Skip to content
Post Views: 4,408
16
“ஷு! வாயை மூடு! உன்னை என்ன கடத்திக்கிட்டா போறேன்!” என்று ரஞ்சன் அவளை மிரட்ட,
Advertisement
“ஹும் விடு! என்ன விடுடா..!” என்று அவள் அவனிடமிருந்து விடுபட்டு குதிக்க முயல,
அவன் வேக வேகமாக அவளைக் குளியலறைக்குத் தூக்கிச் சென்று தொப்பென்று இறக்கினான்.
“ஹப்பா பார்க்கத்தான் ஒல்லியா இருக்கா… என்னா வெயிட்டு!? இதையெல்லாம் தூக்கி சுமக்கனும்னு என் தலையெழுத்து!” என்று புலம்பியபடியே ஷவரைத் திறந்து விட்டவன்,
Advertisement
“ஏய்… மரியாதையா சீக்கிரம் குளிச்சிட்டு வெளில வா!” என்று கட்டளையிட்டுவிட்டு வெளியேற முயல,
Advertisement
“அய்யோ தண்ணி தண்ணி…! ஜில்லுனு இருக்கு!” என்று கத்தியபடியே அவள் எகிறிக் குதித்தாள்.
“ஏய் வாயை மூடு! இல்லக் கொன்னுடுவேன்!” என்று மிரட்டியவன், ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்து, சுடு தண்ணீர் வரும் ஷவரைத் திறந்து விட்டான்.
“அய்யோ இது ரொம்ப சூடா இருக்கே?!” என்று அவள் படுத்த,
Advertisement
“அய்யோ!! முடியல?!” என்று தலையில் கைவைத்துக் கொண்டான்.
“என்ன முடியல?!” என்று அவள் அவன் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வந்துப் பாவமாகக் கேட்க,
“ஏய்! நீ நிஜமாவே தூக்க மாத்திரைதான் போட்டியா?! இல்லை வேற ஏதாவது சாப்ட்டியாடி?!” என்று சொல்லி முறைத்தவன் கண்ணில் அவள் பின்னே இருந்த நீர் நிறைந்த வாளி கண்ணில் பட, அதை எடுத்து, அதில் இருந்த நீரை மொத்தமாக அவள் தலையில் கொட்டிக் கவிழ்த்தான்.
அவள் பிரமை பிடித்தவள் போல் நிற்க, “ஒழுங்கு மரியாதையா குளிச்சிட்டு வா!” என்று சொல்லிப் படீரென்று குளியலறைக் கதவைச் சாத்திவிட்டு நகர்ந்தான்.
“ம்! இரு இரு… நீ என்ன கொடுமைப் படுத்தறேன்னு வீட்ல எல்லார் கிட்டயும் சொல்றேன்!” என்று சொல்லிவிட்டு தன் உடைகளைக் களைந்து குளிக்கத் துவங்கினாள்.
குளித்து முடித்தபின்தான் சற்றே தெளிவடைந்தவள், தன் மாற்று உடை அங்கில்லாதைக் கண்டு வெட்கினாள்.
“அச்சோ என் டிரஸ் இங்க இல்லையே!” என்று அவள் கண்மூடி தலையில் கைவைத்துக் கொண்டாள். பின் சுதாரித்து மெல்ல கதவைத் தட்டினாள்.
“ஏய் என்னடி…! குளிச்சிட்டல்ல… வந்துத் தொலைய வேண்டியதுதானே!” என்று அவன் கத்த,
“அய்யோ! அறிவேயில்லை இவனுக்கு!” என்று தலையிலடித்துக் கொண்டவள், மறுபடியும் கதவைத் தட்டினாள்.
“ஏய் இங்க பார் சும்மா எரிச்சலைக் கிளப்பாத…” என்று அவன் முடிப்பதற்குள்,
“என் டிரெஸ் வெளில இருக்கு!” என்றாள் தயக்கமாக.
‘சே அறிவே இல்லடா ரஞ்சு உனக்கு…! குளிக்கக் கொண்டு போய் விட்டியே?! மாற்று உடை கொடுக்க வேண்டாம்!” என்று அவன் மரமண்டையில் அவன் மூளை கொட்ட,
”ம்?!” என்று அசடு வழிந்தவன், அவளுக்கு மாற்றுத் துணியை எடுத்துக் கொண்டு போனான்.
