அவர் கூறியதை தங்களது மனதில் நன்றாக இருத்திக் கொண்டுக் கடவுளைத் துதிக்கத் தொடங்கினார்கள் அவ்விருவரும்.
சில நிமிடங்கள் கழித்து ஆரத்திக் காட்டி முடித்ததும் அதை அந்தச் சூடத் தட்டை முதலில் தனது மகன் மற்றும் வருங்கால மருமகளின் முன்னால் நீட்டினார் பால்ராஜ்.
உடனே அதை தாங்கள் இருவரும் சேர்ந்துப் பயபக்தியுடன் கும்பிட்டுக் கொள்ளவும்,
உடனே அவர்கள் இருவரின் நெற்றியிலும் திருநீறு மற்றும் குங்குமத்தைப் பூசி விட்டார் பால்ராஜ்.
அதற்குப் பிறகு மற்றக் குடும்ப உறுப்பினர்களும் ஆரத்தியை வணங்கி முடித்திருந்தனர். அவர்களுக்கும் திருநீறு, குங்குமத்தைக் கொடுத்து விட்டுத்
தானும் வணங்கி விட்டு அந்த ஆரத்தி தட்டைக் கடவுளின் சன்னிதியில் வைத்து விட்டு,
“இப்போ இந்த மோதிரங்களைக் கடவுள் முன்னாடிக் காமிக்கிறேன்”என்று சஹஸ்ரா மற்றும் மகிழம்பூவனின் நிச்சயதார்த்த மோதிரங்கள் அடங்கிய தட்டை எடுத்து அதைக் கடவுளின் முன்பு காண்பித்து தன்னுடைய மகனும், அவனது வருங்கால மனைவியும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தன் மனதிற்குள் தங்களது குல தெய்வத்திடம் வேண்டிக் கொண்டார் பால்ராஜ்.
அவரைப் போலவே இந்த நிச்சயத்தார்த்தம் மற்றும் திருமணம் சுமூகமாக நடந்து முடிய வேண்டும் என்று உளமார வேண்டிக் கொண்டார்கள் மற்றவர்கள்.
அனைத்து வேண்டுதல்களும், அர்ச்சனைகளும் முடிந்த பிறகு, அங்கே சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டனர்.
அதில் தாங்கள் ஒருவரையொருவர் கண்களிலேயே நலம் விசாரித்துக் கொண்டனர் சஹஸ்ராவும், மகிழம்பூவனும்.
தங்களது இந்தக் குல தெய்வ வழிபாடு மனதிற்கு ஒருவகையான நிம்மதியைக் கொடுத்தது மட்டுமில்லாமல், தங்கள் இருவரின் மனதிலிருந்த தேவையற்றக் குழப்பங்களையும் அகற்றி விட்டதைப் போன்றதொரு இலகுவான மனநிலையைத் தற்போது அடைந்து விட்டதாக உணர்ந்தார்கள் இருவரும்.
அவர்களது பார்வைப் பரிபாஷைகள் அனைத்தையும் கவனித்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள் அவர்களது வீட்டினர்.
“பூஜைப் பொருட்களை எடுத்துட்டு இருக்கும் போது இவர் ஒன்னு சொன்னார்”என்று தன் கணவனைக் காட்டி அந்தச் சமயத்தில் தங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாள் வண்ணமதி.
அதைக் கேட்டதும்,”ஆமாம்மா. நானும் உள்ளே வரும் போது கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு அடிக்கடி இங்கே வர்றோம். ஆனால் இதை எடுத்துக் கட்டாமல் இப்படியே விட்டு வச்சிட்டோமேன்னு நினைச்சேன்! அதையே நீங்களும் பேசி இருக்கீங்க! மகிழு, சஹாவோட கல்யாணம் முடிஞ்சதும் இந்தக் கோயிலை எடுத்துச் செஞ்சிப் புதுப்பிக்கிறது தான் என்னோட அடுத்த வேலையே!”என்று அனைவருக்கும் பொதுவாக உரைத்தார் பால்ராஜ்.
“ஆமாம் மாமா. நானும் உங்களோட சேர்ந்து இதைச் செய்யலாம்னு இருக்கேன்! இதை நாம ரெண்டு பேரும் செய்யும் போது என் தங்கச்சி மல்லிகா ரொம்பச் சந்தோஷப்படுவாள்!”என்று நெகிழ்ச்சியுடன் மொழிந்தார் ரமணன்.
அதைக் கேட்டவுடன் தங்களது அன்னையின் நினைவில் கண்ணீர் துளிர்த்த தங்களது கண்களின் ஓரத்தைத் துடைத்துக் கொண்டனர் மகிழம்பூவனும், வண்ணமதியும்.
சிறிது நேரம் கழித்து அந்தக் கோயிலை விட்டு வெளியேறி மகிழுந்துகளில் ஏறிக் கொண்டு வீட்டை நோக்கிப் பயணமானார்கள் அனைவரும்.
