அலுவலகத்தினுள் நுழைந்ததும் அங்கேயிருந்த பணியாளர்கள் சஹஸ்ராவிற்குக் கொடுக்கும் மரியாதையைக் கண்ட அவளது குடும்பத்தாருக்கு அவளை நினைத்துப் பெருமிதமாக இருந்தது.
அதேபோல் அலுவலகத்திற்குள் வந்தவுடன் தனது கம்பீரமான தோரணையுடன் நடை போட்ட தன்னவளைக் கண்டுப் பூரித்துப் போனான் மகிழம்பூவன்.
அதேபோல் அவளுக்குக் கொடுத்த மரியாதையை அவளது குடும்பத்திற்கும் கொடுத்தனர் பணியாளர்கள் அனைவரும்.
அதேபோல்,”இவங்க என்னோட மாமா, அப்பறம் இவங்க ரெண்டு அவரோட பிள்ளைங்க”என்று பால்ராஜ், மகிழம்பூவன் மற்றும் வண்ணமதியை அவர்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தி வைத்தாள் சஹஸ்ரா.
அவர்கள் இந்த அலுவலகத்திற்கு அவ்வளவாக வந்தது கிடையாது.
இதை ஆரம்பித்த சமயத்தில் ரமணனின் வேண்டுகோளுக்கு இணங்கி இதை திறந்து வைத்தவர் அவரது தங்கை மல்லிகா தான்!
ஆனாலும் அதற்குப் பிறகு அவரும், அவரது பிள்ளைகளும் இங்கே வந்திருக்கவில்லை.
அதனாலேயே பால்ராஜ் மற்றும் அவரது பிள்ளைகளைப் பற்றி இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்து தான் சிறிய அறிமுகப் படலத்தை நடத்தி இருந்தாள் சஹஸ்ரா.
அதில் தங்களது மகளை எண்ணிப் பெருமை அடைந்தனர் ரமணன் மற்றும் கஸ்தூரி.
அவர்களைப் போலவே, என்ன தான், சஹஸ்ராவிற்குத் தங்களைப் பிடிக்காமல் இருந்த போதிலும் அவளின் இந்தச் செயலைக் கண்டு மகிழம்பூவனுக்கும், வண்ணமதிக்கும் அவள் மீது இன்னும் மதிப்புக் கூடியது.
அவர்களைத் தனத அலுவலக அறைக்கு அழைத்து வந்தாள் சஹஸ்ரா.
“இந்த எ.ம்.டி சீட்டில் எப்பவும் நீங்க தான் உட்காரனும்ப்பா”எனக் கூறித் தனது தந்தையை அந்த இருக்கையில் அமர வைக்க,
அதில் மலர்வான புன்னகையுடன்,”நீ இந்த விஷயத்தில் இப்பவும் மாறவே இல்லை சஹா”என்றுரைத்தார் ரமணன்.
“எப்பவுமே மாத்திக்க மாட்டேன்ப்பா”என்றவளோ,
தன் ஆட்களை அனுப்பி இன்னும் சில நாற்காலிகளைக் கொண்டு வரச் சொல்லி மற்றவர்களையும் அமர வைத்து விட்டு,
“நீங்க தானே ஆஃபீஸைப் பார்க்கனும்னுக் கேட்டீங்க? அதான், கூட்டிட்டு வந்து காமிச்சுட்டேன். எப்படி இருக்கு என் ஆஃபீஸ்?”என்று மகிழம்பூவனிடம் மிடுக்காக வினவினாள்.
“சூப்பராக இருக்கு அழகி!”என்று அவள் தன்னிடம் மட்டும் பிரத்தியேகமாக கருத்துக் கேட்டதில் உற்சாகம் அடைந்ததால், தான் அவளை அழைக்கும் அந்தப் பழையச் செல்லப் பெயரைக் கூறி அவளை விளித்திருந்தான் மகிழம்பூவன்.
உடனே அதில் பெண்ணவளது முகம் சுருங்கிப் போயிற்று.
அதற்குப் பிறகு தான், அவன் தனது தவறைப் புரிந்து கொண்டு,”மன்னிச்சிரு சஹா”என அவளிடம் உடனே மன்னிப்புக் கேட்டு விட்டான்.
“இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும் மிஸ்டர். மகிழ்”என்று அழுத்தமாக உரைத்தாள் சஹஸ்ரா.
“சரி”என அவளிடம் பணிந்து போனான் மகிழம்பூவன்.
“ஓகே மிஸ். சஹஸ்ரா. நாம இப்போ உங்களோட ஃபேக்டரிக்குப் போகலாமா? அங்கே எப்படி பால் பொருட்களை எல்லாம் செஞ்சிப் பேக்கிங் பண்றீங்கன்னுப் பார்க்கனும்னு எனக்கு ரொம்ப ஆர்வமாக இருக்கு!”என்று கூறிச் சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள் வண்ணமதி.
“ஷ்யூர்”என்று அவளிடம் சொல்லி விட்டுத் தனது காரியதரிசியை அழைத்து,
“எங்களுக்குப் பாடிகார்ட்ஸ் அனுப்பி வைங்க மிஸ். மோனிகா. அதே மாதிரி, இவங்க நம்ம ஃபேக்டரியைப் பார்த்து முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பிடுவாங்க. அதுக்கப்புறம் நான் இங்கே வந்துடுவேன்”என்று தெரிவித்து அனுப்பி வைத்தாள் சஹஸ்ரா.
“ஏன்ம்மா? நீ வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்துட்டு நாளைக்குக் கூட இங்கே வரலாம்ல?”என்று அவளிடம் அக்கறையாக கேட்டார் பால்ராஜ்.
“நான் ஏற்கெனவே நேத்து ஆஃபீஸூக்கு வரலை மாமா. அதனால் இங்கே புரொடக்சன்ஸ் எப்படி போயிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியலை. அதை நான் கண்டிப்பாக சூப்பர்வைஸ் பண்ணனும். அப்போ தான், அதில் எந்தக் குளறுபடியும் நடக்காது. அதான்”என அவருக்குப் பதிலளித்தாள் சஹஸ்ரா.
“ஓஹ். சரிம்மா”என்றதும், அவளது காரியதரிசி அனுப்பிய பாதுகாவலர்களுடன் அனைவரும் கிளம்பி அந்த அலுவலகத்திற்கு அருகிலிருந்த தொழிற்சாலைக்குச் சென்றார்கள்.
அங்கே சென்றதும் தனது குடும்பத்திற்கு அவ்விடத்தில் இருந்த அனைத்து உபகரணங்களையும பொறுமையாக விளக்கிக் கூறினாள் சஹஸ்ரா.
அதை அவர்களும் ஆர்வமாக கவனித்து விட்டு அந்த உபகரணங்கள் செய்யும் வேலைகளையும் பார்த்தனர்.
“இங்கே என்னென்ன பால் பொருட்கள் எல்லாம் உற்பத்தி செய்றீங்க சஹா?”என அவளிடம் வினவினான் மகிழம்பூவன்.
உடனே,”நாங்க இங்கே தயிர், வெண்ணெய், நெய், சீஸ், பன்னீர், மோர், பால் பவுடர், ஐஸ்கிரீம், யோகர்ட் அப்பறம் ஸ்வீட்ஸ் கூடச் செஞ்சி இம்ப்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் செய்றோம் மகிழ்”என்றாள் சஹஸ்ரா.
“ம்ஹ்ம். சூப்பர்”என்றவனிடம்,
“பெரிய ஊர்களில் இதே மாதிரி இன்னும் ரெண்டு ஃபேக்டரீஸைத் திறக்கனும்ன்றது தான் என்னோட லட்சியமே!”என்றுரைக்க,
“இந்த ஊரிலேயே இதோட இன்னொரு பிரான்ச் இருக்கு தானே சஹா?”என அவளிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார் பால்ராஜ்.
“ஆமாம் மாமா. ஆனால் என்னால் இப்போ உங்களை அங்கே அழைச்சிட்டுப் போக முடியாது! அதை மறுசீரமைக்கும் வேலை நடந்துட்டு இருக்கு. அதனால் இன்னொரு நாள் கூட்டிட்டுப் போறேன்”என்று அவரிடம் புன்னகை மாறாமல் கூறினாள் சஹஸ்ரா.
