வரம் 29

Advertisement

Writer girl

Well-known member
Member
நாளைக்குப் பர்சனல் வேலை டியர்ஸ். அதனால் யூடி போஸ்ட் செய்ய முடியாது சூழ்நிலை! ஆனால் கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை அடுத்த யூடி வந்துடும்! சாரி

அத்தியாயம் 29

அதற்கடுத்த நாள் ரமணனின் நண்பரின் ஜவுளிக்கடைக்குச் செல்வதற்காக கிளம்பிக் கொண்டு இருந்தார்கள் அனைவரும்.

முந்தைய நாள் தன்னிடம் அப்படி கடுமையாக நடந்து கொண்டது, பேசியது மகிழம்பூவன் தானா? என்று இப்போதும் கூட நம்ப முடியாமல் தவித்தாள் சஹஸ்ரா.

ஏனெனில், காலையில் எழுந்து வந்ததில் இருந்து அவன் நேற்று நடந்த எதுவும் ஞாபகத்தில் இல்லாதவனைப் போல் எப்போதும் போலத் தான் அவளிடம் பேசி வளைய வந்து கொணடிருந்தான்.

இது அவளைப் பொறுத்தவரையில் அவளுக்குச் சாதகமானது தான்!

ஏனென்றால் அவளது சுபாவத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லி அதற்கு மறுத்ததற்கு அவன் தங்களது திருமணத்தை நிறுத்தி இருந்தாள் தனது கனவு எப்போதும் கனவாகவே போய் விட்டிருக்கும்.

ஆனாலும் அவன் அப்படி தன்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதை எண்ணிக் கருவிக் கொண்டாள் சஹஸ்ரா.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் முறைக்கவும் செய்தாள்.

அதைக் கண்டு கொண்டவனும் கூட அவளைப் பார்க்காமல் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தான் மகிழம்பூவன்.

ஆனால் இவர்களுக்குள் என்ன நடக்கிறது? என்பதைக் கண்டு கொள்ளாமல் தயாராகி வந்திருந்தனர் அனைவரும்.

“இவனுக்குத் துணியைப் போட்டு விட்றதுக்குள்ளே நான் களைச்சுப் போயிட்டேன்!”என்று தன் மகனைச் சலித்துக் கொண்டாள் வண்ணமதி.

“அவனை எங்கிட்டே கொடு. கடைக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் நான் வச்சுக்கிறேன்”என்று அவளிடமிருந்து மகனை வாங்கிக் கொண்டான் பூபாலன்.

“இப்படி வா சஹா”என்று தன் மகளைத் தனியாக அழைத்து அவள் நேற்று அனைவரின் முன்னாலும் அப்படி பேசியதைக் கண்டிக்கும் விதமாக,”அங்கே இருக்கிறவங்க எல்லாரும் நமக்குச் சொந்தக்காரங்க! அதே மாதிரி நாமளும் ஒன்னும் வானத்தில் இருந்து குதிச்சு நேரடியாக இங்கே வந்து இவ்வளவு பெரிய தொழிலை நடத்திடலை! நீ இனிமேல் இப்படியெல்லாம் பேசுற வேலை வச்சிக்காதே!”என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார் கஸ்தூரி.

அதில் அவளது முகமே செத்து விட்டது!

ஏனெனில் நேற்று மகிழம்பூவனும் தன்னிடம் இதையே தான் சொல்லி அறிவுறுத்தி இருந்தான். இப்போது தன் அன்னையும் இதையே வலியுறுத்துகிறார் என்பதை எண்ணித் தளர்ந்து போனாள் சஹஸ்ரா.

தன்னிடம் அனைவரும் வந்து அறிவுரைகள், ஆலோசனைகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது தன்னுடைய குடும்பத்தினர் மட்டுமே தனக்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களே என்றெண்ணிக் குமைந்து போனவளிடம்,

“என்னடி இனிமேல் இப்படி யார்கிட்டேயும் பேசிப், பழக மாட்டேன்னு வாயைத் திறந்து சொல்லு”என்ற தாயின் குரலில் நினைவு வந்து அவரைப் பார்த்து,

“நான் இனிமேல் இப்படியெல்லாம் யான் கிட்டேயும் பேசவே மாட்டேன்ம்மா! போதுமா?”என்றுரைத்து இருந்தாள் சஹஸ்ரா.

