அவளுக்காகவும், அவளது பெற்றோருக்காகவும் ஆளை வைத்துப் பார்த்துப், பார்த்து உணவுப் பதார்த்தங்களைச் செய்து வைத்தால் அதையெல்லாம் ஒரே வார்த்தையில் ஒன்றுமில்லாமல் செய்து விட்டுத் தனது உணவில் கவனத்தைப் பதித்துக் கொண்டிருந்த பெண்ணவளை அங்கே இருந்தவர்கள் யாராலும் புரிந்து கொள்ளவே முடியவில்லை!
ஏன் அவளது பெற்றோரான ரமணன் மற்றும் கஸ்தூரிக்கும் கூட மகளின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ள முடியவில்லை எனலாம்!
அவர்கள் எல்லாரும் வாயடைத்துப் போய் விட்டிருக்கத் தன்னைத் துரிதமாகச் சரிபடுத்திக் கொண்டு,”ஏன் அவன் சமைச்சு வச்சதை சாப்பிடனும்னு விருப்பப்பட்ற நீ?”என்று அவளிடம் வினவினாள் வண்ணமதி.
“நான் ஏன் அதுக்கு விருப்பப்படக் கூடாது? ஏன்னா, அவரோட கைப் பக்குவம் சூப்பராக இருக்கும். நான் இங்கே எப்போதாவது வந்தாலும் வரும் போது எல்லாம் எனக்காக அவர் கையால் எதையாவது சமைச்சி வச்சு இருப்பார். அது ரொம்ப ருசியாக இருக்கும். அதனால் தான் கேட்டேன்”என அவளுக்குப் பதிலளித்தாள் சஹஸ்ரா.
“அது வெறும் சாப்பாடா மட்டும் இருந்தால் உனக்கு ருசிச்சு இருக்காது. நீ அதை அன்றாட உணவுன்னுக் கடந்து போயிருப்ப! ஆனால் அதை அவனோட அன்பு, பாசம், காதலைக் கலந்து சமைச்சு வைப்பான்! அதனால் தான் அதோட ருசி உனக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு! அவன் உனக்குப் பார்த்துப் பார்த்துச் செய்ற மாதிரி இல்லைன்னாலும் கூட உங்க கல்யாணத்துக்கு அப்பறம் அவனுக்குப் பிடிச்சதையாவது தெரிஞ்சு வச்சுக்கோ!”என்று அவளுக்கு அறிவுரை வழங்கி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்று தனது குடும்ப உறுப்பினர்களிடம் வந்து சேர்ந்தமர்ந்து கொண்டாள் வண்ணமதி.
அவளது வார்த்தைகள் தந்த வீரியத்தில் தனது கையைச் சில நிமிடங்களுக்கு அசையாமல் வைத்துக் கொண்டவளோ, தன் தலையை உலுக்கி விட்டு மீண்டும் உணவருந்த ஆரம்பித்து விட்டாள் சஹஸ்ரா.
இங்கே,”நீ ஏன் அப்படி சுருக்குன்னுப் பேசிட்டு வந்த மதி? அந்தப் புள்ளையோட முகமே வாடிப் போச்சுப் பாரு!”என்று அவளைக் கண்டித்துப் பேசியவரோ,
அவளது பேச்சால் சங்கடப்பட்டுப் போயிருந்த ரமணன் மற்றும் கஸ்தூரியையும் கண்களால் காண்பித்தார் அவளது மாமியார் முல்லைக்கொடி.
