Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

4 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம்..!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
4 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம்..!!
இதுவரை : நாயகன் : சுடர் , நாயகி : ஆதூ என்கிற அஷ்வரூதா தீக்சித் .... இவர்கள் தென்கொரியாவில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர் ... அங்கு வரும் சியோலல் விழாவிற்காக சுடர் ஆதூவிற்கு பரிசுகள் வாங்கிக்கொண்டு வீடுநோக்கி செல்ல ... அப்பொழுது அவனது மனம் நினைவுகளில் சுழல்கிறது ... " மாறன் , சுடர் இருவரும் நெருங்கிய நட்புகளாக நம் அனைவரின் மனதையும் கொள்ளையடிக்க ..... ஆசை ( மாறனின் தங்கை ) மற்றும் மாறனுக்கு ஒரே நேரத்தில் சிறு பிரச்சனை குறுக்கிட .... சுடரும் அவளது குடும்பமும் மாறனின் குடும்பத்திற்கு பக்கதுணையாக திகழ்கிறார்கள் ... சுடரின் அக்கா சக்தி ... மாறன் காயமுற்றிருக்க அவனை கவனிக்க சுடர் அவனது வீட்டிற்கு சென்றுவிட .... ஆசையை சுடரின் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டார் சுடரின் அம்மா செல்வி .... அப்பொழுது சக்திக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம் செய்ய போவதாக செல்வி கூற ... சக்தியின் முகம் நொடியில் வாடி விடுகிறது .....
******************************************************************************************

அவர் கூறியதைக் கேட்டு சக்திக்கு இதயம் படக் படக் என்று அடிக்க ஆரம்பித்தது ....... அவள் எதிர்பார்த்திருந்தாள் தான் .... ஆனால் இவ்வளவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி மனதில் இடம் பெற தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள் ..........
அதற்குள் ஆசை " அக்கா..... என்னக்கா யோசிக்கிறீங்க ???? எனக்கு தண்ணி வேணும் ..... நம்ம வீட்டுக்கு போலாமா ?? " என்று கேட்க .... ஆசையின் கேள்வியில் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவள் ஆசையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள் .......
மாறன் வீட்டில் வலியால் துடித்துக் கொண்டிருந்தான் ..... அவன் துடிப்பதை பார்க்க பார்க்க சுடருக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது ....... அவனது நிலையை மனதினுள் பதிந்தவள் ... அவனிடம் வம்பிழுத்து கலகலப்பாக வைத்திருந்தாள் ... அவள் பாவாயி கிழவியிடம் செய்யும் சேட்டைகளை பார்த்து சிரிக்கவே மாறனுக்கு நேரம் போதவில்லை ....
இவ்வாறாக நாட்கள் செல்ல ...... அவ்வூர் திருவிழா வந்தது .... அந்த நாள் அனைவர் வாழ்க்கையும் மாறுமென்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை .......
அன்று காலை ....
சிணுங்கும் கால் கொலுசுகளுடன் பட்டுப்பாவாடை சரசரக்க ..... சுடரின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தாள் ஆசை ..... சுடர் பாவாடை தாவணி தான் உடுத்தவேண்டுமென அவளது தாய் செல்வி கூறிவிட .. அவளோ தான் கோவிலுக்கே வரப்போவதில்லை என கூறிவிட்டாள் ..... ஆசை அவளை கோவிலுக்கு அழைத்துப்போக சுடரின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தாள் ......
சுடரோ கிளம்பவே முடியாது என உறுதியாக கூறிவிட .... ஆசை சக்தியை தேடி சென்றாள் .... சக்தி பட்டுப்புடவை உடுத்தி மல்லிகை சரம் வைத்து முகம் முழுவதும் அச்சமும் வெட்கமும் கனவுகளும் போட்டியிட கிளப்பிக்கொண்டிருந்தாள் ......
ஆசை : " அக்க்கா ..... சுடர் அக்கா கிளம்பவே இல்லை ...... நீங்க வந்து அவங்களை கூப்பிடுங்களேன் .... நீங்க சொன்னா சுடர் அக்கா வருவாங்க .... ப்ளீஸ் .... "
சக்தி இருந்த மனநிலையில் இவளது இந்த பேச்சு அவளுக்கு சலிப்பை வரவழைத்தது .....
சக்தி : " அவ வந்தாதான் நீ கோவிலுக்கு போவியா ???? இல்லைனா எங்ககூட வர மாட்டியா ???? சும்மா நொய் நோய்னு டார்ச்சர் பண்ணாத .... நான் கிளம்பனும் .... " என்று எரிந்து விழ ..... ஆசைக்கு கண்கள் கலங்கி விட்டது ....
அழுதுகொண்டே அந்த அறையிலிருந்து வெளியே வர ..... அவளை பார்த்த சுடர் .... " எதுக்கு அழுவுற ???? நானும் வரேன் .... வரலேன்னு சொன்னா அழுவியா ????? கண்ணை தொடச்சுக்கோ ..... " என்று அவளது தாடையை பிடித்துக் கொஞ்ச ..... ஆசையின் அழுகை தோய்ந்த முகம் சற்று தெளிந்தது ....
" சரி வா .... நான் எந்த பாவாடை தாவணி போட்டுக்கட்டும்னு பாத்து சொல்லு .... சரியா ???? " என்று அவளது கையை பிடித்து அழைத்து சென்று .... ஆசை காட்டிய உடையையே உடுத்திக்கொண்டு வந்தாள் ..... சுடருக்கு ஏதோ உள்ளுணர்வு உந்திக்கொண்டிருந்தது ... அந்த நினைவை ஓரம்கட்டிவிட்டு திருவிழாவின் இனிமைகளை மனதினுள் நிறுத்தினாள் .....
செல்வி கிளம்பிவிட்டு அனைவரையும் அழைக்க .... அப்பொழுது ... சிவப்பு நிற பாட்டுபாவாடை சட்டையில் ரோஸ் வண்ண தாவணி உடுத்தி ... இரட்டை ஜடை போட்டு மல்லிப்பூ சூட்டி ஆசையுடன் நடந்துவரும் சுடரை பார்க்கையில் செல்விக்கு சற்று கர்வம் தலைதூக்கியது .....
image


