வரம் 32

Advertisement

Writer girl

Well-known member
Member
அவர்கள் பயணித்தக் கார் பேரங்காடியை அடைந்திருந்த போது தான் அவர்களின் மோனநிலை கலைந்தது எனலாம்!

“மால் வந்துடுச்சு சார், மேடம்”என்றக் காரோட்டியிடம்,

“ஓஹ்! ஓகே”என்று கூறி விட்டுத் தனது கரத்தை மகிழம்பூவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள் சஹஸ்ரா.

அந்தக் காரில் இருந்து இறங்கி விட்டனர் அவர்கள் இருவரும்.

”நாங்க உள்ளே போய் ஷாப்பிங் பண்ணிட்டு வர்ற வரைக்கும் நீங்க இங்க வெயிட் பண்ணனும்னு அவசியம் இல்லை. காரைப் பூட்டி வச்சிட்டு உங்களுக்கு ஏதாவது டீ, காஃபி குடிக்கனும்னா குடிச்சிட்டு வாங்க”என்று ஓட்டுநரிடம் உரைத்து அவருக்குப் பணமும் கொடுத்தாள் சஹஸ்ரா.

அதில் முகம் மலர,”சரிங்க மேடம்”என்று அவளுக்குப் பூரிப்புடன் நன்றி தெரிவித்தார் காரோட்டி.

உடனே தாங்கள் இருவரும் அந்தப் பேரங்காடியினுள் நுழைந்தார்கள் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

அங்கே பொம்மைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று குழந்தை செந்திலுக்கு ஏற்றவாறான பல பொம்மைகளை வாங்கி அடுக்கி விட்டு,”கௌரவ் அங்கிள் நமக்குக் கொடுத்த அந்த ஜோடி வாட்ச்சை உங்க சிஸ்டர் ரொம்பவே ஆசையாகப் பார்த்தாங்க! அதனால் நாம அவங்களுக்கும் அதே மாதிரியான கைக்கடிகாரங்களை வாங்கிக் கொடுப்போமா?”என்றவளிடம்,

“ம்ஹ்ம். இது நல்ல யோசனை தான் அழகி”என்று தன்னுடைய ஒப்புதலையும் அளிக்க,

உடனே அங்கேயிருந்த கடிகாரங்களைப் பார்வையிட்டு அவர்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்தனர்.

“நாம இந்த நேரத்துக்கு வீட்டில் இருந்து இருந்தால் காபி குடிச்சு இருப்போம். எனக்கு இப்போ காபி குடிக்கனும் போல இருக்கு. அதனால் நாம அந்த ஃபுட் கோர்ட்டுக்குப் போய் உட்கார்ந்து காபி குடிப்போமா?”என்றாள் சஹஸ்ரா.

“சரி. வா”என்றுரைத்து அவளைத் தன்னுடன் அங்கு அழைத்துப் போய் உட்கார வைத்து விட்டுத், தாங்கள் இருவருக்குமான காபியைக் கொண்டு வருமாறு ஆர்டர் செய்து தானும் அவளுக்கு அருகில் அமர்ந்தான் மகிழம்பூவன்.

“நீங்க வேற ஏதாவது சாப்பிடனும்னாலும் ஆர்டர் செய்துக்கோங்க”

“இல்லை வேண்டாம் அழகி. எனக்குக் காபி மட்டும் போதும். இங்கேயே எல்லாத்தையும் சாப்பிட்டுட்டால் நைட்டுக்குச் சாப்பிட முடியாது. அதான்”

“ஆமால்ல? ஓகே, ஓகே”என்றிருந்தாள் சஹஸ்ரா.

அதற்குப் பிறகுத் தங்களுக்காக வரவழைக்கப்பட்ட காபி வந்ததும் பருகி விட்டு அந்தப் பேரங்காடியில் இருந்து வெளியேறி தங்களது காரில் ஏறிக் கொண்டார்கள் இருவரும்.

அதைக் கண்டதுமே அங்குச் சற்றுத் தூரத்தில் இருந்த தேநீர்க் கடையில் நின்றிருந்த அவர்களது காரோட்டியும் அங்கேயிருந்து காரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு,”வீட்டுக்குப் போகலாமா சார்? மேடம்?”என அவர்கள் இருவரிடமும் பவ்யமாக வினவினார் காரோட்டி.

“ம்ஹ்ம். போகலாம்”என்று அவருக்குத் தெரிவித்து விட்டுத் தனது அன்னைக்கு அழைப்பு விடுத்து,

“ஹலோ அம்மா. நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குக் கிளம்பிட்டோம்”என்று அறிவித்தாள் சஹஸ்ரா.

