ஹார்ட் பீட் திருடன் -11
நாட்களும் வேகமாகச் செல்ல " ஹலோ மகி எங்கயிருக்க" "ஆஃபிஸ்ல தான்" புது ப்ராஜெக்ட் ஒன்று வந்திருக்கு ". " ம்ம் பேசலாம் " என்றாள்.
அதன்படி அலுவலகம் விட்டு வந்த மகிஷாவையும் கரனையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு வந்தான் ரோகித். அவன் கார் ஒரு வீட்டின் முன் நின்றது. சற்றுப் பெரிய வீடு தான் மகிஷாவும் இதுவே முதல் முறை ஜோகித் வீட்டிற்கு வருவது.
மூவரும் காரில் இருந்து இறங்கி உள்ளே செல்ல அர்ஜுனும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர்.ஜோகித்தைக் கண்டவரும் " கண்ணா எப்படி இருக்க,பார்த்தே ரொம்ப நாளாச்சு” என அவன் கண்ணம் தடவியவர்.
“இதுதானா பொண்ணு அழகா இருக்காமா” என மகிஷாவை அனைத்தார், அவளுக்கோ என்னடா நடக்குது இங்க அவள் சிந்தனையில் இருக்க " உன் பேரென்னமா? " அவளும் “மகிஷா” என்றாள். “அழகான பெயர்” என்றார் அவர். ஜோகித்தும் “ஆமாம் பெரியம்மா ரொம்ப நேரமா வந்து” என அமர மகியும் கரணும் எதிரே சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.
வந்திருப்பதோ அர்ஜுனின் தாய் நயோமிக்கு அக்கா முறை , சிறிது நேரம் அவருடன் உரையாடியவன்.
"பெரியம்மா இருக்க ஆஃபிஸ் வேலை கொஞ்சம் இருக்கு முடிச்சிட்டு வாரன்" என்றவன் எழ கரணும் மகிஷாவும் எழுந்து கொண்டனர். அவனும் இருவரையும் அழைத்துக் கொண்டு அலுவலக அறையினுள் நுழைந்தான்.
'வேர்க் ஃப்ரம் ஹோம் ' என அவன் சொன்னதற்கு ஏற்றவாறு அவ்வறை இருந்தது.
பெரிய அளவிலான டெஸ்க்டாப் கணினியும். அதற்கேற்ப மேசையும் இருந்தது. சற்றுத தள்ளி சோஃபாவும் அதன் முன்னே சிறிய மேசையும் இருந்தது.
பெரிய எல்ஈடீ டீவியு சோஃபாற்கு எதிர்ப்புறம் சுவரில் பொருத்தப்பட்டு சவுண்ட் சிஸ்டமும் இருந்தது.
அனைத்தையும் பார்வையிட்டபடி வர "உட்காருங்க" என்றான் கோகித் இருவரும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.
லாப்டாபினை திறந்தவன் எதையோ எடுத்து அவர்கள் முன் லாப்டாப்பை திருப்ப " திரையில் ஒரு வகை நீல நிறக் கல் கண்ணைப் பறிக்கும் ஒளியில் ஒளிர்ந்தது.
" நீங்க இப்போ பார்க்கிற இந்தக் கல் தான் இப்போ டிமாண்ட்ல இருக்கிற விலை கூடிய கல் , ' ஆசியாவின் ராணினு சொல்லுவாங்க, இத தான் அடிக்கனும் " என்றான்.
மகிஷாவோ "இது எங்கயிருக்கு" இது இலங்கையிலான் கண்டுபிடிச்சிருக்காங்க , இதுட பெறுமதிய கணக்கிடவே முடியல, டார்க் வெப்ல இதுக்கு பல மில்லியன் போகும் , நிறைய பேர் இத தான் டார்க் வெவ்ல கேட்காங்க, அவ்வளோ டிமாண்ட் இதுக்கு" என்றான்.
அப்போ சிலோன் போகனுமா? எனக் கேட்க ஜோகித்தும் " ம்ம் " என்றான் . எனக்கும் ஊருக்குப் போய் வேலை இருக்கு, போய்ட்டு வந்து எப்படியும் வார மாதம் இருபத்தௌந்தாம் திகதி கிளம்புவம்" என்றான்.
