நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் கதையின் பதிவுகள் வராது டியர்ஸ் 
ஒரு முக்கியமான வேலையாக ஊருக்குச் செல்கிறேன். அதனால் திங்கட்கிழமை அடுத்த பதிவைப் பதிவிடுகிறேன். நன்றி டியர்ஸ் ❤

அவளுக்கு மகிழம்பூவனின் மீது பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் கூட அவன் மீது மரியாதையும், மதிப்பும் இருக்கிறது.
ஆனால் இப்போது அவனது செய்கைகள் அனைத்தும் தனக்குள்ளே ஏதோ செய்வதை உணர்ந்தாள் சஹஸ்ரா.
உடனே தன்னுடைய மொபைலில் தாங்கள் கடற்கரைக்குச் சென்றிருந்த போது எடுத்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழம்பூவனின் விழிகளை உற்று நோக்கினாள்.
அதில் அவனுக்குத் தன் மீதிருந்த காதல் அப்பட்டமாக வெளிப்பட்டு இருந்தது! அதேபோல் அவன் தன் மேல் வைத்திருக்கும் அக்கறையையும், பரிவையும் அவனது ஒவ்வொரு செய்கையும் உணர்த்தியதைக் கண்டு மூச்சடைத்துப் போய் விட்டது சஹஸ்ராவிற்கு!
‘இவர் என்னை இந்தளவுக்கு லவ் பண்றாரா?'என்றெண்ணிய பெண்ணவளுக்கோ,
இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் பெண்ணிற்கோ தன்னிடம் திகட்டத், திகட்டக் காதலைக் காட்டும் ஆணை எப்படி கையாள்வது என்பதற்கான வழி எதுவும் புலப்படவில்லை!
“ஊஃப்!”என்று வாயில் காற்றை ஊதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இந்த விஷயத்தை இன்னும் யோசிக்கத் தொடங்கினால் தனது வேலைக் கெட்டு விடும் என்று நினைத்தவளோ, தன் அலுவலக வேலையில் கவனத்தைச் செலுத்தினாள் சஹஸ்ரா.
சில மணி நேரங்கள் கடந்த பின் தங்களது ஊரை அடைய இன்னும் சில நிமிடங்கள் இருந்ததால் தனது செல்பேசியில் கணவனுக்கு அழைத்து அதை தெரிவித்து விட்டிருந்தாள் வண்ணமதி.
உடனே கிளம்பி வந்து விடுவதாக அவளிடம் உரைத்து விட்டுத் தன் பெற்றோரிடம் விவரத்தைக் கூறி விட்டு மகனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டுப் புகைவண்டி நிலையத்திற்குப் பயணமானான் பூபாலன்.
சில நிமிடங்களிலேயே தங்களது ஊர் வந்ததும் ரயிலை விட்டுக் கீழே இறங்கினார்கள் பால்ராஜ்ஜூம், அவரது பிள்ளைகளும்.
தனது செல்பேசியை எடுத்து ரமணனுக்கு அழைத்து,”ஹலோ மாமா. நாங்க ஊருக்கு வந்து சேர்ந்தாச்சு”என்று அவரிடம் தெரிவித்தான் மகிழம்பூவன்.
“சரி மாப்பிள்ளை. வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க”என்று கூறி அழைப்பை வைத்து விடவும்,
அங்கே தனது மகனுடன் வந்து சேர்ந்திருந்தான் வண்ணமதியின் கணவன் பூபாலன்.
“பயணம் எல்லாம் சௌகரியமாக இருந்துச்சா?”என்று விசாரிக்க,
“ம்ஹ்ம். சௌகரியமாக இருந்துச்சு மாப்பிள்ளை”என அவனிடம் கூறினார் பால்ராஜ்.
கரத்தில் இருந்த செந்திலோ தனது அன்னையைக் கண்டதும் அவளிடம் தாவினான்.
உடனே அவனை வாங்கி அள்ளி அணைத்து முத்தமிட்டாள் வண்ணமதி.
“உன்னைக் காணாமல் ரொம்ப ஏங்கிப் போயிட்டான்ம்மா”என்றான் கணவன்.
அதில் குற்ற உணர்வு மேலிட,”என்னை மன்னிச்சிருங்க”என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
“பரவாயில்லைம்மா. அதான் வந்துட்டியே!”என்றவனிடம்,
“எப்படி இருக்கீங்க மாமா? அத்தையும், மாமாவும் சௌக்கியமாக இருக்காங்களா?”என்று கேட்டான் மகிழம்பூவன்.
