அவளது எண்ணமும், ஆசையும் கை கூட வேண்டுமென்றால் அதற்கு அவளது வருங்கால கணவனான மகிழம்பூவனின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்பதை அறியவில்லை அவள்!
சிறிது நேரம் கழித்து அவ்விடத்தையும், அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த வேலைகளையும் பார்வையிட்டு விட்டு மீண்டும் அலுவலக அறைக்கு வந்து சேர்ந்து விட்டவளோ,
தனது இரண்டு பக்கங்களிலும் குறுக்கும், மறுக்குமாக ஓடிக் கொண்டிருந்த செந்திலைக் கைகளில் அள்ளிக் கொண்டாள் சஹஸ்ரா.
“எங்கிட்ட மாட்டிக்கிட்டியா வாண்டு?”என்றவளைப் பார்த்து தனது சிவந்த இதழ்கள் விரியச் சிரித்தான் அந்தக் குட்டிப் பையன்.
அவனைத் தன் கைகளில் இருந்து இறக்காமலேயே அங்கேயிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டு,
“நிச்சயத்துக்கு எல்லாருக்கும் டிரெஸ் எடுக்கனும்ல? அதை அங்கே எடுப்போமா? அங்கே நிறைய கலெக்ஷன்ஸ் இருக்கும்”என்று அங்கேயிருந்த மற்ற மூவரிடமும் வினவ,
அதற்கு,“எனக்கு ஓகே தான்”என்று பதிலளித்தான் மகிழம்பூவன்.
உடனே மற்ற இருவரையும் பார்த்தாள் சஹஸ்ரா.
“எனக்கு எதுவாக இருந்தாலும் சம்மதம் தான். உனக்கு எது விருப்பம் மதி?”என்று மனைவியிடம் கேட்டான் பூபாலன்.
தனக்காக வரவழைக்கப்பட்டு இருந்த மோரை ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டு,“எனக்கும் எது வேணும்னாலும் ஓகே தான். எதுக்கும் பெரியவங்க கிட்டே பேசி முடிவு பண்ணிக்குவோம்”எனக் கூறித் தம்ளரை மேசையில் வைத்து விட்டிருந்தாள் வண்ணமதி.
“சரி”என்றுரைத்து விட்டாள் சஹஸ்ரா.
மதிய வேளையில், பால்ராஜ், ரமணன் மற்றும் ஆறுமுகம் உதவிக்கரம் நீட்டி, கஸ்தூரியும், முல்லைக்கொடியும் சேர்ந்து சமையலை முடித்திருந்தார்கள்.
ஒன்றரை மணி ஆனதும்,
“அவங்களுக்கு ஃபோன் போட்டுச் சாப்பிட வரச் சொல்லுங்க”என்று தன் கணவனிடம் அறிவுறுத்தினார் முல்லைக்கொடி.
உடனே தனது செல்பேசியில் மகனுக்கு அழைப்பு விடுத்தார் ஆறுமுகம்.
அதை ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ! என்னப்பா?”என்றான் பூபாலன்.
“மணி என்னன்னுப் பார்த்தீங்களா? சாப்பிட வர்ற யோசனையே இல்லையா உங்களுக்கு? இதில் சின்னவனையும் தூக்கிட்டுப் போயாச்சு”என அவனைக் கடிந்து கொள்ள,
“மன்னிச்சிருங்கப்பா. நாங்கப் பேச்சு மும்முரத்தில் மணியைப் பார்க்கலை. இதோ கிளம்பி வர்றோம்”என்றதும்,
“சரி. நாலு பேரும், பேரனைக் கூட்டிட்டுப் பார்த்துப் பதனமாக வாங்க”என்று வலியுறுத்தி அழைப்பைத் துண்டித்தார் ஆறுமுகம்.
“நாம சாப்பிட்ற நேரம் வந்துடுச்சுன்னு நம்ம எல்லாரையும் வீட்டுக்கு வரச் சொன்னார்”என்று மற்ற மூவரிடமும் தெரிவித்தான் பூபாலன்.
மகிழம்பூவன்,“சரி வாங்க. போகலாம்”என்றிருந்தான்.
