“ஓகே பூவன்” என்றவளைப் புன்னகையுடன் பார்த்திருந்தவனிடம்,
“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் தெளிவானப் பதில் சொல்லவே இல்லையே?”என்று தன் நெற்றிப் புருவம் சுருங்க அவனிடம் வினவினாள் சஹஸ்ரா.
“எங்க ஊரில் சுத்தமான மாட்டுப்பால் கிடைக்கும் அழகி! ஏன்னா, அங்கே நாங்க எதையும் செயற்கையாக உருவாக்கிறதுக்கு அனுமதிக்கவே மாட்டோம்”என்று அவளிடம் தீர்க்கமாகப் பதிலளித்தான் மகிழம்பூவன்.
“ஓஹோ! அப்போ நான் அங்கே உங்களோட பால் பண்ணையையும், மாட்டுப் பண்ணையையும் பார்க்கலாம் தானே?”என ஆர்வத்துடன் கேட்டவளை ரசனையுடன் நோக்கி,
“அதெல்லாம் இனிமேல் என்னோடது மட்டுமில்லை, நம்மளோடது!”என்று தன் விழிகளைப் பார்த்து அழுத்தமாக கூறியவனைக் கண்டு வியந்து போய்ப் பார்த்தாள் சஹஸ்ரா.
அவளது கருவிழிகள் பெரியதாக மாறுவதைக் கண்டு அவனுக்குள் இனம் புரியாத உணர்வொன்றுத் தோன்றிற்று.
அந்தக் கண்களை முத்தமிடும் எண்ணம் உருவாகி விட உடனே இனிப்புப் பண்டம் இருந்த காலியான கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு,
“நான் போய் இதை வச்சிட்டு வந்துட்றேன்”என்றவனிடம்,
“இங்கேயே வச்சிருங்க. வேலையாள் வந்து எடுத்துட்டுப் போவாங்க”என்றுரைத்தாள் சஹஸ்ரா.
“பரவாயில்லை இருக்கட்டும்”எனத் தானே கிண்ணத்தைக் கொண்டு போய்க் கழுவி வைத்து விட்டு வந்தான் மகிழம்பூவன்.
அதைச் சலிப்புடன் பார்த்தவளோ தனது கிண்ணத்தை அங்கேயே வைத்து விட்டு,”நான் ரூமுக்குப் போறேன்”என அங்கேயிருந்த அனைவருக்கும் பொதுவாக கூறி விட்டுச் சென்றிருந்தாள் சஹஸ்ரா.
உடனே அவளது கிண்ணத்தையும், தானே கழுவி வைத்து விட்டுத், தானும் அறைக்குள் நுழைந்து விட்டான்.
இப்போது வரவேற்பறையில் இருந்த பெரியவர்கள் மட்டும் தங்களது கிண்ணத்தில் மறுபடியும் இனிப்பை நிரப்பிக் கொண்டு அதை ரசித்து, ருசிக்க ஆரம்பித்து விட்டிருந்தனர்.
அதே நேரத்தில், தனது கையிலிருந்த கிண்ணத்தை நிறைந்திருந்த இனிப்பைச் சுவைத்துக் கொண்டே கணவனுடன் வீடியோ காலில் உரையாடிக் கொண்டிருந்தாள் வண்ணமதி.
“அது தான் எல்லாத்தையும் நல்லபடியாகப் பேசி முடிச்சு இப்போ ஸ்வீட் கூடச் சாப்பிட்டுட்டு இருக்கியே! அப்பறம் என்னம்மா?”என அவளிடம் ஆதூரமாக வினவினான் பூபாலன்.
“ம்ஹ்ம். ஆனாலும் எனக்கு இதை நினைச்சா ரொம்ப கவலையாக இருக்குங்க”என்று சோகமாக உரைத்தாள்.
அவள் அறைக்குள வந்தவுடனேயே தனது கணவனுக்கு வீடியோ கால் அழைப்பு விடுத்து அவன் அதை ஏற்றதும் சற்று முன்னர் நடந்த அனைத்தையும் அவனிடம் கொட்டித் தீர்த்து விட்டிருந்தாள் வண்ணமதி.
