Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ--24

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 24

தீபக் தனது உதவியாளர்களிடம் வாசுவின் இடத்தைக் கண்காணிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
அவன், வாசுவின் இடத்தில் இருந்து வெளியேறி செல்வதற்குள், அவனது அலைபேசி நீண்டதாக ஒலி எழுப்பியது.

சிறிது நேரம் வண்டியை ஓரங்கட்டிய அவன் , அலைபேசியைத் தனது கைகளில் எடுத்துப். பார்த்த போது , திரையில். ரவிச்சந்திரனின் பெயர் தான் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

' ம், உன் கிட்ட சொல்றதுக்கு இப்ப இங்கே எந்த நல்ல விஷயமும் நடக்கலியே' என்று தனக்குள் புலம்பிக் கொண்ட அவன்,
அழைப்பிற்கு உயிர் கொடுத்தான்.

" சொல்லுடா ரவி, எங்கே இருக்கே நீ? " என்ற கேட்டான் தீபக்.

" நீ தான் சொல்லணும். வெண்ணிலா வீட்டில இருந்து அவங்க அம்மா பேசினாங்க. வெண்ணிலா கிட்ட இருந்து போன் வந்துச்சாம் . அவ எங்கே இருந்து பேசறான்னு கண்டுபிடிக்கத் தான் நீ போயிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. சொல்லுடா, லொகேஷன் சேர்ச் பண்ணிட்டியா? " என்று ஆவலுடன் கேட்டான்.

ம்ம், லொகேஷன் கண்டிபிடிச்சிட்டேன். ஆனா நிலா இங்கே இல்லைடா. ஆனா இந்த இடத்தை எப்போதும் கண்காணிச்சுட்டே இருக்கிற மாதிரி. ஆட்களை, செட் பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன் " என்று சொன்னான் தீபக்.

அதனைக் கேட்ட ரவிக்குப் பெருத்த ஏமாற்றமாகி விட்டது. ' இன்னிக்கு எப்படியும் உன்னைப் பார்த்துடுவேன்னு நெனச்சேன் நிலா. ஆனா இங்கேயும் எனக்கு ஏமாற்றம் தானா? " என்று தனக்குள் புலம்பிக் கொண்டான் ரவிச்சந்திரன்.

நெடு நேரமாக மறு முனை அமைதியாக இருப்பதைக் கண்ட தீபக், " ரவி, டேய் ரவி, நீ எதுக்கும் கவலைப்படாதேடா . வெண்ணிலா கண்டிப்பாக கிடைச்சிடுவாங்க. நான் போனை வக்கிறேன் " என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தான் தீபக்.

வாசுவின் இடத்தை விட்டு வெளியே வந்ததும், அங்கிருந்து சுமார் ஐம்பது மீட்டர் தொலைவில் , இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு பெரியவரை அணுகி , " ஐயா, ரொம்ப தாகமா இருக்கு. இரண்டு இளநீ கொடுங்க. , நிறைய தண்ணீ இருக்கற மாதிரி " என்று கேட்டான்.

" இதோ தர்றேன் சார் " என்றபடி கையில் இருந்த கத்தியால், இளநீரைச் சீவி விட்டு . அவனிடம் கொடுத்தார் அந்தப் பெரியவர்.

" ஐயா பெரியவரே, அதோ அங்கே தனியா ஒரு வீடு மட்டும் இருக்குதே. அந்த வீட்ல யாரு இருக்காங்க. அவங்க வெளியே வந்து நீங்க பார்த்து இருக்கீங்களா? " என்று கேட்டான்.

ம், வீடா இருக்கு? இல்லையே, அங்கே ஒரு ஆஸ்பத்திரி தானே இருக்குது.அப்பப்ப, ஆம்புலன்ஸ் வண்டிங்க தான், போயிக்கிட்டும் , வந்துட்டும் இருக்கும் " என்றார் அவர்.

