தனது மனைவியின் தாய் மாமா குடும்பத்தினரின் வரவை அறிந்ததும் தனது மாமனாரின் வீட்டிற்குக் காலையிலேயே தனது மகன் மற்றும் பெற்றோருடன் சேர்ந்து வந்திருந்தான் பூபாலன்.
தாங்கள் பயணித்து வந்த விமானம் தரையிறங்கியதும் அங்கேயிருந்து கால் டாக்சியைப் பிடித்து அதில் ஏறித் தங்களது சொந்த ஊருக்குப் பயணிக்கத் தொடங்கினர் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.
அந்த தகவலை மகிழம்பூவனிடமும் தெரிவித்து விட, அவன் அதை தனது குடும்ப உறுப்பினர்களிடம் அறிவிக்கவும் அவர்களது வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கலானார்கள்.
அதேசமயம் சிறு தூரப் பயணத்திற்குப் பிறகுப் பால்ராஜ்ஜின் வீட்டை அடைந்து விட்டிருந்தார்கள் அம்மூவரும்.
தாங்கள் வந்திறங்கிய கால் டாக்ஸிக்குக் காசு கொடுத்து அனுப்பி விட்டு,
“இந்த ஊருக்கு வந்து ரொம்ப மாசமாச்சு. ஆனால் இங்கே எதுவுமே மாறலை!”எனத் தன் மனைவி, மகளிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார் ரமணன்.
“ஆமாங்க. இந்தக் காத்தை சுவாசிச்சதுமே ரொம்ப ஃப்ரஷ் ஆக ஃபீல் பண்றேன்!”என்றுரைத்தார் கஸ்தூரி.
ஆனால் அவர்களைப் போல் தன்னுடைய உணர்வுகளை வார்த்தையில் வெளிப்படுத்தாமல் அமைதியாக அனைத்தையும் நோக்கிக் கொண்டிருந்தாள் அவர்களது மகள் சஹஸ்ரா.
தங்களது வீட்டு வாசலில் கார் வந்து நின்ற சத்தத்தைக் கேட்டதும் வெளியே போய்ப் பார்த்தான் மகிழம்பூவன்.
அங்கே தனது மாமா, அத்தை மற்றும் அவர்களது மகள் மூவரும் நின்றிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்து போய்,”வாங்க! வாங்க!”என்று அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்லவும்,
வீட்டிற்குள் இருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைத்து வணக்கம் வைத்தார்கள்
ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.
உடனே தாங்களும் மரியாதை நிமித்தமாக அவர்களுக்கு வணக்கம் வைத்தனர்.
அவர்கள் மூவருக்கும் குடிக்க, கொறிக்க கொடுத்து விட்டு அவர்களது பிரயாணத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டார்கள் பூபாலனின் பெற்றோர்.
அதே நேரத்தில் வண்ணமதியின் மகனான செந்திலைத் தங்களிடம் வாங்கி வைத்துக் கொண்டு,”எப்படி இருக்கீங்க குட்டி மனுஷா? உங்களுக்குப் பொம்மை வேணுமா? மிட்டாய் வேணுமா?”எனக் கேட்டு அவனைக் கொஞ்சித் தீர்த்தனர் ரமணனும், கஸ்தூரியும்.
ஆனால் சஹஸ்ராவின் அமைதியும், நிதானமான முகமும் மகிழம்பூவன் மற்றும் வண்ணமதியை நெற்றிப் புருவத்தைச் சுருங்க வைத்தது.
ஏனென்றால் வீட்டினுள் நுழைந்ததும் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் கூறியதோடு அவள் எதுவுமே பேசவில்லை.
ஒருவேளை இத்தனைப் பேரை அவள் எதிர்பார்க்கவில்லையோ என்ற சந்தேகத்துடன்,
“இவ என்னடா மந்திரிச்சு விட்ட மாதிரி அமைதியாக இருக்கிறாள்! ஒருவேளை இவ்வளவு பேரை எதிர்பார்க்கலை போலவே!”எனத் தம்பியிடம் முணுமுணுத்தாள் வண்ணமதி.
“எனக்கும் அப்படித் தான் தோணுதுக்கா. அவ வீட்டிலேயே அவ எப்பவுமே ரூமில் தானே இருப்பாள்!”என்று தானும் அவளிடம் குரலைத் தாழ்த்திக் கூறினான் மகிழம்பூவன்.
