தங்களது இரண்டு கார்களும் ஊர் எல்லையை அடைந்ததும் அவற்றிலிருந்து இறங்கினர் அனைவரும்.
அதில் தனது காதல் பெண்ணவளின் தோற்றத்தைக் கண்டுச் சில கணங்கள் பேச்சு, மூச்சற்று நின்று விட்டிருந்தான் மகிழம்பூவன்.
அதுவும் தாங்கள் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து கொண்டிருப்பதையும் கண்டு கொண்டு அதை நம்ப முடியவில்லை அவனால்.
அவனைப் போலவே, தனது காதல் கண்ணாளனின் ஆண்மையின் பரிணாமத்தைக் கண்டு மூச்சடைத்துப் போய் விட்டிருந்தாள் சஹஸ்ரா.
‘இது எப்படி சாத்தியம்?'என்று குழம்பினார்கள் இருவரும்.
ஆனால் அவர்களின் உடைகளின் நிற ஒற்றுமையைக் கண்டதும் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகையை உதிர்த்துக் கொண்டனர் மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
“ஆஹான்! இது தான் விஷயமா? அப்போ நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி வச்சித் தானே ஒரே கலரில் டிரெஸ் போட்டுட்டு வந்திருக்கீங்க?”என்று அவர்களிடம் கேட்டாள் வண்ணமதி.
உடனே,”அச்சோ! அழகி, சேலை உடுத்துவாள்ன்னும், அதுவும் இதே கலரில் இருக்கும்னும் இங்கே வர்ற வரைக்கும் எனக்குச் சத்தியமாகத் தெரியாதுக்கா! இதைப் பார்த்து நாங்க ரெண்டு பேருமே அதிர்ச்சி ஆகித் தான் பேச்சு வராமல் நிற்கிறோம்!”என்று அவளுக்கு உண்மையை விளக்கினான் மகிழம்பூவன்.
அவனைத் தொடர்ந்து”ஆமாம் மதி! நான் சேலை கட்டிற ஐடியாவிலேயே இல்லை. அம்மா தான் இன்னைக்கு என்னைச் சேலை கட்டிக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டாங்க! அதான், இந்தச் சேலையைத் தற்செயலாக எடுத்துக் கட்டினேன்! அது இப்படி அமைஞ்சுப் போச்சு!”எனத் தானும் அவளுக்குத் தன்னிலை விளக்கம் அளித்தாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டதும்,”சரி, சரி! நான் உங்களை நம்புறேன்”என்று தானும் தனது கிண்டலைக் கைவிட்டு விட்டாள் வண்ணமதி.
“நிச்சய மோதிரங்களைப் பத்திரமாக எடுத்துட்டு வந்துட்டீங்க தானே?”என்று விசாரித்தார் முல்லைக்கொடி.
“அதெல்லாம் என்கிட்ட பத்திரமாகத் தான் இருக்கு”எனப் பதிலளித்தார் கஸ்தூரி.
“அப்போ சரி. நல்ல நேரம் முடியுறதுக்குள்ளே கோயிலுக்குப் போகலாம்”என்ற ஆறுமுகத்தின் கூற்றிற்கு இணங்கி ஆண்கள் ஐவரும் ஒரு காரிலும், பெண்கள் நால்வரும் ஒரு காரிலும் வருவதாக முடிவாகி விடவும், குழந்தைச் செந்திலை அவனது தாயிடம் இருத்தி விட்ட பிறகு, அவர்களைச் சுமந்து கொண்டு அவர்களது குல தெய்வக் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தது அந்த இரண்டு மகிழுந்துகளும்.
ஒன்றரை மணி நேரப் பயணம் என்பதால் அனைவரின் வாய்களும் ஓயாமல் தங்களுக்குள் எதையாவது பேசிச், சிரித்துக் கொண்டு வரத் தொடங்கினர்.
அதிலேயும் வண்ணமதியுடனும், அவளது மகனுடனும் நன்றாக பேசிச் சிரித்தாள் சஹஸ்ரா.
அதைக் கண்டு,’இனிமேல் இவர்களுக்குள் சண்டை வராது’என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் மற்றப் பெண்கள்.
அதேபோல் தான்,”உனக்குச் சேலை கட்டத் தெரியுமா அழகி?”என்று ஆர்வமாக வினவினாள் வண்ணமதி.
அதில் புன்னகையுடன்,”ம்ஹ்ம். எனக்குச் சேலைக் கட்ட நல்லாவே தெரியும்”என்றுரைத்தாள் சஹஸ்ரா.
