
ஹார்ட் பீட் திருடன் – 14
அந்தப் பெரிய சாப்பாடு மேசையில் எலிசபெத் பாட்டி நடுநாயகமாக அமர்ந்திருக்க அவருக்கு மற்றைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
லிடியாவின் வருங்காலத் கணவனும் அவனது குடும்பமும் வருகை தந்திருந்தனர்.
அவர்களும் கிரேஸ் குடும்பத்தின் ஒரு கிளைக் குடும்பம் தான். லிடியாவும் அன்ரூட்டும் காதல் வயப்பட அதே வேளை அவனோ நேரடியாக அன்ரூட்டிடமே விடயத்தை தெரிவிக்க அவனது இந்த தைரியமான அனுகுமுறையில் அவனை ஏற்றுக் கொண்டார் அன்ரூட்.பரம்பரை பிஸினஸை தன் கையில் எடுத்து தினப்படி நடத்தி வருகின்றான்.
அன்ரூட்டும் நயோமியும் அனைவரையும் கை குலுக்கி வரவேற்றார். அனைவரும் இருக்கையில் அமர்ந்தது.அழுத்தமான காலடி ஓசையில் அனைவரின் பார்வையும் சத்தத்தை நோக்கித் திரும்ப சிலையை ஒரு கையால் கோதியபடி அங்கு வந்து கொண்டிருந்தான் ஜோகித்.
மகனின் கம்பீரத்தைப் பார்த்து நயோமிக்கோ பெருமையாக இருந்தது. அவர்கள் இருக்கும் இடம் வந்தவன். லிபியாவின் வருங்காலக் கணவன் அல்வினோவை கைகுலுக்கி அனைத்துக் கொண்டான்.
அல்வினோவைக் கண்டதும் லிடியாவின் முகத்தில் வெட்கம் தலையைக் குணிந்து கொண்டாள். தங்கையை ஒரு நொடி பார்த்தவன் எல்ஷனருகே அமர்ந்து கொண்டான்.
" கண்ணா எப்படி இருக்க " என எலிசபெத் கேட்க " குட் கிரான்ட் மா " என்றதோடு பேச்சை நிறுத்திக் கொண்டான். சிறிது நேரத்தில் உணவுகள் பரிமாறப்பட்டன." பேச்சும் சிரிப்புமாக உணவு வேளை கடந்தது " ஜோகித்திற்கும் அல்வினோவை பிடித்து விட்டது." அல்வினோ கலகலப்பாணவன் அவனை யாருக்குத் தான் பிடிக்காது.
உணவு உண்டு முடித்ததும் அனைவரும் கலைத்தனர் தனது வயதை ஒத்த ஜோகித்தோடு பேசுவது அல்வினோவிற்கு இலகுவாக இருந்தது.
வெளியே வந்த இருவரும் இன்டோர் கேம் அறையினுள் நுழைந்தவர்கள் பில்லியர்ட்ஸ் கேம் ஸக்ஷபோர்ட்டில் தடியால் பந்தை குழிக்குள் தட்டியபடி பேசிக் கொண்டிருந்தனர். " அப்புறம் ஜோகித் லைஃப் லவ் எல்லாம் எப்படிப் போது " என அல்லினோ கேட்டபடி சிவப்பு நிறப் பந்தை தடியால் தள்ள அதுவோ மற்றைய பந்துகளை மோதி குழியை விலந்தி ஃபோர்ட்டில் மோதி நின்றது.
தனது தடியினால் வெள்ளை நிறப் பந்தை இலக்கு வைத்து அடித்த ஜோகித்தின் கைகள் ஒருநிமிடம் நின்று மீண்டும் தடியை முன்னோக்கி தள்ளியது.மகியின் முகம் அவன் கண்முன்னே வந்து செல்ல இறுகிய அவன் முகத்தில் ஒரு இளக்கம்.