அதற்குத் தான் ஆறுதல் வார்த்தைகள் கூறி அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கிறான் அவளது கணவன் பூபாலன்.
“நீங்க சொல்வது எல்லாம் சரி தான்ங்க. என் தம்பிக்குப் பிடிச்சப் பொண்ணையே அவன் கல்யாணம் செய்துக்கப் போறான்றது உறுதி ஆயிடுச்சு தான்! ஆனால் அந்தச் சங்குப்பூவழகி அவனைப் பிடிச்சு ஒன்னும் கல்யாணம் செய்துக்க ஒத்துக்கலையோன்னு எனக்கு மனசில் நெருடுதுங்க!”என்று அவனிடம் ஆதங்கத்துடன் கூற,
“அதான், நீ இதைப் பத்தி உன் தம்பிக்கிட்டே கேட்டியே? அதுக்கு அவரும் உனக்குத் தெளிவான விளக்கத்தைக் கொடுத்துட்டாரே! அப்பறம் ஏன் நீ மனசை சஞ்சலப்படுத்திக்கிற?”என அக்கறையுடன் கேட்கவும்,
“அதெல்லாம் அவன் எனக்குத் தெளிவான விளக்கம் கொடுத்தான் தான்ங்க. ஆனால் என்னால் தான் அவனோட வாழ்க்கையை நினைச்சுப் பயப்படாமல் இருக்க முடியலை!”என்று அவனிடம் பாவமாக கூறினாள் வண்ணமதி.
அதில் கனிவு நிறைந்த விழிகளுடன் அவளை ஏறிட்டு,”ஒரு அக்காவாக ஏன் தம்பியைப் பத்தின உன்னோட கவலை எனக்கு நல்லா புரியுதும்மா. ஆனால் மகிழும், சஹாவும் தங்களோட கல்யாண விஷயத்தில் உறுதியான முடிவு எடுத்ததுக்கு அப்பறம் நாம அதில் ஒரு அளவுக்கு மேலே மூக்கை நுழைக்கிறது சரியாக இருக்குமான்னு நீயே சொல்லு?”எனக் கேட்டான் பூபாலன்.
அவனின் கேள்வி நியாயமானதாகத் தோன்றியது தான்!
ஆனாலும்கூட,”சரி இல்லை தான்ங்க. ஏன்னா, இது மகிழோட சொந்த வாழ்க்கை விஷயம். அதில் என்னால் ஓரளவுக்குத் தான் மூக்கை நுழைச்சு என்னோட கருத்தைச் சொல்ல முடியும்! ஆனாலும் அந்தச் சங்குப்பூவழகி என்னோட தம்பியைத் தன்னோட சுயநலத்துக்காக கல்யாணம் செய்துக்கிறதை எப்படி என்னால் ஏத்துக்க முடியும்ங்க? அதனால் தான், இப்படி புலம்பித் தவிச்சிட்டு இருக்கேன்!”என்று தன் நிலையை அவனுக்கு விளக்கிச் சொன்னாள் வண்ணமதி.
“ம்ஹ்ம். உன் தம்பி அந்தப் பொண்ணைப் பத்தி எதுவும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலையே? நீங்க மூனு பேருமே சின்ன வயசுல இருந்து ஒன்னு, மண்ணாக வளந்தவங்க தானே? அப்போ உனக்கு அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்ச மாதிரி மகிழுக்கும் நல்லா தெரிஞ்சி இருக்குத் தானே? அப்படி இருந்தும் அவனுக்கு அந்தப் பொண்ணைத் தான் கட்டிக்கனும்னு ஆசை இருக்குதுன்னா, அதுக்கு அவன் தயாராகாமலா இருப்பான்?”என்றதுமே,
“அட ஆமாங்க! நீங்க சொன்னக் கோணத்தில் நான் யோசிச்சுப் பார்க்கவே இல்லை!”என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தான் பூபாலன்.
அவளே மேலும் தொடர்ந்து,“அப்போ அவன் ஏதோ ஒரு முடிவில் தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்னு சொல்ல வர்றீங்களா?”எனக் கணவனிடம் ஆர்வமாக வினவினாள் வண்ணமதி.