அதனைக் கேட்ட தீபக் மிகு‌ந்த அதிர்ச்சி அடைந்தான். ' ம், அப்ப நம்ம யூகம் சரி தான். வாசு தான் ஒரு டாக்டர்னு ஒத்துக்கிட்டான். வெண்ணிலா ஒரு நர்ஸ். இதை எப்படி நாம, லிங்க் பண்றது. ம்ம், என் மர மண்டைக்கு ஒன்னுமே புரியலியே ' என்று சற்று நேரம் தனக்குள் குழம்பிக் கொண்டவன், ' நாம ஏன். வெண்ணிலா, வாசுவை மட்டும் லிங்க் பண்ணனும், சிஸ்டர் பிரீத்தாவை. இவங்க கூட லிங்க் பண்ணிப் பார்ததா ஏதாவது முடிச்சை அவிழ்க்க முடியுமா? ' என்ற தெளிவுக்கு வந்தான்.

' அப்போ, இந்தப் பெரியவர் சொல்ற மாதிரி இது ஒரு ஆஸ்பத்திரின்னே. வச்சிக்குவோம். அப்ப இங்கே வேற ஏதாவது சட்டத்துக்குப் புறம்பான ஆராய்ச்சி ஏதாவது நடக்குதா ' என்ற கேள்வியும் எழுந்தது அவனுக்கு.

" சரிங்க பெரியவரே , நான் கேக்கற கேள்விக்கு மட்டும் கொஞ்சம் நல்லா ஞாபகப்படுத்தி ஒரு பதிலைச் சொல்லுங்க. முந்தா நாள் சாயங்காலம். இந்த வழியா சந்தேகப் படற மாதிரி ஏதாவது வண்டி போனதைப் பார்த்தீங்களா? " என்று தீபக் கேட்கவும், "

அப்படி ஒன்னும் தெரியலை, ஆனா வண்டி பின் கதவுக்கு வெளிப்புறமாக
ஒரு பொண்ணோட துணி, சிக்கிட்டு ,இருக்குது. , கதவை மூடும் போது அதைக் கூட சரியா , கவனிக்காம , மூடிட்டாங்க போலன்னு, இங்க இளநீ குடிச்சிட்டு இருந்த ரெண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க. அப்பவே எனக்குக் கொஞ்சம் சந்தேகமா இருந்தது. ஆனா, அதுக்கப்புறம் அதை, நான் சுத்தமா மறந்தே போயிட்டேன். ஏன் சார் கேக்கறீங்க? " என்று கேட்ட அந்தப் பெரியவர், பின் தானாகவே, " ம், இப்பத் தான் நாட்ல குற்றங்களுக்கு அளவே இல்லாம போயிடுச்சே. உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளைங்க யாராவது காணாமப் போயிட்டாங்களா சார்? " என்று கேட்டார்

தீபக் மௌனமாகத். தலை அசைத்தான்.

" சரிங்க தம்பி. நீங்க பதட்டப்படாம போய்ட்டு வாங்க. நான் ஏதாவது சந்தேகப் படும்படி நடந்துச்சுன்னா, உங்க கிட்ட. கண்டிப்பா சொல்றேன். உங்க போன் நம்பர் மட்டும் என் கிட்ட கொடுத்துட்டுப் போங்க " என்று சொன்னார் அந்தப் பெரியவர்.

" இதோ , தர்றேன் பெரியவரே " என்று சொல்லி விட்டுத் தனது அலைபேசி எண்களை அவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டான்.

______________________
வாசு தன்னைத் தள்ளி விட்ட நிலவறையில் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்த வெண்ணிலா, பின் சுதாரித்தபடி எழுந்து கொண்டாள்.

எங்கிருந்தோ. , ஏ.சியின் குளுமை விரவி வந்து, அவளைச் சுற்றிக் கொண்டது போன்ற உணர்வில், அவளது தேகம் சிலிர்த்துப் போனது.

