“ஓஹோ! இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? சரிங்க மாப்பிள்ளை. நீங்கப் போய் எல்லாத்தையும் எடுத்து வைங்க. நாங்க மதியத்துக்கு என்னச் சமைக்கலாம்னுப் பார்க்கிறோம்”எனக் கூறி அவர்கள் மூவரையும் அறைக்கு அனுப்பி வைத்தார் பால்ராஜ்.
“இவங்களுக்கு மதியத்துக்கு இலகுவாக சாப்பிட்றா மாதிரி சமைச்சுக் கொடுத்து அனுப்பி வைப்போம் ஐயா. அப்போ தான், காரில் பயணிக்கும் போது வயிறுப் பிரச்சினை வராமல் இருக்கும்”என்று அவருக்கு யோசனை கூறினான் மகிழம்பூவன்.
“சரிப்பா. அப்போ சாம்பார், சாதம், அப்பளம் பொரிச்சுக் கொடுப்போம்”என்றுரைத்து விட்டார் அவனது தந்தை.
இங்கே தத்தமது டிராவல் பைகளில் தங்களது பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.
“அங்கே போய்க் கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் எங்கேட்ஜ்மெண்ட்டுக்குத் தேவையானதை வாங்க ஆரம்பிக்கலாம்”என்ற மனைவியிடம்,
“ஓகேம்மா. நானும் என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் கிட்டேயும், தொழில் நண்பர்கள் கிட்டேயும் சொல்லி அவங்களை நிச்சயத்துக்கு வர வைக்கலாம்னு இருக்கேன்”என்றார் ரமணன்.
உடனே,”என் நிச்சயம் தான் இங்கே நடக்கப் போகுதே? அப்பறம் எப்படி அவங்க வருவாங்க அப்பா?”எனக் கேட்டிருந்தாள் சஹஸ்ரா.
அதில் மகளைக் கண்டிப்புடன் பார்த்து விட்டு,”ஏன் இந்த ஊருக்கு என்னக் குறைச்சல்? இது என்ன வேற்றுக் கிரகத்திலா இருக்கு? இங்கே யாரும் வந்து, போக மாட்டாங்களா என்ன?”என்று வினவினார் கஸ்தூரி.
அவரது கண்டிப்பு நிறைந்த குரலில் தனது முகத்தைச் சுருக்கிக் கொண்டு,”சாரிம்மா”என்றிருக்க,
“இங்கே பாரு சஹாம்மா! நாம எங்கே செட்டில் ஆனாலும் நம்மளோட வேரை மறக்கக் கூடாது! அது தான், நம்மப் பூர்வீகம்! அதை எப்பவும் மறக்கக் கூடாது! அப்போ தான், நமக்கு வாழ்க்கையில் எந்தக் கஷ்டமும் வராது! அதே மாதிரி, நம்ம ஊரையும், மனுஷங்களையும் மதிச்சா தான் நம்மளைக் கடவுளும் மதிச்சு நமக்கானதைக் கொடுப்பார்! புரியுதா?”என்று அவளிடம் கனிவாகச் சொல்லிப் புரிய வைத்தார் ரமணன்.
அதைக் கேட்டுத் தானும் ஒருவாறாக அதிலிருந்து உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு,”நீங்க சொன்னது கரெக்ட் தான்ப்பா”என்று ஒப்புக் கொண்டாள் சஹஸ்ரா.
“நாம இவகிட்டே இதையெல்லாம் பேசுறோமே! ஆனால் நாம மூனு பேரும் இங்கே எவ்வளவு நாளாகத் தங்கி இருந்தோம்? ஆனால் இங்கே கொஞ்ச தூரம் தள்ளி இருக்கிற நம்மளோட குலதெய்வக் கோயிலுக்குப் போயிட்டு வந்தோமா? இல்லை, அதைப் பத்தின பேச்சையாவது எடுத்தோமா? நாம அதைச் சுத்தமாக மறந்துட்டோம்ங்க!”என்று கணவரிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டார் கஸ்தூரி.
