Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Ep 1 – அரக்கனின் சுந்தரி அவள்!!

A passionate digital illustration of a couple embracing closely in a romantic, rain-soaked or misty setting. The woman is wearing a red saree and traditional gold jewelry, and the man has his arms around her. At the bottom, the Tamil text reads "அரக்கனின் சுந்தரி அவள்.." with the author's name "மோனிகா சதிஷ்" underneath
#Antihero #அரக்கனின்சுந்தரிஅவள்Ep1 #Tamilnovelwriters #TNW #TamilNovels #RomanticThriller #DarkRomance

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ

மணி மந்தர காரிநீயே

மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ

மலையரையன் மகளானநீ,



Advertisement

தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,

தயாநிதி விசாலாட்சி நீ

தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ

Advertisement

சரவணனை யீன்ற வளும் நீ,

Advertisement

பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்

பேர்பெற வளர்த்தவளும் நீ,

பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ

Advertisement

பிரிய வுண்ணாமுலையு நீ

ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ

அகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.

என்று காமாட்சி விருத்தத்தை பக்தியோடு பாடி முடித்து, சாம்பிராணி பொடியை அவள் அருகில் இருந்த நெருப்பு கங்குகளில் இட்டு இன்னும் நறுமணத்தை அதிக படுத்தினால் நம் நாயகி திரிபுர சுந்தரி.

பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவ படத்திற்கு தீபாரதனை காட்டி, அவள் செய்த சர்க்கரை பொங்களை நெய்வேத்யம் செய்து முடித்தால்.

சாம்பிராணி புகையை வீடேங்கும் காட்டி பின் முற்றத்தில் உள்ள துளசி செடிக்கும் காட்டி விட்டு துளசி பூஜை செய்து முடித்து உள்ளே வந்தால் திரிபுர சுந்தரி.

உள்ளே வந்தவளிடம் சுண்ட காய்ச்சிய பாலில் ஏலக்காய்யும் குங்கும பூவும் இட்ட பால் குவளையை அவள் கையில் திணித்தார் அவளின் தாய் கற்பகம்.

செல்ல அம்மா என்று செல்லம் கொஞ்சியவள் இளம் சூட்டில் உள்ள பாலை வேக வேகமாக குடித்து முடித்தால்.. உதட்டின் மேல் உள்ள பால் மீசையை அவளின் அம்மா முந்தானையில் துடைத்து கொண்டவள், அம்மா நாழி ஆகறது வாங்கோ ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் வேலைய முடிச்சிடுவோம் என்று அவள் அன்னையை அழைத்தால்.

அதலாம் நான் பாத்துக்குறன் டி பொண்ணே செத்த இப்படி திரும்பு, தலையை துவட்டி விடுறன் இப்படியே இருந்தா ஜலதோஷம் பிடிச்சிடும் பார்த்துக்கோ என்று மகளை பின் புறம் திருப்பி அவளின் நீண்ட கூந்தளை நன்றாக உதறி ஈரம் போக துவட்டிவிட்டார் கற்பகம்.

அம்மா சீயக்காய் போடி தீர்ந்து போக போறது அப்பாகிட்ட சொல்லி வாங்கி வச்சிடுங்கோ.. அப்பறம் இந்த முறை சீயக்காய் போடி அறைக்கும் போது கொஞ்சம் வெந்தயம் கூடுதலா போடுங்கோமா, கடையில பெயருக்குனு கொஞ்சம் தான் தரா என்றால் சுந்தரி.

பின் இடைவிடாது, மாவு மில் காரர் கிட்ட இந்த முறை நலங்குமாவு பொடிய கொஞ்சம் கொற கொறப்பா அறைக்க சொல்லுங்கோ அப்போதான் முகத்துல நல்லா ஸ்கருப் பண்ண வசதியா இருக்கும் என்றால்..

போன முறை அவர் புள்ளையாண்டா இருந்தாரு டி, அதான் நாம எப்பவும் அரைகுறை பதம் தெரியாம எல்லாருக்கும் அரைக்குறா மாதிரி அரைச்சு குடுத்துட்டாரு.. இந்த முறை போறச்ச யார் இருந்தாலும் இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்து அரைச்சுண்டு வரன் போதுமா என்றார் கற்பகம்.

மேலும் அவள் ஏதோ கூற வர, விட்டா பொழுதன்னைக்கும் பேசிண்டே இருப்ப வாடி பொண்ணே, என்றவர் மகளை அழைத்து கொண்டு அடுத்தடுத்த வேலையை பார்க்கலானார்.