அவன் கதவருகே சென்று தட்டிக் குரல் கொடுக்க, அவள் மெல்ல கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
அவன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, உடையை அவள் புறம் நீட்ட,
‘ரொம்ப நல்ல பிள்ளை டா நீ!’ என்று நினைத்தபடி, வெட்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டாள்.
அவள் வெளியே வந்த பின், “இப்பவாவது தெளிஞ்சதா?” என்று கேட்டு தனக்குத் தானே உலை வைத்துக் கொண்டான் ரஞ்சன்.
“ஆமாம் அது என்ன மாத்திரை?! ஏதோ தூக்க மாத்திரைன்னு சொன்னமாதிரி இருந்தது?! தூக்க மாத்திரை எப்படி நான் தலை வலி மாத்திரை வைச்சிருந்த இடத்துல வந்துச்சு?! இந்த ரூம்ல உன்னையும் என்னையும் தவிர வேற யாரும் இல்லையே நான் தூக்க மாத்திரை சாப்பிட மாட்டேன்! அப்போ நீ.. அதை சாப்பிடுறியா?!” என்று அவனை மடக்கினாள்.
‘அய்யோ போச்சு! நானே வாயைக் குடுத்து மாட்டிகிட்டேனே!’ என்று அலறினான் மனதுள். இருந்தாலும் தன் இயல்பை விடாமல்,
“ஏய் போதும் போதும் நிறுத்து?! நீ யாரு என்னை இதெல்லாம் கேட்கிறதுக்கு?! கல்யாணமான முதல் நாளே சொல்லியிருக்கேன்ல உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு!” என்று மிரட்டினான்.
“ஓ எஸ்! ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இல்ல?!” என்றவள், சில நொடிகள் யோசிப்பது போல் பாவனை செய்துவிட்டு,
“நான்தானே கேட்கக் கூடாது! தாத்தா கேட்கலாம்ல?!” என்றாள் சாதாரணம் போல்.
‘ஆரம்பிச்சுட்டடா தாத்தா மெயிலை!’ என்று நினைத்தவன், “இதுக்குப் போய் எதுக்கு தாத்தாவெல்லாம்?! நீ கூட கேட்கலாமே!” என்று அசடு வழிந்தபடி அவன் வழிக்கு வர,
“அப்போ சொல்லு? அந்த மாத்திரை யாரோடது?!” என்றாள் அதிகாரமாக.
‘எல்லாம் என் நேரம்டி!’ என்று நினைத்தவன்,
“அது என் பிரெண்ட் கிரிஷோடது! அவனுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்லை! அவங்க ஏரியாவில இந்த டேப்லட் கிடைக்கலை! அதான் என்னை வாங்கிட்டு வரச் சொன்னான்! அதான் வாங்கி வைச்சிருந்தேன்!” என்றான் மழுப்பலாக.
‘இவன் சொல்றது உண்மை மாதிரி தெரியலையே?! என்னமோ இருக்கு!’ என்று நினைத்தவள்,
“ஓ சரி! இனிமே இதெல்லாம் இங்க வைக்காத…!” என்றாள்.
“இது என் ரூம்!” என்றான்.
“இப்ப நம்ம ரூம்!” என்று சொல்லிவிட்டு அவள் கண்ணாடி முன் சென்று, முகம் துடைத்து ஓர் பொட்டை எடுத்து நெற்றியில் வைக்க,
“அம்மா உன்னை வரச் சொல்லி அரைமணி நேரமாச்சு!” என்றான்.
“ஹான் அய்யோ!” என்று அலறியவள், வேகமாகத் தலை சீவி, பின்னலிட்டு ராதாவின் அறைக்குச் சென்றாள்.
“ஸாரி ஸாரிங்க ஆன்ட்டி! ரொம்ப தலைவலியா இருந்தது! அதான் தெரியாம தூங்கிட்டேன்!’ என்று அவள் மன்னிப்புக் கோர,
“ரொம்ப முடியலையா நிலா… என்கிட்டே தலைவலி மாத்திரை இருக்கு! போட்டுக்கறியா?!” என்றார் ராதா பரிவோடு.
