ஹாய் டியர்ஸ்...
இனி தினமும் பதிவுகள் வரும்
அத்தியாயம் 17
அதைக் கேட்டு முடித்ததும்,”அப்படியா? மகிழுக்குக் கல்யாணம் நடக்கப் போறதை நினைச்சா எங்களுக்கும் சந்தோஷமாகத் தான் இருக்குத்தா. ஆனால் அந்தப் பொண்ணு சங்கு எப்படி ஒத்துக்கிட்டா? அதேன் எனக்கு ஐயமாக இருக்கு!”என்று தனது சந்தேகத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டார் முல்லைக்கொடி.
“அவளுக்கு என் தம்பியால் அவளோட ஏதோ ஒரு விருப்பத்தை நிறைவேத்திக்கனும்னு ஆசை! அதனால் தான் அவனைக் கட்டிக்க சம்மதிச்சிட்டா”என்றுரைத்தாள் வண்ணமதி.
ஆனால் இதற்கு மேல் தன் தம்பியின் திருமண விஷயத்தைப் பற்றித் தனது மாமியார், மாமனாரிடம் விளக்கிக் கூற அவளு விருப்பமில்லை.
அதேபோல் அவர்கள் இருவரும் கூட அவளிடம் மேற்கொண்டு எதையும் கேட்க நினைக்கவில்லை போலும்!
அதனாலேயே,”எது எப்படியோ! உன் தம்பிக்கு அவருக்குப் பிடிச்சப் பொண்ணுக் கூடத் தானே கல்யாணம் ஆகப் போகுது? அப்பறம் என்ன ஆத்தா? எல்லாம் நல்லதாகவே நடக்கும்”என்று தங்கள் மருமகளிடம் உரைத்து விட்டார் ஆறுமுகம்.
அதற்குப் பிறகுத் தனது மகனுடன் நேரத்தைச் செலவிடத் தொடங்கி விட்டாள் வண்ணமதி.
அடுத்து வந்த நாட்களில் தனக்குள் ஒரு உறுதியான முடிவை எடுத்து விட்டுத் தன் பெற்றோரிடம் சென்று,”இந்தக் கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நடத்தனும்”என அவர்களிடம் தீர்க்கமாக கூறினாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டு,“ஏன் டி?”என்று திகைப்புடன் வினவினார் கஸ்தூரி.
“ஆமாம்மா. நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்றேன். அது தப்பா? முதல்ல எல்லாம் நீ எப்போ கல்யாணம் செய்துக்கப் போறன்னுக் கேட்டுட்டே இருப்பீங்க! இப்போ நானே முன் வந்து உடனே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்றேன்னுச் சொல்றேன். அதை சந்தேகப்பட்றீங்களே! என்னம்மா போங்காட்டம் இது?”என்று சலித்துக் கொண்ட மகளிடம்,
“ஓஹோ! அப்போ நீ உடனே கல்யாணம் செய்துக்க விருப்பப்பட்ற! அப்படித் தானே?”எனக் கூர்மையான பார்வையுடன் கேட்டார் ரமணன்.
“ஆமாப்பா! நான் அதை தான் இவ்வளவு நேரமாக உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க டிரை பண்றேன்”என்றுரைத்தாள் சஹஸ்ரா.
“சரி. உடனே அப்படின்னா எப்போ கல்யாண லேலைகளை ஆரம்பிக்கலாம்? இன்னைக்கா? இல்லை, இப்போவேவா?”என்றார் கஸ்தூரி.
“அம்மா!”என்று அவரைக் கோபமாக முறைத்தவளைச் சட்டை செய்யாமல்,
“அதான் நம்ம மக விருப்பப்பட்றாளேங்க? அது மாதிரியே பண்ணிடலாம். நீங்க உடனே பால்ராஜ் அண்ணனுக்குக் கால் செஞ்சிப் பேசுங்க”என்று தன் கணவரிடம் கூறி விட்டு,
“ஆனால் ஒரு கண்டிஷன் சஹா! உங்க நிச்சயம், கல்யாணம் எல்லாமே நம்மளோட சொந்த ஊரில் தான் நடக்கும்! அதில் உனக்குச் சம்மதம் இருந்தால் சொல்லு. கல்யாண வேலையை மேற்கொண்டு ஆரம்பிக்கலாம்”என்று அவளிடம் உறுதியான குரலில் இயம்பினார் கஸ்தூரி.