“அப்படியா? நான் உன் வாட்சப் ஸ்டேட்டஸில் பார்த்து இருக்கேன்னு சொன்னேன்ல? அதையெல்லாம் பார்த்துட்டு கூட உன்னோட டிசைனர் தான் உனக்குச் சேலை கட்டி விட்டுட்டு இருக்காங்கன்னு இப்போ வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்! நீ இப்போ நெசத்தைச் சொன்னதும் தான் எனக்கு அதைக் கேட்டு ஆச்சரியமாக இருக்கு!”என்றிருக்க,
“எனக்கு எந்த வேலையும் தெரியாதுன்னு யார் கிட்டேயும் சொல்லி அவங்க கிட்ட போய் உதவி கேட்கக் கூடாதுன்னு ஒரு கொள்கை வச்சிருக்கேன்! அதே மாதிரி, சேலை கட்றது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? அதையும் தெரிஞ்சு வச்சிக்கிறது நல்லது தானே? அதுவும் நம்மளோட பாரம்பரிய உடை தானே? அதான்”என்று அவளுக்கு விளக்கம் அளித்து விட்டுச் செந்திலுடன் வாயாட ஆரம்பித்து விட்டாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டதும்,'இவளோட சில கொள்கைகள் எனக்குப் பிடிக்காதுன்னாலும், மத்தச் சில கொள்கைகள் என்னை ரொம்ப கவருது!’எனத் தன்னுடைய மனதிற்குள் கூறிக் கொண்டாள் வண்ணமதி.
அதே சமயம், இன்னொரு காரில் பயணித்துக் கொண்டிருந்த மகிழம்பூவனோ, தானும், சஹஸ்ராவும் எப்படி இவ்வாறு ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தோம்? என்றப் பிரம்மிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்தான்.
அதுவும் அவளைப் புடவையில் வேறு பார்த்து விட்டதால் சில நிமிடங்களுக்குத் தனது கண்களை அவளிடமிருந்து எடுக்க முடியாமல் அவளின் தோற்றத்திலேயே அதை உறுதியாகப் பதித்து இருந்ததை எண்ணி நாணம் கொண்டவனோ,
அடுத்த நிமிடமே, தாங்கள் குல தெய்வக் கோயிலுக்குச் செல்லப் போவதை ஞாபகப்படுத்திக் கொண்டு தனது மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொண்டான் மகிழம்பூவன்.
அந்த ஒன்றரை மணி நேரத் தூரத்தை வெற்றிகரமாக கடந்து முடித்து விட்டு அநத இரண்டு மகிழுந்துகளும் குல தெய்வக் கோயிலை அடைந்து இருந்தது.
அவை இரண்டும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டதும், அதிலிருந்து இறங்கிக் கொண்டனர் அந்தக் குடும்பத்தின் ஆண்களும், பெண்களும்.
சஹஸ்ராவும், மகிழம்பூவனும் தங்கள் மனங்களை ஒரு நிலைப்படுத்தி வைத்துக் கொண்டதால் தங்களுக்குள் அப்பழுக்கற்றப் பார்வைப் பரிமாற்றங்களைச் செய்து கொண்டார்கள் இருவரும்.
முல்லைக்கொடி,“பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கலாம்”என்றதும்,
“நாங்க ரெண்டு பேரும் எடுத்துட்டு வர்றோம். நீங்க எல்லாரும் உள்ளே போங்க”என்று தன் மகனை மட்டும் தன் மாமியாரிடம் கொடுத்து அனுப்பி விட்டுத் தன்னுடைய கணவனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டுக் காரிலிருந்து பூஜைப் பொருட்களை எடுக்கத் தொடங்கி விட்டு,
“நல்லவேளை வெயில் காலமாக இல்லங்க. இல்லைன்னா நம்மப் பாடுத் திண்டாட்டம் தான்!”என்றுரைத்தாள் வண்ணமதி.
“ஆமாம். ஆனால் இது உங்கக் குல கோயில் தானே? நீங்க நினைச்சா எடுத்துச் சரி பண்ணலாம்? இங்கே நிறைய மாற்றங்களைப் பண்ணலாம் தானே?”என்று அவளுக்கு அறிவுரை வழங்கினான் பூபாலன்.
“ம்ஹ்ம். நீங்க சொல்வதும் கரெக்ட் தான்ங்க! நான் மகிழு, அழகிக் கல்யாணம் முடிஞ்சதும் இதைப் பத்தி அப்பா கிட்டேயும், மாமா கிட்டேயும் கண்டிப்பாகப் பேசுறேன்”என்க,
இதே சமயம் தங்களது செருப்புகளைக் கோயிலின் வெளியே கழற்றி வைத்து விட்டு உள்ளே நுழைந்தார்கள் அனைவரும்.