“அது ஏதோ ஒரு முடிவாக இருக்காதும்மா. தன்னால் அந்தப் பொண்ணையும் தன்னைக் காதலிக்க வைக்க முடியும்ன்றத் தன்னம்பிக்கையும், உறுதியும் அவன்கிட்ட நிறையவே இருக்கு! அதனால் தான் எதை நினைச்சும் பயப்படாமல் அவளைக் கட்டிக்கிறதில் உறுதியாக இருக்கான்!”என்று அவளுக்கு விளக்கம் அளிக்க,
அதைக் கேட்டுச் சில நிமிடங்கள் தனக்குள்ளேயே புருவம் சுருக்கிச் சிந்தித்துப் பார்த்து விட்டு,”ஆமாம். அப்படிக் கூட இருக்கலாம்ங்க. அவன் எதையும் தெளிவாக யோசிச்சுப் பார்க்காமல் இந்த முடிவை எடுத்து இருக்க மாட்டான்!”என்றாள் தீர்க்கமாக.
“அதை தான் நான் இவ்வளவு நேரமாக உங்கிட்ட சொல்லி உனக்குப் புரிய வைக்க முயற்சி செஞ்சேன்!”என்றதும்,
“அப்போ நான் மக்குன்னு மறைமுகமாகச் சொல்றீங்க! அப்படித் தானே?”எனக் கேட்டு உதட்டைச் சுழித்துக் கோபத்தை வெளிப்படுத்தினாள் வண்ணமதி.
“அடியேய்! நீ என்னை விட்டு ரொம்ப தூரத்தில் இருந்துக்கிட்டு இப்படியெல்லாம் செஞ்சி என்னை உசுப்பேத்தாதேன்னு முன்னாடியே சொல்லி இருக்கேன் தானே?”என்று அவளிடம் குறைபட்டுக் கொண்டான் பூபாலன்.
“ஏன்? நான் அப்படித் தான் பண்ணுவேன்? என்னைப் பண்ணுவீங்க?”என்றவளோ அவனை இன்னும் இம்சிக்க வைக்கும் நோக்கத்துடன்,
அந்த மொபைலின் திரையின் முன்பு இன்னும் நெருக்கமாகச் சென்று உட்கார்ந்து கொண்டுத் தனது இதழ்களை வேண்டுமென்றே ஈரப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள் வண்ணமதி.
உடனே தாபத்துடன் எச்சிலை விழுங்கிக் கொண்டு,”நீ என்னை உசுப்பேத்தாமல் இரு! அங்கே போன வேலை முடிஞ்சது தானே? அப்பறம் என்ன? சீக்கிரம் கிளம்பி வா மதி”என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டான் பூபாலன்.
“சரிங்க. நான் உடனே எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பி வர்றேன்”என்றுரைத்து விட்டு தங்களது மகன் மற்றும் மாமியார், மாமனாரின் நலம் விசாரிப்புகளை முடித்து விட்டு அழைப்பை வைத்தாள்.
அப்போது, தனது அறையின் கட்டிலில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டு,”நான் இனிமேல் எதையும் நினைச்சு ரொம்பக் கஷ்டப்படவே தேவையில்லைன்ற மாதிரி எனக்குத் தேவையான எல்லாத்தையும் செஞ்சிக் கொடுக்கப் போறப் புருஷன் எனக்குக் கிடைச்சாச்சு! இதுக்கப்புறம் அவரை வச்சே என்னோட கனவுகளுக்கு உயிர் கொடுக்க ஆரம்பிச்சுடுவேன்!”என்று தலை, கால் புரியாத மகிழ்ச்சியில் ஆட்கொள்ளப்பட்டு இருந்தாள் சஹஸ்ரா.
அவளைப் பொறுத்தவரையில் அவள் மகிழம்பூவனைத் திருமணம் செய்து ஏமாற்றப் போவதில்லை!
ஆனால் அவன் தனக்குக் கணவனாகும் பட்சத்தில் தன்னுடைய கனவுகளை அவனுடையதாக ஏற்றுக் கொண்டு அதற்குத் தேவையான அனைத்தையும் அவன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தாள்!