“ஓஹ் சரி டி. வீட்டுக்கு வந்ததுமே நாங்க எல்லாரும் தூங்கிட்டோம்! நீங்க ரெண்டு பேரும் வந்ததும் காஃபி போட்டுத் தரச் சொல்லவா?”எனக் கேட்டிருந்தார் கஸ்தூரி.

“அதெல்லாம் வேண்டாம்மா. நாங்க இங்கே மாலிலேயே காஃபிக் குடிச்சாச்சு. நாங்க கிளம்பி வந்துட்டு இருக்கிறதை உங்களுக்குச் சொல்லனும்னு தான் கால் பண்ணேன்”என்றுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு,

“அவங்க எல்லாரும் களைப்பில் தூங்கிட்டாங்களாம்”என்று மகிழம்பூவனிடம் உரைத்தாள் சஹஸ்ரா.

அவனும்,“சரிம்மா”என்றிருந்தான்.

இதே நேரத்தில், வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் தூங்கி எழுந்திருந்தனர்.

“அவங்க ரெண்டு பேரும் இன்னுமா வீட்டுக்கு வராமல் இருக்காங்க?”என்று சங்கடத்துடன் முணுமுணுத்தார் பால்ராஜ்.

உடனே,”அவங்க வந்துட்டு இருக்காங்கண்ணா. சஹா எனக்கு ஃபோன் செஞ்சி சொல்லிட்டாள்”என்று அவருக்குத் தகவல் தெரிவித்தார் கஸ்தூரி.

“ஓஹ் சரிம்மா”என்றவரிடம்,

“நீங்க யாராவது டீ எதுவும் குடிக்கிறீங்களா?”என மற்றவர்களிடம் விசாரிக்க,

“வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரம் போனால் இராச்சாப்பாடு சாப்பிட்டுக்கலாம்”என்று ஒருசேர மறுத்து விட்டிருந்தனர் அனைவரும்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கே வந்து சேர்த்திருந்தார்கள் சஹஸ்ராவும், மகிழம்பூவனும்.

“இவ்வளவு நேரமாக ஆக்குவீங்க? வீட்டுக்குச் சீக்கிரமாக வரனும்ன்னுச் சொல்லி அனுப்பினேன் தானே? அப்படியும் லேட் ஆகத் தான் வந்து இருக்கீங்க!”என்று அவர்களைக் கண்டித்தார் கஸ்தூரி.

அதில் அவர்கள் இருவரும் சங்கத்தில் நெளிவதைக் கண்டு,”சரி விடும்மா. அதான் வந்துட்டாங்கள்ல?”என மனைவியைச் சமாதானப்படுத்தி விட்டு,

“நீங்கப் போய் ரெஃப்ரஷ் ஆகிட்டு வாங்க”என அவர்களுக்கு அறிவுறுத்தினார் ரமணன்.

உடனே தங்களிடம் இருந்த பாலிதீன் பைகளை அங்கேயிருந்த நீள்சாய்விருக்கையில் வைத்து விட்டுத் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகத் தத்தமது அறைக்குள் புகுந்து கொண்டார்கள் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

அந்தப் பைகளைக் கண்களால் ஆராய்ச்சி செய்து,“நிறையப் பொருட்களை வாங்கியாந்துருக்காங்க போலயே?”என்று கூறிக் கொண்டார் முல்லைக்கொடி.

“அதாம் புள்ளைங்க வரத் தாமசம் ஆயிடுச்சுப் போல!”என்றிருந்தார் ஆறுமுகம்.

“இராத்திரிக்கு என்னச் சமைக்கச் சொல்லலாம்?”என்று அனைவருக்கும் பொதுவாக வினவினார் கஸ்தூரி.

அப்போது,”ம்மா! நாங்க வர்றதுக்குள்ளே சாப்பாட்டுப் பத்தின டிஸ்கஷனை ஆரம்பிச்சிட்டீங்களே!”என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டே அவரது அருகில் அமர்ந்தாள் சஹஸ்ரா.

ஆனால் அவளுடன் சேர்ந்து தன் வருங்கால மாமியாரைக் கிண்டல் செய்யாமல் தந்தைக்கு அருகே உட்கார்ந்து கொண்டான் மகிழம்பூவன்.