“சரி. தொண்டையைத் திறக்காதே!”என்று அவளைக் கூட்டிக் கொண்டு வரவேற்பறைக்கு வரவும்,

“என்னம்மா கடைக்குக் கிளம்பலாமா? லேட் ஆச்சு!”என்று அவர்கள் இருவரிடமும் வினவினார் ரமணன்.

“ம்ஹ்ம். போகலாம்ங்க”எனப் பதிலளித்தார் கஸ்தூரி.

ஆனால் அதற்குத் தங்களது மகள் எந்த எதிர்வினையும் ஆற்றாமல், முகத்தைச் சுணக்கிக் கொண்டு நின்றிருப்பதைக் கண்டு,”சஹா! நீ ஏன்ம்மா இப்படி இருக்கிற? இப்போ கடைக்குப் போகலாம் தானே? இல்லைன்னா, உனக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா? அப்படின்னா சொல்லு! நாளைக்குக் கூடப் போவோம்”என்று அவளிடம் ஆதூரமாக கேட்டார் ரமணன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா. இப்போவே போகலாம்”என்று அவருக்கு ஒப்புதல் அளித்தாள் சஹஸ்ரா.

“சரிம்மா. அப்போ வாங்க கிளம்பலாம்”என்றுரைத்து விட்டுத் தங்களது வருகையைத் தன் நண்பனிடம் தெரிவித்தார் ரமணன்.

அதற்குப் பிறகு, சில கார்களில் ஏறி அவரது நண்பரின் ஜவுளிக்கடைக்குப் பயணம் செய்தார்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.

தங்களது காரில் தான் மகிழம்பூவனும் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டு அவனது பக்கமே திரும்பாமல் மூக்கு விடைக்க வேறு புறம் தன்னுடைய பார்வையை ஓட்டிக் கொண்டு இருந்தாள் சஹஸ்ரா.

அவளை இவ்வளவு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த ஆடவனுக்கோ அவளது கோபம் சிறுபிள்ளைத் தனமாகத் தெரிந்தது!

அதனால் தனது இதழ்களில் புன்னகையை மலர விட்டான் மகிழம்பூவன்.

அவனைப் பக்கவாட்டில் பார்த்தப் பெண்ணவளோ, அவனது இதழ்கள் வெளியிட்டப் புன்னகையை அவதானித்து விட்டு யாரும் அறியாமல் அவனை நேரடியாகவே பார்த்து முறைத்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதில் அவனது புன்னகை உரத்தச் சிரிப்பாக உருவெடுத்து விட்டது!

அதே காரில் தான் வண்ணமதியும் இருந்தாள்.

எனவே அவனது நகைப்பைக் கண்டு,”ஏன்டா இப்படி சிரிக்கிற?”என்று தம்பியிடம் குழப்பத்துடன் வினவ,

“ஒன்னுமில்லைக்கா. திடீர்னு ஒரு ஜோக் ஞாபகம் வந்துடுச்சு. அதான்”என்று கூறி அவளைச் சமாளித்து விட்டான் மகிழம்பூவன்.

ஆனால் அவன் தன்னைப் பார்த்து தான் சிரித்திருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டு, அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள் சஹஸ்ரா.

அதே சமயம் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த கார்கள் அந்தப் பிரம்மாண்டமான துணிக்கடையின் வாயிலை அடைந்து இருந்தது.

அவற்றில் இருந்து அனைவரும் இறங்கியதும்,”நீங்க எல்லாரும் உள்ளே போங்க. நான் என் ஃப்ரண்ட்டுக்குக் கால் பண்ணிப் பேசிட்டு வர்றேன்”என்று தன் குடும்பத்தை கடையினுள் அனுப்பி வைத்து விட்டுத் தன் நண்பருக்கு அழைத்து தங்களது வரவை அறிவித்து விட்டுத் தானும் உள்ளே சென்றார் ரமணன்.