அவரைப் போலவே அங்கிருந்த மற்றவர்களுக்கும் அவளது பேச்சால் மிகவும் தர்ம சங்கடமாகி விட்டதைக் கண்டு கொண்டாலும்,”அதுக்கு என்னப் பண்ண சொல்றீங்கத்தை? உங்களுக்கு எப்படி அந்தப் பொண்ணு மேலே அக்கறை இருக்கோ, அவ முகம் சுளிக்கிறா மாதிரி நடந்துக்கக் கூடாதுன்னு நினைச்சு நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சுப் பேசுறா மாதிரி தான், நான் என் தம்பிக்காக யோசிச்சுப் பேசுறேன்! அதில் எனக்கு எந்த தப்பும் தெரியலை! ஏன்னா, அழகியைக் கவனிக்க, அவளுக்காக யோசிக்கப், பேசுறதுக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க! ஆனால் என் தம்பிக்காக யோசிக்க நான் மட்டும் தான் இருக்கேன்! அதனால் என்னோட இந்தப் பேச்சால் யார் மனசுக் கஷ்டப்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை!”என்றவளோ,
“ஆனாலும் என்னை மன்னிச்சிருங்க”என அவர்களிடம் மரியாதை நிமித்தமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் வண்ணமதி.
அதற்கு அவளது மாமியார் ஏதோ மறுமொழி கூற வரும் போது, அவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டே தனது உணவை உண்டு முடித்து விட்டு இலையைக் குப்பையில் போட்டு விட்டு அங்கே வந்து சேர்ந்த சஹஸ்ராவோ,”நீங்க இப்போ பேசினதுக்காக யார் கிட்டேயும் மன்னிப்புக் கேட்கனும்னு அவசியம் இல்லை மதி! கரெக்டா தான் பேசி இருக்கீங்க! நீங்க என்ன தான் எங்கிட்ட சரிக்குச், சரியாக மல்லுக்கட்டி சண்டைப் போட்டாலும் அதுக்கு பெரும்பாலும் உங்கத் தம்பியை நான் ஏதாவது கிண்டல் பண்ணியதோ, இல்லைன்னா அவரை ஏதாவது மனசுக் கஷ்டப்பட்ற மாதிரி பேசியதோ தான் காரணமாக இருக்கும்! அது தான் எனக்கு உங்க கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்! அதை யாருக்காகவும் விட்டுக் கொடுத்துடாதீங்க! உங்கத் தம்பிக்காக நீங்க எப்பவும், யார் கிட்டேயும் நியாயம் கேட்கலாம்! பேசலாம்!”என்று அவளிடம் உரைத்து விடவும், அதில் சிலையாகிப் போய் விட்டாள் வண்ணமதி.
தன்னுடைய பார்வையை அவளிடமிருந்து திருப்பி,
“நான் தூங்கி எழுந்ததில் இருந்து இப்போ வரைக்கும் பூவனைக் காணோம்! அவர் எங்கே போயிருக்கார் மாமா?”எனப் பால்ராஜ்ஜைப் பார்த்துக் கேட்டாள்.
அவரோ,“அவன் இராச்சமையலுக்குக் காய்கறிகள் வாங்கப் போயிருக்கான்ம்மா”என அவளுக்குப் பதிலளித்தார்.
“ஓஹ்! சரி மாமா”என்றவளோ, தனது அன்னையின் கரத்தில் இருந்து கொண்டுத் தன் பெரிய கண்களை உருட்டித் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த செந்திலைக் கண்டதும் அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
“இவனைக் கொஞ்ச நேரத்துக்கு எங்கிட்ட கொடுக்கிறீங்களா?”என்று தன் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்தாள் சஹஸ்ரா.
“ம்ஹ்ம். இந்தா”என்று அவனைத் தூக்கித் தன் மகளிடம் நீட்டினார் கஸ்தூரி.
உடனே அவளது உடை மற்றும் அணிகலன்களைக் கண்டு ஆவலாக அவளிடம் தாவினான் செந்தில்.
அதில் புன்னகைத்து அவனைத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டு வெளியே அழைத்துச் சென்று விட்டாள் சஹஸ்ரா.
“இந்தக் குட்டியைப் பாரேன்! அந்தப் பொண்ணுக் கூப்பிட்ட உடனே போயிட்டான்!”எனத் தன் மனைவியிடம் ஆச்சரியத்துடன் மொழிந்தார் ஆறுமுகம்.
“ஆமாங்க. அவனுக்கு அழகியோட உடையும், கம்மல், மத்த அணிகலன்களும் ரொம்ப பிடிச்சுப் போச்சுப் போல. அதான்”என்றிருந்தார் முல்லைக்கொடி.
