தனக்கும், சஹஸ்ராவிற்கும் நிச்சயத்தார்த்தம் நடக்கப் போகும் தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்னரே மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு விட்டிருந்தான் மகிழம்பூவன்.
அவரை வாசலில் நிற்க வைத்துப் பூசணிக்காயைச் சுற்றித் திருஷ்டி கழித்து விட்டு அவனை வீட்டிற்குள் அனுமதித்து,
அவனைச் சூழ்ந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்,”இனிமேல் கல்யாணம் முடியிற வரைக்கும் நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் பண்ணைகளுக்குப் போகவே கூடாது மகிழு!”என்று மகனுக்குக் கடுமையாக உத்தரவிட்டு இருந்தார் பால்ராஜ்.
அதேபோல்,”உங்க நிச்சயத்தார்த்தத்துக்கான வேலையை எல்லாம் செய்ய நாங்க இருக்கோம்! நீங்க ரெண்டு பேரும் அதைப் பத்திக் கவலைப்படாமல் உங்க மனசையும், உடம்பையும் நல்லா பார்த்துக்கனும்!”என்று மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவிற்கு அறிவுறுத்தினார்கள் ரமணன் மற்றும் கஸ்தூரி.
“ஆமாம். ஏற்கனவே உங்க ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து ஊர்க் கண்ணுப் பூராமும் உங்க மேலே தான் பட்டுப் போய் இருக்கு! அதனால் நீங்க இனிமேல் வீட்டுப் படியைத் தாண்டக் கூடாது! அம்புட்டுத் தான் சொல்லிப்புட்டேன்!”என்று அவர்களுக்குக் கறாராக உரைத்து விட்டார்கள் முல்லைக்கொடி மற்றும் ஆறுமுகம்.
“இவங்களோட மனசையும், உடம்பையும் நல்லா தேத்துறப் பொறுப்பை நாங்க எடுத்துக்கிறோம். அதைப் பத்தி நீங்கக் கவலைப்படாதீங்க!”என்று பெரியவர்களுக்கு வாக்குக் கொடுத்தனர் பூபாலனும், வண்ணமதியும்.
அதற்குப் பிறகு, மகிழம்பூவனுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறியதும் மட்டுமின்றி, அவனுக்குத் தேவையான சத்தான ஆகாரங்களைச் செய்து உண்ணக் கொடுத்து அவனை உடம்பைத் தேற்றி, வலுப்படுத்த தொடங்கினார்கள்.
ஆனால் மகிழம்பூவனுக்குத் தேவையானப் பணிவிடைகளைத், தானே முன் வந்து பொறுப்பெடுத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கொள்வதற்காக அவனது வீட்டிலேயே தங்கி விட்டிருந்தாலும் கூட அவனிடம் ஒற்றை வார்த்தைப் பேசாமல் அவனுக்குப் போக்குக் காட்டிக் கொண்டு எந்த நேரமும் அவனை முறைத்துக் கொண்டே அலைந்து கொண்டிருந்தாள் சஹஸ்ரா.
அதற்கான காரணம் என்னவென்று அவளிடம் கேட்கும் துணிவு யாருக்கும் இல்லையென்பதால் அது அவர்களது தனிப்பட்ட விஷயம் என்று முடிவெடுத்து ஒதுங்கிக் கொண்டு அவர்களது நிச்சயத்தார்த்த வேலைகளைப் பார்க்கலானார்கள் அனைவரும்.
தனது மாப்பிள்ளையைப் பார்க்கப் பாவமாக இருந்ததால் அவனுக்காகச் சஹஸ்ராவிடம் அவளது கோபத்திற்கான காரணத்தைப் பற்றி வினவினான் பூபாலன்.
அதற்கு அவளோ,”தப்பாக எடுத்துக்காதீங்கண்ணா! நான் அதை உங்க எல்லார் கிட்டேயும் சொல்லுவேன். ஆனால் இப்போ இல்லை. அவர் என்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டார். அதை அவரும் அனுபவிச்சுட்டு எங்கிட்ட வரட்டும். அப்போ சொல்றேன்”என்று அவனிடம் உரைத்து அனுப்பி வைத்து விட்டாள் சஹஸ்ரா.