" தாவணி போட்ட
தீபாவளி வந்தது என்
வீட்டுக்கு ..... கை மொளச்சி
கால் மொளச்சி ஆடுது
என் பாட்டுக்கு .... !
கண்ணா கண்ணா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு .....
பட்டாம் பட்டாம் பூச்சி என்
பக்கம் வந்து போச்சு .... !
இரவும் வருது பகலும்
வருது எனக்கு தெரியல ..... இந்த
அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல ....
முட்டுது முட்டுது
மூச்சு முட்டுது அவள
கண்டாலே ..... கொட்டுது
கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே .... ! "


இவர் சுடரை பார்த்த பிரமிப்பிலிருந்து வெளிவரும் முன்னரே அங்கு வந்து நின்றாள் சக்தி .....
ஐந்தே முக்கால் அடி உயரத்தில் விளக்கி வைத்த குத்துவிளக்கு போலே வந்து நின்ற சக்தியை பார்த்ததும் ..... இவளுக்கு சீக்கிரம் திருமணம் முடிக்க வேண்டும் என்ற கலக்கம் உண்டானது ....
அனைவரையும் கிளப்பிக்கொண்டு மாவிளக்கு தட்டை தோளில் சுமந்துகொண்டு கோவிலை நோக்கி நடக்க துவங்கினார் .... திரும்பி வரும்போது அவர் இருக்கப்போகும் நிலை இப்பொழுது தெரியாமல் ......
கோவிலுக்கு சென்ற உடனே சுடர் மாறனை தேடினாள் .... அவன் எங்கும் இல்லாமல் போக ... நேராக செவ்வந்தியிடம் (மாறன் அம்மா ) சென்று மாறன் எங்கே என விசாரித்தாள் ...
" இங்கே வரேன்னு சொல்லிட்டுதான்மா கிளம்பினான் ..... " என்று பதிலளித்துவிட்டு அவர் வேலையை பார்க்க சென்றுவிட .... சுடர் அவனை தேடும் முயற்சியில் இறங்கினாள் ...
அவனை எங்கு தேடியும் கண்ணுக்கு அகப்படாமல் போக .... மாறானது வீட்டை நோக்கி நடக்க துவங்கினாள் .... ஆசையும் இவளுடன் இணைந்துகொள்ள ... இருவரும் வீடிருக்கும் தெருவிற்குள் செல்ல திரும்பியபொழுதே மாறன் யாரிடமோ வியர்க்க விறுவிறுக்க கோபமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது ... அவன் யாரிடம் இப்படி பேசிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் வேகநடையிட்டு அவனைநோக்கி நடந்தாள் .....
இவள் செல்வதற்குள் மாறன் கையை உதறிவிட்டு அங்கிருந்து திரும்ப அவனை நோக்கி வரும் சுடரை பார்த்து அவனுக்கு ஒரு நொடி இதயம் நின்று துடித்தது ......
அவளை எப்படி சமாளிப்பது என்று மனதில் யோசித்தவன் ...சட்டென அவளை சீண்டினாள் அவள் என்னவென கேட்க மாட்டாளென மனதினுள் நொடி நேரத்தில் திட்டமிட்டு அதனை செயல்படுத்தவும் தொடங்கினான் ....