அதே நேரத்தில் தன்னைப் பாராட்டிப் பேசிய சஹஸ்ரா ஏன் தாங்கள் எல்லாருக்கும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறாள்? என்பதை எண்ணிக் குழம்பிப் போயிருந்தாள் வண்ணமதி.
அப்படிப்பட்டவளைத் தன்னுடைய தம்பியால் எப்படிப் புரிந்து கொண்டு அவளுடன் சந்தோஷமாக வாழ முடியும்? என்று மகிழம்பூவனை நினைத்துப் பரிதவித்தாள்.
தன்னுடைய இந்தப் பரிதவிப்பை மற்றவர்களிடம் கூறினாலும் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து அதைப் பற்றித் தன் தம்பியிடமே நேரடியாகப் பேசி விட முடிவெடுத்தாள் வண்ணமதி.
உடனே தனது செல்பேசியில் கணவனுக்கு அழைப்பு விடுக்க, அவனும், மகிழம்பூவனும் தேநீரைப் பருகி விட்டு வீட்டிற்குத் தான் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
தன் செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதும் அதை எடுத்துப் பார்த்து விட்டு,”மதி தான் கால் பண்றாள்”என்று மகிழம்பூவனிடம் அறிவித்து விட்டு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ மதி”என்றிருந்தான் பூபாலன்.
“ஹலோ! நீங்க ரெண்டு பேரும் இன்னும் காய்கறிகளை வாங்கி முடிக்கலையா?”என்று அவனிடம் விசாரித்தாள் மனைவி.
“அதெல்லாம் எப்பவோ வாங்கி முடிச்சாச்சும்மா. டீ சாப்பிட்டோம். அதான், லோட் ஆயிடுச்சு. இப்போ வீட்டுக்குத் தான் வந்துட்டு இருக்கோம்”என்றுரைக்க,
“சீக்கிரம் வாங்க”என்றவளிடம்,
“ஏன்ம்மா? என்னாச்சு?”என்று அவளிடம் அக்கறையாக வினவினான் பூபாலன்.
“நீங்க வீட்டுக்கு வாங்க. அதுக்கப்புறம் பொறுமையாகச் சொல்றேன். ஆனால் இங்கே எதுவும் சீரியஸாக நடக்கலை. அதனால் எதையும் நினைச்சுக் கவலைப்படாமல் வாங்க”என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டாள் வணண்மதி.
தன் தமக்கைக் கணவனின் குழப்பமான முகத்தைக் கண்டு,”என்னாச்சு மாமா? அங்கே ஏதாவது பிரச்சினையா?”என்று அவனிடம் அனுசரணையுடன் கேட்டான் மகிழம்பூவன்.
“இல்லை மாப்பிள்ளை. நம்மளை இவ்வளவு நேரமாக காணோம்னுக் கால் செஞ்சேன்னு சொன்னாள்”என்றதுமே, தங்களது நடையில் வேகத்தைக் கூட்டி விரைவாகவே வீட்டை அடைந்து விட்டிருக்க,
அங்கே வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் செந்திலிற்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்த சஹஸ்ராவைப் பார்த்துப் புன்னகைத்தார்கள் இருவரும்.
அவர்களைக் கண்டுத் தானும் மென்னகை புரிந்து விட்டு,”நான் தூங்கி எழுந்ததில் இருந்து உங்களைத் தான் ஆளைக் காணோம்னுத் தேடிக்கிட்டு இருந்தேன்”என்று மகிழம்பூவனிடம் தெரிவித்தாள்.
“ஓஹ்! நானும், மாமாவும் காய் வாங்க கடைத் தெருவுக்குப் போயிருந்தோம்”என்று அவளுக்குப் பதிலளிக்கவும்,
“ம்ஹ்ம். மாமா சொன்னாங்க”என்றாள் சஹஸ்ரா.
தனது தந்தையைப் பார்த்ததுமே அவனை நோக்கிக் கைகளை நீட்டிக் கொண்டு,”ப்பா! தூத்து”என்று அழுகத் தயாராகுவதைப் போன்றப் பாவனையைக் காட்டினான் செந்தில்.