அவளது வாய்மொழியை அப்படியே மகிழம்பூவனிடம் தெரிவித்து விட்டிருந்தான் பூபாலன்.
அவனோ அதைக் கேட்டு மிகவும் நொந்து போய் விட்டான்!
அவளைத் தனது வார்த்தைகள் ஏதோ மிகவும் காயப்படுத்தி விட்டது என்பதைப் புரிந்து கொண்டவனோ, அவளது கோபமும், ஆதங்கமும் குறையும் வரைக்கும் அவளுக்காகப் பொறுமையாக காத்திருக்க முடிவெடுத்தான் மகிழம்பூவன்.
ஆனாலும் தத்தமது வேலையில் இருந்து கவனத்தைச் சிதற விடவில்லை அந்த இளம் ஜோடிகள் இருவருமே.
இங்கே தனது சொந்த ஊரில் இருந்து கொண்டே நகரத்தில் இருந்த தனது அலுவலகத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தனது விரல் நுனியில் வைத்துக் கொண்டு இருந்தாள் சஹஸ்ரா.
அதேபோல் அங்கே ஏதாவது குற்றம், குறை நடந்தாலும் கூட அது உடனே தனது காதுகளுக்கு வந்து விடும் அளவிற்கு அங்கே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு வந்திருந்ததால் அவளுக்குத் தனது கம்பெனியைப் பற்றியும், தொழிற்சாலையைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லை தான்!
ஆனால் மகிழம்பூவனைப் பற்றித் தான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தாள் சஹஸ்ரா.
தன்னவனுக்கு அவனைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அதுவும் அவனது நிறத்தைக் கொண்டுத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!
ஏனென்றால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவனது கம்பீரமும், அந்தக் கன்னக் குழியும், அவனுடைய கனவுப் பார்வையும் தான் தன்னை எப்போதுமே ஈர்க்கும்! அதை விட்டு, விட்டு அவனது நிறத்தை வைத்துத், தான் அவனைத் தன்னிடமிருந்து தள்ளி நிறுத்துவேன் என்பதை அவன் எப்படி எண்ணினான் என்றெண்ணி உள்ளம் குமைந்து போனாள் சஹஸ்ரா.
அதனாலேயே அவன் மீதான கோபத்தைக் குறைக்கச் சிறிது காலம் எடுத்துக் கொண்டாள்.
ஆனால் தனது உடல்நிலை முழுவதுமாக குணமாகி விட்டதும் அவளது பாராமுகத்தையும், கோபத்தையும் பொறுத்துக் கொண்டு அவளிடமிருந்து தள்ளி இருக்க முடியாமல் அவளைத் தனியாக அழைத்து தன்னுடைய உடும்புப்பிடியில் அவளைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு,
“ஏன் அழகி என்னை இப்படி தவிக்க விட்ற? நான் அப்படி என்னத் தப்புப் பண்ணினேன்? உங்கிட்ட எல்லா உண்மையையும் மறைச்சது தான் தப்பா? ஏன் எங்கிட்ட முகம் கொடுத்துப் பேச மாட்ற? நீ இப்படியே செஞ்சால் எனக்குப் பைத்தியமே பிடிக்கிற மாதிரி ஆகுது! உனக்கு என் மேல் என்னக் கோபம் இருந்தாலும் அதை அடிச்சுக் கூடக் காமிச்சிடு! அதை விட்டுட்டு இப்படி பேசாமல் மட்டும் இருந்துடாதே!”என்று அவளது முகத்தை நிமிர்த்தித் தன்னைப் பார்க்க வைத்து அவளிடம் யாசித்துக் கேட்டுக் கொண்டான் மகிழம்பூவன்.
உடனே தனது கண்களில் பொலபொலவொன்று கண்ணீர் வடிக்கத் தொடங்கி விட்டாள் சஹஸ்ரா.