அந்தக் குல தெய்வத்தின் சிலை அவ்வளவு பெரியதாக இருக்கவில்லை தான்!
ஆனால் அந்தத் தெய்வத்தின் சக்தி மிகுந்த அளப்பரியது!
மகிழம்பூவன் மற்றும் அவனது குடும்பத்தாரை இன்னமும் நன்றாக, வளமாக வாழ வைப்பது இந்தத் தெய்வம் தான்! என்று அவனும், அவனது தந்தை மற்றும் தமக்கையும் தங்களது வாழ்நாளில் உணர்ந்த தருணங்கள் எண்ணற்றவை!
பால்ராஜ்ஜின் மனைவி மல்லிகா உயிருடன் இருந்தவரையில் அவ்வப்போது குடும்பத்துடன் இங்கே வந்து கடவுளைத் தொழுது விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்!
அதேபோல் தங்களது வீட்டில் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் நடத்துவதற்கு முன்னர் இந்தத் தெய்வத்திடம் வந்து அதைப் பகிர்ந்து விட்டு இவரது அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்னர் தான் அந்த நிகழ்வுகளைத் தொடங்குவார்கள்!
தங்களது வியாபாரத்தை ஆரம்பிக்கும் போதும், வண்ணமதியின் திருமணத்தின் போதும் இங்கே வந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டுச் சென்றார்கள் மணமக்களும், அவர்களது இரு வீட்டாரும்.
அதே மாதிரி தான் இப்போதும் தங்கள் வீட்டில் நடக்கப் போகும் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவின் திருமணத்தின் நிச்சயத்தார்த்த மோதிரங்களை இங்கே தெய்வத்தின் பாதங்களில் வைத்து வழிபடுவதற்காக வந்துள்ளனர்.
அனைவரும் தங்களது இரு கரங்களையும் கூப்பி வைத்துக் கொண்டுகஅ கடவுளை வழிபடும் நேரத்தில் பூஜைப் பொருட்களுடன் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள் பூபாலன் மற்றும் வண்ணமதி.
அவர்களிடமிருந்த பூஜைப் பொருட்களைத் தன்னிடம் வாங்கிக் கொண்டு அதைச் சிறியத் தட்டில் வைத்து விட்டு,”மோதிரங்களைக் கொடுங்க”என்று கஸ்தூரியிடம் இருந்து கேட்டு வாங்கிக் கொண்டு அவற்றையும் தட்டில் வைத்து அதைக் கடவுள் சன்னிதியில் வைத்தார் முல்லைக்கொடி.
“இன்னொரு தட்டில் சூடத்தைப் பொருத்தி வைங்க”என்றதும்,
அந்த வேலையைச் சிரமேற்கொண்டு செய்து முடித்தார் கஸ்தூரி.
உடனே அந்தத் தட்டை வாங்கி அதைக் கொண்டு தெய்வத்திற்கு ஆரத்திக் காட்டத் தொடங்கி விட்டார் பால்ராஜ்.
அதைக் கண்டதும் தங்கள் தூய அன்பைக் கண்களில் வெளிப்படுத்தினர் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.
அவர்கள் இருவருக்குமே திடீரென்று கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு விட்டது!
அப்போது தான் அவர்கள் இருவரும் தங்களது இணை இவர் தான் என்பதை மிகவும் உறுதியாக மனதில் ஏற்றிக் கொண்டார்கள்!
அந்த நேரத்திலும் கூட அங்கே நடக்கும் எதனாலும் தனக்கு அழுகையோ, வேற எந்த மனநிலையும் ஏற்படவோ இல்லை அந்த வீட்டின் குட்டிப் பையன் செந்திலுக்கு!
அவனும் கூடத் தனது இரண்டுப் பிஞ்சுக் கரங்களை ஒன்றாக இணைத்துக் கடவுளை வழிபட்டான்.
“நல்லா கும்பிட்டுக்கோங்க! உங்கக் குலத்தைக் காக்குறது இந்தச் சாமி தான்! உங்கக் கல்யாணம் நல்லபடியாக நடக்கனும்! உங்கக் குலம் நல்லா தழைக்கனும்னு மனசார வேண்டிக்கோங்க!”என்று மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவிற்கு அறிவுறுத்தினார் ஆறுமுகம்.
- தொடரும்