உடனே,”அச்சோ! ஆமாம்மா. அதைப் பத்தி எனக்கும் ஞாபகமே இல்லை! ப்ச்! இப்போ கடைசி நேரத்தில் கிளம்பிப் போகவும் முடியாதே!”என்று தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார் ரமணன்.
தன் பெற்றோரின் வருத்தத்தை துடைக்கும் விதமாக,”அதனால் என்ன? நாம நிச்சயத்தார்த்தத்துக்கு இங்கே தானே வரப் போறோம்ப்பா, அம்மா? அப்போ நாம எல்லாரும் குடும்பத்தோடப் போய் எங்களோட நிச்சய மோதிரங்களை அங்கே வச்சுக் கும்பிட்டுட்டு வந்துடுவோம்! ஓகே தானே?”என்று அவர்களுக்கு ஆறுதலாகச் சொன்னாள் சஹஸ்ரா.
அவள் கூறியது நல்ல யோசனையாக இருக்க,”சரி. நாம அப்படியே செய்வோம்”என்றுரைத்து விடச்,
சிறிது நேரம் கழித்து தங்களது உடைமைகள் அனைத்தையும் அதற்குரிய பைகளில் அடைத்து வைத்து விட்டிருந்தனர் அவர்கள் மூவரும்.
அதேபோல், தாங்கள் வெளியே வந்த நேரத்தில் தந்தையும், மகனும் சமையல் வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பதைக் கண்டுத் தாங்களும் உதவ முன் வந்தார்கள்.
ஆனால்,”அதெல்லாம் வேண்டாம். நீங்க ஊருக்குக் கிளம்புற வரைக்கும் ரெஸ்ட் எடுங்க. அதுவே போதும்”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டார் பால்ராஜ்.
அதனால் அவர்கள் இருவரும் சமையல் செய்வதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்கள் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.
அதே நேரத்தில் தனது செல்பேசியை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று,”நான் நாளைக்குக் காலையில் ஊருக்கு வந்துடுவேன் மிஸ். மோனிகா. ஆனால் என்னால் அன்னைக்கு ஆஃபீஸூக்கு வர முடியாது! அடுத்த நாள் எப்பவும் போல் அங்கே வருவேன்! நான் சொன்ன வேலை எல்லாத்தையும் கரெக்ட் டைமுக்கு நீங்க எல்லாரும் முடிச்சு வச்சு இருக்கனும்! ஓகேவா?”என்று அவளிடம் கட்டளை பிறப்பிக்க,
“ஓகே மேம்”என்ற பதில் வந்ததும்,
“சரி. பார்த்துக்கோங்க மிஸ். மோனிகா”என்று கூறி அழைப்பை வைத்து விட்டு மீண்டும் கூடத்திற்கு வந்து சேர்ந்தாள் சஹஸ்ரா.
“அதான் ஊருக்குப் போகப் போறோமே? இப்போ கூட ஆஃபீஸ் வேலையைத் தான் பார்ப்பியா? உன் மூளையைக் கொஞ்ச நேரம் வேலை செய்ய விடாமல் அமைதியாக வை”என்று மகளுக்கு அறிவுறுத்தினார் கஸ்தூரி.
“என் மூளையைக் கொஞ்ச நேரம் அமைதியாக வச்சிட்டா நான் கோமாவுக்குப் போயிடுவேன்ம்மா”என்று அவரிடம் கூறி விட்டு நகைத்தாள் மகள்.
“போடி அராத்து!”என்றவரோ,
”சாப்பாடு ரெடியாகிடுச்சா மகிழு?”எனத் தன் வருங்கால மருமகனிடம் கேட்டார் கஸ்தூரி.
“ம்ஹ்ம். ரெடி ஆயிடுச்சு அத்தை”என்று அவர்கள் மூவருக்கும் உணவைப் பரிமாறினர் பால்ராஜூம், மகிழம்பூவனும்.