" "சம்திங் ஸ்பேஷல் " என்ற அல்வினோ அப்புறம் வர்க் எல்லாம் எப்படிப் போது என. ஜோதிடத்தை கேட்க அது சூப்பராப் போது என இருவரும் தங்களது தொழில் பற்றிப் பேசத் தொடங்கினர்.
அர்ஜுனும் எல்சனும் வோலையாக வெளியே சென்றிருந்தனர்.நயோமி, அன்ரூட், எலிசபெத் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அல்வினோவின பெற்றோருடன் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசத் தொடங்கினர.
லிடியாவும் அல்வினோவின் தங்கை ஒலிவியாவை அழைத்துக் கொண்டு பாலஸை சுற்றி வந்தாள். முதலில் கீழ் அறைகளை சுற்றிக் காட்டியவர் முதல் தளத்திற்கு லிஃப்டின் உதவியுடன் அழைத்து வந்தாள். " ஒலிவியா இது தான் என்னோட அறை ,அதுவோ மிகப் பெரிய அறை மிகவும் நேர்த்தியாக " லாவண்டர் நிறத்தில் இருந்தன.
ஒலிவியாவும் செல்வச் செழிப்பில் வளர்பவள் தான்.அதனால் லிடியாவின் அறையை அலட்ச்சியமாகப் பார்த்தாள்.
அடுத்து இருவரும் பாலில் இருந்து மியூசியத்தினுள் நுழைந்தனர்.பழங்காலப் பொருட்கள் அனைத்தும் நேர்த்தியாக ப்ரியா பாதுகாக்கப்பட்டிருந்தது.
"ஒலிவியா இதெல்லாம் அண்ணனோட கலெக்சன்ஸ், எங்க எந்த நாட்டுல ஏலம் போனாலும் அதை எடுத்துடுவான்" என்றவள் "கிடைக்காடி தட்டியாவது தூக்கிடுவான்" என்றாள் பெருமையாக, ஜோகித்தின் பேச்சு வந்ததும் குஷியாகிய ஒலிவியா "இவ்வளோ நாளும் ஜோகித் எங்கிருந்தார், நான் வந்தப்போ கண்டதே இல்லை" "அண்ணா எங்க இருக்கான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும்" என்றாள் பெருமூச்சுடன் .
இருவரும் பேசியபடி ஜோகித்தும் அல்வினோவும் இருக்கும் அறைக்கு வந்தார்கள், அங்கு இதுவரையும் கண்ட ஜோகித்தும் " கம் லிடியா" என்றான். லிடியாவும் அல்வினோவைம் பார்த்தபடி வந்தவள் "அண்ணா இவ என்னோட பிரண்ட் அன்ட் அல்வினோட சிஸ்டர்" என்றாள் ஜோசித்தும் சிறு புன்னகையுடன் "நைஸ் டூ மீட் யூ" என்றான்.
அவன் பேச்சில் ஒலிவியாவிற்கோ ஒரு படபடப்புடன் அவளும் " நைஸ் டூ மீட் யூ டூ என்றாள் அல்வினோவின் பார்வை லிடியாவிலேயே இருக்க "அண்ணா நாங்களும் இங்க தான் இருக்கோம்" என்றாள் சிரித்தபடி.
அவ்வினவும் தங்கையின் பேச்சில் கழுத்தை வருடியவன் ஒலிவியாவை நோக்க ஜோகித்திற்கும் இருவரின் மனநிலை புரியும் என்பதால் "அல்வினோ, லிடியா நீங்க பேசிட்டு வாங்க" என்றான். "நீங்க பேசிட்டு இருந்தா அப்போ நான் என்ன பண்றது, பாலச சுத்தி காட்டுறனுதன கூட்டிடு வந்து என்னை கழட்டி விட்டுட்ட பாத்தியா" என ஒலிவியா பேச ஜோகித்திற்கோ அவள் பேச்சு எரிச்சலையே தந்தது.
