ஹார்ட் பீட் திருடன் – 17

Advertisement

daya

Member
Member
ஹார்ட் பீட் திருடன் – 17



ஆசியாவின் ராணியைக் காணவில்லை என்றால் சும்மாவா,நாடு முழுவதும் இலங்கை காவற்துறை தேடுதல் வேட்டையை நடாத்தியது மூவரும் எங்கும் கிடைக்கவில்லை போக்குவரத்தைக் கூட முடக்கி தேடுதல் நடத்தினர்.

தப்பிய மூவரும் இரத்தினபுரியில் இருந்து சற்றுத் தொலைவில் சுமார் நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் பலாங்கொடை எனும் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.

குளிர் பிரதேசம் என்பதால் சுற்றுலா பயணிகளின் போர்வையில் மூவரும் இருந்தனர்.

ஆற்றில் மூழ்கியது, குளிர் என மகிஷாவை காய்ச்சலில் தள்ளியது. ஜோகித் அவளை பார்த்துக்கொள்ள,அர்ஜுன் இந்தியா செல்வதற்கான ஏற்பாட்டை கவனிக்க தொடங்கினான்.

காய்ச்சலில் வீரியத்தால் இரண்டு நாட்களின் பின்னே மகியின் உடல்நிலை தேறியது

மகிஷாவும் ஜோவும் ஒரே அறையில் தங்கிக் கொள்ள வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழையை வேடிக்கை பார்த்தபடி நிற்க மெல்லிய குளிர் காற்று உடலைத் கழுவிச் சென்றது.

அவள் பின்னே ஜோ அவள் முதுகோடு ஒட்டி வந்து நின்ற ஜோகித் "பேபி" என மென்மையாய் அழைக்க அழைத்தவனின் உடற் சூடு அவளுக்கு கடத்தப்பட்டிருக்க வேண்டும் அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைய அவளோ முன்னிருந்த ஜன்னல் கம்பிகளை அழுத்தப் பற்றினாள்.

ஜன்னல் கம்பியின் குளிர்ச்சி அவள் உள்ளங்கையில உணர ஜன்னல் கம்பியை இன்னும் இறுக பற்ற வைத்தது.

ஜோகித்தும் அவளை அனைத்தபடி அவள் கை மேல் கை வைக்க, அவளுக்கோ இன்ப அவஸ்தையாய் போனது அப்படியே அவளும் அவன் மார்பில் சாய அவனும் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான். அதில் அவள் உடல் சிலிர்த்து அடங்க அவன் தொடுகையில் பாகாய் தொய்ந்து அவன் மார்பிலே மே சாய்ந்தாள்.

வெளியே மழையும் உள்ளே குளிரும் ,தனிமையும் இருவரும் காதலும் முதலும் ஆக ஒருவரை இருவரும் காதலாலும் மோகத்தாலும் ஒருவரை ஒருவர் தழுவினர்.

ஜோவும் தன் அணைப்பில் இருந்து அவளை விலக்கியவன் துடிக்கும் அவள் இதழ்களை முற்றுகையிட்டான். அவ ஒரு முத்தமே அவளுக்கு காதல் தீயை பற்றி வைத்தது. ஒற்றை முத்தத்திலேயே துவண்டு போனவளை கைகளில் ஏந்தி மஞ்சத்தில் கிடத்த அவளுக்கு வெட்கத்தில் அவன் கண்களை பார்க்க கூட முடியவில்லை.

அவளை அள்ளி அணைத்து மலரிலும் மென்மையாக வருட அவள் மேனியோ எங்கோ பரப்பது போல் உணர்வு, ஜோ என உணர்ச்சியின் பிடியில் அவன் முதுகில் தன் நகக் கண்களை பதித்தாள் அவனும் அவள் வலியினால் முனக அவளை முத்தமிட்டு முத்தமிட்டே தன்னுடைமையாக்கிக் கொண்டவன் அவளை அனைத்த படியே தூங்கிப் போனான்.

மறுநாள் காலை முதலில் கண் விழித்ததென்னவோ ஜோகித் தான். தன் மார்பில் கோழிக் குஞ்சாய் சுருண்டு துயின்றிருந்தாள் மகி.

அவளைக் கண்ட நொடி இரவின் ஞாபகங்கள் மேலெழுந்து உடலை சூடாக்க அவளை பார்த்தவனுக்கு மீண்டும் அவன் தேவையை உணர்த்த அவளை தன்னில் இருந்து விலக்கி தலைமையில் சரியாக படுக்க வைத்தவன் அவளின் நெற்றியில் மென் முத்தமிட்டபடி குளிக்கச் சென்றான்.

காலை எட்டு மணியளவில் கண்வழித்தவளுக்கோ போர்வையால் மார்பில் சுற்றியபடி எழுந்தமர்ந்தாள்.