அதைப் பார்த்ததும் பதறிப் போய்,”அழகிம்மா! ஏன் அழுகுற? நான் எதுவும் தப்பாக கேட்டுட்டேனா? நீ எங்கிட்ட சொல்லலைன்னாலும் பரவாயில்லை. ஆனால் அழாதேம்மா”என்று அவளது கண்ணீரைத் துடைக்கத் தன்னுடைய கரத்தை உயர்த்தியவனைத் தடுத்து,
“ஒன்னும் தேவையில்லை! நீங்க எங்கிட்ட வந்து பேசாததுக்குக் காரணம்ன்னுச் சொன்ன வரைக்கும் சரி தான்! ஏன்னா, நான் உங்களையும், மதியையும் வெறுத்தேன் தான்! உங்க மேல் ரொம்ப கோபப்பட்டேன் தான்! அது எல்லாத்தையும் கூட ஒரு விதத்தில் ஏத்துக்குவேன்! ஆனால் நீங்க எவ்வளவு தன்னம்பிக்கையான ஆளாக இருக்கீங்கன்னு உங்களைப் பார்த்து வியந்துட்டு இருந்த எங்கிட்ட நீங்க உங்க நிறத்தைப் பத்தி யோசிச்சுத், அதில் ஏற்பட்டத் தாழ்வு மனப்பான்மையால் தான் எங்கிட்ட இருந்து நீங்க ஒதுங்கி இருந்தீங்கன்னுச் சொன்னீங்கப் பாருங்களேன்! நான் அப்போவே தோத்துப் போய், உடைஞ்சுப் போயிட்டேன்! நான் உங்களை அப்படி நினைச்சு ஒதுக்குவேன்னு உங்களுக்கு எப்படி தோனலாம்? நான் அப்படிப்பட்ட ஆளான்னு எனக்கே என்னை நினைச்சுக் கேவலமாக இருந்துச்சுத் தெரியுமா? நீங்க என்னைப் பத்தி இப்படியொரு கருத்து வச்சிருக்கும் போது நான் இனிமேல் உங்க கிட்ட எப்படி இயல்பாகப் பேசுவேன்? நடந்துக்குவேன்? அது தான் எனக்கு இதிலிருந்து வெளியே வர்றதுக்குக் கொஞ்ச நேரம் தேவைப்பட்டுச்சு! அதான் நான் உங்க கிட்ட இருந்து தள்ளி இருந்தேன்!”என்று அவனிடம் தன் மனக்குறை முழுவதையும் அழுகையுடனேயே ஒப்புவித்து முடித்திருந்தாள் சஹஸ்ரா.
அதைக் கேட்டதும் தனது தாழ்வு மனப்பான்மைத் தன்னவளது மனதை இந்தளவிற்குக் காயப்படுத்தி இருக்கிறதே என்பதை அவளது வாய்மொழியாகவே கேட்டறிந்து கொண்டவனுக்கு மிகவும் குற்ற உணர்வாகிப் போய் விட்டது.
அதுவுமில்லாமல் அனைத்தும் கூடி வந்த நேரத்தில் தவளைத் தன்னுடைய வாயாலேயே கெடுவதைப் போன்றுத், தானே தனது வாயாலேயே தன்னவளைக் காயப்படுத்தி, வருந்த வைத்து, அதில் அவளுக்கு உண்டான கோபத்திலும், ஆதங்கத்திலும் தானே பலியாகி விட்டதை உணர்ந்து மனம் கசங்கியது மகிழம்பூவனுக்கு.
அவன் இதையெல்லாம் நினைத்துப் பார்த்து முடித்த போதும் தன்னுடைய அழுகையை நிறுத்தாமல் இருந்தாள் சஹஸ்ரா.
