Skip to content
Post Views: 1,280
கீதம்
14
ஊரின் எல்லையை கடக்க முற்படும்போது, வயலில் வேலை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்த மக்களில் சிலர் விஷயம் கேள்விப்பட்டு ஆரவ் காரை வழி மறித்தனர்.
வண்டியில் பின் தொடர்ந்து வந்த கான்ஸ்டாபிள் வேகமாய் அவர்களிடம் சென்று, என்னவென கேட்க, ” டாக்டர் தம்பிக்கு கத்தி குத்து நடந்ததுன்னு சொன்னாங்க. அதான் விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தோம் ” என்பதால் அனுமதித்தார்.
” ஏனுங்க டாக்டர் தம்பி! எங்க ஊர்க்கு வந்து உங்களுக்கு இப்படி ஆகியிருச்சே. அந்த கிறுக்கு பிடிச்சவன் பண்ண தப்புக்கு மன்னிச்சுக்கோங்க ” என்றப்படி சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தவர்கள் கிளம்பும் நேரத்தில் சரவெடியை கொளுத்தி போட்டு விட்டனர்.
Advertisement
” உங்க பொஞ்சாதி மேல இருக்கிற பாசத்தில் ஓடி போய் உங்களுக்கு குத்து பட்ருச்சே. அவங்க தாலி பாக்கியம் தான் உங்கள காப்பாத்துச்சு. இனி நல்லபடியா பார்த்து இருந்துக்கோங்க.” என்றவரிடம் எப்போதும் போல் தலைவர் பேசாமல் கேட்டு கொண்டு அமைதியாய் இருக்க, நந்துவோ கோபத்தில் வெடித்து சிதறி விட்டாள்.
” யோவ் பெருசு!, எனக்கு கல்யாணம் ஆனதை நீ வந்து பார்த்தியா, கூட வர்றவங்க எல்லாம் புருஷனா? வாயிலே ஏதாவது வந்துரும். நல்லா கண்ணை தொறந்து பாருங்க.” கழுத்தை சுட்டி காட்டி மேலும் கோபத்துடன் ” என் கழுத்துல தாலி எங்க இருக்கு? கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணை பார்த்து இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என மேலும் பேசி வெளுத்து வாங்கினாள்.
அவளின் கோபத்தை கண்டதும் தான் தாங்கள் தவறாக பேசியது அவர்களுக்கே புரிந்தது. உடனே ” இந்தா புள்ள!, கோபிக்காதே உனக்கு ஒன்னுன்னதும் அவரு ஓடி வந்தாரு. நீயும் அவர்கிட்ட தான் போய் நின்ன. அதான் தப்பா நினைச்சிக்கிட்டோம். மன்னிச்சுக்கோ தாயி! ” என வருத்தம் தெரிவித்த பின்பே சிறிது அமைதி ஆனாள்.
Advertisement
” வழியை மறிச்சுட்டு, வம்பு பண்ணிட்டு திருயிறீங்களா கிளம்பு கிளம்பு..,’ கான்ஸ்டாபிள் நிலைமையை கையில் எடுத்து கொண்டு அனுப்பி வைத்து, வண்டியை எடுக்க சொன்னார்.
Advertisement
சிறிது தொலைவு வரை அமைதி மட்டுமே காரில் பரிணமித்து இருக்க, கோபத்தில் முகம் சிவந்து, உஷ்ண பெருமூச்சு விட்டு கொண்டிருந்தவளின் பார்வை பக்கத்தில் அதுவரை ஒன்றும் கூறாமல் பம்மி கொண்டு இருந்தவனின் புறம் திரும்பியது.
காரினை ஓரமாய் நிறுத்த சொல்லி, டிரைவரை வெளியேற்றினாள். அப்போதே அவனுக்கு புரிந்து விட்டது அடுத்து பூஜை தனக்கு தான் என்று.
” வாயை திறந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா? கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க ? கண்களை உருட்டி, அதட்டி கேட்க.
Advertisement
” இல்லையே பாருங்க “.., என வாயை திறந்து காட்ட,
அவ்வளவு தான், அதனை நேரம் அவனிடம் மரியாதையாய் பேசியவள், ” டேய்!, கொழுப்பா, அடிச்சேன்னு வை கன்னம் பேந்துரும் ” பத்ரகாளியாய் மாறி கத்த.