" மகிஷாவோ எல்லாம் ஓகே இதுட ஃப்ர்சண்டேஜ் எப்படி என்றாள் ,ஜோகித்து"ம்ம் செம்ம ஷார்பா இருக்கா ? எவ்வளோக்கு முடிக்கமோ அதுல ஃப்டி ஃப்டி" என்றான். அவளோ " "கரண் என்ன சொல்லற? “ஓகே” என்றான்.
அப்போது அர்ஜுனின் தாய் பேசியது ஞாபகம் வர ,”அந்த ஆண்டி யாரு? அவங்கள்ட என்னத்த சொல்லி வச்சிருக்கீங்க ?" கரணோ " மகி பேசிட்டு வா ,வெளிய வெயிட் பண்றேன் " என்றவன் நாகரீகமாக அவ்வறையில் இருந்து வெளியேறினான்.
ஜோகித்தும் தாடையை தடவியபடி அர்ஜுன் அம்மா ஏதோ உளறிருக்கான்” என்றவாறு அவளை நெருங்க அவளுக்கோ மனதில் படபடப்பு அவள் காதருகே குனிந்தவன் "லவ் யூ பேபி" என்றான் அவளோ அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் அறையை விட்டு வெளியேறினாள்.
வெளியே அர்ஜீனையும் அவனின் தாயையும் காணவில்லை "ஓகே நாங்க கிளம்புறம் " என வெளியேறும் போது " மகி காஃபி குடிச்சிட்டு போமா" என்றார். அவளுக்கோ அவஸ்தயாய் இருக்க அர்ஜீனின் தாயோ ஐந்து நிமிடத்தில் காஃபியுடன் வந்தவர் அனைவருக்கும் கொடுத்தார்.
காஃபியை அருந்திய பின் ஜோகித்தோ இருவரையும் அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தான்.
இரு நாட்கள் சென்றிருக்கும் கரண் முன்பு போல் வெளியே செல்வதில்லை காதலின் வலி ,தன்னை விட்டு திவ்யா மற்றோருவனை காதலிப்பது வைத்து பெண்கள் இப்படியா என அருவருத்துப் போனான்.
கரனை வெளியே செல்ல அழைத்தும் பார்த்தாள்,எவ்வளவு சொல்லியும் பார்த்தாள் கரணால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை அவன் காதல் உண்ணமையல்லவா. அவனாக வெளியே வந்தால் தான் உண்டு மகியும் அலுவலகத் தோழிகளுடன் எப்போதாவது வெளியே சென்று வந்தாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலையில் தனது வேலைகளை முடித்துக் கொண்டு ஆசுவாசமாக தொலைக் காட்சியைப பார்த்துக் கொண்டிருந்தாள் மகி.அப்போது அழைப்பு மணி இசைக்க "யாராரிக்கும் " என எண்ணியபடி கதவைத் திறக்க ஜோகித் தான் நின்றிருந்தான்.அவனை எதிர் பார்க்காதவள் கதவை மீண்டும் படார் அடித்துத் சாத்த,ஒரு நிமிடம் ஜோகித் திகைத்துப் போனான்.
"மீண்டும் அவள் கதவைத் திறநத்வள் "உள்ள வாங்க " என்றாள். புதிதாக அவள் கழுத்தில் சால்லொன்று இருப்பதைக் கண்டு கொண்டான்.
" மகி இன்னைக்கு என்னோட ப்ரத் டே என்றான். அவளும் புன்னகையுடன் "ஹாப்பி பர்த்டே" என கை நீட்ட அவளையும் அவள் கையையும் பார்த்தவன் "இன்னைக்கு மார்னிங் இருந்து ஈவினிங் வர என்னோட டைம் ஸ்பெண்ட் பண்றீயா? எனக் கேட்க அவளோ யோசனையில் புருவம் சுருக்கியவள் என்ன தோன்றியதோ அவளும் " ஓகே ரெடியாகி வாரன் இருங்க” என்றாள்..
அவள் வருவாதக சொன்ன சந்தோசத்தில் அவள் தோளைப் பற்றி சுற்றியவன் அவள் முறைக்கவே" சாரி சாரி" என்றான் அவளும் அழகான சுடிதாரில் தயாராகி வர இருவரும் புறப்பட்டனர்.