அவன் எதுவும் பேசாததைக் கவனித்து விட்டு,”நான் உங்களுக்கும் சேர்த்து தான் பேசிட்டு இருக்கேன்! நீங்க என்னடான்னா எனக்குச் சப்போர்ட் பண்ணாமல் அமைதியாக இருக்கீங்களே”என்று அவனைக் குற்றம் சாட்டவும்,

“ஹேய்! அப்படியெல்லாம் இல்லை. எனக்கும் சேர்த்து நீயே பேசுறியே, அது தான் உன்னைப் பேச விட்டு அதை நான் ரசிச்சிட்டு இருக்கேன்”என்றதைக் கேட்டதுமே தனது விழிகளைச் சாசரைப் போல் பெரிதாக்கிக் கொண்டு அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சஹஸ்ரா.

அவளது அதே பாவனையில் தான்,‘இவனுக்கு இப்படியெல்லாம் பேச வருமா?’என அங்கேயிருந்த மற்றவர்களும் மகிழம்பூவனை ஏறிட்டனர்.

அதில் அவனோ வெட்கிப் போய்த் தலையைக் கோதிக் கொள்ளவும்,

தனது வருங்கால மருமகனின் அவஸ்தையை அவதானித்து விட்டு,”இப்படியே பேசிட்டு இருந்தால் நேரம் ஆகிடும். இப்போ விஷயத்துக்கு வருவோமா? யார், யாருக்கு என்னச் சாப்பாடு வேணும்னுச் சொல்லிட்டீங்கன்னா சமையலைத் தயார் பண்ணச் சொல்லிடலாம்”என்று கூறி அனைவரின் கவனத்தையும் உணவின் பக்கம் திருப்பினார் கஸ்தூரி.

“எதுக்குத் தனித், தனிச் சாப்பாடும்மா? எல்லாருக்கும் பொதுவாக ஒரே சமையலாகச் செய்யச் சொல்லிடலாம்ல?”என அவரிடம் விசாரித்தார் ஆறுமுகம்.

“நாங்க மூனு பேரும் எப்பவும் ஒரே சாப்பாடு சாப்பிட மாட்டோம்ங்க! சஹாவுக்குப் பிடிச்சதை அவ செய்யச் சொல்லிடுவா. நாங்க எங்களுக்கு என்னச் சாப்பாடு தேவையோ அதைச் செய்யச் சொல்லிச் சாப்பிடுவோம்! நீங்க இங்கே வந்த அன்னைக்குக் கூட நான் உங்க எல்லாருக்கும் பிடிச்ச சாப்பாடு வகைகளைக் கேட்டுச் செய்யச் சொல்லி இருந்தேனே! மறந்துட்டீங்களா?”என்றிருந்தார் கஸ்தூரி.

ஏனெனில் தாங்கள் இங்கே வந்த நாளில் இருந்து தினமும் தங்கள் அனைவரின் விருப்ப உணவுகளைக் கேட்டுச் சமைத்துப் போட்டு உண்ண வைத்திருந்தார்கள் சஹஸ்ராவின் பெற்றோர்.

தாங்கள் விருந்தாட வந்திருப்பதால் தான் தங்களுக்கு இந்தச் சலுகை என்று எண்ணி இருந்தவருக்கு இப்போது கஸ்தூரி கூறியதைக் கேட்டதும் தான் அந்த விஷயம் விளங்கி விட்டிருந்தது.

உடனே அசடு வழிந்து கொண்டே தனது மனதில் நினைத்ததை பொதுவில் வெளிப்படையாக உரைத்து விட்டார் ஆறுமுகம்.

அவருடைய அந்த அப்பாவித்தனத்தைக் கண்டு அனைவருக்கும் கனிவு தோன்றியது.

“இல்லங்க. நீங்க எங்களோட விருந்தாளிங்க இல்லை. எங்களோட குடும்பம்! அப்படி இருக்கிறப்போ நாங்க எப்படி உங்களை விருந்தாளிங்க மாதிரி நடத்துவோம்? இது உங்க வீடு, உங்க விருப்பப்படி இருங்க!”என்று கூறிய ரமணனைக் கண்டு முகம் மலர்ந்து போயினர் மகிழம்பூவன், பால்ராஜ் மற்றும் வண்ணமதியும், அவளது கணவன் மற்றும் புகுந்த வீட்டாரும்.

அதே பூரிப்புடன் தங்களது விருப்ப உணவுகளைச் சஹஸ்ராவின் அன்னையிடம் தெரிவித்தனர் அனைவரும்.

உடனே சமையல்காரர்களை அழைத்து அந்த உணவுகளைத் தயாரிக்குமாறு கட்டளையிட்டு விட்டார் கஸ்தூரி.