“இல்ல வேணாம் ஆன்ட்டி…! நேத்து ராத்திரியே போட்டுகிட்டுதான் படுத்தேன்!” என்றாள்.
“ஓ! இப்போ பரவாயில்லையா ம்மா…”
“ம் ஆன்ட்டி…”
“சரி வாம்மா… போய் சாப்பிடலாம்! அத்தையும் உங்க ரெண்டு பேருக்காகத்தான் சாப்பிடாம காத்துகிட்டு இருக்காங்க!” என்று அவர் அழைக்க, அவளுக்கு சங்கடமாகிப் போனது.
“ஸாரி ஆன்ட்டி… இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன்!” என்றாள்.
“அட இதுல என்னமா இருக்கு! நீ எவ்ளோ நேரம் தூங்கினாலும் எங்களுக்குப் பிரச்சனையில்லை… ஸ்கூலுக்குப் போகணுமேன்னுதான் குரல் கொடுத்தேன்!” என்று பேசியபடியே இருவரும் நடந்தனர்.
நிலா, காமட்சி பாட்டியை உணவு மேஜைக்கு அழைத்து வர, ரஞ்சனும் தயாராகி அங்கு வந்து சேர்ந்தான்.
அனைவரும் சேர்ந்து காலை உணவை அருந்திக் கொண்டிருக்க, ஒரு இட்லியை வயிற்றிற்குள் தள்ளியவளுக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வரவும், அவள் வேகமாக வாஷ் பேஷினை நோக்கி ஓடினாள்.
“என்னம்மா என்னாச்சு?!” என்று ராதா அவள் பின்னேயே எழுந்து வர,
“தெரியலை அத்தை நேத்து நைட்லருந்து தலைவலி மட்டும்தான் இருந்தது. இப்போ காலையில எழுந்ததுலயிருந்து, என்னமோ ஒரு மாதிரி இருக்கு!” என்றாள் சோர்வாக.
“ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம்மா…!” என்று ராதா அக்கறையுடன் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி… சரியாப் போயிடும்!” என்று மறுத்தாள் நிலா.
அவள் நிலையைப் பார்த்து காமட்சி பாட்டி வருத்தம் கொள்ள, ரஞ்சனோ நன்றாக இட்டிலிகளை விழுங்கிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த காமாட்சி அவனை முறைத்தபடி, “என்னடா இது?! அவ அங்க கஷ்டப் படறா? நீ இங்க நல்லா சாப்பிட்டு கிட்டு இருக்க?!” என்க,
“அவ வாந்தி எடுத்தா நான் என்ன பாட்டி.. பண்றது?!” என்றான் பாவமாக.
“எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு! நீங்க ரெண்டு பேரும் இப்பவும் பழைய மாதிரியே சண்டை போட்டுக்கிட்டுதான் இருக்கீங்களா?” என்றார் காமாட்சி.
ராதா, நிலாவை அழைத்து வந்து அமரச் செய்து, அவளுக்கு குடிக்க வெந்நீர் கொடுத்தார்.
“அய்யோ அதெல்லாம் இல்ல பாட்டி…! என்ன பேபி பார்த்துகிட்டே இருக்க?! சொல்லு பாட்டிகிட்ட…!” என்றான் அன்புடன் தன் மனைவியைப் பார்த்து.
‘என்னது பேபியா? அடப்பாவி என்னமா நடிக்கிறான்?! இவன் என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறதே அதிசயம்! இன்னிக்கு பேபியாம் பேபி..!’ என்று அவள் பேசாமல் முறைக்க,
“என்ன நிலா ஏதும் பிரச்சனையாம்மா உங்களுக்குள்ள?! இவன் உன்னை நல்லபடியா நடத்துறான் தானே?!” என்றார் காமாட்சி.
“என்ன பாட்டி இப்ப…டி ஒரு கேள்வி கேட்டுடீங்க?!” என்று அவள் இழுக்க,
‘அய்யோ போட்டுக் கொடுத்துடுவாளோ?!’ என்று புலம்பினான் மனதுள்.
“எதுவாயிருந்தாலும் பயப்படாம சொல்லும்மா..?!” என்று காமாட்சி மறுபடியும் கேட்க,
“அவர் என்னை இவ்ளோ அன்பா பார்த்துக்கும் போது, நீங்க இப்படி ஒரு கேள்வி கேட்கலாமான்னு கேட்க வந்தேன் பாட்டி!” என்றாள் மழுப்பலாக.