உடனே அவனைப் பூபாலனிடம் கொடுத்து விட்டு,”நான் உள்ளே போறேன்”என்று கூறி வீட்டினுள் சென்று விட்டாள் பெண்ணவள்.
அவளைப் பின்பற்றித் தாங்கள் இருவரும் உள்ளே சென்ற இருவரையும்,”வாங்கப்பா. எல்லாத்தையும் வாங்கிட்டீங்க தானே?”என்று அவர்களிடம் இருந்த பையை வாங்கிக் கொண்டு அவர்கள் குடிக்கத் தண்ணீர் முகர்ந்து கொடுத்தார் முல்லைக்கொடி.
அதை வாங்கிப் பருகி விட்டு அங்கே இருந்தவர்களின் முகத்தைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தான் மகிழம்பூவன்.
அதில் சஹஸ்ராவின் பெற்றோர் தன்னை ஒரு குற்ற உணர்வுடன் நோக்குவதைப் போல் உணர்ந்தவனோ,
அவர்களுக்கு அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு,”உங்களுக்கு என்னாச்சு? என்னை ஏன் இப்படி பார்க்கிறீங்க?”எனக் கனிவுடன் கேட்க,
“ஒன்னும் இல்லப்பா”என்று தங்களது மனக்குறையை அவனிடமிருந்து மறைக்க முயன்றார்கள் இருவரும்.
ஆனால் அதை நம்பாமல்,”இல்லை! ஏதோ நடந்திருக்கு! நீங்க எங்கிட்ட சொல்லலைன்னா நான் இங்கே இருக்கிற வேற யார் கிட்டேயாவது கேட்ருவேன்!”என்று அவர்களை மிரட்டி உண்மையை வாங்க முயன்றான் மகிழம்பூவன்.
“அப்பறமாகத் தனியாகச் சொல்றோம் மாப்பிள்ளை!”என்றுரைத்து விட்டார் கஸ்தூரி.
இதே சமயம், தனது கணவனைத் தனியாக அழைத்து,”நீங்க ரெண்டு பேரும் இல்லாதப்போ இங்கே ஒரு விஷயம் நடந்துச்சு! எனக்கு அதுக்கு அப்புறம் நம்ம மகிழுக்கிட்டப் பேசியே ஆகனும்னுத் தோணுச்சுங்க! அதனால் தான் நீங்க எப்போ வீட்டுக்கு வருவீங்கன்னு விசாரிச்சேன்”என்று சற்று முன்னர் நடந்ததை அவனிடம் கலக்கத்துடன் விவரித்தாள் வண்ணமதி.
அதைக் கேட்டதும்,”நீ என்னம்மா அந்தப் பொண்ணு கிட்டே இப்படி பேசி வச்சிருக்கிற? அதுவும் பெரியவங்களையும் அவமதிப்பாகப் பேசி இருக்கிற? நீ ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கிற?”என அவளிடம் கண்டிப்புடன் வினவினான் பூபாலன்.
“என்னை என்னப் பண்ண சொல்றீங்க? அவ தெரிஞ்சே என் தம்பியை யூஸ் செய்துக்க கல்யாணம் பண்ணிக்க நினைப்பாள். அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா? அப்படி இருந்தால் என் தம்பியோட வாழ்க்கை தான் பாதிக்கும்! அதனால் தான் அப்படி பேசினேன்! எனக்குத் தெரிஞ்சு அதில் எந்த தப்பும் இல்லை!”என்று கூறவும்,
“மதி! எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு! நீ இப்படி பேசுவதும், நடந்துக்கிறதும் முதல்ல உன் தம்பிக்குப் பிடிக்குமான்னுத் தெரிஞ்சுக்கோ!”என்றவனிடம்,
“அதெல்லாம் நான் அவனோட நல்லதுக்காகத் தான் இதெல்லாம் பேசுவேன், செய்வேன்னு அவனுக்கு நல்லா தெரியும்ங்க”எனப் பெருமிதத்துடன் உரைத்தாள் வண்ணமதி.
- தொடரும்