“நானும் நல்லா இருக்கேன். அவங்களும் நல்லா இருக்காங்க”என்றவனோ,
“காரில் ஏறுங்க. வீட்டுக்குப் போகலாம்”என்றதும், அவர்கள் அனைவரும் காரில் ஏறிப் பயணம் செய்து இல்லத்தை அடைந்து விட்டிருந்தனர்.
“செந்தில் குட்டி சாப்பிட்டீங்களா?”என்று தன் மகனிடம் வினவினாள் வண்ணமதி.
அவனோ,”ம்மா! ம்மா!”என்று அவளது கன்னத்தில் கொஞ்சி எச்சில் முத்தம் கொடுத்தானே தவிர அன்னையின் கேள்விக்குப் பதிலளிக்கவே இல்லை.
“உங்க மூனு பேருக்கும் அம்மா மதியச் சாப்பாடு கொடுத்து விட்டாங்க”என்று காரிலிருந்து உணவுப் பார்த்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பையை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தான் பூபாலன்.
“அவங்களை எதுக்குச் சிரமப்படுத்துறீங்க மாப்பிள்ளை?”என்று சங்கடத்துடன் கேட்டார் பால்ராஜ்.
அதற்கு,”அவங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை மாமா. நீங்க ஊரிலிருந்து வெள்ளனாகவே புறப்பட்டு ரயில் ஏறி இருப்பீகன்னுத் தெரிஞ்சதால் தான் சமைச்சிக் கொடுத்து விட்டாக!”என அவரிடம் கூறி விட்டு,
“நீயும் இங்கேயே சாப்பிட்டுட்டு வா ஆத்தா!”என்று மனைவியிடம் மொழிந்தான் பூபாலன்.
“சரிங்க”என்றவளும் கூட மகனைத் தன் தந்தை மற்றும் தம்பியிடம் ஒப்படைத்து விட்டு அந்தப் பாத்திரத்தில் இருந்தவற்றைச் சமையலறைக்குக் கொண்டு சென்று வேறு பாத்திரங்களில் மாற்றி அதைக் கழுவி வைத்து விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்ததும்,”அப்பறம் மாப்பிள்ளை உனக்கும், சஹாவுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க போலவே?”என்று மகிழம்பூவனிடம் கிண்டலாக கேட்டான் பூபாலன்.
அதைக் கேட்டவுடனேயே, வண்ணமதியைத் தான் நோக்கினர் மகிழம்பூவன் மற்றும் பால்ராஜ்.
அவர்களது பார்வைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு,”ஆமாம். நான் தான் சொன்னேன்”என்று தானும் ஒப்புக் கொண்டாள்.
பால்ராஜ்,“ஏம்த்தா உடனே சொல்லனுமா? ஊருக்கு வந்ததுக்கு அப்பறம் ஆற, அமர உட்கார்ந்து பேசலாம்னு நினைச்சேன்”என்றார் அவளிடம்.
“அதனால் என்னப்பா? நல்ல விஷயத்தை உடனே சொல்லிடனும்”என்று அசடு வழிந்தாள் வண்ணமதி.
உடனே,”நல்லப் பொண்ணும்மா நீ”என்று கூறிப் புன்னகைத்தார் தந்தை.
“சரி. நேரமாச்சு சாப்பிடுங்க”என்று அவர்களுக்கு அறிவுறுத்தினான் பூபாலன்.
ரயில் பயணம் செய்து விட்டு வந்ததால் அவர்களுக்கு இலகுவான உணவைச் செய்து கொடுத்து அனுப்பி இருந்தார் அவனது அன்னை முல்லைக்கொடி.
அதை உண்டு முடித்து விட்டு,”சரி. நான் கிளம்புறேன் ப்பா. வர்றேன் மகிழு. அடுத்த வாரம் போல வீட்டுக்கு வந்து உன் கல்யாணத்தை ஏற்பாட்டைப் பத்திப் பேசலாம்”என்று சொல்லி விட்டுத் தன் தந்தை மற்றும் தம்பியிடம் விடைபெற்றுக் கொண்டுத் தன் புகுந்த வீட்டுப் பாத்திரங்களுடன் தனது கணவன் மற்றும் மகனுடன் வீட்டிற்குக் கிளம்பிச் சென்று விட்டாள் வண்ணமதி.
அவர்கள் சென்றதும்,“நாம கொஞ்சம் தூங்கி எழுந்து சாயந்தரமாக எல்லாத்தையும் பார்த்துப்போம் மகிழு”என்று மகனிடம் தெரிவித்தார் பால்ராஜ்.
“சரிங்க ஐயா”என்றவனோ, தானும் உறங்கச் சென்று விட்டான் மகிழம்பூவன்.