அவளது இங்கிதமற்ற பேச்சில் " ஒலிவியா" என அழுத்தமாய் அழைக்க அவனின் அவ்வழுத்தமே ஒலிவியாவை மேலே பேச விடாமல் தடுத்தது.
அவன் பார்வையில் "ஓகே நீங்க பேசிட்டு வாங்க நான் ஜோகித்தோட சுற்றி பார்க்கிறேன் என்றாள். ஒலிவியாவும் ஜோவுடன் பேச கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு.
லிடியா தமையனை சங்கடமாய் நோக்க ஆல்வினோவுக்கும் தங்கையின் பேச்சு அதே சங்கடத்தை தரவே ஜோகித்தை அவனும் நோக்க ஜோகித்தோ சிறிய புன்னகையுடன் அவ்விடம் இருந்து அகன்றான் ஒலிவியாவும் இருவரையும் பார்த்து கண்ணடித்துவிட்டு ஜோகித்தை தொடர்ந்து வெளியேறினாள்.
" ஜோகித்" என அழைத்தபடி அவளும் அவனுடன் சேர்ந்து நடந்தவழுக்கோ மனதில் அப்படி ஒரு பரவசம். அங்கு சோகமாய் சென்று கொண்டிருந்த அத்தையின் மகளைக் கண்டவன் புருவஞ்சுருங்க ' இவ என்ன ஒரு மார்க்கமாய் திரிரா' என தனக்குள் எண்ணியவன் தெரிகிறார் என தனக்குள் எண்ணியவன் "எமி" என்றான்.
ஜோகித்தின் சத்தத்தை கேட்டதும் சிறு பதற்றத்துடன் அவள் நிற்க, அவளை நெருங்கியவன் ஒலிவியாவை கண்களால் காட்டி "பாலஸ சுற்றிக்காட்டு" என்றவன், அங்கிருந்து நகர்ந்தான்.
எமியும் தனது அத்தானின் பேச்சில் "வாங்க போலாம்" என அவளை அழைத்து சென்றாள் போகும் அவனையே வெறித்துப் பார்த்தபடி எமியுடன் கிளம்பினாள் ஒலிவியா.
ஜோகித்தின் அறையைக் கேட்க ஒலிவியாவை மேலிருந்து கீழாக பார்த்தவள் "எங்களுக்கே அங்க அனுமதியில்ல, ஆனா ரொம்ப அழகா இருக்கும் ரூம் " என்றாள் எமி.
அன்று மாலை அல்மோவின் குடும்பமும் அவர்களது இல்லம் சென்றனர்.அதன் பின் ஒலிவியா கண்ணில் ஜோகித் தென்படவேயில்லை..
அந்தக் கடற்கரையில் சிலுசிலுவென காற்று வீச காற்றில் அசைந்தாடும் முடியை கைகளால் கோதியவண்ணம் விருந்தினரை வரவேற்றுக் கொண்டிருந்தான் ஜோகித் மறுபுறம் நயோமியும் அண்ரூட்டும் விருத்தினரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். தங்களது செல்ல மகளின் திருமணமல்லவா வெகு விமர்சையாக கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
பல வண்ண மலர்களால் மேடை அமைக்கப்பட்டு திருமணத்தை காணும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி நிழற்குடைகள் உம் அதன் கீழ் குதிரைகளும் போடப்பட்டிருந்தன். பல பணியாளர்கள் அங்குமிங்கும் விருந்தினரை கவனித்த வண்ணம் இருந்தனர்.
உணவுகளும் வபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்கத்திய இசை ஒருபுறம் இசைக்கப்பட்டிருந்தது.
விருந்தினர்கள் வருகையைத் தொடர்ந்து சீயோன் சர்ச் ஃபாதர் வருகை தந்தார் அதனைத் தொடர்ந்து அண்ரூட்டின கைகளைக் கோர்தபடி மேடைக்கு வந்தாள் லிடியா .நீண்ட வெண்ணிற ப்ராக் அணிந்து ஏஞ்சல் போல வந்தாள்.அவள் முகத்திலோ மகிழ்ச்சி அதே வேளை அவளுக்கு முன் குட்டீஸ் சிலர் ரோஜா இதழ்களை கூவியபடி வந்தனர்.