கடைக்குள் நுழைந்ததும் அதன் விஸ்தீரத்தைக் கண்டு ஆரவாரத்துடன் அங்கேயிருந்த உடைகளின் பிரிவுகள் அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டே முன் சென்றார்கள்.

தன் குடும்ப உறுப்பினர்களைக் கண்ணும், கருத்துமாக கவனித்துக் கொண்டிருந்தான் மகிழம்பூவன்.

“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”என்று அவனது அருகில் வந்து முணுமுணுப்பாகச் சொன்னாள் சஹஸ்ரா.

அதற்கு அவனோ,“ம்ஹ்ம். பேசு அழகி”எனக் கூறிப் புன்னகைக்க,

உடனே பல்லைக் கடித்துக், கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு,”நான் உங்க கூடத் தனியாகப் பேசனும் பூவன்”என்று அழுத்தம், திருத்தமாக கூறவும்,

“ஓஹோ! சரி. எனக்கு டிரெஸ் செலக்ட் பண்றதுக்கு உன்னையும் கூடக் கூட்டிட்டுப் போறேன்னு இவங்க கிட்ட சொல்றேன்”என்றுரைக்க,

“சரி”என்கவும்,

அவளிடம் சொன்னதை அப்படியே தங்களது குடும்பத்திடம் அறிவித்தான் மகிழம்பூவன்.

“சரிப்பா. நீங்கப் போயிட்டு வாங்க”என்று அவர்களுக்கு அனுமதி அளித்தார் பால்ராஜ்.

“நாமளும் இவங்க கூடவே போய் நமக்கான துணிகளை எடுத்துக்கலாமா?”என்று அவரிடம் கேட்டார் ஆறுமுகம்.

“வேண்டாம் சம்பந்தி. அவங்கப் போயிட்டு வந்ததுக்கு அப்பறம் நாம ஆம்பளைங்கப் போகலாம்”என்று மறுத்துச் சொல்லி விட,

அவன் கூறுவதும் சரியே என்று ஒப்புக் கொண்டு விட்டார் ஆறுமுகம்.

உடனே ஆண்களுக்கான உடைகள் இருக்கும் பிரிவிற்குச் சென்றனர் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

அதேசமயம் அங்கு தனது நண்பர் வந்து விட்டதை அறிந்து கொண்டு அவரிடம் போய்,”கௌரவ்! எப்படி இருக்கே? வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?”என விசாரித்தார் ரமணன்.

“நானும் நல்லா இருக்கேன். வீட்டிலும் எல்லாரும் நல்லா இருக்காங்க!”என்று கூறிப் புன்னகைத்தார்.

“இவங்க தான் என்னோட குடும்பம்! இவங்களில் சிலரை உனக்குத் தெரியும். ஆனால் மத்தவங்களைத் தெரியாது இல்லை”என்று அவருக்கு வண்ணமதி மற்றும் அவளது கணவன், புகுந்த வீட்டாரையும் முறையாக அறிமுகப்படுத்தி வைக்க,

“வணக்கம்ங்க!”என்று அவர்களிடம் தெரிவித்து விட்டு,

அங்கிருந்த பணியாளர்களை அழைத்து,”இவங்க எல்லாருக்கும் சேர் போடுங்க. அதே மாதிரி குடிக்க ஜூஸ் இல்லைன்னா டீயைக் கொண்டு வந்து கொடுங்க”என்று உத்தரவிட்டு அனுப்பியவரோ,

“உனக்கு டிரெஸ் எடுத்துட்டியா?”என ரமணனிடம் கேட்டார் கௌரவ்.

“இல்லடா. இப்போ தானே கடைக்குள்ளேயே வந்திருக்கோம்? அவங்க எல்லாரும் எடுத்ததுக்கு அப்பறம் எடுத்துக்கலாம்னு இருக்கேன்”என்றதுமே,

“அப்படின்னா என் கூட ஆஃபீஸ் ரூமுக்கு வா. நாம இப்படி நேரில் சந்திச்சுப் பேசி ரொம்ப நாளாச்சுல்ல?”என்றிருந்தார்.