ஜோகித்தும் வெளியே குளித்தபடி இடையில் சாரனோடு தலையை துவட்டியபடி வந்தான். அவனை வெற்றுமார்புடன் கண்டவளுக்கு கன்னங்கள் சிவக்க அதில் தான் சாய்ந்து, துயின்றவை ஞாபகத்தில் வர அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை வெட்கத்தில் தலை குனிந்தபடி எழும்பியவள் தனது உடைகளை தேடி எடுத்தாள்.

அவளை பார்த்தபடி வந்தவனுக்கோ காதல் கூடியதை அவள் தன்னை தவறாக நினைத்திருப்பாளோ எனும் எண்ணம் தான். தனது எண்ணத்தை பொய்யாக்கும் படி அவளது நாணம் சுமந்த விழிகளும் சிவந்த கன்னங்களும் வேறு கதை சொன்னது.

அவளை இயல்பாக்கம் பொருட்டு " மகி குளிச்சிட்டு வா வெளியே, போலாம் மழை விட்டிருக்கு என்றான். அவளும் "சரி" எனும் விதமாக தலையாட்ட அவளை குறும்பாக பார்த்தவன் " இல்ல குளிக்க வைக்கனும் என்றாலாம் சொல்லு" என்றவன் அவள் முன்னே உடை மாற்ற அவளோ அதிர்ந்து அவனைப் பாரத்த்வள் தன்னை சமாளித்துக் கொண்டு " "வெட்கமே இல்ல" என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். அவனும் " கண்சிமிட்டியபடி அலைபேசி யுடன் வெளியேற அவளோ உடைகளை எடுத்தவள் மாற்றிக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

"ஹலோ அர்ஜுன் என்னாச்சு" மறுபுறம் அர்ஜுனோ எல்லாம் ரெடி இந்த ஏசிபி தான் ஏர்போர்ட்டில புள் செக்கிங் பண்றான்" எப்படி பொருள் கொண்டு போறது" " அத நான் பார்த்துக்குறன்" என்றவன் திரும்ப மழையில் குறித்த அன்றலர்ந்த மலர் போல் நின்றாள் மகி.அவள் பார்வையில் தன் விழிகளை தாழ்த்தியவள் "ஜோ" என்றாள். அவனும் தன் உணர்வுகளை அடக்கிய படி "வா சாப்பிட்டு வரலாம்" என்றவன் அவள் கைகளைப் பற்ற அதுவோ ஜில்லிட்டிருந்தது.

ஓரளவு பெரிய கடை தான் அதில் இருவரும் உணர்த்தினர் அப்போது " அங்கிருந்த தொலைக்காட்சியில் ஆசியாவின் ராணி பற்றிய செய்தியே ஓடியது. ஜோகித்தும் மகியும் ஒருவயை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதே வேளை அவர்கள் திருடச் சென்ற போது இருந்த முகமூடி போட்ட முகங்களும் தொலைக்காட்சியில் உலா வந்தன.

இருவரும் மேக்கப் மூலம் தங்களது முகத்தின் தோற்றத்தை மாற்றியும் முகமூடியனிந்துமே சென்றனர். அதனால் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. அவளோ புகைப்படத்தைக் கண்டதும் " ஜோ" என்றாள்.

அவனும் அவளை கண்களால் அமைதிப்படுத்தியவன். உணவுண்டு முடித்ததும் இருவரும் வெளியே வந்தனர்.

"மகி இரண்டு மணி போல் கிளம்புவம்"என்றான். அவளும் சரி என்றவள் அறைக்கு வந்ததும் தங்களது உடமைகளை தாயார் செய்தனர்." ஜோ" என ப்ளு சபையரை அவள் கையில் எடுக்க அதனை வாங்கிய ஜோகித் , கையில் வைத்துப் பார்க்க ' கையில் ஒரு வித குளிர்ச்சி ,அதுவோ வெளிச்சம் அது மேல் பட்டு சிதறும் போது சாதாரண கல் போலல்லாது அந்த நீலத்தினுள் சின்ன மின்னல் வெட்டியது போல் ஜொலித்தது. " அமேசிங்" என்றாள் மகி.

ஜோகாத்தும் புன்னகையுடன் "இது வெறும் கல்லு இல்ல பேபி" பல ஆயிரம் வருஷமா பூமிக்கடியில் தூங்கிட்டு இருந்த ஒரு ரகசியம், இப்ப நம்ம கையில ஒரு துளி நீல நிலவா ஜொலிக்குது" என்றான்.

சிறிது நேரத்தில் அதனை ஒரு சிறிய பெட்டியில் வைத்தவன் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு இரத்தினபுரியை விட்டு வெளியேறினர்.