“மேடம்!, இப்போ என்னாச்சு , ஏன் இவ்ளோ கோபம்? “
” என் பக்கத்துல கூட யாரையும் நெருங்க விடமாட்டேன். எங்க சார் பையன்னு தான் நம்பி உங்க கூட வந்தேன்., அந்த தடிமாடுங்க அப்படி பேசுனா இல்லைனு சொல்லாம எதுக்கு ஊமை மாறி அமைதியா வர்றிங்க. ” கோபம் குறையாமல் அப்போதும் கத்த,
” இங்கே பாருங்க, அவங்க தப்பா நினச்சு சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லையே. அடுத்து நான் அவங்கள பார்க்க போறதே இல்லை. அப்புறம் என்ன ? “
” நீங்க பார்க்க மாட்டிங்க, நான் இங்கே தான் சுத்திட்டு இருப்பேன். என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா ?”
” அவங்க ஏன் தப்பா நினைக்கணும் எனக்கு புரியல ? என்றவனிடம்,
“இன்னைக்கு உங்களை புருஷன்னு சொல்வாங்க, நாளைக்கு பிள்ளை எங்கேன்னு கேப்பாங்க, ” சற்று நிறுத்தி “நீங்க பாரின் போனா என்னை விட்டுட்டு ஓடி போய்ட்டீங்கன்னு சொல்வாங்க, இதெல்லாம் எனக்கு தேவையா., ” வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அழுத்தி கேட்க.
” ஓஓ., அப்படி நினைப்பாங்களா ? என்றவன் சற்று யோசித்து ” இப்போ என்ன கல்யாணம் பண்ணிட்டு உன்னையும் கூட்டி போறேன் ” என்றான் இலகுவாய்.
ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை., என்ன சொல்கிறான் இவன் என்றபடி அவனை பார்த்து ” வாட் , என்ன சொன்ன? என்ன சொன்ன ? , கல்யாணமா ? உன்னையா ? , நானா? ” என கத்தியவள் பின்பு அவனை உற்று பார்த்து ” நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன், விளையாடாதீங்க , என்றாள் முகம் இறுக.
” லுக், நான் ஒன்னும் விளையாடல, நிஜமா தான் சொல்றேன். என் ஓய்ப்னா அது நீ தான், அது என்னிக்கும் மாறாது ” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
ஒரு நொடி என்ன சொல்வதென தெரியாமல் அவள் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
இவன் இப்படி கூறுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும் என அவள் தடுமாற, கண்களில் மொத்த காதலையும் தேக்கி அவளை இமை மூடாது பார்த்தவன் ” எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ? ” என்றபடி அவளின் கரம் தொட வர, மோனநிலை களைந்து அவனின் கையில் வெடுக்கென தட்டி விட்டாள். ” கையை தொட்ட, கொன்றுவேன் ” தள்ளி முடித்த பின் தான் அடிபட்ட கரத்திலேயே தட்டி விட்டதை உணர்ந்தாள். ஸ்ஸ் ஆஅ .., என்றவன் பதறியதை கேட்டு.
” சாரி, சாரி, கோபத்துல அடிச்சுட்டேன்.,” பதறி சொல்லி முடித்தவள், ” இங்கே பாருங்க உங்க மேல ரொம்ப மரியாதை வச்சு இருக்கேன், ப்ளீஸ், இப்படி பேசாதீங்க ” என்றவளிடம்.
” உங்களுக்கு புடிக்கலனு வார்த்தையால் சொல்ல வேண்டியது தானே. ஏன் அடிக்கிறீங்க., யோசிச்சு முடிவை அப்புறம் சொல்லுங்க,” என்றவன் சொல்ல.
” இதுல யோசிக்க வேண்டிய தேவையே இல்லை.நமக்குள்ள ஒத்து வராது. இந்த மாதிரி எண்ணத்தோடு இனிமே என்கிட்டே பேசாதீங்க. பக்கத்துல கூட வராதீங்க. இனிமே பிரண்டா கூட உங்கட்ட நானும் பேச மாட்டேன். இதான் லாஸ்ட்., பை, “என்றவள் கதவை திறந்து கொண்டு காரை விட்டு இறங்கி, தொலைவில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளை நோக்கி சென்றாள்.
” சார், அவருக்கு ரொம்ப வலிக்குதாம்., கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்றார். அவரு பின்னாடி படுத்துட்டு வரட்டும் . நான் உங்க வண்டில ஹாஸ்பிடல் போறேன் “என்று சொல்லி கையை அவர் முன் நீட்டினாள்.