அவ்விருவரும் அதை உடனே தங்கள் தந்தையிடம் தெரிவித்து விடவும், தானும் அதைப் புரிந்து கொண்டு,”இவ்வளவு தொலைவு பயணம் செஞ்சி வந்தது உங்களுக்கு உடம்புக்கு அலுப்பாகி இருக்கும். அதனால் ரூம்புக்குப் போய் ஓய்வெடுங்க”என்று ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ராவிடம் அக்கறையுடன் கூறினார் பால்ராஜ்.
“ஆமாம் மாமா. எனக்குச் சோர்வாக இருக்கு. நான் போய்த் தூங்குறேன்”என்றவளின் வாடிய முகத்தைக் கண்டு,
“சரிம்மா”என்றிருந்தார்.
உடனே தனக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த அறைக்குள் சென்றவளோ, அங்கே தனக்காகப் பார்த்துப், பார்த்து செய்து வைத்திருந்த வசதிகளைக் கண்டு இதழ்களில் மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு மெத்தையில் வீழ்ந்தாள் சஹஸ்ரா.
அவள் உறங்கச் சென்றதும், ஒரு விதத்தில் நல்லது தான் என்று மெல்லப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும் விதமாக,
“அழகியோட ஜாதகத்தை எடுத்துட்டு வந்தீகளா?”என்று அவளின் பெற்றோரிடம் விசாரித்தார் முல்லைக்கொடி.
“ம்ஹ்ம். கொண்டு வந்தாச்சுங்க”என்றுரைத்தார் ரமணன்.
“நம்ம மகிழோட ஜாதகமும் தயாராகத் தானே இருக்கு சம்பந்தி”எனத் தன் மகனின் மாமானாரிடம் வினவ,
“ஆமாம் சம்பந்தியம்மா”எனக் கூறினார் பால்ராஜ்.
“அப்போ ஒரு ரெண்டு நாள் கழிச்சு அதைக் கொண்டுப் போய் ஜோசியர் கிட்டே காமிச்சு நிச்சய நாளைக் குறிச்சிட்டு வந்துடலாம்”
கஸ்தூரி,“சரிங்க. ஆனா…”என்றவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்டு,
“மகிழு! இவங்களுக்கு ராவுக்குச் சமையலுக்குக் காய் வாங்கிட்டு வந்துடுப்பா”என்று மகிழம்பூவனிடம் கூறி விடவும்,
“சரிங்க மாமா”என்றவனோ, காய்களை வாங்கப் பையையும், தனது பணப்பையையும் எடுத்துக் கொள்ள,
“நீயும் அவர் கூடப் போயிட்டு வா பாலா”என அவனுக்குத் துணையாகத் தன் மகனையும் அனுப்பி வைத்தார் ஆறுமுகம்.
“இப்போ உங்க மனசை என்ன அரிச்சிட்டு இருக்கிறதை எங்க கிட்ட சொல்லுங்க?”எனச் சஹஸ்ராவின் பெற்றோரிடம் கேட்டார் முல்லைக்கொடி.
“அது வந்து… எங்களுக்கு அவங்க ஜாதகத்தை ஜோசியர் கிட்டே கொடுத்துப் பார்க்கிறதில் அவ்வளவாக உடன்பாடு இல்லைங்க”என்றிருந்தார் ரமணன்.
உடனே அதில் அதிருப்தி அடைந்து,”ஏன் மாப்பிள்ளை?”எனக் கேட்டார் பால்ராஜ்.
“அவங்களோட ஜாதகம் பொருந்தாமல் போயிட்டா அதுக்கப்புறம் கல்யாணம் நடக்காமல் போயிடுமோன்றப் பயம் தான் எங்க மனசை அரிச்சிட்டு இருக்கு அண்ணா”எனச் சங்கடத்துடன் அவருக்குப் பதிலளித்தார் கஸ்தூரி.
அதைக் கேட்டு ஹாஸ்யமாகச் சிரித்து விட்டு,”இது நியாயமான பயம் தான்ம்மா! ஆனால் நாம அவங்களோட ஜாகதப் பொருத்தத்தைப் பார்க்கப் போவதில்லை! நிச்சய நாளை மட்டும் தான் குறிக்கப் போறோம்! கல்யாணத்தை நடத்த ஒத்துக்கிட்டதுக்கு அப்பறம் ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்கத் தேவை இருக்காது! அதனால் நீங்க எதுக்கும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கல்யாணத்தை நடந்து முடிக்கிற வரைக்கும் நாங்க எல்லாரும் உங்க கூடப் பக்கபலமாக இருப்போம்!”என தங்களது சம்பந்தி வீட்டாருக்கு உறுதி அளித்தார்கள் ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி.