“ஓஹோ. சரிடாம்மா”என்றுரைக்க,
“இப்போ நீங்க எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புங்க. நான் இங்கே என்னோட மேற்பார்வையை முடிச்சிட்டு ஈவ்னிங் வந்துட்றேன். எல்லாரும் ஷாப்பிங் போகலாம்”எனக் கூறி அவர்களைப் பாதுகாப்பாக இல்லத்திற்கு அனுப்பி வைத்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
இதே நேரத்தில் தங்களது வீட்டை அடைந்ததும்,“நம்ம சஹாப் பொண்ணு மதி கூடச் சரிக்குச் சமமாக இங்கே சண்டை போன்றதைப் பார்த்துட்டு இன்னும சின்னப் பொண்ணாவே இருக்காளேன்னு நினைச்சிட்டு இருந்தேன்! ஆனால் ஆஃபீஸூக்குப் போனதும் எவ்வளவு பொறுப்பாக நடந்துக்கிட்டா! அதைப் பார்த்ததில் இருந்து இப்போ வரைக்கும் எனக்கு அவ மேலே இருந்தப் பிரம்மிப்பு இன்னும் அடங்கலை!”என்று மனதார மொழிந்தார் பால்ராஜ்.
“அவ எப்பவும் அப்படித் தான் அண்ணா. எங்க கூடவும் சண்டை போட்டுக் கலாட்டா பண்ணுவா. ஆனா தொழில்ன்னு வந்துட்டால் அதில் அவ ஒரு ‘கச்சிதவாதி’ ன்னு (perfectionist) சொல்லலாம். அதே மாதிரி, சஹாவோடத் தொழில் குரு அவங்கப்பா தான். அதனாலேயே அவர் மேலே அவளுக்கு மரியாதை அதிகம்”என மகளைச் சிலாகித்துப் பேசினார் கஸ்தூரி.
“அதையும் தான், நாங்கப் பார்த்தோமே ம்மா. நம்ம மாப்பிள்ளையைக் கூட முதலாளியோட நாற்காலியில் உட்கார வச்சாளே? அதிலேயே எங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு!”என்று பூரிப்புடன் கூறிய பால்ராஜ்ஜிடம்,
“இன்னும் ரெண்டு பிரான்ச்சஸைத் திறக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தாளே? அதுக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாளா மாமா?”என்று ரமணனிடம் விசாரித்தான் மகிழம்பூவன்.
“ம்ஹ்ம். ஆமாம் மாப்பிள்ளை. அதுக்கு இன்னும் கொஞ்சம் மாசம் ஆகலாம். அதனால் தான், அவ கொஞ்சம் டென்ஷனாகவே சுத்திட்டு இருக்கிறாள்”எனப் பதிலளிக்க,
“அப்போ அந்த ரெண்டு பிரான்ச்சைத் திறந்ததுக்கு அப்பறம் தான் அவ கல்யாணம் பண்ணிக்கப் போறாளா?”என்று சட்டென்று அவர்களிடம் கேட்டு விட்டாள் வண்ணமதி.
அதை அவதானித்ததும் அந்த அறையிலிருந்து குண்டூசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.
அதில் மிரண்டு போய்,”இப்போ நான் தப்பாக கேட்டுட்டேன்னு எல்லாரும் அமைதியாக இருக்கீங்க?”என்று அனைவரிடமும் வினவினாள் வண்ணமதி.
உடனே,”நீ எதுவுமே தப்பாக கேட்கலைடா. நாங்களும் இந்த விஷயத்தைப் பத்தி உங்ககிட்ட கலந்து பேசத் தான் காத்திருந்தோம்”என்று அவளிடம் புன்னகையுடன் கூறினார் ரமணன்.
அதைக் கேட்டதற்குப் பின்னர் தான், வண்ணமதியுடன் சேர்ந்து பால்ராஜூக்கும் நிம்மதி உண்டாகியது.
ஆனால் மகிழம்பூவனின் முகம் சற்று வாடித் தான் போயிற்று.
