ஹார்ட் பீட் திருடன் – 15

Advertisement

daya

Member
Member
WhatsApp Image 2026-02-21 at 09.23.27.jpeg



ஹார்ட் பீட் திருடன் – 15



அவனது அறையில் முன்னிருந்த வரவேற்பறையில் அவர் அமர ஜோகித்தும் அமர்ந்தான் " எஸ் மாம்" "ஏன் ஜோகித் இப்படிப் பண்ற" " நீங்க ஞாய ,தர்ம பக்கம் இருக்கீங்கனு நம்பிடன்,ஆனா நீங்க அப்படி இருக்கல உங்கள்ல எதிர்பார்ப்ப வைத்திருந்தன் மிஸ்டர் அன்ரூட் செயத்து பிழைனு தெரிஞ்சும் அவர்க்கு சப்போர்ட் செய்து உங்க மரியாதைய நீங்களே கொரச்சிட்டீங்க, " என்றான்.

அதில் கண்கள் கலங்கிய நயோமி "ஜோகித் அந்தப் பிரச்சினையை பற்றி எனக்கு தெரியாது " நீ டாடிக்கு பேசின கோவத்துல பேசிட்டேன்" என்றார்.

தாயின் கண்ணீரை காண ஜோகித்திக்கோ மனதில் ஒருவித அழுத்தம்,அவர் அருகில் எழுந்தமர்ந்தவன் அவர் கைகளைப் பற்றிய படி "குட்டி பசங்க,பெரியவங்க யாரையும் அந்தத் தொற்று விட்டு வைக்கல மாம்" என்றான் ஒரு வித கவலை தோய்ந்த குரலில் அதேவேளை என் கண் முன்னாடி தாமா மண்ண கல்ல கொற்ற போல இந்தியாவில் இருந்தவங்கள ஒருபுறம் பொதச்சாங்க" என்றவனுக்கோ அச்சம்பவங்கள் இன்றும் அவன் கண்முன் விரிந்தது நயோமிக்கோ கணவனின் செயல் பிறகுதான் புரிந்தது இருந்தும் கணவனை அவர் எப்படி விட்டுக் கொடுப்பார்.

எவ்வளவு அழுத்தமானவனாக ஜோகித் இருந்தாலும் இயல்பிலேயே இரக்க குணமுடையவன் அதை அறிந்த நயாமிக்கு ஆட்கொல்லி நோயினால் ஏற்பட்ட இழப்புக்கள் ஜோவுக்கு எப்படி இருக்கும் என புரிந்தது.

அவன் தோளில் கை வைத்தவர் " புரியுது" என்றார் மனம் கணக்க அவரின் கண்ணீரை துடைத்தவன்."நாளைக்கு இந்தியா கிளம்புறேன் ,பாட்டிய கவனமா பார்த்துக்கோங்க ,லோன்லியா பீல் பண்றாங்க" என்றான்.

"ஜோ அடுத்து உன்னோட வெட்டிங் தான், என்ன சொல்ற டேவிட் டாட்டரும் வெட்டிங் பண்ணி நியூசர்லாந்த செட்டில்லாகிடாள்,என்றார். அவன் கையைப் பற்றியவர் "நம்ம அல்வினோட சிஸ்டர் ஒலிவியா ரொம்ப அழகு ,அமைதி, உனக்கு பொருத்தமா இருப்பா" என்றார்

ஜோகித்த ஒரு பெருமூச்சுடன் தாயின் கைகளை தன் கையில் இருந்து அகற்றியவன் ,"இல்லை" என தலையாட்டினான்

நயோமிக்கு மகன் பேச்சை மறுத்ததில் கோபத்தில் வார்த்தைகளை விட்டு விட்டார் "அந்த அனாதை நாயை மனசுல வச்சுட்டானே என்னை எதிர்த்து பேசுர" என்றார்.

தாய் அழுத்தமாக பார்த்தவன் "சோ எல்லாம் தெரிஞ்சுதான் வேற பொண்ணப் பார்க்க கேட்டீங்களா" அப்போது தான் அது புத்திக்கு உதித்தது.இனி மறைத்து பயனில்லை என உணர்நத்வர் "ஜோகித் அவ ஒன்னும்மில்லாதவ உனக்கு பொருத்தமே இல்லடா என்றார் தவிப்பாக.

இருவருக்கும் தலையாட்டி சிரித்த ஜோகித் "நான் சொல்றது ஹெட்பண்ணலாம் பட் எனக்கு வேற ஆப்ஷன் இல்ல ,இப்படி பாட்டி நினைச்சிருந்தா நீங்க இங்க இருந்து இருக்க மாட்டீங்க மாம்" என்றான் .

ஜோகிதத்தின் வார்த்தையினால் நயோமிக்கோ உள்ளே துடித்துப் போனது அவன் சொல்வது உண்மைதானே ஆனால் அதை ஏற்றுக் கொண்டாள் அவர் நயோவியில்லையே "ஜோகித் யூ ஆர் ஹேட்டிங் மீ" "ஓஓ சாரி மாம் சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்”’ என்றான்.