' ம், இது என்ன இடம்னு தெரியலியே. ஒரே ஹாஸ்பிட்டல். நாத்தம் வருது. அதோட இங்கே ஏசி இல்ல. ஆனா ஏதோ ஏசி ரூம்ல இருக்கற மாதிரியான ஃபீல் வருது 'என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அவள், மெதுவாக எழுந்து கொண்டாள்.

அங்கே சிறிதான சிவப்பு பல்பின் ஒளி மட்டுமே தெரிந்திட. , இருள் பழகிய அவளது கண்களுக்கு அந்த ஒளியே வழி காட்டுவதற்கும். போதுமானதாக இருந்தது.

அவள் நடக்க, நடக்க அந்த வெற்று அறையின் நீளமும் கூடிக் கொண்டே போனது போல தோன்றியது அவளுக்கு.

ஒரு வழியாக, அந்த அறைக் கதவினை அணுகி விட்ட அவள், கதவைத் திறக்க முயற்சித்தாள் . ஆனால். கதவைத் திறக்க முடியவில்லை. ஒரு வித ஆர்வத்துடன் கதவின், பீப் ஹோல் வழியாக உற்றுப் பார்த்திட, அங்கே மருத்துவர்களுக்கான சீருடை அணிந்து கொண்டு. ஒரு சிலர். அங்கும். இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர்.
வெண்ணிலாவுக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. 'யாரு இவங்க? இவங்களுக்கு இந்த இடத்தில என்ன வேலை? முதல்ல இந்த வாசுவுக்கு இவங்க கூட என்ன தொடர்பு? ஏதோ தப்பாப் படுதே' என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் .

பின் , மீண்டும் அந்தக் கண்ணாடித் துளையின் வழியாகக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.

அவளது கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. செய்வதறியாது அங்கேயே அமர்ந்து கொண்டாள் அவள்.

பின் மெதுவாக அந்த இடத்தை ஆராயத் தொடங்கினாள். அறையின் மேற்குப் பக்கத்து மூலையில், ஒரு மூடப்பட்ட. அலமாரி. தென்பட்டது. அந்த இடத்தை நோக்கி விரைந்தாள் வெண்ணிலா.
அலமாரிக் கதவினைத் தனது பலம் கொள்ளும் மட்டும் இழுத்துப் பார்த்தாள்.
ஒரு வழியாக ,அவளது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. அலமாரியின். கதவு திறந்து கொண்டது.
அதிலிருந்த சில கோப்புகள் சிதறிக் கீழே விழுந்தன.அதனை நோக்கி விரைந்த வெண்ணிலா, அந்த அரை இருளில் அதில் இருந்த செய்திகளைப் படித்துத்
தெரிந்து கொள்ள முடியாமல் திணறினாள்.

' ம், ச்சே இந்த ரூம் லைட் சுவிட்ச் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரியலையே'
என்று ' தனக்குள் சொல்லிக் கொண்டவள், முதலில் மின் விளக்குகள் ஏதாவது அந்த அறையில் தென்படுகின்றனவா என்று ஆராயத் தொடங்கினாள்.

ஒரு வழியாக, அலமாரிக்கு இடது பக்கத்தில் அவள் தேடி வந்தது, கண்களில் பட்டது.

ஆம்! அங்கே ஒரு குழல் விளக்கும், அதற்குக் கீழேயே, அதனை உயிர்ப்பித்து எரியச் செய்திடும் , சுவிட்சும் தென்பட்டது.
சுவிட்சை ஆன். செய்து விட்டு வெளிச்சம் வரக் காத்திருக்கத் தொடங்கினாள். ஆனால் வெளிச்சம் வரவில்லை. கதவைத் திறந்து கொண்டு வாசு தான் வந்தான்.
அந்த சுவிட்சை ஆன் செய்தால், வாசுவின் அலைபேசியில் அலாரம் இசைத்திடும் என்பது வெண்ணிலாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!
வந்தவனின் முகம் கோபத்தில் கனன்று கொண்டு இருந்தது.