முகத்தை நிர்மலமாக மாற்றியவன் ... அவள் அருகில் வந்து வாய் திறந்து கேட்கும் முன்னரே அவளது ரெட்டை ஜடையில் ஒன்றை பிடித்து இழுத்தான் ....
சுடர் : " ஸ்ஸ்ஸ்ஸ் .... டேய் எருமை ... எவ்ளோ வயசாகுதுஉனக்கு ... ஒரு முறையாவது என்னைவிட 2 வயசு பெரியவன் மாதிரி நடந்துக்கிட்டியா ??? "
மாறன் : " நீ ஒருநாளாச்சும் இந்த மாமனுக்கு மரியாதை கொடுத்துருக்கியா டி ???? அதுகூட இல்லை .... என்னைக்காவது என்னை மாமான்னு கூப்பிட்டுருப்பியா ???? போடி போடி ... " என்று அவளை அழைத்துக்கொண்டு கோவில்நோக்கி நடக்க துவங்கினான் ....
செல்லும் வழியில் ... " ஏ புள்ள ... உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் ???? நாம கல்யாணம் கட்டிக்குவோமா ???? " என்று மாறன் கேட்க ..
சுடர் ஒரு நொடி இவனது கேள்வியில் திடுக்கிட்டாள் .... ஏனெனில் , இதுவரை அவள் மாறனிடம் காணாத ஒரு உணர்வு அவன் முகத்தில் பிரதிபலித்தது ... அதில் விளையாட்டோ கள்ளம் கபாடமோ இல்லை .... உள்ளத்திலிருந்து கேட்கிறான் என்பதை அவளால் நன்றாக உணர்ந்துகொள்ள முடிந்தது .... " இவள் அதிர்ந்திருக்கும்பொழுதே அடுத்த கேள்வியை கேட்டான் ....
மாறன் : "ஒருவேளை நான் யாரையாவது கெடுத்துட்டேன்னு பஞ்சாயத்து கூட்டுனா என்ன பண்ணுவ ???? " என்று இவன் கண்களில் வலியை தேக்கி கேட்க .... சுடர் என்ன பதிலளிப்பதென தெரியாமல் விழிக்க அப்பொழுது பாதி வழியிலே கால் வலிக்கிறதென ஆசையை இவள் உட்கார வைத்துவிட்டு சென்ற இடத்திலிருந்த ஆசை இவர்களை நோக்கி வந்து அந்த பேச்சுக்கு தடை போட்டாள் ....
கோவிலுக்கு சென்றும் சுடர் மாறனின் கேள்விகளிலிருந்து வெளிவராமல் அதனுள் உழன்று கொண்டிருந்தாள் ....
இதற்கு மேலும் இந்த ஊரில் இருப்பது சரியாக வராது என்று மனதினுள் எண்ணிக்கொண்டு அடுத்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமென ஒவ்வொன்றாக மனதில் திட்டம்போட ஆரம்பித்தாள் ....
சற்றுநேரத்தில் இடியென இறங்க செய்தி வந்துகொண்டிருப்பது தெரியாமல் அவள் அங்கிருந்து செல்வதற்கான திட்டத்தை யோசித்திருந்தாள் .....
இரண்டு மணி நேரம் கடந்திருந்த நிலையில் ..... கோவிலில் அவசர பஞ்சாயத்து கூட்டப்பட்டு மக்கள் அனைவரும் அங்கு குழுமினர் ... அங்கு ஒரு பெண் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய அழுதுகொண்டிருக்க , அவளது அண்ணன் என்று ஒருத்தன் அவள் கூடவே நின்று அவளை தாங்கிப்பிடித்திருந்தான் ...

