தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அறிவுச்செல்வனிடம் இருந்து தனது பார்வையைத் திருப்ப தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான் நந்தா. அவனைப் பார்த்த பவித்ரா குடுகுடுவென ஓடிச் சென்று அவனது காலைக் கட்டிக் கொண்டு தூக்கு என்பதைப் போல் தனது கைகளைத் தூக்கிக் கொண்டாள்.
உடனே நந்தாவும், பவிக்குட்டி ஸ்கூலுல சேர்ந்தாச்சா சூப்பர் எனக் கூறிக் கொண்டே அவளைத் தூக்கிக் கொண்டான். மாமா நீங்க கவலப் படாதீங்க, பவிக்குட்டிய நான் பத்திரமா பாத்துக்குவேன் எனக் கூறினான் நான்காம் வகுப்பு படிக்கும் நந்து,
உடனே அப்ப என்னை யார் பாத்துக்குவாங்க என கோபத்துடன் கேட்டான் அப்போதுதான் இரண்டாம் வகுப்பு சென்றிருக்கும் அறிவு. நீ பெரிய க்ளாஸ் போயிட்டேல, அதனால நாம ரெண்டுபேரும் சேர்ந்து பாப்பாவ பாத்துக்குவோம் என்றான் நந்தகுமார்.
உடனே அங்கிருந்து கோபமாகச் சென்றான் அறிவு. டேய் நில்லுடா நானும் வரேன் எனக் கூறக் கூற ஓடியே விட்டான். சரி மாமா லன்ச் டைம் முடியப் போகுது நான் க்ளாசுக்கு போறேன்.
Advertisement
சரிப்பா நீ பாத்து போ, பவிக்கு அடுத்த திங்கக் கிழமைதான் ஸ்கூல் ஆரம்பிக்குது, நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் என்றார் சுந்தரம். ஒகே மாமா பை, பவிக்குட்டி பை என கைகாட்டி விட்டு அவனுடைய வகுப்புப் பகுதிக்குச் சென்றான்.
நாட்கள் அதன் போக்கில் நகர அறிவையும், பவியையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது நந்தகுமாரின் பொறுப்பானது. தங்கள் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் வரையிலும் இருவரையும் அழைத்துச் செல்வது, பின் பவித்ராவை அவளின் வகுப்பறையில் விடுவது என அவள் மீது மிகுந்த அக்கரை எடுத்துக் கொண்டான்.
பாலர் வகுப்புகளுக்கு சீக்கிரமே பள்ளி முடிந்துவிடுவதால் அவள் முதலில் கிளம்பி விடுவாள். இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் தான் மட்டும் தனித்து இருப்பது போலவும், இத்தனை நாட்கள் தன்னை அன்புடன் பார்த்துக் கொண்ட தனது அண்ணன் கூட தன்னை விட்டு விலகிச் செல்வதாக நினத்தான். தன் மீது யாருக்கும் பாசம் இல்லை,
Advertisement
இவை அனைத்திற்கும் காரணம் பவித்ரா என நினைத்தான். பாவம் அவனும் சிறிய குழந்தை தானே அவனுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்ல மறந்தனர்.
Advertisement
அவர்கள் வீட்டிலிருந்த ஆட்களே கவனிக்கத் தவறி இருந்தனர். இதனால் பாதிப்படையப் போவது பவித்ரா மட்டுமே என அப்போது அங்கு யாருக்கும் தெரியாமல் போனதுதான் காலத்தின் கொடுமை…
இதற்கிடையில் அறிவுச்செல்வன் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டான் யாருடனும் விளையாட செல்வதில்லை. விளையாடச் சென்றால் அங்கும் அவளுக்கே முன்னுரிமை கொடுப்பதாக நினத்தான்.
அதனால் விளையாட அழைத்தால் நான் படிக்க வேண்டும் என புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விடுவான். வேறு வழியில்லாமல் படிக்க ஆரம்பித்தது, அனைத்து பாடத்திலும் முதல் மதிப்பெண் எடுக்க காரணமாக அமைந்தது.
Advertisement
இரண்டாம் வகுப்பின் இறுதியில் அனைத்திலும் சிறந்த மாணவன் என்ற பட்டம் ஆண்டுவிழாவில் அறிவுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கு அவர்கள் ஒட்டுமொத்த குடும்பமே வந்து கைத்தட்டி மகிழ்ந்தது.
பரிசு வாங்கி மேடையில் இருந்து இறங்கி வந்ததுமே மொத்த குடும்பமும் அவனை சூழ்ந்து கொண்டு பாராட்டி மகிழ்ந்தது. இரு பாட்டிமார்களும் கட்டி அணைத்து முத்தமழை பொழிந்து பாசத்தைக் காட்டியது.. அறிவுக்கு இழந்ததை மீண்டும் அடைந்துவிட்ட மகிழ்ச்சி..
மீண்டும் தன்னை அனைவரும் கொஞ்சுகிறார்கள். பாராட்டுகின்றனர். என மிகுந்த மகிழ்ச்சி… அத்துடன் பவித்ராவிடம் அவளது அம்மாச்சி……, பாரு பவிக்கண்ணு நம்ம அறிவு எப்புடி நல்லா படிச்சி பரிசெல்லாம் வாங்குது, நீயும் அப்படி வாங்கனும் என அறிவுரை வழங்க ஆரம்பித்துவிட்டார்..
பவியும் சிரித்துக் கொண்டே மண்டையை எப்போதும் போல் வேகமாக ஆட்டினாள், அறிவுச்செல்வனுக்கு மிகுந்த சந்தோஷம். நாம் நன்றாக படித்தால் நம்மைத்தான் அனைவரும் கொஞ்சுகிறார்கள். அம்மா, அப்பா, நந்தண்ணா எல்லாரும் நம்மை பாராட்டுகிறார்கள் என நினைத்தான்..
அன்றிலிருந்து அனைத்து வகுப்பிலும் ஓவர் ஆல் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க ஆரம்பித்தான்.. அறிவுச்செல்வன் என்ற பேருக்கிணங்க தன்னுடைய அறிவை அனைத்து விதத்திலும் வளர்த்துக் கொண்டான். காலச் சக்கரம் உருண்டோட அவனுடைய கனவு படிப்பான மருத்துவத்தை தேர்ந்தெடுத்து முதலாம் ஆண்டு இறுதியில் இருக்கிறான்.