“இப்போதாவது நாங்க ரெண்டு பேரும் வாங்கிட்டு வந்தக் கிஃப்ட்ஸ்ஸைப் பார்க்கலாமா?”என்று பாவமாக வினவினாள் சஹஸ்ரா.

அதைப் பார்த்து அனைவருக்கும் சிரிப்பு உண்டாகி விட்டது.

“என்னய்யா பாவமாக மூஞ்சியை வச்சா சிரிக்கிறீங்க!”என்று பொய்க் கோபத்துடன் அவர்களை முறைத்து விட்டு,

“நீங்களும் எழுந்து வந்து எனக்கு உதவி பண்ணலாம்”என்று தன்னைப் புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்த மகிழம்பூவனுக்கு உத்தரவு போட்டாள் சஹஸ்ரா.

உடனே அவனும் நல்ல பிள்ளையாக எழுந்து அவளைப் பின்பற்றிச் சென்று தாங்கள் வாங்கி வந்திருந்தப் பைகளில் பாதியை அவள் எடுத்துக் கொண்டதும் அதில் மீதியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான்.

தன் கையில் இருந்த பையைச் செந்திலின் அருகில் கொண்டு போய் அதிலிருந்த பொம்மைகளை அவனுக்கு முன்புக் கடை பரப்பி விட்டிருந்தாள் சஹஸ்ரா.

பாதி தூக்கத்தில் இருந்து விழிப்புத் தட்டி எழுந்து இருந்தவனோ அவற்றைப் பார்த்ததும் கண்களில் மின்னல்கள் மின்னத் தன் கரங்களை முன்னோக்கி நீட்டினான் செந்தில்.

“நீ எங்கிட்ட வந்தால் தான் நான் உனக்கு இதையெல்லாம் தருவேன்!”என்றுரைத்து அவனைத் தன்னிடம் வருமாறு தன் இரு கரங்களையும் அவனை நோக்கி நீட்ட உடனே தன் தாயிடமிருந்து தாவி அவளிடம் அடைக்கலம் அடைந்து விடவும்,

“சமர்த்துக் குட்டி!”என்று அவனது கன்னத்தில் மிருதுவாக தனது இதழ்களைப் பதித்து எடுத்து விட்டு அவனுக்குச் சில பொம்மைகளை விளையாடக் கொடுத்து விட்டு,

“உங்க அக்காவுக்கும், மாமாவுக்கும் வாங்கின கிஃப்ட்டை எடுங்க”என்று மகிழம்பூவனுக்கு அறிவுறுத்தினாள் சஹஸ்ரா.

உடனே அவனும் அதைச் செவ்வனே செய்து விட அவனது கரத்தில் இருந்தவற்றை வியப்புடன் பார்த்தனர் பூபாலன் மற்றும் வண்ணமதி.

“என்னப் பிடிச்சிருக்கா? இதை உங்களுக்குக் கொடுக்கனும்னு அழகி தான் வாங்கினாள்”என்று தன்னவளைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறினான் மகிழம்பூவன்.

“அப்படியா?”என்று சஹஸ்ராவைப் பார்த்து ஒரே சேரக் கேள்வி எழுப்பினார்கள் அவர்கள் இருவரும்.

அதற்கு அவளும்,“ம்ஹ்ம்”என்றுரைத்துப் புன்னகைக்க,

“ரொம்ப அழகாக இருக்கும்மா. தேங்க்ஸ்”என்று அவளுக்கு மனதார நன்றி தெரிவித்தான் பூபாலன்.

தன் கணவனைப் பின்பற்றி,”நான் உங்களோடதைப் பார்த்ததுமே இதே மாதிரி நாங்களும் அடுத்த தடவை வந்து வாங்கனும்னு நினைச்சு இருந்தேன்! ஆனால் அதை நீ உடனே நிறைவேத்திட்டே அழகி! ரொம்ப நன்றி!”என்று தானும் அவளுக்கு நன்றி நவின்றிருந்தாள் வண்ணமதி.

அதை தாங்களும் வாங்கிப் பார்த்து மகிழ்ந்தார்கள் பெரியவர்கள்.

அதற்குப் பிறகு அலர்களுக்கான உணவு வகைகள் தயாராகி விடவும் அவற்றை உண்டு விட்டு உறங்கினர்.

தாங்கள் இங்கே வந்த வேலை முடிந்ததால் மகிழம்பூவன், பால்ராஜ் மற்றும் வண்ணமதியும், அவளது கணவன், மகன் மற்றும் மாமனார், மாமியாரும் அடுத்த இரண்டு நாட்களில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி இருந்தார்கள்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top