அங்கிருந்த மக்கள் அனைவரும் என்னவென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்க .... மாறன் தனக்கான தூக்குக்கயிறு இதுவென தெரிந்தும் அலட்டிக்கொள்ளாமல் நின்றான் .... ஏனெனில் , அவனது வீட்டிற்குள் நுழைந்து அவனது சொத்தை ஆள்வதற்கான திட்டம் என்று அண்ணனும் தங்கையும் அவனிடம் ஏற்கனவே மிரட்டியிருந்தனர் .....
மாறனிற்கு அப்பொழுதும் தனது வீட்டினர்மேல் அளவுகடந்த நம்பிக்கை இருந்தது ... ஆனால் அங்கு நிகழ்ந்த எதுவும் அவனுக்கு சாதகமாக அமையாமல் போனது இவனது துரதிஷ்டம் ....
ஊர் பெரியவர்கள் குற்றவாளி யாரென விசாரிக்க மாறனை கைகாட்டினாள் .... அவர்களே நம்ப தயாராக இல்லை இந்த பொய்யை .... மாறனிற்கு உள்ளூர ஒரு நிம்மதி பரவ ... அதை கெடுக்கவென ... அந்த பெண்ணின் அண்ணன் காலையில் மாறனும் அவளும் பேசிக்கொண்டிருப்பது போன்ற விடியோவை காட்டினான் .... அந்த வீடியோவில் அந்த பெண் இவனது கையை பிடித்து கெஞ்சுவது போல பதிவாகியிருந்தது .....
ஊரார் மாறனை குற்றவாளியாக பார்க்க துவங்க .... சுடருக்கு பற்றிக்கொண்டு வந்தது ... அவளுக்கு மாறனை இன்னொருவர் உரிமை கொண்டாடுவது அவ்வளவு எரிச்சலை தந்தது ....
மாறனை குற்றவாளியாக ஊரார் எடுத்துரைக்க .... குடும்பத்திற்கு தலைகுனிவை பெற்றுத்தந்தானே என்று மட்டுமே மாறனின் குடும்பத்தாரின் எண்ணமாக இருந்தது .... யாருமே மாறனிடம் ஒரு கேள்வியும் கேட்கவில்லை .... இதற்கு என்ன முடிவென அனைவரும் கலந்தாலோசித்து அந்த பெண்ணை மணமுடிக்குமாறு கூற ....
மாறன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நின்றான் .... சுடர் பொறுமையாக மாறனை நோக்கி வந்தாள் .... வந்தவள் மாறனின் சட்டை காலரை பற்றி ....
" எதுக்கு அமைதியா கல்லு மாதிரி நிக்குற ???? அவளை கட்டிக்க போறியா ??? அப்போ எனக்கு என்ன பதில் ????? நேத்து வந்தவ உன்னை கட்டிக்கிட்டா உன்கூட இவ்ளோ நாட்களா பழகுன எனக்கு என்ன பதில் சொல்லுற ???? " என்று கேட்க அனைவருமே திகைத்து நின்றனர் ....
இதற்கான பதில் யாருமே கூற இயலாத நிலையில் நிற்க .... அப்பொழுது சுடர் .... " இன்னைக்கு காலையில கூட என்கூட தானே இருந்த ???? இவகூட பேசிட்டு இருக்கப்போ நானும் அங்கதானே இருந்தேன் .... அவ உன்னை மிரட்டுனப்போ என்னை கட்டிக்குவேன்னு வீரவசனம் பேசுனில்ல .... இப்போ எல்லாருகிட்டையும் பேசவேண்டியதுதானே ???? " என்று அவனது கன்னத்தில் அறைந்தாள் ....
மறைமுகமாக இவர்கள் மாறனை மிரட்டியதை ஊராருக்கு தெரிவிக்க .... அனைவருக்குமே இப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது ... ஏனெனில் ... அந்த பெண்ணின் அண்ணன்மேல் ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து வழக்கு இருந்தது ....
" உன் வீட்டுக்கு மருமவளா வந்து உன் சொத்தை அனுபவிப்பேனு இவளும் இவளோட அண்ணனும் காலைல சொல்லல .... யாரு வந்து யாரு ஊட்டுல வாழுறது ???? " என்று ஆவேசமாக கேட்டாள் ...
இவள் இப்படி நேரில் பார்த்ததை போன்றே சொல்வதை பார்த்து அண்ணனுக்கும் தங்கைக்கும் திகைப்பு நீங்கவில்லை ....
- தொடரும் ....
நாளை :
செல்வி : " சுடர் .... சக்தியை எங்கயாவது பார்த்தியா ???? "
சுடர் : " இல்லையே ... காலையில கோவிலுக்கு வந்ததிலிருந்து பார்க்கலை .... உன்கூட தானே மா அக்கா இருந்தா ??? என்று அவளது அம்மாவிடம் அந்த கேள்வியை திருப்பிவிட்டாள் ....
 
நிறைய ஜம்பிங் இருக்கே, வெண்பா டியர்
நிகழ்வுகள் கோர்வையாக இல்லை
இங்கொன்றும் அங்கொன்றுமாக சம்பந்தமில்லாமல் இருக்கு
ஒண்ணுமே புரியலைப்பா
 
Last edited:
சுடர் ஒரு இடத்தில் நாயகன்னு இருக்கு நிறைய இடத்தில் பெண் அப்படினு இருக்கு....நிகழ்வு எல்லாம் ஒன்னோட ஒன்னு தொடர்பு இல்லையே
 
Top