கோயிலில் இருந்து திரும்பிக் கொண்டு இருக்கும் இந்தக் கால இடைவெளியில் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது மனங்களும், உடல்களும் மிகவும் புத்துணர்ச்சியாகவும், இலகுவாகவும் இருந்தது எனலாம்!
“இதுக்குத் தான் குல தெய்வக் கோயிலுக்குப் போயிட்டு வரனும்ன்றது! அங்கே கடவுள் முன்னாடி நிற்கும் போது அப்படியே என் உடம்பில் புல்லரிக்க ஆரம்பிச்சிருச்சு! நல்ல வழிபாடு பண்ணின மனநிறைவாக இருக்கு!”என்று தனது மனதில் நினைத்ததை மற்றப் பெண்களிடம் கூறினார் முல்லைக்கொடி.
“ம்ஹ்ம். நானும் போன தடவை வந்தப்போவே இங்கே வந்து ஒரு கும்பிடுப் போட்டுட்டுப் போயிருக்கலாமே, மிஸ் பண்ணிட்டோமே! இப்போ அந்த வாய்ப்புக் கிடைக்குமான்னு தவிச்சிப் போயிட்டேன்! எனக்கும் இப்போ தான் நிம்மதியாக இருக்கு! ஏன்னா, இந்தக் கோயில் மல்லிகாவோட புகுந்த வீட்டுக் குல தெய்வமாக இருந்தாலும் கூட அவ இந்தக் கடவுள் கிட்டே வேண்டுதல் வச்சிட்டுத் தான் அவ கையால் எங்கத் தொழிலை ஆரம்பிச்சுக் கொடுத்ததாலேயே இப்போ எங்களுக்கு பேரும், புகழும் நல்லா கிடைச்சிருக்கு! அதனாலேயே நாங்களும் இந்தக் கோயிலை மறக்காமல் எங்கத் தொழிலில் ஏதாவது பெரிய விஷயம் பண்றதுக்கு முன்னாடி இங்கே வந்து தான் சம்மதம் வாங்கிட்டுப் போவோம்! இந்தக் கடவுளோட ஆசீர்வாதமும், மல்லிகாவோட நல்ல மனசும் சேர்ந்து தான் எங்களுக்கு இப்போ குறையாத செல்வம் கிடைச்சிட்டு இருக்குது! இனிமேலும் என் பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவங்களும் இங்கே வருவாங்கன்னு நம்புறேன்!”என்று நெகிழ்வான குரலில் கூறி விட்டிருந்தார் கஸ்தூரி.
“எங்க கல்யாணத்துக்கு அப்பறம் நாங்களும் வந்துட்டுப் போவோம்மா”என்றுரைத்தச் சஹஸ்ராவும் கூடச் சற்றே நெகிழ்ந்து தான் போயிருந்தாள்!
அதில் மற்றப் பெண்களின் விழிகளும் அவளை ஆதூரமாக ஏறிட்டது.
“நீயும், மகிழும் கண்டிப்பாக வந்துட்டுப் போங்க”என்று கூறி அவளை இலகுவாக்கும் விதமாக அவளிடம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினாள் வண்ணமதி.
அதே சமயத்தில் இன்னொரு மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த ஆண்களும் கூட அந்தக் கோயிலைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
“நாம என்ன தான் வெளியூர் போய்ப் பொழைக்கப் போயிருந்தாலும் கூட நம்மப் பூர்வீகம், குல தெய்வம்ன்னு வரும் போது நம்மால் அதை விட்டுக் கொடுக்க முடியலை பாருங்களேன்!”என்ற ரமணனோ,
“மாப்பிள்ளை! நீயும், என் பொண்ணும் கல்யாணம் செய்துக்கிட்டு எங்கே வாழ்ந்துட்டு இருந்தாலும் இந்த ஊரையும், கோயிலையும் விட்டுக் கொடுத்துடக் கூடாது! அப்பப்போ இங்கே வந்துட்டுப் போகனும். இதை நான் சஹா கிட்டேயும் கண்டிப்பாகச் சொல்லிப் புரிய வைப்பேன்!”என்று மகிழம்பூவனுக்கு அறிவுறுத்தினார்.
அவனும்,“ம்ஹ்ம். சரிங்க மாமா!”என்று அவருக்கு உறுதி அளித்தான்.
அதற்குப் பிறகு அந்த இரண்டுக் கார்களும் தங்களது ஊரில் எல்லையை அடைந்திருந்தது.
அவற்றில் இருந்து இறங்கிக் கொண்டதும்,”இவனைப் பாருங்களேன்! இவ்வளவு நேரமாக எவ்வளவு சமர்த்தாக இருந்து இருக்கான்!”என்று தன் மகனைப் பற்றித், தானே அனைவரிடமும் பெருமையாகக் கூறினாள் வண்ணமதி.
அதில் செந்திலை அனைவரும் தங்கள் கைகளில் வாங்கிக் கொஞ்சி விட்டுத் தான் அவளிடம் அவனைத் திருப்பிக் கொடுத்தார்கள்.
