ஹார்ட் பீட் திருடன் -12

Advertisement

daya

Member
Member
ஹார்ட் பீட் திருடன் -12

வானம் தெளிவாக இருந்தது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் நிலவு வெளிசச்ம் ஆங்காங்கு மெலிதாக விழுந்தது

ஆனால் அந்த நிலவை விட அழகான நிலா சுவர் மேல் ஏறி உள்ளே குதித்தாள் மகிஷா. கரண் எப்பவும் போல் வெளியே பார்ட்டி நடக்குமிடம் இருந்து சிக்கனல் கொடுக்க தாயாராக இருந்தான்.

ஜின்ஸ் ஷர்ட் போட்டு தனது நீண்ட கூந்தலை பின்னலிட்டிருந்தாள். அதிலிருந்து தப்பிய சில முடிகள் அவளின் நெத்தியில் விழுந்து செல்லமாக குசும்பு பண்ணியது.அவளும் அதனை தனது காதின் புறம் செருகியவள் கண்கள் நாலாபுறமும் சுழல அந்தக் கண்ணில் தான் எத்தனை பாவமங்கள்,அந்தக் கண்களில ஒரு காந்தம் அதில் அடிக்கடி தெரியும் சோகத்தை மீறிய கள்ளத்தனம் சமீப நாளாக இருக்கிறது.

அவள் அப் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தது தொடக்கம் அனைத்தையும் ஒரு உருவம் ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தது. அவளோட அந்த சிம்பிள் பவர்ஃபுல் லுக்கே அவளை அழகாக காட்டியது.

மகி இன்னிக்கு மட்டும் இந்த சிலையை எடுத்துட்டோம்னா நம்ம ஒரு மூணு மாசத்த ஒப்பேத்திடலாம் 'ஆல் தி பெஸ்ட்டி செல்லம்' என தனக்குத்தானே ஒரு தம்ஸ் அப் கொடுத்துக்கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

அவள் திரட்டிய தகவலின்படி இந்த படிகளில் கீழ் உள்ள இரசிய அறையில் தான் அந்தப் பழங்காலத்து தங்கச்சிலை இருக்கிறது. ரொம்ப கவனமாக அவள் மெல்ல மெல்ல நடந்து அந்த அறைக்குள் போனாள். பண்ணை வீடு என்பதால் பாதுகாப்பு சற்று குறைவாகவே இருக்கும் என எண்ணி இருந்தாள் ஆனால் இங்கு அதீத பாதுகாப்பு பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்.

கரணும் பார்ட்டிக்கு வந்தவர்களுடன் இணைந்து கொண்டான். அவ்வறையினுள் சிலையை எதிர்பார்த்தவழுக்கோ பெரும் அதிர்ச்சி சிலை இருக்க வேண்டிய இடத்தில் சிவப்பு ஒற்றை ரோஜா இருந்தது.

'என்னதிது பூ இருக்கு ஒரு நிமிடம் குழம்பிப் போய் நிற்கும் போது அந்த இருளில் ஒரு மெல்லிய சிரிப்பு சத்தம்

அந்தச் சிலையை "அங்க இல்ல மேடம் இங்க இருக்கு" எனும் குரல் கேட்டது "இந்தக் குரல் அவள் யோசித்தவள் " ஜோகித்" என்றாள் அவனும் சிரித்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான். அவனது ப்ளாக் லெதர் ஜாக்கெட் அவனுக்கு ஒரு இன்டர்நேஷனல் திருடினின் லுக்கைத் தந்தது

மகிஷா கோபமாக அதே சமயம் தன் மனப் பயத்தை மறைத்தபடி "ஜோகித் நீ..நீஇங்க என்ன பண்ற" மெலிதாக சிரித்தவன் "நானும் உன்ன மாதிரி தான் ஆனா ஒரு சின்னத் திருத்தம் நீ உனக்காக திருடுற ,நான் த்ர்லுக்காக திருடுறன் என்றவன்,நான் எங்க வேணா இருப்பன் ,ஆனா நீ திருடுறதுக்கு இன்னும் கொஞ்சம் ட்ரய்னிங் எடுக்கனும் போலயே",என கிண்டலாக சொல்ல

அவளால் இதை நம்பவே முடியவில்லை அப்போது தான் முதலில் அவனை சர்வண்ட் உடையில் பார்த்தது ஞாபகம் வந்தது. அவளோ அவனை அதிர்ச்சியாய் நோக்க ,

ஜோகித் தான் இருந்த இடத்தில் இருந்து மெதுவா எழுந்தவன் அவளை நோக்கி வர அவனது முன்னேறும் ஒவ்வொரு அடியும் அவளை படபடப்பாக்கியது.கள்ளம் புகுந்த மனமல்லவா....