‘இவனைப் பார்த்தால் அன்பா பார்த்துக்கற மாதிரி தெரியலையே?! ம்ஹும் ஏதோ சரியில்லை! இதைப் பத்தி நிலாகிட்ட தனியா பேசணும்’ என்று நினைத்துக் கொண்டார் காமாட்சி.
“சாப்பிடும்மா…!” என்று ராதா நிலாவிடம் சொல்ல,
“இல்ல ஆன்ட்டி எனக்கு என்னவோ போல இருக்கு! சாப்பாடு வேண்டாம்!” என்று மறுத்தாள் நிலா.
ராதா நிலாவின் அருகே வந்து மெதுவாக, “நிலா ஏதேனும் விசேஷமா?!” என்று கேட்க, அது அவள் அருகே அமர்ந்திருந்த ரஞ்சனின் காதிலும் விழுந்தது.
‘அய்யோ! இதென்ன வம்பா போச்சு!?’ என்று ரஞ்சன் அலற,
சற்று நேரம் புரியாது விழித்த நிலா, “ஆ! அய்யோ அதெல்லாம் இல்ல… ஆன்ட்டி..!” என்று இடம்வலமாகத் தலையாட்டினாள்.
“ஓ! சரிம்மா.. இந்த ஜீஸாவது குடி!” என்றார் ராதா.
“ம் சரிங்க ஆன்ட்டி!” என்று அவர் கொடுத்த பழச்சாற்றைக் பருகியவள்,
”ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சு ஆன்ட்டி! கிளம்பறேன்!” என்றாள்.
“அட என்னம்மா நீ… இந்த நிலைமையில நீ ஒண்ணும் ஸ்கூலுக்குப் போக வேண்டாம்! ஒரு நாள் லீவ் எடுத்துக்கோ!” என்றார் காமாட்சி.
“இல்ல பாட்டி…” என்று நிலா தயங்க,
“சொன்னாக் கேளும்மா? உங்க ஸ்கூலுக்கு போன் செய்து நான் உனக்கு லீவ் சொல்லிடறேன்! நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடு!” என்றார் அக்கறையோடு.
அதற்கு மேல் மறுக்க முடியாமல் நிலா தங்கள் அறைக்குச் சென்று விட,
ரஞ்சனும் தன் உணவை முடித்துக் கொண்டு, “நான் கிளம்பறேன் ம்மா… கிளம்பறேன் பாட்டி” விடைபெற்றான்.
“டேய்.. நிலா கிட்ட சொல்லிட்டுப் போடா…!” என்று ராதா சொல்ல,
‘ப்ச் இதுவேறயா?!’ என்று மனதுள் சலித்துக் கொண்டவன், அவர்கள் அறைக்குச் செல்ல, நிலா மறுபடியும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
‘என்னாச்சு இவளுக்கு ஒருவேளை அந்த மாத்திரை சாப்பிட்ட எஃபெக்டோ?! நானும்தான் டெய்லி சாப்பிடறேன்! ஆனா எனக்கு பெரிசா எந்த பாதிப்பும் இல்லையே!? இவதான் பார்க்கறதுக்கே நோஞ்சான் மாதிரி இருக்காளே?! அதான் இப்படி ஆகியிருக்கும்!’ என்று நினைத்துக் கொண்டு வெளியேறினான்.
வெகுநேரம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவள், தன் கைப்பேசி அழைப்பின் சத்தம் கேட்டுக் கண் விழித்தாள்.
அவள் எழுந்து போனை எடுக்க, “ஏய் நிலா எவ்ளோ நேரமா போன் அடிக்கிறேன்! லஞ்ச் டைம்தானே? ஏன் போன் எடுக்கலை?!” என்றான் நிரஞ்சன்.
“ஸாரி நிரு… ரொம்ப தலை வலியா இருந்ததுனால அசந்து தூங்கிட்டேன்! ஸ்கூலுக்கும் போகலை!” என்றாள் நிலா.