இந்த திருமண விஷயத்தில் தங்கள் மீதும், தங்களது தங்கைக் குடும்பத்தின் மீதும் சஹஸ்ராவின் பெற்றோரான ரமணன் மற்றும் கஸ்தூரிக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது தான்!
ஆனால் அந்த நம்பிக்கையால் மட்டுமே இந்த திருமணப் பேச்சை எடுத்து அதில் தங்களின் மகள் மற்றும் மருமகனின் விருப்பத்தைக் கேட்டதோடு அடுத்தடுத்த ஏற்பாடுகளைச் செய்ய முடிவெடுத்தார்கள்.
ஆனால் சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவனின் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டி அதில் கட்டங்கள் பொருந்தாமல் போய் விட்டால் என்ன செய்வது? என்றத் தங்களது குழப்பத்தைப் பால்ராஜ்ஜிடம் பகிர்ந்து கொண்டிருக்கவில்லை ரமணன் மற்றும் கஸ்தூரி.
அதனால் தான், சஹஸ்ராவின் ஜாதகத்தைக் கொண்டு வருமாறு தகவல் தெரிவித்ததும் கலக்கத்துடன் வந்து சேர்ந்திருந்தார்கள்.
இப்போது பூபாலனின் பெற்றோர் அளித்த உறுதியும், அவர்களது ஆறுதல் வார்த்தைகளும் ரமணன் மற்றும் கஸ்தூரியின் மனக் கலக்கத்தைத் துடைத்து எறிந்து விட்டிருந்தது.
அதனாலேயே புத்துணர்வு பெற்றவர்களோ, செந்திலுடன் ஐக்கியமாகி விட்டதால் அவர்களுக்குச் சோர்வு ஏற்படவில்லை.
இதேவேளையில் தனது தமக்கையின் கணவனுடன் கடைத் தெருவிற்குச் சென்று, தனது தாய் மாமன் குடும்பத்திற்கு இரவு உணவைச் சமைப்பதற்காகத் தேவையான காய்கறிகளை வாங்கி விட்டான் மகிழம்பூவன்.
“ஏன் மாப்பிள்ளை வீட்டில் இந்தக் காய்கறி எல்லாம் தீர்ந்து போச்சா என்ன?”என அவனிடம் விசாரணை நடத்தினான் பூபாலன்.
“உங்களுக்கு இன்னுமா விஷயம் என்னன்னுப் புரியலை மாமா?”என்று சலிப்புடன் கேட்டிருந்தான்.
“என்ன விஷயம் மாப்பிள்ளை? எங்கிட்ட யாருமே, எதுவுமே சொல்லலையே!”என்று குழப்பமாக கேட்கவும்,
“அட மாமா! அவங்க என்னை வீட்டில் இருந்து வெளியேத்த தான் கடைத் தெருவுக்கு அனுப்பி இருக்காங்க”என்றுரைத்து விட்டுப் பெருமூச்செறிந்தான் மகிழம்பூவன்.
“அப்படியா?”எனத் திகைத்து விட்டு,
“எதுக்காக அப்படி பண்ணனும்?”என்றிருந்தான் பூபாலன்.
“நான் அங்கேயிருந்தால் எங்க ஜாதக விஷயத்தைப் பத்தி அவங்களால் வெளிப்படையாகப் பேச முடியாதே? அதான்”எனப் பதிலளிக்க,
“ஓஹோ! அதனால் தான், அந்தக் கஸ்தூரிம்மா, உங்க ஜாதகத்தைப் பத்தினப் பேச்சு வரும் போது, வெளிப்படையாகப் பேசாமல் தயங்கிட்டு இருந்தாங்களா?”என்று அவனிடம் வினவ,
“ம்ஹ்ம்”என்றவனிடம்,
“நீங்க ரெண்டு பேரும் அங்க இருக்கக் கூடாதுன்றது நியாயம் தான்! ஆனால் என்னையும் இல்லை வெளியே அனுப்பிட்டாங்க! நான் அதை தெரிஞ்சிக்க வேண்டாமா?”என்று புலம்பினான் பூபாலன்.