அவன் அவளை நெருங்கும் போது அவனது காஸ்ட்லி பெர்பியூம் வாசனை அந்த இடத்தையே ரொமாண்டிக்காக மாற்றியது.

அவளும் ஒரு போன் நிலைக்குச் சென்றவள் தன்னை சுதாகரிச்சுக் கொண்டு வெளியே வந்தவள். " ஜோகித் மரியாதையா சிலையக் கொடுத்துட்டு" என்றாள்.

ஜோகித்தோ லேசாக சிரித்தேன் பேபி என மெதுவாக அவள் கையை தட்டியவன்,அவள் அவனை முறைத்துப் பார்க்க " ச்சோ ச்சோ இவ்வளோ அழகான பொண்ணுக்கு இம்புட்டுக் கோபம் ஆகாது ,இந்த சிலை வேணும்னா ஓடி வந்து பிடிச்சுக்க" அவ்வளவு தான் அவன் சிலையுடன் அவ்வறையை விட்டு ஓட அவளும் அவனை விடாமல் அவன் பின்னாடியே துரத்திக்கொண்டு கொண்டு ஓடினாள்.

அதே வேளை ஆட்கள் பேசும் சத்தமும்,நடந்து வரும் ஆர்வமும் கேட்க தனது ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்தவன் அவன் பின்னாணியே ஓடி வந்தவள் அவன் நிற்பதைக் கண்டவள் அவனில் மோதியபடி நிற்க அவள் மோதியதில் காலை அகற்றி வைத்து விழாது தன்னை சமாளித்தேன் அவள் கையை இழுத்துக் கொண்டு பக்கவாட்டாக உள்ள அறைக்குள் நுழைந்து கொண்டான்.." அவ்ள ஏய் என்றபடி திமிறி அவள் இதழில் கை வைத்து மூடியவன் "சூ... " என்றான் பேச்சுக் குரல் அவர்களைக் கடந்து சென்றதும் அவள் வாயில் இருந்து கையை எடுக்க அவளோ ஓடிவந்ததில் இளைக்க மேல்மூச்சு க்கான கீழ் மூச்சு வாங்க நின்றாள்.



மீண்டும் சிலர வரும் ஆர்வம் கேட்க காதைக் கூர்மையாக்க " சார் இந்த ரூம் பக்கம் தான் சத்தம் வந்துச்சி என படிகளுக்கு கீழிருந்த அறையைக் காட்டி ஒருவன் சொல்ல ". அங்க என்ன இருக்கு " கொஞ்சம் அரிதான பொருட்கள் இருக்கு " என்றார் மினிஸ்டர் வரதனின் கையாள் ஒருவன். அதே வேளை அங்கு வந்து சேர்ந்தார் வரதன் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவர் கண்டதென்னவோ அவ் ஒற்றை ரோஜா வைத்து தான். "இடியட்ஸ் வெளியார் யாரோ உள்ள வந்திருக்கா என்னத்தப் பார்த்திடு இருக்கீங்க" என சத்தமிட்டார். " அப் பண்ணை வீட்டுற்கு உரிமையாளரான மினிஸ்டர் வரதன். தலைமைக் காவலாளியோ எல்லாரையும் அலர்ட் பண்ணுங்க" என உள்ள வந்தவன் வெளிய போயிருக்க முடியாது வீட்டுக்குள்ளான் இருக்கனும் தேடுங்கள்" என்றான்.

அந்த சிலை எவ்வளவு விலை உயர்ந்தது.அவர் கூட அதை கை மாற்றி பணம் பார்க்கவே பண்ணை வீட்டில் ஒளித்து வைத்திருந்தார்.வெளியே செய்தி கசிந்தாள் இவ்வளவு நாள் அவர் கட்டிக் காத்த கௌரவம் என்னாவது.

அத்தோடு சிலை பற்றி தெரிந்தால் சீஐடி பிரச்சினை கூட வருமே என அவர் பிரச்சினை அவருக்கு

பாதுகாவலர்கள் படபடவென உள்ளே நுழைந்ததும். வெளியே இருந்த கரணுக்கோ ஏதோ பிரச்சினை. எனப் புரிந்தது. அவனும் மதிக்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை... அலைபேசியை சைலண்டில் போட்டிருந்தாள். அலைபேசியை எடுத்துப் பார்த்தவள்." கரண் காண்ஸ்டண்டைன் உள்ள வந்துட்டாங்க வெளிய வந்து பேசுரன் என் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

ஜோதிடத்தை நிமிர்ந்து பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்தான் அவனோ சுவர் புறமாக சாய்ந்து நிற்க அவன் கால்களுக்கிடையில் தான் அவள் நின்றிருந்தாள்.