இதுவே அவளது பெற்றோர் அவளுக்கு வேறு மாப்பிள்ளைப் பார்த்திருந்தாலும் கூட அவனிடத்திலும் இதே எதிர்ப்பார்ப்பு தான் தனக்கு இருந்திருக்கும் என்றெண்ணியவளோ,
அதனால் தான், அவளிடம் மகிழம்பூவனைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கேட்ட போது எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக் கொண்டிருந்தாள் சஹஸ்ரா.
அதுவும் இது தனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே நினைத்தாள்.
அவள் அப்படித் தான்! அவளது வியாபார மூளை யாரிடமும், எந்த லாபமும் இல்லாமல் வாக்குறுதி கொடுக்க மாட்டாள்!
அதேபோல் இந்த விஷயத்தில் மகிழம்பூவனையும், தனது மற்றக் குடும்ப உறுப்பினர்களையும் தனது புத்திக் கூர்மையால் ஏமாற்றி விட்டோம் என்று எண்ணிப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்து கொண்டாள் சஹஸ்ரா.
ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்திலும் இருப்பான் தானே?
தனது இதழ்களில் மர்மப் புன்னகை உதிர்த்து,”நீ எதுக்காக என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சன்னுக் கூடவா எனக்குத் தெரியாமல் இருக்கும்ன்னு நீ நினைக்கிற அழகி? நான் அந்தளவுக்குப் புத்தி இல்லாத வடிகட்டிய முட்டாளாக இருப்பேன்னுத் தப்புக் கணக்குப் போட்டுட்டியேம்மா! உனக்கு இந்தச் சந்தோஷம் எல்லாம் நம்மக் கல்யாணம் முடியிற வரைக்கும் தான்! அதுக்கப்புறம் நீ என்னைக் காதலிக்க முயற்சி எடுக்க ஆரம்பிச்சுடுவ! நான் உன்னை மனசாரக் காதலிக்கிறேன் தான் அழகி! அதுக்காக நீ சொல்றதை எல்லாம் நான் நம்பிட்டேன்னுக் கிடையாது! நான் காதலிச்சவளை இன்னொருத்தருக்கு விட்டுக் கொடுக்கிற அளவுக்கு எல்லாம் நான் இளிச்சவாயன் இல்லை! அதே மாதிரி உன்னைப் பத்தியும் எனக்கு நல்லா தெரிஞ்சதால் தான் எதை வச்சு உங்கிட்ட பேசினால் நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவன்னு தான் நான் உன் தொழிலைப் பத்தி விசாரிச்சேன்! ஆனால் நீயே வலிய வந்து என் தொழிலைப் பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சே! இப்போ அதுக்காகவே என்னைக் கல்யாணமும் செய்ய ஒத்துக்கிட்ட! ஆமாம்! உன் ஆசையையும், கனவுகளையும் நான் கண்டிப்பாக நிறைவேத்துவேன். அதே சமயம், நீ என்னை உயிருக்குயிராக காதலிக்கனும்ன்ற என்னோட ஆசையையும் நிறைவேத்தி தான் ஆகனும்! உன்னை நிறைவேத்த வைப்பேன்!”என்று சூளுரைத்துக் கொண்டான் மகிழம்பூவன்.
இப்படியாக இவ்விருவரும் தத்தமது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தங்களது திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து இருக்க, இதையெல்லாம் அறியாமல் தங்களது பிள்ளைகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவாகவே ஆரம்பித்து விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டிருந்தார்கள் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவனின் குடும்பத்தார்.
“நாம இங்கே வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குப்பா. எனக்கு என் வீட்டு ஞாபகமாகவே இருக்கு. நாம ஊருக்குக் கிளம்பலாமா?”என்று தந்தையிடம் விண்ணப்பம் வைத்தாள் வண்ணமதி.
அதைக் கேட்டு,”ஆமாம்மா. நானும், மகிழும் அங்கே எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு வந்துட்டோம்! இனிமேலும் தாமதம் ஆனால் சோலி கெட்டுப் போயிடும். நான் இதைப் பத்தி மாப்பிள்ளை கிட்டே பேசுறேன்”என்றுரைத்தார் பால்ராஜ்.
- தொடரும்