லோக்கல் பஸ்ஸில் தங்களது பயணத்தில் தொடர்ந்தவர்கள் அப்படியே கொழும்பை வந்தடைந்தனர். நீண்ட பஸ் பயணம் இருவருக்கும் சோர்வைத் தரவே அன்று கொழும்பில் தங்கி அடுத்த நாள் காலையில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

விமான நிலையத்தில் சோதனைகள் அனைத்தும் கடும் கெடுபுடியாகவே இருந்தது. க்குயின் ஆஃப் ஏசியா தேடும் பணிகள் தீவிரமாக இருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனை செய்த போது எங்கே மாட்டிக் கொள்வோமோ என இதயத்துடிப்பு தாறுமாறாக துடித்தது மகிக்கு ஏசிபி சத்தியனும் அங்கு காவலர்களிடம் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை ஜோதிடத்தை தழுவிய வேளை அங்கீ போதைப் பொருட்களுடன் ஒருவன் பிடிபட ஜோகித்தையும் மகிமையும் விட்டு விட்டு அங்கு வியைந்தனர். அதே வேளை கடைசியாக சோதனை செய்ய எடுத்த பாக்ஸில் தான் ஆசியாவின் ராணி தூங்கிக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் விமானத்தில் ஏறிக் கொண்டனர்.

விமானமும் ஓடுபாதையில் மெல்ல மெல்ல முன்னேறி பிறந்தது. அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது. அவளும் ஜோவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சில மணி நேர பயணத்தின் பின் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வெளியே வர அவர்களுக்காக கரனும், ஆர்ஜுனும் காத்துக் கொண்டிருந்தனர். இவரும் காரில் ஏறியதும் காரும் தங்களது இடம் நோக்கி புறப்பட்டது. "ஜோ எல்லாம் ஓகே தானே" " ம்ம் " என்றான்.

மகிமை அவளது குவாட்டஸில் இறங்க " ஜோ அவளை முன்வைத்துப் பார்க்க அவளோ கண்களால் கெஞ்சியனாள் அவனது முறைப்புடன் தங்களது வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

"மகி பயணம் எப்படி இருந்துச்சு ?""ரன்னிங், ஜம்பிங் ,எஸ்கேப்" என்றாள் கண் சிமிட்டி. " ஜோ ஈவினிங் வான்னு சொல்லி இருக்கான் நீ ரெஸ்ட் எடு, ஈவினிங் வரேன் "என கரனும் அவளிடமிருந்து விடைபெற்றான்.

தன்னை சுத்தப்படுத்தும் கழுத்தில் சிறு எரிவு அதனை வருடியவளுக்கோ நேற்று ஜோ வுடன் இழைத்து தான் மனக்கண்ணில்.

அவளை விட்டு அவன் விலகவே இல்லை. முத்தமிட்டு முத்தமிட்டே ஒருவழியாக்கி விட்டான். அதே வேளை அந்தோணியார் தேவாலயத்தில் வைத்து தனது கையில் இருந்த மோதிரத்தை அணிவித்தவன் அவளை வன் கோல் அபேஸிற்கு அழைத்துச் சென்றான்.

வரும் போது சாக்லேட் மற்றும் பொருட்கள் சில வாங்கியவர்கள் அறைக்கு வந்தனர்.

அன்று இரவு அவளும் குளித்து விட்டு வந்தவள் வாங்கி வந்த சாக்லேடை பிரித்து உண்ண வெளியே பாட்டியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் உள்ளே வர அவளும் சாக்லேட்டை ரசித்து உண்ணும் அவள் இதழ்களையே பார்க்க அவளோ சாப்பிட்ட பாதி சாக்லேட்டை நீட்டி " வேணுமா" எனக் கேட்க அவனும் "ஆம்" என்றவன் அதிரடியாய் அவள் பிடரியில் கைவைத்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளின் இதழ்களை கொய்யத் தொடங்கினான். அவன் அதிரடியை எதிர்பார்க்காத வள் ஜோ எனும் வார்த்தை அவன் இதழக்ளுக்குள் காணாமற் போனது.

அவள் கையில் இருந்த மீதி சாக்லேடோ உருகி அவள் கழுத்தில் வழிய அவன் அதை சாக்லேடின் வழியே துடைக்கிறேன் எனும் பெயரில இதழினாள் துடைக்கத் தொடங்கினான். அவன் ஒவ்வொரு இதழ் ஒற்றலுக்கும் துடித்துப் போனாள மகி அவன் ஒவ்வொரு முத்தத்திலும் காதலும் காமமும் சரி சதவீதம் இருந்தது.

அவள் கையில் இருந்த சாக்லேட்டை திருடியவன் திருடியின் உடலில் பூசிக் கொண்டு அதனையும் ருசிக்கத் தொடங்கினான். அவளும் அவனுள் பாந்தமாய் அடங்கிப் போனாள். அவளை கொள்ளையிட்டதும் அவளை அனைத்தபடி அவளின் முகத்தைப் பார்த்தவன் " பேபி சாக்லேட் செம டேஸ்ட் என்றான். அவளோ வெட்கத்தில் அவன் மார்பில் சாய முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

இருவரும் அசதியில் தூங்கிப் போனவர்கள் மறு நாள் காலையில அநேரமே எழுந்து தயாராகி இந்தியா கிளம்பினர்.​
 

Attachments

  • WhatsApp Image 2026-02-21.jpeg
    WhatsApp Image 2026-02-21.jpeg
    90.4 KB · Views: 0

Advertisement

Advertisement

Back
Top