அவன் அருகாமை அவஸ்தையாய் இருக்க அவளோ சற்றுத் தள்ளி நின்று கொண்டாள்.அவளிடம் நிலையைக் கொடுத்தவன் அவ்வறையை நோட்டமிட்டவன் அவ்வறையில் இருந்த ஜன்னலை எட்டிப் பார்க்க ஜன்னலிற்கு பின்புறம் நிலவு வெளிச்சம் ஆங்காங்கு விழ இருட்டும் மரங்களும் தான் தென்பட்டது.

ஜோகித்தோ சைகையால் அவளை அழைக்க அவளோ" 'பொண்டாட்டியக் கூப்பிடுவது போல கூப்பிர்ரதப் பாரு' என அவனை மனதில் வருத்தெடுத்தபடி வந்தாள். அவனோ ஜன்னல் கம்பியின் ஸ்கூரைக் கழற்றி அதன் ஃப்ரேமைக் கழற்றியவன் இறங்கு என்றான் அவளும் மெதுவாய் மறுபக்கம் இறங்க அவனும் வெளியேறியவன் கழற்றிய கம்பியை இருந்தது போலவே வைத்தான். இருவரும் இருட்டில் பதுங்கிப் பதுங்கி மறைந்து வீட்டின் பின்னாடி செல்ல , " யார் நீங்கள் இங்க என்ற பண்றீங்க" என கூர்காக சத்தமிட பாதுகாவலர் சிலரும் கூர்காவின சத்தத்தில் அங்கு வர அதே வேளை பகிரும் ஜோகித்தும் முள் வேலியால் மறுபுறம் புகுந்து ரோட்டிற்கு வந்தனர்.

அவர்கள் கூர்க்காவும் சரி பாதுகாவலர்களும் சரி காணவில்லை... இவர்களின்அரவம் கேட்டே கூர்க்கா சத்தமிட்டிருந்தான்.

வெளியேறிய மகி கரணிற்கு அழைத்தாள் " கரணும் ஒரே ரிங்கில் அழைப்பை ஏற்றான்

கரண் நான் வெளிய வந்துட்டேன் நீயும் ஃசேபா வந்துடும் என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

கரணும் வந்திருந்த விருந்தினருக்கு விருந்தினராக பண்ணை வீட்டை விட்டு வெளியேறினான்.

ரொம்பத் தூரம் வந்ததும் மதிக்கு அழைகத்தவன் " மறுபுறம் மகி அழைப்பை ஏற்றதும் "மகி எங்கயிருகக?" அதே வேளை மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தவள் "கரண் நீ ஹோட்டலுக்குப் போ " நான் வாரன் என்றாள் அவனோ " ஏதும் பிரச்சினையா?" என படபடப்புடன் கேட்க.. "பேச டைமில்ல" எனும் போது போலீஸ் சைரன் சத்தம் கேட்டது. அவளும் அமைப்பைத் துண்டித்தவள் ஜோகித்துக்கு நிகராகவே ஓடி வந்தாள்.

அது பல ஏக்கரைக் கொண்ட பண்ணை அவ்வீட்டின் பின்பக்கத்தால் வெளியேறியவர்கள் நீண்ட தூரம் ஓடினர் ஜோகித் நிற்க மகியும் முழங்காலில் கையைக் குன்றி மூச்சிறைத்தவள். நிமிர ஜோகித்தோ எச்சிலைக் கூட்டி வீழுங்கினான். அவன் பார்வை ஏறி இறங்கும் தனங்களில் பார்வை படிந்தது. தலையை கோதியவன் " இந்த ரனகளத்துலையும் உனக்கு கிலுகிலுப்புக் கேட்குது தூ... என மனசாட்சி துப்ப அதைத் துடைத்து விட்டபடி அங்கு ரோட்டோரம் நிறுத்தியிருந்த பைக்கில் அமர அவளும் அமர்ந்து கொண்டாள். " யாரோட பைக் " எனக் கேட்க யாருக்குத் தெரியும் என்றான். அவளோ அவனை பார்க்க தப்பில்லையா எனக் கேட்க "ம்ம் இப்போ நாம என்ன செய்து டு வாரம், என்றான் இருந்தாலும் என் அவள் இழுக்க அடியேய் என்னோட பைக் தாண்டி என்றவன் பைக்கைக்கன கிளப்ப அவளும் பைக் கிளம்பிய வேகத்தில் பயத்தில் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டாள்.அவளின் ஹார்ட் பீட் வேறு லப் டஃப் என அவனுக்கே கேட்கும் அளவுக்கு வேகமாக துடிச்சது. அவளின் இளமையின் செழிமைகளை அவனால் உணர முடிந்தது. மகி " நான் இருக்கேன் பயப்படாத என்றான் பக்கவாட்டுக் கண்ணாடியால் அவளைப் பார்த்தபடி அதே வேளை போலீஸ் சைரன் சத்தம் தொடர்ந்து கேட்க மேலும் வேகத்தைக் கூட்டியவன் போலீஸின் கண்ணில் மண்ணைத் தூவிக் காற்றைக் கிழித்துக் கொண்டுஇருவரும் தப்பினர்.