நயோமியும் கோபத்துடன் அவன் அறையை விட்டு வெளியேறினார் ஜோகித்து ஒருவித இறுக்கத்துடன் அன்றைய பொழுதை கழித்தவன் அடுத்த நாள் சென்னைக்கு புறப்பட்டான்.

அர்ஜுன் முதல்நாள் சென்றிருந்தான், சென்னைக்கு வந்ததும் மகிஷாவிற்கு அழைப்படுக்க, அவளும் அழைப்பை ஏற்று "சொல்லுங்கள் ஜோ ,எப்போ வந்தீங்க" என்றாள் உற்சாகமாக,அவனுக்கும் அவள் உற்சாகம் தொற்றிக் கொண்டது போலும் "இரவு தான் வந்தேன், மஹி ஈவினிங் சந்திப்போம்" "ஓகே" என்றாள்.

ஜோகித்தும் தனது கம்பனிக்கு கிளம்பினான். சில லீவில் சென்றதால் அலுவலக வேலைகள் அவனை இழுத்துக் கொண்டது. அன்று மாலை சாஃப்ட் டெக் வாயிலில் மகிஷாவிற்காக காத்திருந்தான்.

அவளும் வர ஜோதிடத்தின் வீட்டிற்குப் புறப்பட்டனர். ஜோதிடத்தை கண்ட நொடி முதல் அவளது இதயத்துடிப்பு தாளம் தப்பியது.

ஜோகித்தின் வீட்டில் இதோ அவளை நெருங்கி துப்பாக்கியால் இலக்கை குறி வைத்து அடிக்கப் பழக்கிக் கொண்டிருந்தான்.

முதலில் துப்பாக்கியில் கவனமாய் இருநத்வளுக்கு நேரம் செல்லச் செல்ல தான் அவன் நெருக்கம் படபடப்பைத் தர அவள் கவனமும் சிதறத் தொடங்கியது.

அவள் கை மேல் கை வைத்து அவன் இலக்கை நோக்கும் போது அவளது இதயத்துடிப்பை அவளால் உணர முடிந்தது.அதில் அவள் குறி தப்பியது.

அவன் வருகையை அவளை ஏதோ செய்ய அவன் பார்வையாக் கூட அவளால் சந்திக்க முடியவில்லை. அவள் அவஸ்தை புரிந்ததால் அவனும் அவளை விட்டு விலகினான். துப்பாக்கி சுடும் பயிற்சி முடிவடைந்தது

சில நாட்க்ளின் பின் அவர்கள் இலங்கை செல்லும் நாளும் வந்தது. புது ப்ராஜெக்ட்டினால் கரணால் வர முடியாத நிலை மகிஷாவும் வர்க் ஃப்ரம் ஹோமிற்கு விண்ணப்பித்திருக்க அதுவும் அவளுக்கு கிடைக்கவே இலங்கை செல்லும் வாய்ப்பு இலகுவாக அமைந்தது.

கரண் இருவரையும் வழியனுப்ப விமான நிலையம் வந்தான். மகி நல்ல முடிவா ஜோக்கு சொல்லு என்றான். " மகியும் சிரித்தபடி அதெல்லாம் சொல்லியாச்சு என்றான். அவளை தோளோடு அனைத்தவன் வாழ்த்துக்கள் மகி" என்றான்.அவர்களைக் கண்ட ஜோகித்தும் கரனிடம் விடைபெற்று செக்கிங்கை முடித்துக் கொண்டு விமானத்தில் அமர்ந்தனர்.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும். விமான நிலையத்தை விட்டு வெளியேறினர் மகிஷாவிற்கோ ஒரு இத உணர்வு, அதே வேளை ஏசிபி சத்தியனும் அதே விமானத்தில் தான் வந்திறங்கினான்.

இலங்கையில் நடைபெறும் இரத்திணல் கற்கள தொடர்பான கண்காட்சியில் பாதுகாப்பிற்கே வருகிறான். ஆனால் இசிபி சத்யனுக்கு ஒரு எண்ணம் உதித்தது உலக நாடுகளின் தற்போது இலங்கை தான் இவ்வளவு பெருமதியான எக்சிபிஷன் நடக்கிறது கட்டாயம் அந்த திருடன் வர வாய்ப்பு இருப்பதால் இலங்கை காவல்துறைக்கு விடயத்தை தெரிவித்தவன் இதோ இலங்கை மண்ணில் காலை வைத்துள்ளான்.

வெளியே ஒரு டாக்ஸியை பிடித்து மகியும் ஜோகித்தும் பிரபல்யமான சங்கரிலா ஹோட்டல் அடைந்தனர். இருவரும் தங்களுக்கு அறைகளை எடுத்துக் கொண்டனர்.

"எதுக்கு இரண்டு ரூம்,ஒன்னும் எடுத்துப்போமே பேபி" என்றான். அவளோ அவனை முறைத்தபடி முன்னே செல்ல அவனும் அவளை பின்தொடர்ந்து அவனது அறையை அடைந்தான்.