நேரம் 8.30ஐ தொட, அம்மா நாழி ஆகுது சீக்கரம் வாங்கோ என்று குரல் கொடுத்துவிட்டு சாப்பிட உணவு மேஜையில் காத்து கொண்டிருந்தான் சுந்தரியின் அண்ணன் அபிநவ். கற்பகம் விநாயகம் தம்பதியின் மூத்த மகன்.

அண்ணா மொத இந்த நெய்வேத்யம் எடுத்துக்கோங்க என்று நெய் மிதக்கும் சர்க்கரை பொங்களை சிறு கிண்ணியில் எடுத்து வந்து கொடுத்தால் சுந்தரி.

பாப்பா சீக்கரம் தயாரான நான் உன்னையும் காலேஜ்ல விட்டு நான் அலுவலகம் புறப்படுவன்ல போய் கிளம்பு பாப்பா என்று தங்கயை துரித படுத்தினான். அண்ணன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல், அவள் அறைக்கு சென்று தாவணியில் இருந்து சுடிதாருக்கு மாறி வந்தால் சுந்தரி..

அதற்குள் கற்பகம் மகனுக்கு காலை உணவாக சுட சுட இட்லியையும் தொட்டு கொள்ள மல்லி சட்னி மற்றும் மணக்கும் சாம்பாரையும் எடுத்து வைத்தார்..

அப்பா கிளம்பிட்டாராமா என்றான்.. அவர் காலம்புறையே கிளம்பிட்டார் டா, இன்னைக்கு வெள்ளி கிழமைல கோவில்ல கொஞ்சம் கூட்டம் நிரம்பி வழியும், நானும் 11 மணி போல கிளம்பி போய் அம்பாள சேவிச்சிட்டு உங்க தோப்பனாரு கூடவே வந்திடனும் என்றார்.

அம்மா அப்பாவ தொந்தரவு பண்ணாதீங்கோ இன்னைக்கு அவருக்கு கோவில்ல நிறைய வேல இருக்கும்.. நேத்தே என்னான்ட சொல்லிட்டு இருந்தார், மடப்பள்ளி கணக்கு வழக்கு பார்க்கணும்னு அதான் சொல்றன்.

சரிடியம்மா உன் தோப்பனார தொந்தரவு பண்ணாம நான் அம்பாள மட்டும் சேவிச்சிண்டு வரன், அவர் வரச்ச வரட்டும் என்று அலுத்து கொண்டார்..

அபிநவ் மாத்திரம் ஏதோ ஒரு சிந்தனையில் உழன்று கொண்டிருந்தான். அவன் கவனம் இங்கே இல்லை என்பதை உணர்ந்து கொண்டனர் தாய் மகள் இருவரும்.. அண்ணா என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கேள் என்றால் பாசக்கார தங்கை.. ஒன்னும் இல்லடா சீக்கரம் சாப்பிடு கிளம்பலாம் என்றான்.

அண்ணன் தங்கை இருவரும் சாப்பிட்டு முடித்து கிளம்பினர். போகும் போதே நிலை வாசலில் கால் தடுக்க, பதறி போனால் சுந்தரி அண்ணா என்ன ஆச்சு என்றவள், அம்மா ஜலம் கொண்டு வாங்கோ என்று பின்னால் வந்த அன்னையிடம் கூறினால்..

டைம் ஆகுது சுந்தரி, என்றவன் தாய் கொண்டு வந்த செம்பு நீரை பாதி அருந்தினான். பின் தங்கையை ஏற்றி கொண்டு அவள் கல்லூரி நோக்கி புறப்பட்டான்.

கற்பகம் மற்றும் விநாயகம் பெற்ற முத்துக்கள் தான் அபிநவ் மற்றும் திரிபுர சுந்தரி..

அபிநவ் பொறியியல் முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறான்..

திரிபுர சுந்தரி, இளங்கலை வேதியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்.

சென்னை நகரின் பிரபலமான திநகரில் பகுதியில் பிராமினர்கள் வசிக்கும் தெருவில் வசிக்கிறார்கள்..

விநாயகத்தின் பரம்பரை சொத்து தான் இப்போது அவர்கள் இருக்கும் விடு.. நடுத்தர குடும்பத்திற்கும் சற்று வசதியானவர்கள்.