இதே சமயம் தனது புகுந்த வீட்டிற்கு வந்ததும், தனது மாமனார், மாமியாரின் நலத்தை விசாரித்து விட்டு,
“நான் இல்லாமல் செந்திலைக் கவனிச்சுக்க ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களா?”என்று அவர்களிடம் வினவினாள் வண்ணமதி.
“அப்படியெல்லாம் இல்லத்தா. எங்கப் பேரன் எங்க கிட்ட ரொம்ப சமத்தாக இருந்துக்கிட்டியான்!”என்று கூறி அவளைச் சமாதானம் செய்தார் ஆறுமுகம்.
“சரிங்க மாமா”எனக் கூறினாள் வண்ணமதி.
“நீ காலையில் வெரசா எழுந்து கிளம்பி வந்திருப்ப. அதனால் போய்க் குறுக்க சாய்ச்சுக்கோ. சாயந்தரம் காப்பித் தண்ணிப் போட்டுட்டு உன்னை எழுப்புறேன்”என்று அறிவுறுத்தி மருமகளை அனுப்பி வைத்தார் முல்லைக்கொடி.
“அவங்க மூனு பேரும் இங்கே இருந்த வரைக்கும் வீடே நிறைஞ்சுப் போன மாதிரி இருந்துச்சுங்க. ஆனால் இன்னைக்கு அவங்க கிளம்பிப் போனதுக்கு அப்பறம் வீடே வெறிச்சோடிப் போயிருக்கு!”என்று தனது கணவனிடம் அங்கலாய்த்தார் கஸ்தூரி.
“ஆமாம்மா. அவங்க இங்கே இருந்தப்போ எல்லாம் நம்ம சஹாவும் நம்ம எல்லார் கூடவும் நல்லா பழகினாள். இப்போ என்னடான்னா உடனே ஆஃபீஸூக்குக் கிளம்பிப் போயிட்டா. அவளோட குணமே அது தான்னாலும் அது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு”என்று தானும் தனது மனக்கிலேசத்தை அவரிடம் வெளிப்படுத்தினார் ரமணன்.
“ம்ஹ்ம். அவ கல்யாணத்துக்கு அப்பறம் என்னப் பண்ணக் காத்திருக்காளோன்னு வேற எனக்குப் பயமாக இருக்குதுங்க”எனக் கலக்கத்துடன் கூற,
“நீ ஏன்ம்ம அப்படி நினைக்கிற? அதெல்லாம் நம்ம மாப்பிள்ளைப் பார்த்துக்குவார்”என மகிழம்பூவனின் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை மனைவியிடம் சொன்னார்.
“எனக்கு என்னமோ நம்ம மகிழை இவ தான் அடக்கி ஆளப் போறாளோன்னு தான் எனக்குத் தோணுதுங்க. மாப்பிள்ளைக்கும் இவளை எப்படிக் கையாள்றதுன்னுத் தெரியாது பாருங்க. அதான் சொல்றேன்”என்று அவருக்கு விளக்கினார் கஸ்தூரி.
“நீ அப்படி நினைக்கிறம்மா. அது உன்னோட கணக்கா இருக்கலாம்! ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறமாகத் தான் என்ன நடக்கும்ன்னுத் தெரியும். அதனால் அவங்க கல்யாணம் முடியிற வரைக்கும் நீயும் இப்படியெல்லாம் யோசிக்காதே. இதை சஹா கிட்டேயும் ஷேர் செஞ்சிடாதே!”என மனைவியிடம் திட்டவட்டமாக கூறி விட்டிருந்தார் ரமணன்.
இவர்களது எண்ணவோட்டங்களை அறியாத இவர்களின் சீமந்த புத்திரியோ தனது மனதைக் குடைந்து கொண்டிருந்த தனது வருங்கால கணவனைப் பற்றிய சிந்தனைகளுக்குத் தடை விதித்து விட்டு வேலையையும் விரைவாகவே முடித்து விட்டு அன்றிரவு வீட்டிற்கு வந்து தன் பெற்றோருடன் சேர்ந்து இரவு உணவை உண்டு விட்டு நிம்மதியான உறக்கத்தை தழுவினாள் சஹஸ்ரா.
அடுத்த நாள் காலையில் தனது கணவனைப் பருத்தி ஆலைக்கு அனுப்பி வைத்து விட்டுத் தன் மாமனார் மற்றும் மாமியாரிடம் ஊரில் நடந்தவற்றை எல்லாம் ஒப்புவித்து முடித்திருந்தாள் வண்ணமதி.
- தொடரும்