அங்கே விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்ததால்,‘வர மாட்டேன்’என்று முரண்டு பிடித்தான் செந்தில்.
அவனை ஒருவழியாகச் சமாதானம் செய்து தூக்கிக் கொண்டுப் பண்ணை ஆட்களிடம் சொல்லிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து தங்களது வீட்டை அடைந்திருந்தார்கள் அவர்கள் நால்வரும்.
அவர்களை வரவேற்றுப் பேரனைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டு அவர்கள் சுற்றிப் பார்த்த இடங்களைப் பற்றி விசாரித்தார் முல்லைக்கொடி.
அதைப் பற்றிய விவரங்களை அவரிடம் விவரித்து விட்டு,”பண்ணை சூப்பராக இருக்கு மாமா! வேலையெல்லாம் கச்சிதமாக நடக்குது!”என்று தன் மாமாவிடம் கூறினாள் சஹஸ்ரா.
“அப்படியாம்மா? அதுக்கு நம்ம மகிழோட மேற்பார்வை தான் காரணம்! அவன் தான் பண்ணையே கதின்னுக் கிடப்பான்! அதனால் தான் அங்கே எல்லா வேலையும் சுத்தமாக நடந்துட்டு இருக்குது!”என்று சொல்லித் தன் மகனைப் பெருமை பொங்கப் பார்த்தார் பால்ராஜ்.
“ஓஹ்! வாவ்! வாழ்த்துக்கள் பூவன்”என்று சம்பந்தப்பட்டவனுக்கு வாழ்த்து தெரிவிக்க,
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு,”நன்றி அழகி!”என்றுரைத்தான் மகிழம்பூவன்.
“சரி. சாப்பிடலாமா?”என்றார் கஸ்தூரி.
“ஆமாம்மா. எனக்கும் ரொம்ப பசிக்குது”என்று அன்னையிடம் சோகமாக கூறினாள் சஹஸ்ரா.
“இரும்மா. பாய்களை விரிச்சு விட்றேன். நீங்க முதல்ல உட்காருங்க”என்று அனைவரும் அமர்ந்து உண்பதற்கு ஏற்பப் பாய்களை விரித்தார் ஆறுமுகம்.
அதில் அமர்ந்து கொண்டார்கள் இளையவர்கள்.
“நீங்களும் பொய் உட்காருங்க”என்று ரமணன், கஸ்தூரி மற்றும் பால்ராஜையும் அமரச் செய்து விட்டுத் தன் மனைவியிடம்,
“நான் போய்ப் பாத்திரங்களை எடுத்துட்டு வந்து பரிமாறுறேன். நீயும் போய் உட்காருத்தா!”என்று கூறி விட்டுச் சமையலறைக்குச் சென்று உணவுப் பாத்திரங்களைக் கொண்டு வந்தார் ஆறுமுகம்.
அவருக்கு உதவியாகத் தானும் சிலவற்றைத் தன் கையில் வாங்கி அவருடன் சேர்ந்து உணவைப் பரிமாறினார் ரமணன்.
“இவனுக்குச் சாப்பாடுத்தை?”எனத் தன் மாமியாரிடம் மகனைக் காட்டி வினவினாள் வண்ணமதி.
“அவனுக்குத் தனியாகப் பருப்பு சாதம் செஞ்சிருக்கேன். அதில் நெய் விட்டு நான் ஊட்டுறேன். நீ சாப்பிடு”என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டுத் தன் பேரனுக்கு உணவூட்டினார் முல்லைக்கொடி.
அதேபோல் தாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக உணவுண்டு முடித்து விட்டுச் சிறிது நேரம் உறங்கி எழுவதற்குத் தத்தமது அறைக்குச் சென்று விட்டார்கள் வண்ணமதி, பூபாலன் மற்றும் சஹஸ்ரா.
இங்கே வரவேற்பறையில்,“இராவுக்கு நான் சமைக்கட்டுமா ஐயா?”என்று தன் தந்தையிடம் கேட்டான் மகிழம்பூவன்.
“ஏன் திடீர்னு?”என்றார் பால்ராஜ்.