“ஆமாம். இரு”என்றவரோ,

தனது மற்றக் குடும்ப உறுப்பினர்களிடம்,”நான் என் ஃப்ரண்ட் கூட ஆஃபீஸ் ரூமுக்குப் போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன்”என்று கூறி விட்டு,

“நீ டிரெஸ் எடுக்கும் போது என்னைக் கூப்பிடும்மா. பார்த்துக்கோ”என்று மனைவியிடம் அறிவுறுத்தி விட்டுத் தன் நண்பருடன் அவரது அலுவலக அறைக்குச் சென்று விட்டார் ரமணன்.

அதற்குப் பிறகு,”சஹா வந்து அவளுக்குப் பிடிச்சதை எடுத்துக்கட்டும். நாம நமக்குப் பார்ப்போம்”என்றார் கஸ்தூரி.

உடனே பணியாளர்களும் அவர்கள் அனைவருக்குமான நாற்காலிகளை அங்கே கொண்டு வந்து போட்டு விடவும், அவற்றில் உட்கார்ந்து கொண்டுத் தங்களுக்கான உடைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கி விட்டார்கள் கஸ்தூரி, முல்லைக்கொடி, வண்ணமதி.

அவர்கள் இலகுவாக இருந்து கொண்டு அனைத்தையும் தேர்ந்தெடுக்கட்டும் என்று ஆண்கள் மூவரும் செந்திலுடன் ஐக்கியமாகி விட்டனர்.

இங்கே தனக்கான உடைகளைப் பார்வையிட்டுக் கொண்டே,”நாம இங்க வந்து ரொம்ப நேரமாச்சு அழகி. நீ எங்கிட்ட என்னப் பேசனுமோ அதைச் சீக்கிரம் பேசி முடி”என்று தன்னவளிடம் வலியுறுத்தினான் மகிழம்பூவன்.

“ம்ஹ்ம். நீங்க நேத்து எங்கிட்ட ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு! நீங்க என்னை விரும்புறேன்னு சொல்லிட்டு இப்படித் தான் பேசுவீங்களா?”என்று ஆற்றாமையுடன் வினவினாள் சஹஸ்ரா.

அதற்கு,”நான் உன்னை விரும்புறேன், உன்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்றேன். இதெல்லாமே உண்மை தான் அழகி! நீ என் பொண்டாட்டியாகப் போறன்னு நான் நேத்து உங்கிட்ட அப்படி அட்வைஸ் பண்ணலை! நாம மத்தவங்களை மரியாதையாக நடத்தனும், அவங்க மனசுக் கோணாத மாதிரி பேசனும், யாரையும் ஏளனப்படுத்தக் கூடாதுன்றது இதெல்லாமே ஒரு மனுஷனுக்கு இருக்கிற அடிப்படை குணங்கள்! அதை தான் நான் உங்கிட்ட சொல்லிப் புரிய வைக்க முயற்சி செஞ்சேன்! ஆனால் நீ என்னமோ நான் உன்னை என் கன்ட்ரோலில் வச்சுக்க நினைக்கிற மாதிரி பேசுற! இது சரியில்லை அழகி!”என்று அவளுக்கு மீண்டும் அறிவுரை வழங்கத் தொடங்க,

“ப்ளீஸ்! நேத்து, நீங்களும், இன்னைக்கு எங்கம்மாவும் இதை நிறைய தடவை சொல்லிட்டீங்க! என்னால் முடியலை! நீங்க சொன்னதை நான் கேட்கிறேன்! என்னை மாத்திக்கிறேன்! போதுமா? இதுக்கு மேலே அட்வைஸ் மட்டும் பணணாதீங்க!”என அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் சஹஸ்ரா.

“நீ சரியாக நடந்துக்கிட்டால் நான் எதுக்கு அப்படி பேசப் போறேன்”என்றவனோ,

ஒரு மேலங்கியை எடுத்து தன் மேல் வைத்துக் கொண்டு,”இது எனக்கு நல்லா இருக்கான்னுப் பார்த்து சொல்லு, என்று அவளிடம் ஆலோசனை கேட்டான் மகிழம்பூவன்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top