விநாயகம் கோவிலில் அறைநிலைய துறையில் வேலை செய்கிறார்.. அரசு உத்யோகம் தான். வருமானத்திற்கு குறைவில்லை.

நடப்புக்கு வருவோம்..

அண்ணா ஏன் ஒரு மாதிரி இருக்கேள் எதாச்சும் பிரச்சனையா என்று வண்டி கண்ணாடியில் தெரியும் அண்ணனின் முகத்தை பார்த்து கொண்டே கேட்டால் சுந்தரி.

நேரத்தை பார்த்தான் அபிநவ் கொஞ்சம் நேரம் இருப்பதால், அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் வண்டியை நிறுத்தியவன் தங்கையுடன் கோவிலில் நுழைந்து அங்குள்ள குட்டி விநாயகரை தரிசித்து விட்டு அவன் மனதில் உள்ளதை கூற தொடங்கினான்.

நான் காலேஜ் பைனல் இயர் படிக்கறச்ச மூணாவது வருஷம் மாயானு ஒரு பொண்ணு ஜாயின் பண்ணா சுந்தரி.

எல்லார போலவும் நாங்களும் ஃபிரன்ட்ஸ்ஸா தான் பழகனோம்.. போன மாசம் வரைக்கும் எங்க நட்புல எந்த மாற்றமும் இல்ல.. ஆனா அவ இப்போ என்ன காதலிக்குறதா சொல்றா, எனக்கு அவ மேல அப்படி எந்த எண்ணமும் இல்ல.. நம்ம குடும்பத்துக்கும் அவ குடும்பத்துக்கும் எப்பவும் ஒத்து போகாது.

அவங்க வேற சமூகம் சுந்தரி நம்ம வீட்ல நிச்சயம் சம்மதிக்க மாட்டாங்க.

அது மட்டும் இல்ல, அவங்க ரொம்ப பணக்காரங்க.. அவங்க அண்ணன் பைனான்ஸ் கம்பெனி ஏதோ நடத்துறாங்க போல, சினிமா துறைல இருக்கவங்களுக்கு கூட அவரு தான் பைனான்ஸ் பன்றாரு.. சைடுல கட்ட பஞ்சாயத்து வேலையும் நடக்குது.

இப்போ என்ன பிரச்சனைனா அந்த பொண்ணு கிட்ட எனக்கு விருப்பம் இல்ல.. எங்க குடும்பம் வேற உங்க குடும்பம் வேறன்னு சொல்லிட்டன்.. ஆனா அந்த பொண்ணு கேக்கறா மாதிரி இல்ல..

தமையன் கூறும் அனைத்தையும் அவன் முக பாவத்துடன் சேர்த்து உள்வாங்கி கொண்டு இருந்தால் திரிபுர சுந்தரி.

இப்போ எங்க ஆபீஸ்ல, ரெஃபரென்ஸ் மூலம் என்னோட டீம்லயே ஜாயின் பண்ணிட்டா.. ரொம்ப டார்ச்சரா இருக்கு பாப்பா.

நேத்து வேலை முடிஞ்சதும் வந்து வழி மரிச்சு நின்னு அவ காதல ஏத்துக்க சொல்லி கட்டாய படுத்துனா.. எனக்கு அதல கொஞ்சம் கோவம் வந்துடுச்சு, அவசர பட்டு சில வார்த்தைகளையும் விட்டுட்டன். அவ அழுதுக்குட்டே நின்னா நான் கண்டுக்காம வண்டிய எடுத்துட்டு வந்துட்டன்..

நைட் எல்லாம் தூக்கம் இல்ல மனசு கஷ்ட்டமா இருக்கு என்று நடந்த அனைத்தையும் ரத்தின சுருக்கமாக கூறி முடித்தான் தன் ஆருயிர் தங்கையிடம்..

சுந்தரிக்கு தம்மையனின் மனது நன்றாக புரிந்தது.. அவன் மனதில் மாயா என்ற பெண் சிறு சலனத்தை ஏற்படுத்தி உள்ளால் என்றும்.. ஆனால் அம்மா அப்பாவை எண்ணி மாயாவை ஏற்க மறுக்கிறான் என்றும் அவன் மனதை அழகாக புரிந்து கொண்டால்.