இருவருக்கும் இடையே பிரச்சனை ஏதோ நடந்துள்ளது என்றுணர்த்து அவரும் ஒன்றும் கேள்வி கேட்கமால் சாவியை நீட்டினார். இவர்கள் பின்னால் வருவதை கூட திரும்பி பார்க்காமல் புயல் வேகத்தில் சென்றவள், வேகமாய் படியேறி மேலே சென்று விட்டாள் எப்போதும் போலே.
பின் தயங்கி, உள்ளே செல்ல யோசித்து நிற்க, அவளை பார்த்த ரவி, ” உள்ளே வாம்மா., ஏன் அங்கேயே நிற்கிற .., ” என்றவுடன் தான்
” சாரி சார், இன்னைக்கு., ” என பேசவே தயங்க
” எல்லாம் தெரியும்மா., மச்சான் சொல்லிட்டாங்க. இப்போ தான் சாவித்ரி அழுது ஓய்ஞ்சி ரூம்குள்ள போயிருக்கா. அவகிட்ட இதைப்பத்தி எதுவும் நீ சொல்லாதே. எப்போவும் போல பேசிட்டு வா., ” என உள்ளே அனுப்பி வைத்தார்.
அவளை கண்டவுடன் வேகமாய் கட்டிலில் இருந்து எழுந்தவர் ” நந்து!, கண்ணா எங்கே? ” என அவளின் பின்னால் தேட, அவரிடம் அவனை விட்டு ஓடி வந்ததையா சொல்ல முடியும் அவளால்.
” இப்போ வந்துருவாங்க., நான் சீக்கிரம் வந்துட்டேன் மேடம். அவருக்கு ஒன்னும் இல்ல., பயப்படாதீங்க ” ஆறுதலாய் சில நிமிடம் பேசிவிட்டு அவன் வருவதற்குள் கீழிறங்கி சென்றாள்.
தன்னை விட்டு சென்றவளை எண்ணி அவனும் கோபத்தில் கொதித்தான். ” அவங்க பொய் சொல்லிருந்தா எதுவும் சொல்லி இருப்பேன். உண்மையை தானே சொன்னாங்க. அத்தனை கூட்டம் அங்க இருக்க என்னை தானே தேடி ஓடி வந்தா. ரத்தத்தை பார்த்து கண்ணுல அழுகை கூட எட்டி பார்த்தது. அங்க எல்லார் முன்னாடியும் என் கையை பிடிச்சுட்டு நிற்கும் போது ஒன்னுமே தோணல. நான் தொட வந்தா அதுக்கே அடிக்கிறா. கட்டுன பொண்டாட்டி மாதிரி திட்டுவாலாம், டா போட்டு பேசுவாலாம், அடிப்பாலாம், ஆனால் என்னை கல்யாணம் பண்ண மாட்டாலாம் ” என பொருமி தீர்த்தவன்
” இப்போ கூட என்கிட்ட கோச்சுட்டு போய் என் வீட்டுல, என் அப்பாட்ட தான் போய் நிற்க போறா. அதுக்கு இவ்ளோ ஓட்டம்.” மனம் மீண்டும் மீண்டும் நடந்ததை எண்ணி தவிக்க இறுதியாக
” ஓரு வாரம் பொறுமையா இருப்போம். யோசிச்சு பார்த்தா அவளுக்கே உண்மை புரியும். அது வரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவளே முடிவுக்கு வரட்டுமென ” முடிவு எடுத்தான்.
அவனை திட்டி விட்டு வந்தவளால், தன் வீட்டுக்கு வந்தும் யாரும் இல்லாதால், யாரிடம் போய் தன் துக்கத்தை சொல்லிட என்றே தெரியவில்லை. வைபவ் ஸ்கூல் போயிருக்க, சுகந்தி வேலைக்கு சென்றிருக்க மீண்டும் தனிமை தான் துணைக்கு இருந்தது. இதற்கு பயந்து தான் அவள் நாள் முழுவதும் ஹாஸ்பிடலில் கதியாய் கிடப்பது. அவனை திட்டிவிட்டு அவனிடமே எப்படி வேலை செய்வது என்றும் மனம் முரண்டியது. அவனை எண்ணி தவிப்பதை விட, தள்ளி நின்று விடலாம் என தான் எண்ணியதில் தவறில்லையே. சரி பார்ப்போம் என அந்த யோசனையை தள்ளி நிறுத்திவிட்டு சோமனை சந்தித்தது பற்றி யோசிக்கலானாள்.