அதைக் கண்டு,”உனக்கு என்ன ஆச்சுப்பா? ஏன் சோகமாக இருக்கிற?”என்று அவனிடம் ஆதூரமாக வினவினார் கஸ்தூரி.
அதற்கு,”தன்னைச் சஹஸ்ரா கல்யாணம் பண்ணிக்க விரும்புவாளான்ற சந்தேகம் அவனுக்குள்ளே இருக்கும்மா. அதான் அப்படி இருக்கான்”என்று மகனைக் கனிவுடன் பார்த்துக் கொண்டே உரைத்தார் பால்ராஜ்.
“அவன் சந்தேகப்பட்றதும் நியாயம் தானே? ஏன்னா, சஹாவுக்கு எங்களைப் பிடிக்காதுன்ற உண்மையை நம்ம யாராலும் மறுக்க முடியாதே!”என்று வருத்தமாக மொழிந்தாள் வண்ணமதி.
அதை மற்றவர்களால் மறுக்க முடியவில்லை.
ஆனாலும்,”அப்படியே இருந்தாலும் கூட அவளும், மாப்பிள்ளையும் ஒரே தொழில் தான் செய்றாங்க. அதனால் அதில் அவளுக்கு இருக்கிற ஆர்வமே அவளை மகிழைக் கல்யாணம் செய்துக்க ஒத்துக்க வைக்கும்ன்னு எனக்குத் தோணுது! ஆஃபீஸூக்குப் போயிருந்தப்போ கூட அவளும், மகிழும் தங்களோட தொழிலைப் பத்தி அவ்வளவு கர்ம சிரத்தையாகப் பேசிக்கிட்டாங்களே? அதை வச்சுத் தான் சொல்றேன்”என்று நம்பிக்கையுடன் கூறினார் ரமணன்.
“ஆனால் அவளுக்குப் பிடிக்கலைன்னா என்னைக் கல்யாணம் செய்யச் சொல்லி வற்புறுத்தாதீங்க மாமா”என்று அவரிடம் கறாராக உரைத்து விட்டு அறைக்குச் சென்று விட்டான் மகிழம்பூவன்.
“இதையே தான் நாங்க ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி எங்கிட்ட சொன்னான் மாப்பிள்ளை”என்று ரமணனிடம் தெரிவித்தார் பால்ராஜ்.
உடனே,“அப்பா நீங்க இதை எங்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலை?”எனக் கேட்டிருந்தாள் வண்ணமதி.
“ஊருக்கு வர்றப் பரபரப்பிலும், இதைப் பத்தி நாம தனியாகப் பேசிக்க சந்தர்ப்பம் கிடைக்காததாலும் தான் என்னால் உங்கிட்ட சொல்ல முடியலம்மா”என்று தன் மகளிடம் விளக்கிக் கூற,
“சரிப்பா. ஆனால் நாம இப்போ என்னப் பண்றது? அம்மாவோட ஆசையை நிறைவேத்தவே முடியாது போலவே!”என்று வருத்தமாக மொழியவும்,
“நீங்க ரெண்டு பேரும் அதைப் பத்திக் கவலைப்படாதீங்க! அதான், நாங்க இருக்கோமே? அதை எப்படியாவது நிறைவேத்திக் காட்டுவோம்!”என்று அவர்களுக்கு உறுதி அளித்தார் ரமணன்.
அதே சமயத்தில், தன்னுடைய மனம் கவர்ந்தவளைத் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் தனக்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்ற மன வருத்தத்தில் உழன்றான் மகிழம்பூவன்.
அப்போது,”என்ன எல்லாரும் என்னை விட்டுட்டு வெளியே போகப் பிளான் போட்டுட்டு இருக்கீங்களா? அப்படி நடக்க நான் விட்டுடுவேனா? அதான், நான் சரியான நேரத்துக்கு வந்துட்டேனே!”என்று அவர்களிடம் கூறிப் புன்னகைத்தவளைக் கண்டதும் தாங்கள் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
“ஆமாம். மிஸ்டர் மகிழ் எங்கே? அவர் ஏற்கனவே பார்த்த ஊருன்னு ஷாப்பிங் போக வரலையா?”என்று அவனைத் தன் கண்களால் துழாவினாள் சஹஸ்ரா.
- தொடரும்