அதே வேளை அல்வினோ லிடியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். லிடியா மேடையை அடைந்ததும் அல்வினோ மேடையில் இருந்து இறங்கி லிடியாவை மேடையேற்றினான்.
அவள் கையைப் பற்றிக் கொண்டான். ஃபாதரும் சில பல ஜெபங்களை செய்ய அங்கு கூடியுள்ள அனைவரின் முன் ஃபாதர் " அன்ரூட் லிடியா கிரேஸ் " எஸ் ஃபாதர்" அல்வினோவை திருமணம் செய்ய சம்மதமா" அவளும் " எஸ் ஃபாதர் என்றாள். அதே போல் அன்ரூட்டிடமும் கேட்க அவனும் தனது ஒப்புதலை வழங்கினான்.அதனையடுத்து அழகுப்பதுமையென நின்ற ஒலிவியா ட்ரேயில் இரு மோதிரங்களை ஏந்தியபடி வந்து நிற்க அதனை எடுத்து லிடியாவும் அல்வினோவும் மாற்றிக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து அன்ரூட் லிடியாவை முத்தமிட இருவரின் நட்பு வட்டங்களும் " ஹோ...." என கூச்சலிட்டு இருவரையும் வெட்கப்பட வைத்தனர்.
ஒலிவியா பார்வை ஜோகித்தையே வட்டமடித்தது. யாரும் அறியாது மற்றொரு காதல் யாரும் அறியாது அங்கு அரங்கேறியது. இயேசுவின் இனகிருபையால் திருமணமும் இனிதே நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து உணவுகளும் ஒருபுறம் பரிமாறப்பட்டது.
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் லிடியா னவையாம் அன்ரூட்டையும் வாழ்த்தி விடை பெற்றனர்.
ஜோதிடத்தை மேடையேறியவன் தங்கையை அனைத்து பரிசுப் பொதியொன்றைக் கொடுத்தவன் " ஹாப்பி மேரீட் லைஃப்" என்றான்." தாங்ஸ் என இருவரும் மணமான அவன் பரிசையும் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டனர்.
எலிசபெத் பாட்டியும் தனது செல்லப் பேத்தியின் திருமணத்தை கண்குளிரக் கண்டவர் " ஜோ எப்போடா நீ பண்ணிக்கப் போற"எனக் கேட்க நயோமிக்கோ மனதில் பல எண்ணங்கள்.
அப்படியே அன்றைய நாள் திருமணம் பரபரப்பில் கழிய புதுமடம் தம்பதியினர் சுவிட்சர்லாந்து பறந்து விட்டனர்.
பாலஸிற்கு வந்த சோதித்துப் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். அன்று முழுவதும் திருமண வேலையில் அலைந்ததால் சற்று நேரம் ஓய்வெடுத்தவன் கண்களை அலைபேசி இசைக்கவே கண்களைத் திறந்தான்.
மகி தான் அழைத்திருந்தாள்." ஹாய் பேபி எப்படி இருக்க" மறுபுறம் மகியோ " ம்ம் குட் ஜோ" " நீங்க எப்படி இருக்கீங்க,வெட்டிங் எல்லாம் எப்படி?"
"ஆல் குட்" என்றவன் அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அமைப்பைத் துண்டித்தான்.
அர்ஜுனும் திருமணம் முடித்துக் சென்னைக்குக் கிளம்பி விட்டான்.
ஜோகித்தின் அறையின் ஹாலில் பெல் இசைக்க ரிமோட் மூலம் அறையைத் திறந்தான்.நயோமியும் உள்ளே வந்தவர் அவன அறையில் பார்வையை சுழற்றியபடி வந்தார். பாலஸில் ஜோகித்தின் தளமே மிகவும் அழகானது அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தான்.