" ஏய், வெண்ணிலா என்ன பண்ணிட்டு இருக்கே நீ? உன் வேலையை நீ காட்ட. ஆரம்பிச்சுட்டே. இல்லை. சும்மா கிடக்க மாட்டியா நீ " என்று அவளைத் திட்டத் தொடங்கினான்.

இதனைச் சற்றும் எதிர்பார்த்திராத வெண்ணிலா, " வாசு இங்க பக்கத்து ரூம்ல என்னடா நடக்குது. அங்கே யாரு இருக்காங்க? எதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க? சொல்லு வாசு; நீ ஒன்னும் தப்புப். பண்ணிடலியே. ? " என்று மிகவும். பதட்டமான குரலில் கேட்டாள் வெண்ணிலா.

வாசு சிரித்தபடி அவளை நெருங்கி வந்தான். " தப்பா, அதெல்லாம் ஒரு தப்பும் நடக்கலியே. உனக்கு ஒன்னு சொல்லவா. சரி, தப்பு எல்லாம் அவங்க, அவங்க மனசைப் பொறுத்தது. எனக்கு சரின்னு தெரியற விஷயம் உனக்குத் தப்பாத் தெரியலாம்...அல்லது. உனக்கு சரின்னு படறது எனக்குத் தப்பாத். தெரியலாம். அதுக்கு எல்லாமா கவலைப் பட முடியும்? " என்றவன் அவளைத் தன் பால் இழுத்துக் கொண்டான்.
வெண்ணிலாவுக்கு அப்போது தான் சுரீரென்றது.' இவன் என்னோட வாசு இல்லையே, தன்னோட கள்ளத் தனமான சிரிப்பாலயும். , தேவையில்லாத தொடுகையினாலயும் என்னையே களவாடிக். கொள்வது தான் இவனோட திட்டமா இருக்குமோ ' என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.

' ம், வெண்ணிலா.. இனியும் நீ தூங்கிக்கிட்டே. இருக்காதே. இந்த இடம் சரியில்லை. ஏதோ தப்பு, தப்பா. நடக்குது. அதுக்கான கருவியா. தான் இப்ப நீ இவன் கைல சிக்கிட்டு இருக்கே. முழிச்சிக்கோ. பிழைச்சுக்கோ. ; ' என்றது அவளது. மனக் குரல்.

அந்த நிமிடத்தில் வாசுவின் அலைபேசி ஒலித்திட, அவனது கவனம் அதன் பக்கம் திரும்பி விட, சரேலென அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள் வெண்ணிலா.

" ம், ஓகே. எல்லாம் பத்திரமா வந்து சேர்ந்துடுச்சி. இல்லை. இதோ நான் உடனே கேட்டுக்குப். போறேன். " என்று மறு முனைக்குப் பதில் சொல்லி விட்டு , " ம்ம் இரு உன் கதையை அப்புறமா பார்த்துக்கறேன் " என்று வெண்ணிலாவை எச்சரித்து விட்டு அங்கிருந்து, நகர்ந்து கொண்டான் வாசு.

தீபக்கின் எண்களை வாங்கிக் கொண்ட இளநீர் விற்றுக் கொண்டிருந்த பெரியவர், தனது அலைபேசியில் இருந்த அவனது எண்களைத் தட்டினார், அந்த வழியாக சந்தேகப் படும் விதமாக ஒரு ஆம்புலன்ஸ் கடந்து சென்றது என்பதைத் தெரிவித்திட!
(வரும்)


ஹாய், ஃப்ரெண்ட்ஸ், சில எதிர்பாராத வேலைகளால, அடுத்த எபி போடக் கொஞ்சம் லேட்டாயிடுச்சி. படிச்சுப் பார்த்துட்டு உங்களோட கருத்துக்களைச் சொல்லுங்க. மிக்க நன்றி
 
வாசு கெட்டவனா இருக்க மாட்டான்... அதைவிட தங்கை மூலம் நிறைய வலிகளையும் அனுபவித்தான் தானே அதனால அவளைப்போல பாதிக்கப்பட்டவர்களை வைத்து பாக்கிறானோ?
சூப்பர் 😀
 
Top