“ரொம்ப முடியலைன்னா ஹாஸ்பிட்டலுக்குப் போகவேண்டியதுதானே நிலா! நான் அம்மாக்கு போன் போட்டு கூட்டிட்டுப் போகச் சொல்றேன் இரு!” என்று அவன் போனை அணைக்க முயல,
“ஏய் ஏய் நிரு… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இப்போ தேவலை..! ஆமாம் நீ இந்த நேரத்துல கூப்பிட மாட்டியே?! என்ன ஸ்பெஷல்?!” என்றாள்.
“அது சஸ்பென்ஸ்!” என்று அவன் சொல்ல,
“எருமை… அப்ப எதுக்கு போன் பண்ண?!” என்று அவள் எகிற,
“ஏய் வருங்கால தமிழ்ப் பேராசிரியரை மரியாதையா கூப்பிடனும்!” என்று அவன் மிரட்ட,
“அதெல்லாம் ஆனா பிறகு பார்த்துக்கலாம்!” என்றவள்,
“ஏய் என்ன விஷயம்டா ப்ளீஸ் சொல்லேன்!” என்றாள் கெஞ்சலாக.
“ஈவினிங் வந்து சொல்றேன்.. அதுவரைக்கும் யோசிச்சிகிட்டே இரு!” என்று அவன் போனை வைத்துவிட,
“இவன் இருக்கானே! சில விஷயத்துல அவன் அண்ணன் மாதிரியே!” என்று சிரித்தபடியே போனை வைத்தாள்.
ரஞ்சனின் ஞாபகம் வரவும், மாத்திரைகளின் ஞாபகமும் வந்தது.
‘ஒரு தூக்க மாத்திரைக்கு இவ்ளோ எஃபெக்ட் இருக்குமா?! அவன் தூக்கம் கலையக் கூடாதுன்னு நைட் லைட் போடாம மாத்திரை எடுத்துப் போட்டது தப்பா போச்சு! இதுல ரொம்ப தலை வலியா இருக்கேன்னு ரெண்டு மாத்திரை வேற போட்டுகிட்டேன்! சே! தலைவலி போகணும்னு மாத்திரை சாப்பிடப் போய் இன்னும் அதிகமாக்கி விட்டுடுச்சு!’ என்று புலம்பியவள்,
‘எதுக்கும் அது என்ன மாத்திரைன்னு எடுத்துப் பாப்போம்!’ என்ற யோசனைத் தோன்ற, அந்த டிரெஸிங் டேபிளின் டிராயரைத் திறந்து பார்த்தாள். அங்கே தலைவலி மாத்திரையைத் தவிர வேறதுவும் இல்லை!
‘ஒரு வேளை நிஜமாவே அவன் பிரெண்டுக்காகத்தான் வாங்கி வைச்சானோ?! அதான் எடுத்துட்டு போயிருப்பானோ!?’ என்று அவள் மனம் நினைக்க,
‘இல்ல இல்ல எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணை வை!’ என்று உசுப்பிவிட்டது மூளை.
மாலை வீடு திரும்பிய நிரஞ்சன், நிலாவிடமும், தன் குடும்பத்தினரிடமும் தனக்கு ஒரு வாரப் பத்திரிக்கையில் தன்னம்பிக்கை பற்றிய தொடர் கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். அனைவரும் மனம் மகிழ்ந்தனர்.
அன்று இரவு நிலா போர்வையை இழுத்துத் தலைவரை போர்த்திக் கொண்டு நன்றாகத் தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.
பால்கனியிலிருந்து தங்கள் அறைக்கு வந்த ரஞ்சன், அவள் நன்றாக உறங்கிவிட்டாள் என்று நினைத்து, தான் ஒளித்து வைத்த இடத்திலிருந்து தன் தூக்க மாத்திரைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு படுக்கையில் விழுந்தான். அதைப் பார்த்த நிலாவின் மனதில் வருத்தம் துளிர்விட்டது.
‘இன்னும் அவனால அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு வரமுடியலைன்னு எனக்குப் புரியுது! ஆனா தூக்கமாத்திரை சாப்பிடற அளவுக்கு இவனுக்கு இவ்ளோ ஸ்ட்ரெஸ் இருக்கிறது நல்லதில்லையே?! இவன் சென்னை வந்து எட்டு மாசத்துக்கும் மேலாகுதே! அப்போ இவ்ளோ நாளா இவன் மாத்திரை எடுத்துக்கறானா? அய்யோ அப்படி எடுத்துகிட்டு இருந்தா அது அவன் ஹெல்தை ரொம்ப பாதிக்குமே!’ என்று கவலை கொண்டாள்.