உடனே தனது கவனத்தை அவளது புறம் திருப்பி விட்டு,”இங்கே பாரும்மா! நமக்கு இடையில் எந்த ஒளிவு, மறைவும் இருக்கக் கூடாதுன்னு தான் நான் உங்கிட்ட இவ்வளவு நாளாக என் மனசுல இருந்ததை எல்லாத்தையும் உங்கிட்ட மறைக்காமல் சொல்லி முடிச்சிட்டேன்! அதே மாதிரி நான் என்னை அப்படி என்னோட நிறத்தை வச்சுத் தாழ்வாக நினைச்சுக்கிட்டது எவ்வளவு தப்புன்றதையும் புரிஞ்சிக்கிட்டேன்! அதுக்கு உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்! என்னை மன்னிச்சிரு அழகி! உங்கிட்ட பேசாமல் மட்டும் இருக்காதே!”என்று தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவளிடம் இறைஞ்சவும்,
அவனது வாக்குமூலத்தைக் கேட்டுக் கொஞ்சமாக மனமிறங்கி விட்டுத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவளோ,”சரி. நான் உங்களை மன்னிச்சிட்டேன்! அதே மாதிரி இவ்வளவு வருஷமாக உங்களோட அருமை தெரியாமல் உங்களை உதாசீனப்படுத்துனதுக்கும், உங்களை இப்படியான தாழ்வு மனப்பான்மையில் ஃபீல் பண்ண வச்சதுக்கும் என்னை மன்னிச்சிருங்க பூவன்”என்று அவனிடம் மனமுருகி மன்னிப்பு வேண்டிக் கேட்டுக் கொண்டாள் சஹஸ்ரா.
அதில் அவளை மென்மையான அணைத்து விடுவித்து விட்டு,”நான் உன்னைக் காதலிக்கிறேன் அழகி! நீ இனிமேல் என்னை விட்டுத் தூரமாகப் போகவே கூடாது!”என்று அவளிடம் நெகிழ்வான குரலில் மொழிந்தான் மகிழம்பூவன்.
அதில் தனது மனம் திறந்து,”நானும் உங்ககிட்ட இதையே தான் கேட்டுக்கிறேன்! நானும் உங்களை ரொம்ப காதலிக்கிறேன் பூவன்!”என்று தனது காதலை அவனிடம் உணர்ச்சிபூர்வமாக உரைத்து இருந்தவளை மீண்டுமொரு முறை மெலிதாக அணைத்து விடுவித்தவனோ,
“இனிமேல் நமக்குள்ளே எந்த ஒளிவு, மறைவும் இருக்காது அழகி!”என்று அவளுக்கு உறுதி அளித்தான் மகிழம்பூவன்.
அவனைப் போலவே தானும் அவனுக்கு உறுதி அளித்து விட்டு அவன் மீது தனக்கு இருந்த கோபத்தின் காரணத்தைப் பற்றித் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் சொல்ல விரும்பியவளோ, தன்னவனிடம் அதை தெரிவித்து விட்டு முதலில் தனது பெற்றோரிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக அவர்களைத் தேடிப் போனாள் சஹஸ்ரா.
அவர்கள் இருவரும் தங்களது அறைக்குள் இருப்பதை அறிந்து கொண்டதும் அதற்கு வெளியே நின்று கொண்டு அறைக் கதவைத் தட்ட எத்தனித்தப் பெண்ணவளுக்குத் தனது பெற்றோரின் பேச்சுக் குரல்களைக் கேட்கக் கூடியதற்கானச் சந்தர்ப்பம் வாய்த்து இருந்தது.
அதைக் கேட்டதும் தனது மனதிலிருந்த ஒட்டு மொத்தக் குழப்பங்களும், தயக்கங்களும் சுக்குநூறாகிப் போய்க் குற்ற உணர்வில் ஆட்கொண்டவளோ தனது பெற்றோரின் வார்த்தைகளில் இருந்து அறிந்து கொண்ட உண்மையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் அப்படியே மயங்கிச் சரியப் போகவும்,
அதே சமயம் அவளைப் பின் தொடர்ந்து வந்து தானும் அவளது பெற்றோரின் வாய்மொழிகளைக் கேட்ட பின்னர் அதிர்ந்து போனவனோ தன்னவளின் நிலையைக் கண்டுச் சுதாரித்துக் கொண்டுச் சட்டென்று அவளைக் கீழே விழ விடாமல் தனது கரங்களால் பூவாய்த் தாங்கி விட்டிருந்தான் மகிழம்பூவன்.
- தொடரும்