இங்கு நயோமியோ மகிஷாவின் புகைப்படத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அர்ஜனை அழைத்தவர் " அர்ஜு ஜோகித்ர லவ்வ பற்றி ஏன் சொல்லல" என எடுத்த எடுப்பிலேயே அவர் இப்படி கேட்க,என்ன சொல்லுவான் அவன் அவனின் அமைதி எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.
அர்ஜுனுக்கு திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். அர்ஜீன் தாய் தான் நயோமிக்கு அழைத்து " உன் மருமகளைப் பார்த்தன் ரொம்ப அழகாக இருக்கா",ஜோகித்துக்கு பொருத்தமான இருப்பா” என்றார்.அவர் சொன்ன பின் தான் நயோமிக்கு விடயம் தெரிந்தது. அவரிடம் மகிஷா பற்றி தெரிந்து கொண்டவர் இதோ மகிஷாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கு ஜோகித் இருக்கும் போது எதுவும் பண்ண முடியாது அவன் அரண்மனை வரும் நாளுக்காக காத்திருந்தார்.
இருவரும் காரில் தான் பயணித்தனர் " தான் இப்படி காதல் வயப்பட்டு அவளுக்காக இப்படி இருப்பான் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்." அவனது மனநிலைக்கு ஏற்றவாறு பாடல் ரேடியோவில் விழுந்தது.
" எங்க போகலாம் " என ஜோகித் கேட்க ,அவளோ " நீங்க தான் ப்ர்த் டே பாய் ,நீங்களே சொல்லுங்க” என்றாள் சிரிப்புடன்.
ஹைவே ரோட்டிற்கு காரைத் திருப்பியவன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் காரை நிறுத்தியவன் “ஃப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுது யோசிப்போம்” என்றான்.
இருவரும் காரில் இருந்து இறங்கி ஹோட்டலினுள் நுழைந்து ஒரு இருக்கையில் அமர்ந்தனர். சர்வண்ட்டும் அவர்களை நெருக்கியவன் " ஆடர் சார்" என்றான் " மகி எனக்கு தோசை " ஜோகித்தோ "தோசை ரெண்டு பிளேட் "என்றான்.
சர்வண்டும் அங்கிருந்து நகர்ந்ததும் . “மகி” அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க"கல்யாணம் பண்ணிக்கலாமா" எனக் கேட்க,உள்ளே அவன் பேச்சில் அதிர்த்தாலும் மகிஷாவோ முகத்தில் எதையும் காட்டாது " நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்கோங்க, நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்குறன் என்றாள். அவள் பேச்சில் சத்தமாய் சிரித்தவன்
" இந்த திருடனுக்கேத்த திருடி நீ தாண்டி "என்றான் கண்சிமிட்டி.மேசையில இருந்த அவள் கைகளை தனது கைகளுக்குள் வைத்தபடி அவளைப பார்க்க, இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன் நடந்த திருட்டுச் சம்பவம் கண்முன் விரிந்தது.
"டேய் கரண், இது நிஜமாவே ஆபீஸ் வேலை தானா? என மகிஷா கரணிடம் ஏர்போர்ட்டில் வைத்து கேட்டாள்.
அலுவலகத்தில் இருந்து திறமையாக வேலை செய்பவர்கள் அதிலும் புதிதாக இனைந்து கொண்டவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களில் சிலரையும் இணைத்து. மும்பையில் குறிப்பிட்ட தனியார் வங்கியொன்றிற்கு அவர்கள் கேட்ட சிஸ்டம் தொடர்பான அலுவலக பணிக்காகவே சாஃப்ட் டெக் நிறுவனம் அனுப்பியது.
கரண் மகியோடு சேர்த்து அறுவர் கொண்டே குழுவே மும்பை புறப்பட்டுள்ளது "அடிப்பாவி நாம் தான் அங்க டேட்டா என்றி பண்ண்ப் போறம்,அதோட அவங்க சிஸ்டம் பற்றின வேலை நிறையவே இருக்கு மறந்துடியா என்ன? என நக்கலாய்க் கேட்டவன் ,”ஆனா கிடைச்ச கேப்ல மும்பைய ஒரு சுத்து சுத்திடலாம்” என்றான் கண்சிமிட்டி.