“அதை தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்னப் பண்ணுவீங்க தெரியுமா? அப்படியே அதைக் கொண்டு வந்து என் காதில் போடுவீங்க! அதான், உங்களையும் என் கூட அனுப்பி வச்சிட்டாங்க!”என்றதும்,
“அது என்ன அவ்வளவு பரம ரகசியமா மாப்பிள்ளை? நீ தெரிஞ்சிக்கவே கூடாதுன்னு இப்படி பண்றாங்க!”எனப் பொரும,
“அப்படி இல்லை மாமா. எங்க ஜாதகத்தைக் கொண்டுப் போய் எதாவது ஜோசியர்கிட்டே கொடுத்துப் பார்த்து அதில் கல்யாணப் பொருத்தம் இல்லைன்னு ஏதாவது வந்துட்டா என் மனசுக் கஷ்டப்படும்ன்னு தான் எங்கிட்ட இருந்து இதையெல்லாம் எல்லாரும் மறைக்கிறாங்க!”என்று அவனுக்குப் புரிய வைத்தான் மகிழம்பூவன்.
“அப்படியா விஷயம்? அவங்க சொல்லாமலேயே உனக்கு எல்லாமே தெரியுதே மாப்பிள்ளை! உனக்குத் தெரியாமல் அவங்க அந்தப் பரம ரகசியத்தைக் கட்டிக் காக்கட்டும். எனக்குத் தொண்டை வறண்டுப் போச்சு. ஒரு டீ குடிச்சிட்டுப் போகலாம். வா”என்றவுடன்,
தனது கன்னக்குழி தெரியப் புன்னகைத்து விட்டு,”சரி மாமா”என அதற்கு ஒப்புக் கொள்ளவும்,
உடனே அங்கேயிருந்த தேநீர்க் கடையை நோக்கி நடையைப் போட்டனர் மகிழம்பூவன் மற்றும் பூபாலன்.
இங்கே இதை எதையுமே அறியாமல் மெத்தையில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சஹஸ்ராவிற்குப் பசி எடுத்ததால் விழிப்புத் தட்டி விட்டிருந்தது.
அதனால் அறையிலிருந்து எழுந்து கூடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும்,”என்னாச்சும்மா? அந்த அறை வசதிப்படலையா?”என்று அக்கறையாக விசாரித்தார் பால்ராஜ்.
“அப்படியெல்லாம் இல்ல மாமா. அந்த ரூம் எனக்கு நல்லா, வசதியாகத் தான் இருந்துச்சு! இங்கே வந்ததுமே தூங்கிட்டேனா? எனக்குப் பசிக்குது! சாப்பிட ஏதாவது இருக்கா?”என்று அவரிடம் கேட்டாள் சஹஸ்ரா.
“அச்சோ! நீ என் கூட வா. நான் உனக்கு இலை போட்டுச் சாப்பாடுப் பரிமாறுறேன்”என்று அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று வீட்டினுள் ஒரு இடத்தில் தரையில் பாயை விரித்து அதில் அவளை அமர வைத்து விட்டு இலையைப் பறித்து வந்து அவளின் முன்னால் வைத்து அதில் மணக்க, மணக்கச் சாதம் போட்டு, அதன் மேல் கொஞ்சமாக குழம்பை ஊற்றினாள் வண்ணமதி.
பிறகு அந்த இலையின் ஓரத்தில் சில, பல வியஞ்சனங்கள் மற்றும் இனிப்பையும் வைத்தவளோ,
“இதெல்லாம் உங்களுக்காகவே பிரத்தியேகமாக ஆள் வச்சு செய்யச் சொன்னது தான் அழகி! அதனால் நீ சாப்பிட்டுப் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு”என்றாள்.
உடனே அந்த உணவைப் பிசைந்து உண்டு கொண்டே,”நான் உங்கத் தம்பி எனக்காக ஏதாவது சமைச்சு வச்சிருப்பாருன்னு நினைச்சு வந்தேன் மதி!”என்று கூறி அவளை மட்டுமின்றி அங்கேயிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டு இலையில் இருந்தவற்றை ருசி பார்க்கத் தொடங்கினாள் சஹஸ்ரா.
- தொடரும்