"பேபி எதுனாலும் கால் பண்ணு" என்றவன் தனக்கான அறைக்குள் நுழைந்து கொண்டான். மகிஷாவும் தனது அறைக்கு வந்தவள் அறையை சுற்றி பார்க்க அறை முழுக்க வெண் நிறத்தில் இருந்தது அவ்வறையில் உள்ள பொருட்கள் உட்பட அனைத்தும் இருந்தன அழகாக வைக்கப்பட்டிருந்தது தனது பேக்கில் இருந்து உடையொன்றை எடுத்தவள் குளியலறை நுழைந்து கொண்டாள்

ஜோகித்தும் அறைக்கு வந்தவன் குளித்து முடித்து வர அவன் அலைபேசி தன் இருப்பை காட்டியது. அழைப்பை ஏற்க மறுபுறம் எலிசபெத் பாட்டி பேசினார் "ஜோகித் எப்படி இருக்க, பேத்தி எப்படி இருக்கா? " ம்ம் குட் கிரான்ட்மா ,நீங்க எப்படி இருக்கீங்க?" நான் நல்லா இருக்கேன்பா ,ஏன்பா பதவி வேணாம்னு சொல்ற சொத்த கவர்மெண்ட்டுக்கோ கொடுத்திருக்க ? " ஜோதிகா சிறு மௌனம் ரிட்டயராக இன்னும் காலம் இருக்கு தனி கிராமமா எப்படியோ ஒன்றை வருஷமாவது ஆகும் பிரியா இருங்க கொஞ்சம் நெஞ்சு வேலையை ஆன்ரோடு செய்தார் கொஞ்ச நாள் பெண்டிங்கில் இருக்கட்டும் என்று அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

பேபி சாப்பிட்டு வரலாம் என அழைப்பெடுத்துச் சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டு ரெஸ்டாரண்ட்டிற்கு வந்தான்.உணவகத்தில் இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டனர் .

"மகி என்ன சாப்பிடுற" "ஏதாவது ஆர்டர் பண்ணுங்க" என்றாள் அவன் இருவருக்கும் சேர்த்து உணவே ஆர்டர் செய்தான். உணவும் சிறிது நேரத்தில் வர அவள் முன் ஒரு தட்டை நகர்தி வைத்தவன் "சாப்பிடு" என்றான் அவளும் தனது உணவை உண்டவள் "ஜோ" என அழைக்க அவனும் அவளின் பிரத்தியமான அழைப்பில் உள்ளுக்குள் குதுகலித்தவன் "என்ன பேபி"

என்றான். அவளோ உணவை அளைத்தபடி " நீங்க ஏன் என்கிட்ட இந்த திருட்டப் பற்றிக் கேட்கல" என மெதுவாய் கேட்க, அவனோ உண்பதை நிறுத்திவிட்டு கதிரியில் சாய்ந்து அமர்ந்தவன் அவள் பார்வையை நேருக்கு நேர் சந்தித்து "நீ எதுக்காக இந்த வேலைய செய்றனு தெரியும் அதுல நியாயம் இருக்கு இத பத்தி கேட்டு உன்னை கஷ்டப்படுத்த விரும்பல என்றான்.

தன் மனம் கவர்ந்தவன் தன்னை புரிந்து கொண்டதில் அளவற்ற மகிழ்ச்சியும் காதலும் கொண்டாள் அதில் அவள் கண்கள் கூட கலங்கியது "ஈசி பேபி ப்ரியா விடு சாப்பிடு" என்றான். அவளும் உணவில் கவனத்தை செலுத்தினாள்.

இருவரும் உணவு உண்டு முடித்ததும் எழுந்து கொண்டனர். உணவுப் பொருட்களை துடைத்தவன் அவள் இதழின் மென்மையில் தன்னை தொலைத்தவன் இதழை கைகளால் வருடினான் அவளுக்கு அவன் தன்னை நெருங்கியதுமே இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கியது அவனும் அவளை நோக்கி குனிந்தவன் தன்னை நிலைப்படுத்தி "சாரி பேபி" என தலையை அழுத்த கோதியவன் தனது உணர்வுகளை அடக்கியவன் " ஈவினிங் கிளம்புவம்" என்றான்

அவளும் அவன் முத்தமிட வந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை. அவன் பேசியதில் " ஹா... என தன்னுவிற்கு வந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியவில்லை அவளது வெண் சந்தன தேகமும் வெட்கத்தில் சிவந்து போனது. அவளின் பக்கம் கூட அவனை சூடாகியது அவன் இதழில் புன்னகையுடன் அவள் கைகளை பற்றியவன் தங்களது அறைக்கு வந்தனர் அவளை அவள் அறையில் விட்டவன் " மூன்று மணிக்கு போவோம், இப்போ ரெஸ்ட் எடு பேபி" என அவள் கன்னத்தை தட்டி வெளியேறினான்.

அதே வேளை பேலஸில் மகிஷாவின் புகைப்படத்தை காட்டி யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார் நயோமி.​
 

Advertisement

Advertisement

Back
Top