மறு நாள் காலை அவர்கள் மும்பை விமான நிலையத்திற்கு வந்தவர்கள் அங்கு இருந்த நட்சத்திர ஹோட்டலில் அனைவரும் தங்கிக் கொண்டனர்.
வேலை விடயமாக அவர்கள் வந்ததென்னவோ உண்மை தான் ஆனால் மிகிக்கும் கரணுக்கும் பழம் பெரும் சிலையொன்றை அடிக்கும் முக்கிய வேலையும் இருந்தது.
மினிஸ்டர் வரதனின் பொருப்பிலேயே அச்சிலை உள்ளது தங்களது அலுவலக வேலையை முடித்துக் கொண்டு இருவரும் மினிஸ்டர் வரதனிடம் சிலை தொடர்பான தகவலை திரட்டத் தொடங்கினர்.
அதன் படி அவர்கள் வந்திறங்கிய குழுவினர் வந்த வேலையை முடித்துக் கொண்டு மும்பையை சுற்றத் தொடங்கினர்.
ஆனால் மகி உடல் நிலை சரியில்லை என ஹோட்டலில் தங்கிக் கொள்ள கரண் முதல் நாள் அவர்களின் குழுவுடன் மும்பையை சுற்றிப் பார்க்க புறப்பட்டான்.
அதே வேளை அவர்கள் கிளம்பியதும் மகியும் மினிஸ்டர் வரதனின் பண்ணை வீட்டை பற்றியும் அங்கு சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டதையும் அறிந்து கொண்டாள்.
அடுத்த நாள் கரண் குறித்த வங்கிக்குச் செல்ல வேண்டிய சூழல் வரவே வங்கிக்கும் சென்று வந்தவன் வரதனின் பண்ணை வீட்டில் நடைபெறவுள்ள பார்ட்டி பற்றியும் அறிந்து கொண்டான்.
நாளை ஊருக்கு செல்ல வேண்டும் மகியும் கரணும் அங்கு காஃபி ஷாப்பில் இருந்தனர்.
எப்படி தங்களது டீமை விட்டு இங்கு நிற்க முடியும் என யோசனையில் இருக்க
.பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மகியின் டீம் லீடர் ப்ரியா மகிக்கு அழைத்திருந்தாள்.
" மகி எங்கயிருக்க காஃபி ஷாப்ல இருக்கேன் மேடம்" “ஓகே வெயிட் பண்ணு வாரன்” என்றவள் அங்கு வர மகியையும் கரணையும் கண்டவள் "ஹாய்” என்றபடி அவர்களின் மேசையில் அமர்ந்தாள் கரணும். ப்ரியாவிற்கு காஃபி ஒன்றை ஆர்டர் செய்தான்.
"மகி நாளைக்கு ஊருக்கு போகனும் ஆனா பேங்ல சிஸ்டம் கொஞ்சம் ப்ராப்ளம் போல, என்னனு.பார்ககனும் நாளைக்கு நாங்க கிளம்புறம்” என்றாள் அவள். மகியும் “ஓகே மேடம் நான் பார்த்துக்கிறேன், நாளண்ணைக்கு கிளையண்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு தானே,"ப்ரியாவும் “ஆம்” என்றவள் "கரண் நீங்களும் மகி கூட நின்னு வேலைய முடிச்சிட்டு வாங்க" நாங்க கிளம்புறம் என்றாள்
இருவருக்கும் அப்படி ஒரு சந்தோசம். தங்களது திட்டத்தையும் செய்ய முடியுமல்லவா, மகிமை பார்த்த கரணும் "ஓகே மேடம்" என்றான்.
அதன் படி மறு நாள் ப்ரியா தலைமையில் வந்த டீம் மீண்டும் சென்னை கிளம்பினர்.கரணும் மகியும் வங்கிக்கு கிளம்பனர்.
அங்கு சிஸ்டத்தில் ஏற்பட்ட பக்ஸ்ஸை சரி பண்ணியவர்கள் மினிஸ்டர் வரதனின் வீட்டை நோட்டமிடக் கிளம்பினர்.