”என உடனே ஒப்புக் கொண்டான் மகிழம்பூவன்.
“அப்போ வாங்க. கார்டன் ஏரியாவில் போய்ப் பேசிட்டு வரலாம்”என்றாள் சஹஸ்ரா.
அவனோ தயக்கத்துடன் பெரியவர்களை ஏறிட,”இதில் எங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லைப்பா. நீயும், மருமகளும் தனியாகப் போய்ப் பேசிட்டு வாங்க”என அவனுக்கு அனுமதி அளித்தார் பால்ராஜ்.
அதேபோல்,”ஆமாடா. இப்போவே அவகிட்டே எல்லாத்தையும் பேசிரு”எனத் தம்பிக்கு மறைமுகமாக அறிவுரை வழங்கினாள் வண்ணமதி.
அவளைப் பின் தொடர்ந்து,”எதுக்கு மருமகனே இவ்வளவு தயங்குறீங்க? நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசினால் தானே எல்லாம் சரியாக நடக்கும்? அதனால் போய்ப் பேசுங்க”என்று கூறி அவர்கள் தனிமையில் உரையாடுவதற்கு அனுமதி கொடுத்து அனுப்பி வைத்தார்கள் ரமணன், கஸ்தூரி.
“சரி”என்றவனோ,
“அழகி! வா போகலாம்”என்று சஹஸ்ராவைத் தன்னுடன் வருமாறு அழைக்க,
“ம்ம். நீங்க முன்னாடி நடங்க”என்று அவனுக்கு வழி விட, உடனே முன்னேறி நடக்கலானான் மகிழம்பூவன்.
அப்போது, யாரும் எதிர்பாராத வண்ணம் கண் இமைக்கும் நேரத்தில் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து மர்மப் புன்னகை வீசி விட்டு அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் சஹஸ்ரா.
- தொடரும்