“நீங்களும் எங்க கூடச் சேர்ந்து சாப்பிடுங்க”என்ற ரமணனின் கோரிக்கையை மறுக்காமல் தாங்களும் அவர்களுடன் இணைந்து உணவை அருந்தி முடித்தார்கள்.
அதற்குப் பிறகு மாலை வரை மகிழம்பூவன் மற்றும் பால்ராஜ்ஜூடன் அளவளாவி விட்டுத் தாங்கள் கிளம்பும் நேரம் வந்ததும்,”அப்போ நாங்கப் புறப்பட்றோம்”என்று அவர்களிடம் உரைக்க,
“சரி. உங்க கூடப் பாதுகாப்புக்கு ஆட்கள் வந்தாலும் கூடப் பிராயணம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருங்க”என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் பால்ராஜ்.
“சரிங்க மாமா! நாங்கப் போயிட்டு வர்றோம்”என ரமணனும்,
“நீங்க எல்லாரும் உங்களைப் பார்த்துக்கோங்க!”என்று கஸ்தூரியும்,
“பை மாமா! பை பூவன்”எனச் சஹஸ்ராவும் அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தங்களது உடமைகளுடன் காரில் ஏறிக் கொண்டனர்.
ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டுக் காரைக் கிளப்பத் தொடங்கி விட்டார் ரமணன்.
உடனே பால்ராஜ்ஜிற்கும், மகிழம்பூவனுக்கும் கையை அசைத்து,‘டாடா’காட்டி விட்டுத் தங்களது பயணத்தை மேற்கொண்டார்கள்.
அந்தக் கார் தங்களது கண்களில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்று பார்த்து விட்டு அதன் பிம்பம் மறைந்ததும் வீட்டிற்குள் வந்து விட்டனர் தந்தையும், மகனும்.
“நான் மதி அக்காவுக்குக் கால் செஞ்சி சொல்லிட்றேன்”என்றவனோ,
தனது செல்பேசியில் தங்கைக்கு அழைத்து, தங்களது தாய் மாமா, அவரது மனைவி, மகளுடன் ஊருக்குப் பயணமானதை தமக்கையிடம் தெரிவித்தான் மகிழம்பூவன்.
அதைக் கேட்டதும்,”அப்படியா? சரி. உன்னோட குரலில் என்னக் காதலியைப் பிரிஞ்சதுக்கான சோகமே தெரியலையே?”என்று அவனைக் கலாய்த்துக் கேட்டிருந்தாள் வண்ணமதி.
“அக்கா!” என்று வெட்கக் கொண்டவனிடம்,
“என்ன? உங்களுக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் அவ உனக்குக் காதலி தான்! அதுக்கப்புறம் தான் மனைவி. அப்போ நான் கேட்ட கேள்வி சரி தானே?”என்று கேட்டு அவனை மேலும் வெட்கத்தில் சிவக்க வைத்தாள் தமக்கை.
“போதும்க்கா”என்று அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான் மகிழம்பூவன்.
“சரி. பொழைச்சுப் போ. அங்கே என்னச் சாப்பாடு?”என்று இயல்பாகப் பேசி அவனை ஆசுவாசப்படுத்தி விட்டு அழைப்பை வைத்தாள் வண்ணமதி.
“இந்த அக்கா இருக்காங்களே!”என்று அவளை எண்ணிக் குறுஞ்சிரிப்பை உதிர்த்துக் கொண்டான்.
அதே சமயம் சில மணி நேரங்கள் கழித்து தங்களது கார்ப் பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையத்தை அடைந்ததும், தங்கள் காரைப் பாதுகாவலர்களிடம் கொடுத்து தங்களது வீட்டிற்கு ஓட்டி வருமாறு உத்தரவு பிறப்பித்து விட்டுப் பரிசோதனைகளை முடித்ததும், தங்களுக்கான விமானத்தில் ஏறப் போவதாகத் தன் அத்தை மகனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டு விமானத்தில் ஏறிப் பயணமானார்கள் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.