அதில் தனது முகம் வெளிறிப் போனதை மறைத்துக் கொண்டு,”சரிம்மா. இந்தக் கல்யாண விஷயத்தில் நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் ஒத்துக்கிறேன். என்னால் இதில் எந்தப் பிரச்சினையும், தடங்கலும் வராது”என்று அவரிடம் வாக்குக் கொடுத்தாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டுத் திருப்தியுடன்,”அப்போ ஓகே. கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிச்சிட்றோம். அதுக்கு நீ நிறைய நாட்கள் ஆஃபீஸூக்குப் போக முடியாமல் போகலாம். அதனால் எல்லாத்துக்கும் தயாராக இரு”என்று அவளுக்கு அறிவுறுத்தி அவளை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டு,
“இவ இப்படி உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்லி வந்து நிற்கிறாள்ன்னா ஏதோ பெருசா பிளான் போட்டு இருக்கிறாள்ன்னு எனக்குத் தோணுதுங்க! நம்மப் பொண்ணு இப்படி புத்திசாலியாக இருக்காளேன்னுச் சந்தோஷப்பட்றதா? இல்லை, எல்லாரையும் அவ இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறாளேன்னு வருத்தப்பட்றதான்னுத் தெரியலை!”என்றவரிடம்,
“அவளே அப்படி பிளான் போடும் போது நாம அவளைப் பெத்தவங்க! நமக்கும் அவளுக்கு மேலே எல்லாம் தெரியும்ன்னுக் காட்டி அவளை உறவுகளைத் தனக்கு ஏத்த மாதிரி உபயோகப்படுத்துறது தப்புன்னுப் புரிய வைக்கனும்மா. நீ இப்போ பேசின பாரு? இது தான் சரி! இனிமேல் இந்தக் கல்யாணம் முடியிற வரைக்கும் நீ இப்படியே அவகிட்டே பேசு! நானும் இப்படியே நடந்துக்கிறேன்! என்ன தான் பண்றாள்ன்னுப் பார்ப்போம்”என்று மனைவியிடம் வலியுறுத்தி விட்டுத் தன் தங்கை கணவருக்கு அழைப்பு விடுத்தார் ரமணன்.
“ஹலோ மாப்பிள்ளை”
“ஆங்! மாமா! எப்படி இருக்கீங்க? மகிழு என்னப் பண்றான்?”என நலம் விசாரிக்க,
“நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. அவன் இப்போ தான் பால் பண்ணைக்குக் கிளம்பிப் போனான்”எனப் பதிலளித்தார் பால்ராஜ்.
“அப்படியா சரிங்க மாமா”என்றவரோ,
தன் மகளின் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார்.
“என்ன சொல்றீங்க மாப்பிள்ளை? நம்ம சஹாவா இப்படி சொல்லுச்சு?”என்று ஆச்சரியத்துடன் கேட்கவும்,
“ஆமாம் மாமா. அவ என்ன நினைப்பில் இருக்காள்ன்னு எனக்கும், உங்க தங்கச்சிக்கும் புரியவே இல்லை! ஆனாலும் இந்தக் கல்யாணம் சீக்கிரம் நடந்தால் அதுக்கப்புறம் நமக்கும் இவங்க ரெண்டு பேரைப் பத்தின கவலை இருக்காது தானே? அதனால் நானும், கஸ்தூரியும் அவளோட விருப்பத்துக்குச் சம்மதிச்சிட்டோம்”என அவருக்கு விளக்கம் அளித்தார் ரமணன்.
“அதுவும் சரி தான் மாப்பிள்ளை. நான் இதைப் பத்தி மதிகிட்டேயும், என் மருமகன் கிட்டேயும், அவரோட வீட்டாளுங்க கிட்டேயும் பேசிட்டு நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டுச் சொல்றேன்!”என்று அவரிடம் கூறி விட்டு அழைப்பை வைத்தவரோ,
தன் மகனுக்கு அழைத்து,”மகிழு! சஹா பொண்ணுக் கல்யாணத்தை உடனே நடத்தனும்னு ஆசைப்படுதாம்”எனக் கூறிச் சிறிது நேரத்திற்கு முன்பு ரமணனுடனான தன் உரையாடலையும் அவனுக்குத் தெரியப்படுத்தினார் பால்ராஜ்.
அதைக் கேட்டதும் சிறு யோசனைக்குப் பின்,”அழகியோட விருப்பப்படியே பண்ணுங்க ஐயா. எனக்கும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை”என்றுரைத்து விட்டான் மகிழம்பூவன்.
“சரிப்பா. நான் உங்க அக்கா வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு வர்றேன்”என்று அவனிடம் தெரிவித்து விட்டு மகளுக்கு அழைத்து தன் வருகையை அவளிடம் உரைத்தார் பால்ராஜ்.
உடனே,“வாங்கப்பா. நான் உங்களுக்குப் பிடிச்சதைச் சமைச்சு வைக்கிறேன்”எனச் சந்தோஷமாகவே கூறி விட்டு வைத்தாள் வண்ணமதி.