ஆனால் அண்ணனின் காதலை அவரே உணரட்டும் நாம் தலையிட வேண்டாம் என்று நினைத்தவள்.. அங்குள்ள செல்வ விநாயகரிடம் சீக்கரம் நல்ல வழி காட்டுப்பா என்று வேண்டி கொண்டால்..

அவள் வேண்டுதலின் பொழுது குட்டி விநாயகர் மோதகம் சாப்பிடுவதில் பிஸியாக இருந்தார் போலும்..

அவளின் வேண்டுதளை கிடப்பில் போட்டு அண்ணன் தங்கை இருவருக்கும் வேறொரு சம்பவத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து இருந்தார்..

அண்ணா விடுங்கோ எல்லாம் நல்லதே நடக்கும் உங்க மனசுக்கு எது சரினு படுதோ அத பண்ணுங்கோ உங்க தங்க எப்பவும் நான் உங்களுக்கு துணையா இருப்பன் என்று ஆதூரமாக தமையனின் கையை பிடித்து கொண்டால்..

சரி வா, பாப்பா உனக்கு டைம் ஆகிடுச்சு கிளம்பலாம் என்று விநாயகரை மீண்டும் ஒரு முறை தரிசித்துவிட்டு கிளம்பினர். வீட்ல யார்கிட்டயும் இத பத்தி சொல்ல வேண்டாம் பாப்பா என்றான்.

சரி அண்ணா என்று பேசி கொண்டே இருவரும் வண்டியின் அருகில் வந்தனர்.

இவ்வளவு நேரமும் எதிர் முனையில் இருந்து அவர்களையே கண்காணித்து கொண்டிருத்தவன், எதிரே நின்று இருந்த தன் ஆட்களுக்கு கண்ணசைவில் ஏதையோ உணர்த்த இதற்கு தான் காத்திருந்தோம் என்பதை போல் அபிநவ்வை சுற்றி வளைத்தனர்.. அபிநவ் என்னவென்று சுதாரிக்கும் முன் அவனின் வாயை பொத்தி ஜீப்பில் அல்லி போட்டனர், அவர்களுடன் போராடிய திரிபுர சுந்தரியை கிழே தள்ளிவிட்டு அங்கிருந்து காரில் பாய்ந்து சென்றனர்.

அண்ணா அண்ணா என்று கதறி கொண்டே ஜீப்பின் பின்னால் ஓடியவளை அவள் பின்னே வேகமாக வந்த மற்றொருவன் காரினுள் இழுத்து கொண்டான்..

எதையும் உணராதவள், காரினுள் இருந்து அண்ணா என்று மீண்டும் கத்தி கூப்பாடு போட்டால்..

அப்போது தான் அருகில் உள்ளவனை கண்டால்.. ஹய்யோ ஏன் இப்படி பண்றேள் என் அண்ணாவை யாரோ கடத்திண்டு போறார்.. என்ன விடுங்கோ என்று அவன் பிடித்து இருந்த கையை விடுவித்து கொள்ள போராட அவளால் அது முடியவே இல்லை.. பின் தன் பற்களை கொண்டு அவன் கையை கடித்து விட, அவளிடம் இருந்து கையை உதறி கொண்டு அவன் விட்ட அறையில் மயங்கி அவன் மீதே சரிந்தால் பாவை..

ச்சீ என்று மயங்கியவளை அவன் மீது இருந்து தள்ளிவிட்டவன், அந்த தார் சாலையில் காரை லாவகமாக செலுத்தினான்..

பட்டப்பகளில் அதுவும் காலையில் பீக் ஹவர் என சொல்லப்படும், சென்னையின் பரபரப்பான ஏரியாவில் தான் இந்த சம்பவம் அனைத்தும் கண் இமைக்கும் நொடியில் நடந்து முடிந்தது.

தொடரும்………

——————————————————————————————————————————————————————————————————————————-

இங்கே எனது கதைகளை வாசிப்பதோடு, அவற்றை ஆர்.ஜே-க்களின் வசீகரக் குரலில் ஒரு திரை அனுபவமாக ஒலியாகக் கேட்க எனது யூடியூப் சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் ஊக்கமே எனது அடுத்தடுத்த படைப்புகளின் பலம்! ❤️

🎧 YouTube: https://www.youtube.com/@Monicasathishaudionovels

Monica Sathish

Tamil Novelist & Audio Story Creator 🎧📖 Romantic Tamil Novels | Emotional Love Stories | Serial Fiction | Psychological Drama | Listen to Tamil Audiobooks | Follow for New Chapters

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!