Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter fifteen

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 15

காப்ரியேலுடன் சேரக் கூடாது என்பதை பூடகமாக உணர்த்திய அம்மாவை ஒரு தரம் பார்த்து விட்டு சட் என்று உள்ளே நகர்ந்தாள் சம்யுக்தா.
மனம் அவளிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டன.
நான் அப்படி என்ன சொல்லிட்டேன்?
ஒரு நல்ல மனுஷன பாராட்டுனது தப்பா?
அம்மா ஏன் சுய நலமா யோசிக்கிறா?
வெளி நாட்டுக்காரன் திருடன புடிப்பானாமாம். நாம பேசாம கீசிடுவான்னு பயந்து இருக்கணுமாம். நியாயமா இது?
எதுக்கு அவன் கூட ஹாய் ஹலோவோட இருன்னு அம்மா சொல்றா?
நான் என்ன இன்னும் 12 13 வயது பெண்ணா?
அவனோடு பழகினா அதுக்கு வேற அர்த்தம் இருக்கா என்ன?
இந்த அம்மா என்ன நினைக்கிறா?
நான் அவன லவ் பண்றேன்னா?
கடைசி கேள்வியை அவள் மனது கேட்டதும் குப் என்று வியர்த்தது. மனம் இனம் புரியாத இன்பவசப்பட்டது.
பெட்டில் வந்து குப்புறப் படுத்தாள்.
காப்ரியேல், சம்யுக்தா... நல்லா தான இருக்கு?
மனது அவளயும் அவனயும் மணவறையில் உட்கார வைத்துப் பார்த்தது.
காப்ரியேல் வேட்டி சட்டையோடு..
சிரிப்பு வந்தது சம்யுக்தாவுக்கு.
உங்க அம்மாவோட காதல் கத எல்லாம் மறந்துருச்சா?
மனசு கேட்க சட் என்று இறுகினாள்.
அம்மா அவர்கள் இரண்டு பேரயும் வளர்க்க எவ்ளோ சிரமப்பட்டிருக்கிறாள்?
இள வயதில் இளமையை இவர்களுக்காக அடக்கி வாழ்ந்திருக்கிறாளே! அவள் மனது சங்கடப்படும்படி நடப்பது சரியா?
நாம் என்ன காப்ரியேலை காதலித்தா விட்டோம்?
காதல் என்ற வார்த்தை அவளை மீண்டும் இம்சித்தது.
இவ்ளோ நாட்களாக பழகுகிறோம். இன்று ஏன் அவன் தன்னை இப்படி வதைக்கிறான்?
ஒரு ஹீரோ செயல் செய்ததால் ஹீரோக்களை சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட தன் மனதில் அவன் ஹீரோ ஆகி விட்டானோ?
இருக்கட்டுமே! காதல் என்பது ஊர் சுற்றவா?
அப்பா இல்லாமல் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறோம்!
உள்ளூர் ஆளே இப்படி குழந்தைகளை விட்டு விட்டு இருக்கிறான்?
இவன் அசலூர். இவனை நம்பினால்...
சம்யுக்தா மனம் அவளை கட்டுப்படுத்தியது.
வேண்டாம். இந்த நினைவுகள்.
கண்களை மூடித் தூங்கினாள்.
கனவில் இவள் ராணி வேடத்தில் இருக்க, கொள்ளை கூட்டத்துக்காரர்கள் அவள் வந்த பல்லக்கை நிறுத்தி சேவகர்களைக் கொன்று அவளது பல்லக்கில் ஏறி இவள் கத்த கத்த பல்லக்கின் திரைச் சீலையை மூட குதிரையில் வந்த வாலிபன் இவளை காப்பாற்ற போராட... அந்த வாலிபனை எங்கோ பார்த்த மாதிரி தெரிகிறதே.. ஆ! காப்ரியேல்!
'அம்மா' என்றவாறு விழித்துக் கொண்டாள் சம்யுக்தா.
முகம் வியர்வையால் மூழ்கி இருந்தது.
நெஞ்சு பட பட என்று அடித்தது.
செல்போனை எடுத்து ஆன் செய்தாள்.
மணி 1.15
என்ன இது! தலையின் நெற்றிப் பொட்டுகளை விரல்களால் அழுத்திய அவள் தலையை இரு முறை அசைத்து விட்டு மறுபடியும் குப்புற விழுந்து ஒரு மணி நேரம் புரண்டு புரண்டு படுத்து 2.15ல் தூங்கிப் போனாள்.
காலையில் எழுந்ததும் சிறிதாக தலையை வலிப்பது போல் இருந்தது.
அம்மா 'நைட் எல்லாம் தூங்கலயா? கண் சிவந்து இருக்கு.' என
'லைட்டா தலைய வலிக்குதும்மா.' என்றாள்.
பதறிப்போனாள் அம்மா.