" என்னாச்சி இவன் எங்க கண்ட நீ" எனக் கேட்க அவளோ பிறகு சொல்றன் என்றவள். கண்மூடி சீற்றில் சாய்ந்து விட்டாள். பஸ்ஸில் ஏறிய இருவரும் இரண்டு மூன்று பஸ் மாறி சென்னை வந்தடைந்தனர். டாக்ஸியில் குவாட்டஸில் வந்திறங்கியவர்கள் வாட்ச் மேன் தூக்கத்தில் இருக்க இருவரும் சத்தமெழுப்பாது குவாட்டஸில் நுழைந்தனர். கரண் அவனுடைய இடத்திற்குச் செல்ல பகிரும் அவளுடைய குவாட்டஸினுள் நுழைத்து கொண்டாள்.

பண்ணை வீட்டிலோ பெறும் பரபரப்பாக இருந்தது. யார்? எப்படி உள்ளே வந்து ஆட்டையப் போட்டார்கள் என்று எதுவுமே தெரியவில்லை " என்னத்த புடுங்கிட்டு இருந்தீங்க " என மினிஸ்டர் காட்டமாய் கேட்க,ஏசிபி சத்தியனுக்கோ ஒரே அவமானமாக இருந்தது." சார் "சின்னத் தடயம் கூட இல்லாம இத பண்ணியிருக்கான்" என்றான் அவன். "இப்படிச் சொல்ல சொல்ல வெட்கமா இல்ல,இவளோ பாதுகாப்பு இருந்தும் உள்ள வந்திருக்காங்க."நம்மள சுத்தித்தான் இருந்திருக்கனும் , என்ற ஏசீபி சத்யன் இரகசிய அறையினுள் நுழைந்தான் அங்கு சிலை இருந்த இடத்தில் ஒற்றை ரோஜா பூ இருந்தது. இந்த வருடத்தில் இத்தோடு ஐந்தாவது திருட்டு இது திருடிய இடத்தில் ஒற்றை ரோஜா. மினிஸ்டரும் திட்டி விட்டு "ஒரு வாரம் டைம் அதுக்குள்ள அவன் புடிக்கும் என்றார்."ஏசிபீயும் சோர் சார்" என்றார்.

அடுத்த நாள் இத் திருட்டைப் பற்றி எல்லா மீடியாக்களிலும் தகவல் பரப்பப்பட்டது.சில மீடியாக்கள் அவனை ஹீரோவாக கதைகளை பரப்பியது.

சின்னத் தடயம் கூட விடவில்லை அவன் சிசிடிவி எல்லாமே ஸ்டாப் பண்ணப்பட்டிருந்தது. அதே வேளை மகி அந்த சிலையை கை மாற்றிப் பணத்தைப் பெற்றவள் ஜோகித்திற்கு அழைத்தாள் . அழைப்பை ஏற்ற ஜோகித்து பேபி என்றான். "மீட் பண்ணலாமா? " அவனும் காஃபி ஷாப்பிற்கு வர அவனிடம் கவரொன்றைக் கொடுத்தாள். "கிடைச்சத்துல ஃப்டி பெர்சன்ட்" என்றாள்.

அவனோ " வாவ்" என இவரை பிரித்துப் பார்த்தவன் " இல்ல இதையும் இல்லத்துக்கு கொடுத்துடு பேபி " என்றான. அவளோ அவனை புரியாமல் பார்க்க " இதெல்லாம் ஒரு திரிலிங்குக்காகத் தான் செய்றன். "என்ன விட அங்க தான் இது தேவைப்படும்" என்றான்.மகியோ "அப்போ நீங்களே கொடுக்க" என்றாள்.



 

Attachments

  • WhatsApp Image 2026-02-21 at 09.23.27.jpeg
    WhatsApp Image 2026-02-21 at 09.23.27.jpeg
    72.6 KB · Views: 1
  • WhatsApp Image 2026-02-21.jpeg
    WhatsApp Image 2026-02-21.jpeg
    90.4 KB · Views: 1

Advertisement

Advertisement

Back
Top