“அப்போ நாம எல்லாரும் நம்மளோட வீட்டுக்குப் போகலாம். நிச்சயத்துக்கு மண்டபம், சாப்பாட்டுக்குன்னு நான் ஏற்கனவே எங்களுக்குத் தெரிஞ்சவங்க கிட்டே முன்னாடியே சொல்லி வச்சாச்சு! சாப்பாட்டுக்கும் அவங்களே நல்லா சமைக்கிறவங்களைப் பார்த்து நமக்குச் சொல்லிடுவாங்க! அதையெல்லாம் நாம நேரில் போய்த் தெளிவாகப் பேச வேண்டியது மட்டும் தான் பாக்கி! நான் நாளைக்குப் போய் அவங்களைப் பார்த்துப் பேசிடறேன்”என்ற பால்ராஜ்ஜிடம்,
“நாங்களும் இந்தக் கல்யாணத்துக்கு உதவி பண்றோம்ன்னுச் சொல்லி இருக்கோம் தானே சம்பந்தி? அதனால் நானும், என் பையனும் உங்க கூட நாளைக்கு வர்றோம்”என்று அவரிடம் உறுதியாகச் சொல்லி விட்டார் ஆறுமுகம்.
“நானும் உங்க கூட வர்றேன். அதே மாதிரி இங்கு இருக்கிற நம்ம நெருங்கிய சொந்தக்காரங்களையும் நாமப் பெரியவங்க எல்லாரும் சேர்ந்து போய்க் கூப்பிட்டால் நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது”என்றிருந்தார் ரமணன்.
“அப்படியே செய்யலாம்! எங்களுக்கு நம்மளோட எல்லா சொந்தக்காரங்களோட விலாசம் எல்லாம் நல்லாவே தெரியும். அதனால் நாங்க உங்களை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம். ஆனால் நாளைக்குப் போறச் சோலியை முடிச்சிட்டு வாங்க. இப்போ வீட்டுக்குப் போகலாம்”என்றுரைத்தார் முல்லைக்கொடி.
உடனே அனைவரும் கார்களில் ஏறித் தத்தமது இல்லங்களுக்குச் சென்று ஓய்வெடுக்கத் தொடங்கினர்.
அதேபோல் தங்களது ஒய்வு நேரத்தில் தத்தமது இணைகளைப் பற்றிய எண்ணவோட்டங்களில் ஆழ்ந்து இருந்தார்கள் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.
அந்த தெய்வச் சன்னதியில் இருந்திருந்த நேரத்தில் தங்களது மனங்களில் தூய்மையான மற்றும் உறுதியான எண்ணங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பது அவர்கள் இருவருக்குமே தெரியும்!
தனது வாழ்க்கைத் துணைச் சஹஸ்ரா தான் என்பதை எப்போதோ புரிந்து கொண்டு அதில் உறுதியாக இருந்த மகிழம்பூவனை விட, இவ்வளவு நாட்களாகத் தன்னை நிழல் போல் காத்துக் கொண்டுத் தன்னிடம் ஒழுக்கமாக, கண்ணியமாக நடந்து கொண்டிருந்த தனது அத்தை மகன் தான் தன்னுடைய வாழ்க்கைத் துணை என்பதை இப்போது ஆணித்தரமாக உறுதி செய்து விட்டிருந்த சஹஸ்ரா தான் தனது மனதில் இருந்த குழப்பத்திற்குத் தெளிவு கிடைத்து விட்டதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
“அப்போ, நான் இவ்வளவு நாளாக என்னோட கனவுக்காக அவரைக் கல்யாணம் செய்துக்க ஒத்துக்கலை! எனக்கும் அவரைப் பிடிச்சு இருந்துருக்கு! அதே மாதிரி, எனக்கு அவரோட அருமை இப்போ தான் கொஞ்சம், கொஞ்சமாகப் புரிஞ்சது! ஐ லவ் யூ பூவன்!”என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் இன்னும், இன்னும் வழிந்து கொண்டே தான் இருந்தது!
ஆனாலும் அதை நினைத்து வருந்தவில்லை பெண்ணவள்!
தனது மனதிலிருந்த மற்றச் சுயநல எண்ணங்களை எல்லாம் இந்தக் கண்ணீரில் கரைய விட முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியும் முடித்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.
அதேபோல் தனது செல்பேசியை எடுத்து அதில் மகிழம்பூவனுக்கு அழைப்பு விடுத்துப் பேசலாம் என்றெண்ணியவளோ, உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.
ஏனென்றால், தனக்கு இப்போது வந்திருக்கும் தூய்மையான காதலை அவனின் சரி பாதியாக மாறி விட்டப் பிறகுத் தகுந்த சமயம் பார்த்து அவனிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி அவனுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து விட்டவளோ,
தனது உடையை மாற்றிக் கொண்டு மடிக்கணினியை எடுத்து அதில் தன்னைப் புகுத்திக் கொண்டாள் சஹஸ்ரா.
- தொடரும்