ஆனால் அவன் எதற்காக அப்படிக் கேட்டான் என்பதை அறிந்து கொண்ட சஹஸ்ராவின் பெற்றோரான ரமணன் மற்றும் கஸ்தூரியின் முகங்கள் மலர்ந்து விகசித்தது.
“அது வந்து…என்னோட சமையலை ருசிப் பார்க்கனும்னு அழகி ஆசைப்பட்டாள்ன்னு மதி அக்கா எங்கிட்ட சொன்னாங்க? அதை இன்னைக்கு நிறைவேத்தலாம்னு தான் கேட்டேன் ஐயா”என்று கூறியவனின் வதனம் நாணத்தில் மிளிர்ந்ததைக் கண்டு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தனர் ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி.
உடனே தானும் புன்னகைத்து விட்டு,”அப்படின்னா சரி. நீயே சமைப்பா. ஏதாவது உதவி வேணும்னா எங்களைக் கூப்பிடு”என்று கூறி மகனின் கோரிக்கைக்கு அனுமதி அளித்தார் பால்ராஜ்.
“சரிங்க ஐயா”என்றவனுக்கு அவர்கள் யாரிடமும் உதவி பெறும் எண்ணமில்லை.
ஏனெனில் சஹஸ்ராவிற்குச் சமைக்கும் உணவில் தன்னுடைய பங்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து இருந்தான் மகிழம்பூவன்.
மாலையானதும் வண்ணமதி, பூபாலன் மற்றும் சஹஸ்ராவும் உறக்கத்தில் இருந்து எழுந்து வந்தனர்.
அவர்களுக்குக் காப்பிப் போட்டுக் கொடுக்கவும், அதைப் பருகிக் கொண்டே,”நிச்சயத்துக்கு நம்ம எல்லாருக்கும் துணி எடுக்க டவுனுக்குப் போகலாம்ன்னு நாங்க நாலு பேரும் யோசிச்சு இருக்கோம்”என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தான் மகிழம்பூவன்.
“அப்படியா?”என்றப் பால்ராஜ்ஜூம்,
“இதில் உனக்கு மாற்றுக் கருத்து இருக்கா?”என்று மகளிடம் கேட்டார்.
“எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லப்பா. அங்கேயே எடுப்போம்”என்றுரைத்து விட்டாள் வண்ணமதி.
உடனே மற்றக் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தைக் கேட்க அவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.
“அப்போ சரி. நாங்க டவுனுக்கே வந்து துணி எடுத்துக்கிறோம் மாப்பிள்ளை”என்று ரமணனிடம் கூறினார் பால்ராஜ்.
உடனே தானும்,“ரொம்ப சந்தோஷம் மாமா. நீங்க எல்லாரும் கிளம்பும் போது சொல்லுங்க. நானே எல்லாருக்கும் ரயில் டிக்கெட் போட்டு விட்டுட்றேன்”என்றார் மகிழ்ச்சியாக.
அதற்குப் பிறகு, இன்னும் அரைத் தூக்கத்தில் இருந்த பேரனைத் தூக்கிக் கொண்டுத் கடைத் தெருவிற்குக் கிளம்பி விட்டார் பால்ராஜ்.
தாங்கள் அனைவரும் காபியைக் குடித்து முடித்ததும்,”நான் போய் வேலையைப் பார்க்கிறேன். இன்னைக்கு என் லேப்டாப்பை எடுக்க நேரமே கிடைக்கலை”என்று கூறி விட்டு அறைக்குள் நுழைந்து தனது மடிக்கணினியை உயிர்ப்பித்து அதில் வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டுக் கொண்டே தனது காரியதரிசிக்கு அழைப்பு விடுத்தாள் சஹஸ்ரா.
உடனே மறுமுனையில் அழைப்பை ஏற்கப்பட்டு விட்டதை உணர்த்தும் வகையில்,”ஹலோ மேம்”என்றிருந்தாள் மோனிகா.