‘இல்ல நிச்சயமா நான் இதைத் தொடர விட மாட்டேன்!’ என்ற முடிவுக்கு வந்தவள், நெடு நேரம் அவனை நினைத்து உறக்கம் வராமல் தவித்தாள்.
மறுநாள் மாலை அவள் வேலை முடிந்து வீடு திரும்பியதும் அவனது மாத்திரைகளை எடுத்து அப்புறப் படுத்தினாள்.
அன்று இரவு வழக்கம் போல் தனது மாத்திரையை எடுக்கப் போன ரஞ்சன், அதை அங்கு காணாமல் திகைத்தான்.
“இ இங்கதானே வைச்சிருந்தேன்! எங்க போச்சு!?’ என்று சிறிது நேரம் பொறுமையாக எல்லா இடங்களிலும் தேடினான்.
ஆனால் சில நிமிடங்களுக்குப் பின் தன் பொறுமையைக் காற்றில் பறக்க விட்டவன், பதட்டத்துடன் தேடத் துவங்கினான்.
அவனது செய்கைகளை உறங்குவது போல், அவனுக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்தவளின் நெஞ்சில் கலக்கம் எழுந்தது.
எங்கு தேடியும் மாத்திரைகள் கிடைக்காததால், அவன் மனதில் கோபம் மூண்டது.
‘ஒரு வேளை இவ வேலையா இருக்குமோ?! என்று சந்தேகம் எழுந்ததும் அவளை நோக்கி முன்னேறினான்.
அவன் அவளை நெருங்க நெருங்க அவள் இதயத்தின் படபடப்புக் கூடியது.
அவள் அருகே வந்தவன், அவள் நன்றாக உறங்குவதாக நினைத்து, ‘சே’ என்று சலிப்புடன் தன் கைகளை ஓங்கி அவள் படுத்திருந்த சோபாவில் குத்தினான்.
அவன் செய்கை அவள் மனதில் பயத்தைக் கிளப்ப அவள் மூச்சின் வேகம் அதிகரித்தது. அதன் மூலம் அவள் உறங்கவில்லை என்பதை ரஞ்சன் கண்டுகொண்டான்.
‘ஒரு தூக்க மாத்திரை இல்லாது போனதுக்கா இவன் இப்படி பிஹேவ் பண்றான்?!’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
“ஏய் நடிச்சது போதும் எழுந்திருடி…!” என்றான் அதட்டலாக.
பயத்துடன் போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்தவள், “எ என்ன?!” என்றாள் தைரியத்தை வரவழைத்து.
“மாத்திரை எங்க?!” என்றான்.
“எ எந்த மாத்திரை?!”
“நடிக்காதடி…!” என்றான்.
“எ எனக்கு எதுவும் தெரியாது?!” என்று அவள் திணற,
“மரியாதையா கொடுத்துடு!” என்று அவன் மிரட்ட,
“அ அது உன் பிரெண்டோடது தானே..?!’ என்றாள் மெல்ல.
“இப்ப நீ குடுக்கப் போறியா இல்லையா?!” என்றான் பொறுமை இழந்து.
“இ இல்ல.. தூ தூக்கிப் போட்டுட்டேன்!” என்று அவள் சொல்ல, அவள் கையை இறுகப் பற்றி எழுப்பியவன்,
“விளையாடாதடி?! வைச்சிருந்தா கொடுத்துடு..!” என்றான் கோபம் ஏற.
“இ இல்ல.. நிஜமாவே தூக்கிப் போட்டுட்டேன்!” என்று பொய் உரைத்தாள் நிலா.
அவள் முகத்தை உற்று நோக்கியவன், “சே!” என்று கடும் கோபத்துடன் அவளைச் சோபாவில் தள்ளிவிட்டு, அறையை விட்டு வெளியேறினான்.
நிலை தவறி சோபாவில் விழுந்தவளின் மனம் திகிலில் உறைந்தது.
error: Content is protected !!