'இரு டீ போட்டுத் தாரேன். குடிச்சிட்டு கொறஞ்சிருச்சின்னா சொல்லு. இல்ல டாக்டர்ட்ட போலாம்.'
அம்மாவின் பதற்றம் கலந்த அன்பு சம்யுக்தாவை நெகிழ்த்தியது.
'ப்ச். ஒண்ணும் இல்லம்மா. நைட் ஒரு மணி நேரம் புரண்டு புரண்டு படுத்தது லைட்டா தலை வலி உண்டாக்கிருச்சு.'
அம்மா பேசிக்கொண்டே டீ போட்டு அவளுக்குத் தந்து விட்டாள். அம்மாவின் கைப்பக்குவமே தனி. சுடுதண்ணீரில் ரெண்டு தேயிலையப் போட்ட மாதிரி தான் இருக்கும். ஆனால் டீ அவ்ளோ டேஸ்ட்டாய் இருக்கும். சாம்பார், ரசம் என்று எல்லாமே அப்படித்தான். ஸ்கூலில் இவர்களது டிபன் பாக்ஸ் மற்றவர்களால் அடிக்கடி காலி செய்யப்படும். அம்மாவிடம் 'எப்படிம்மா இப்படி' என்று கேட்டால் 'ரெட்டப்புள்ளக்காரில்லம்மா' என்று மெல்லிய புன்னகையுடன் நழுவி விடுவாள்.
டீ குடித்ததும் சிறிது தேவலை போல் இருந்தது.
'பரவால்லயாம்மா. அல்லது காலேஜுக்கு லீவ் போட்டுக்கறயா?'
'வேண்டாம்மா. போய்க்கறேன். தல வலிச்சதுன்னா சொல்லிட்டு வந்துர்றென்.'
'சரிம்மா.'
அடுத்தடுத்து வேலைகளில் ஈடுபட்டு காலேஜ் புறப்படத் தயாரானாள் சம்யுக்தா.
இன்று அக்காவும் தங்கையும் வண்டியில் சென்றார்கள்.
காலேஜ் ஆர்ச்சைத் தாண்டி வண்டி நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் அவரவர் வகுப்பை நோக்கி நடந்தார்கள். சம்யுக்தா வகுப்பின் வாசலை அடையவும் அங்கே நின்றிருந்த காப்ரியேலையும் டென்சிலையும் கண்டதும் மனம் பரவசமாகியது. அம்மாவின் வார்த்தையும் கூடவே நினைவு வர, கையை மெல்ல உயர்த்தி ஒரு ஹாய் சொல்லி விட்டு சட் என்று வகுப்பில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.
காப்ரியேல் அவள் அருகில் வந்து ஏதோ பேச வாய் எடுப்பதற்குள் எச் ஓ டி வந்தார்.
அனைவரும் எழுந்து நின்றனர்.
முதல் வகுப்பு அவரது.
சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் இருவரும் அவரது வருணனையில் அங்கே உயிர் பெற்று அனைவர் கண் முன்பாகவும் உலாவத் தொடங்கினார்கள்.
பால்கனியில் நின்று ஜூலியட் ரோமியோவிடம் பேசும் புகழ்பெற்ற பால்கனி சீன் தத்ரூபமாய் மனதில் பதிந்தது.
சம்யுக்தாவிற்கு தான் ஜூலியட்டாகவும், கீழே காப்ரியேல் நின்று தன்னுடன் உரையாடுவதாகவும் தோன்றியது. தலையை சிலுப்பி அந்த கற்பனையை கலைத்தாள்.
அடுத்தடுத்த வகுப்புகளில் காப்ரியெல் அவளுடன் பேச முற்படும்போது வேணுமென்றே தவிர்த்தாள். கோபிகாவை வலிய இழுத்து தேவை இல்லாததை எல்லாம் பேசினாள்.
லஞ்ச் டைமில் கூட அவர்களை அவள் நெருங்க விட வில்லை.
இரண்டு நாட்கள் இப்படியே கழிந்தன.
காப்ரியேலிடம் இருந்து வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது.
ஏன் என்னை தவிர்க்கிறாய் என்று.
சம்யுக்தா பதில் சொல்வதையும் தவிர்த்தாள்.
அடுத்தடுத்து வந்த மெசேஜ்களையும் படிக்காமல் விட்டாள்.
மூன்றாம் நாள் கோபிகாவிடம் இருந்து ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது.
ஒரு போட்டோவோடு.
என்ன இமேஜா இருக்கும் என்று யோசித்த சம்யுக்தா இமேஜ் லோட் ஆனதும் கண்கள் விரிய அதிர்ந்து படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள்.

(தொடரும்)



 
Nice epi.
Koki and gavi committed ah??
Yedi, love nu varum pol 12, 13 alla eppo venum engil muttal thangam nadakkum.
 
Top