“ஹலோ! அங்கே எல்லாம் சரியாகத் தானே போயிட்டு இருக்கு? நான் இப்போ தான் எல்லா மெயில்ஸையும் பார்த்துட்டு இருக்கேன்! வாட்சப்பில் எந்த அப்டேட்டும் வரலையே ஏன்?”என்று அவளிடம் கேள்விகளை அடுக்கித் தள்ள,
அதில் திணறிப் போய்,”எஸ் மேம். இங்கே எல்லாம் சரியாகத் தான் போயிட்டு இருக்கு. உங்க வாட்ஸப்புக்கு அனுப்ப வேண்டிய தகவல் குறிப்புகளைத் தயார் செய்ற வேலையைத் தான் நாங்கப் பார்த்துட்டு இருக்கோம்!”என்க,
அதைக் கேட்டதும்,“என்னது? இப்போ தான் அதையே தயார் செய்துட்டு இருக்கீங்களா? நீங்க எல்லாரும் ஏன் இவ்வளவு மெதுவாக வேலைப் பார்க்கிறீங்கன்னு எனக்குச் சத்தியமாகப் புரியலை!”எனப் பொரிந்து தள்ளினாள் சஹஸ்ரா.
அவளது திட்டுக்களை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுக் கொண்டு,”இன்னைக்குப் பன்னீர் அண்ட் சீஸ் ஆர்டர்ஸ் நிறைய வந்துடுச்சு மேம். அதையெல்லாம் பேக் பண்ணி எல்லாத்துக்கும் விநியோகம் செஞ்சதால் அதில் வந்த லாபத்தையும் சேர்த்துக் கணக்குப் பார்த்துட்டு இந்த வேலையை முடிக்கலாம்னு நினைச்சோம் மேம். சாரி”என்று அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் மோனிகா.
அவள் கூறிய,’லாபம்'என்ற வார்த்தையைக் கேட்டதும் சஹஸ்ராவின் கோபம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டிருந்தது.
தன்னைச் சமன்படுத்திக் கொண்டு,”ஓஹ்! எவ்வளவு லாபம் வந்திருக்கு?”எனக் கேட்கவும்,
அதன் மதிப்பைச் சொன்னாள் மோனிகா.
“ம்ஹ்ம். போன மாசத்தை விட அஞ்சு மடங்கு அதிகமாக வந்திருக்கு. அப்படித் தானே?”
“ஆமாம் மேம்”
“அப்போ ஆஃபீஸ் அண்ட் ரெண்டு ஃபேக்டரீஸிலும் வேலை செய்ற எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் கொடுத்துடுங்க. நான் ஊருக்கு வந்ததுக்குஅவர்கள் அப்பறமாக எல்லாருக்கும் போனஸ் கொடுக்கிறதைப் பத்தி முடிவு பண்றேன்”என்றவளோ,
“ஓகே மேம். கங்கிராட்ஸ்”என்று தயக்கத்துடன் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தாள் மோனிகா.
அதற்கு,”தாங்க்யூ. நான் கேட்ட குறிப்பில் எதையும் மறந்து விடாமல் எல்லாத்தையும் எழுதிட்டு எனக்கு நாளைக்குக் காலையில் பதினொரு மணிக்கு அனுப்பி விடுங்க”என்று அறிவுறுத்தி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு, மின்னஞ்சல்கள் முழுவதையும் பார்த்து முடித்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.
அன்றிரவு உணவு வேளை வரும் வரையிலும் தனது அறையிலேயே அடைந்து கிடந்தவளை யாரும் தொல்லை செய்யவில்லை.
அதே சமயம், தான் சொன்னதைப் போலவே, தனது கரங்களால் அனைத்து உணவுப் பதார்த்தங்களையும் சமைத்து முடித்து விட்டு உணவுண்ணும் நேரத்தில் அனைவருடன் சேர்த்து சஹஸ்ராவையும் உட்கார வைத்து, தானே எல்லாருக்கும் உணவைப் பரிமாறினான் மகிழம்பூவன்.
அதிலேயே, அவன் மீது சிறு சந்தேகம் துளிர்த்து விட்டிருந்தாலும் தனது இலையில் இருந்த உணவைப் பிசைந்து அதில் ஒரு கவளத்தை எடுத்து வாயில் வைத்துச் மென்ற சில நொடிகளிலேயே அதன் வித்தியாசமான சுவையில் தன் புருவம் சுருங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள் பெண்ணவள்.
- தொடரும்