அந்தச் செய்தியை அப்படியே தனது தந்தையிடம் தெரிவித்து விட்டு அவருடன் சேர்ந்து இரவு உணவை உட்கொண்டு அறைக்குள் போய்ச் தனது மாமன் மகள் இங்கு இருந்த வரையில் அவளுடன் மேற்கொண்ட இரு சக்கர வாகனப் பயணத்தை தனது ஞாபகத்தில் கொண்டு வந்து அந்த உணர்வு தந்தச் சுகந்தத்தில் அப்படியே நித்திரை கொண்டான் மகிழம்பூவன்.
அதிகாலையில் விமானத்தில் இருந்து இறங்கிக் காரில் பயணித்து தங்களது வீட்டை அடைந்ததும் பயணத்தால் ஏற்பட்ட சோர்வில் தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டு ஓய்வெடுத்தனர் மூவரும்.
அதிகாலையிலேயே கண் விழித்துச் சினுங்கிய மகனைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் வண்ணமதி.
அதே நேரத்தில் தனது பருத்தி ஆலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவளது கணவனோ,“நீ என்னடி உன் தம்பியை அப்படி வாரிக்கிட்டு இருக்கிற?”என்று அவளிடம் வினவ,
அதைக் கேட்டவுடன் சில கணங்கள் குழப்பத்தில் இருந்து விட்டு, அவன் கேட்டதற்கான அர்த்தம் புரிந்ததும்,
“ஓஹோ! நேத்துச் சாயந்தரம் அவன் கிட்ட பேசினப்போ கேட்டீங்களாக்கும்?”என்றிருந்தாள் வண்ணமதி.
“ம்ஹ்ம்”என்று கூறிப் புன்னகைத்தான் பூபாலன்.
“ஆமாம். அவனை இப்போ தானே நல்லா கிண்டல் செஞ்சி, வார முடியும்? அவனுக்குக் கல்யாணம் ஆகிட்டா அதுக்கப்புறம் இப்படி கேலி செய்ய முடியாதே?”என்றுரைத்துச் சிரிக்க,
அதை ரசனையுடன் பார்த்து விட்டு,”அதுவும் சரி தான். நான் கிளம்புறேன்ம்மா”என்று தெரிவித்து அவளுக்கும், மகனுக்கும் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டுச் சென்றான் பூபாலன்.
அதற்குப் பிறகுத் தன் மகனால் அதிகாலையிலேயே விழித்ததால் தூக்கம் கண்ணைச் சுழற்றியதால்,
ஒரு அரை மணி நேரம் உறங்கி எழலாம் என்று தன் செல்பேசியில் அலாரம் வைத்து விட்டுச் செந்திலின் அருகில் படுத்து விட்டாள் வண்ணமதி.
அதற்குப் பிறகு வந்த நாட்களில் எல்லாம் தத்துமது வேலைகளில் மூழ்கி விட்டனர் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவின் குடும்பத்தார்.
ஒரு நாள் ரமணனுக்கு அழைத்து தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கிளம்பி அங்கே வருவதாக அறிவித்தான் மகிழம்பூவன்.
அதைக் கேட்டதும்,”அப்படியா மாப்பிள்ளை? நீங்க எல்லாரும் எப்போடா இங்கே வருவீங்கன்னு நாங்களும் காத்துட்டு இருந்தோம்! இப்போ தான் அதுக்கு நேரம் வந்திருக்குப் போல மாப்பிள்ளை!”என்றவரோ,
அவர்கள் அனைவரும் ஊருக்கு வரப் போகும் நாளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை தன் மனைவி, மகளிடம் தெரிவித்தார் ரமணன்.
அவரைப் போலவே, தங்களது மற்றக் குடும்ப உறுப்பினர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் கஸ்தூரியும், சஹஸ்ராவும்.
- தொடரும்