அதே சமயம் தனது தந்தையின வருகையைத் தன் புகுந்த வீட்டாரிடம் அறிவிக்க,
“அப்படியா? ரொம்ப சந்தோஷம்மா. இன்னைக்கு மதியத்துக்கு அசைவம் சமைச்சிடலாம்”என்று தன் மனைவி மற்றும் மருமகளிடம் அறிவுறுத்தி விட்டுக் கறிக்கடைக்குச் சென்றார் ஆறுமுகம்.
அவர் சென்ற சில நிமிடங்களிலேயே தனது பேரன் இலகுவாக கொறிக்க ஏதுவான சிற்றுண்டிகளையும், மற்றவர்களுக்காகப் பழங்களை வாங்கிக் கொண்டுத் தன் மூத்த மகளின்
புகுந்த வீட்டை அடைந்திருந்தார் பால்ராஜ்.
“வாங்கப்பா!”என்று வண்ணமதியும்,
“வாங்க சம்பந்தி”, என முல்லைக்கொடியும் அவரைப் புன்னகை முகமாக வரவேற்றார்கள்.
உடனே அவர்கள் இருவரையும் நலம் விசாரித்து விட்டுத் தனக்காக மகள் எடுத்துப் போட்டக் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தார் பால்ராஜ்.
அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து உபசரித்து விட்டுப்,”பஸ்ஸில் வந்தீங்களா சம்பந்தி?”என விசாரித்தார் முல்லைக்கொடி.
“ஆமாம்மா”என்றதும்,
“ஏன் உங்களுக்கு அலைச்சல்? பாலன் கிட்டே சொன்னால் அவன் உங்களைக் கூட்டிட்டு வந்து விட்டுடப் போறான்”என்று அவரிடம் குறைபட்டுக் கொள்ள,
“அவர் தான் எங்களை அடிக்கடி எங்க இருந்து வேணும்னாலும் கூட்டிட்டு வந்து கூட்டிட்டுப் போயிட்டு இருக்கார். அவர் இப்படி எங்களுக்காக அலைஞ்சால் அவரோட சோலி கெட்டுப் போகும் சம்மந்தியம்மா. அதேன், நானே பஸ் ஏறி வந்துட்டேன்”என்று விளக்கினார் பால்ராஜ்.
“ஆமாம். இந்த அரை மணி நேர வேலையால் சோலி கெட்டுப் போகுது பாருங்க! ஏன்ப்பா நீங்க வேற! மாமா வர்றதை என்கிட்டே ஏன் முன்னாடியே சொல்லலைன்னு என்னைத் தான் ஏசுவார். நீங்க வந்த விஷயத்தை முதல்ல நான் அவர்கிட்டே சொல்லிட்டு வர்றேன்ப்பா”என்று கூறித் தன் தந்தையின் வரவைக் கணவனுக்குச் செல்பேசியில் அழைத்து அறிவித்தாள் வண்ணமதி.
‘தன்னிடம் ஏன் இதை முன்பே சொல்லவில்லை’என்று அவளிடம் குறைபட்டுக் கொண்டவனோ,
“மதியத்துக்கு என்னச் சமையல்ம்மா?”எனக் கேட்டான் பூபாலன்.
“அசைவம் தான்ங்க. மாமா தான் கறி எடுத்துட்டு வரப் போயிருக்காங்க”என்றுரைத்தாள் வண்ணமதி.
“ஏன் நம்ம வீட்டிலேயே நாட்டுக்கோழி இருக்கே? அதையே அடிச்சி இருக்கலாம்ல?”என்றவனிடம்,
“அப்பா வர்றதாக கொஞ்ச நேரத்துக முன்னாடி தான் சொன்னாருங்க. அதனால் தான் வீட்டில் கோழி அறுத்துச் சமைக்கத் தாமதம் ஆகும்ன்னுக் கடையில் கறி வாங்கப் போயிருக்கார் மாமா”என விளக்கம் அளித்தாள் மனைவி.
“சரிம்மா. நான் ஏதாவது வாங்கிட்டு வரனுமா?”என்று வினவினான் பூபாலன்.
“அதெல்லாம் வேண்டாம்ங்க. நீங்க மதியம் சாப்பாட்டுக்குச் சீக்கிரம் வந்தால் மட்டும் போதும்!”என அவனுக்கு அறிவுறுத்தி அழைப்பை வைத்தவளோ,
அப்போது தான் உறங்கி எழுந்த மகனைத் தன் தந்தையின் கையில் சேர்ப்பித்து விட்டு மதியம் சமையலுக்காகத் தன் மாமியாருடன் சேர்ந்து மசாலா அரைப்பது மற்றும் காய்கறிகளை நறுக்கும் வேலையில் மும்முரமாகி விட்டாள் வண்ணமதி.
- தொடரும்