அன்று ஆரவோடு கேம்ப் இடத்தை பார்வையிட்டு, அனுமதி பெற்று நிமிர்கையில் நேரம் மதியத்தை நெருங்கி கொண்டு இருந்தது. திரும்பி வரும் வழியில் சோமசுந்தரம் பற்றி ஜோதி கூறியதை நந்து தெரிவிக்க, அவர்களையும் சந்தித்து விட்டு செல்ல முடிவு செய்தனர்.
அங்கே சென்றால் வரிசையாக ஐந்து பெண் குழந்தைகள் சுற்றி நிற்க பெற்றவர்கள் வரவேற்றனர். பெரிய பெண்ணை வேலைக்கு சேர்த்து இரு வருடங்கள் கடந்து விட்டது எனவும், சென்ற மாதம் தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்தனர்.
” சரி .., இப்போ எதுக்கு இந்த மூணு பொண்ணுகளையும் வேலைக்கு அனுப்பனுனு சொல்றிங்க. குட்டி பிள்ளைங்க பத்துல இருந்து பதினைஞ்சு வயசு தானே இருக்கும். ஏன் இப்படி பண்றீங்க? ” என ஆரவ் கேட்க.,
” எங்களை என்ன பண்ண சொல்றிங்க ., வெள்ளாமை விளைச்சலில்லை. அவளை அனுப்ப கொடுத்த ஒரு லட்சத்தை தான் வச்சி, கடன் எல்லாம் அடைச்சோம். அவளுக்கும் கல்யாண வயசு வந்துருச்சு, அவளை கட்டி கொடுக்க வேணாமா.,? ” சோமசுந்தரம் தன் கஷ்டத்தை சொல்ல.
” அவ அனுப்புற காசுல தான் ஒரு நேர கஞ்சி கூட ஒழுங்கா ஊத்த முடியுது. நாங்க பார்க்குற கூலி வேலைக்கு கிடக்குற காசு வீட்டில மேசெலவுக்கே போதலை. என்ன பண்ண சொல்றிங்க ? ” தாயும் தன் துயரத்தை சொல்லி அழ, அவரை பார்த்து பெண்களும் அழ தொடக்கி விட்டனர். என்ன சொல்வதென்று ஒரு நிமிடம் புரியவில்லை. அத்தனை நேர சந்தோஷமும் மனதில் தொலைந்து விட்டது.
சிறிது நேரம் கழித்து, நந்து தான் அவர்களின் அலைபேசி எண்ணை வாங்கி கொண்டு, ” ஒரு வாரத்தில் தகவல் சொல்கிறோம். ஏஜென்ட் கூட பெண்களை அனுப்ப வேண்டாம், இதை பத்தி ஒன்னும் சொல்ல வேண்டாம் ” என்றவாறு கிளம்பியவளை, அங்கு நின்ற பெண்களில் ஒருத்தி, கையை பிடித்து சற்று தள்ளி கூட்டி சென்றாள்.
” அக்கா!, உன்கிட்ட ஒன்னு கேட்கணும். எங்க பூவிழி அக்கா போன மாசம் வந்துச்சு. அப்போ அதுக்கு பீரியட்ஸ், எதையோ யோசிச்சு அழுதுட்டு இருந்துச்சு. என்னனு கேட்டப்போ போன மாசம் ஊருல இருந்தப்போ அவளை ஹாஸ்பிடல் கூட்டி போய் நிறைய டெஸ்ட் எல்லாம் பண்ணங்களாம். ஊசி நிறைய குத்துனாங்களாம். அப்புறம் பெரிய பெரிய மெஷின் எல்லாம் வச்சி …….. என்னமோ டெஸ்ட் எல்லாம் பார்த்தாங்கலாம்.., “கடகடவென பேசி விட்டு மூச்சு வாங்கி நிறுத்த.
” சரிம்மா., டெஸ்ட் பண்ணி பார்த்து உடம்புல என்ன வியாதின்னு எதுவும் அங்க சொன்னாங்களா? ” நந்து விசாரிக்க
” இல்லக்கா , எதுவும் வியாதி எல்லாம் இல்லையாம். சத்து கம்மியா இருக்குனு சொல்லி மாத்திரை கொடுத்தாங்கலாம். கீரை, பருப்புனு நிறைய சத்தா சாப்பிட சொன்னாங்களாம். அவங்க கூட வந்த அக்காவே எல்லாம் வாங்கி கொடுத்து வீட்டுல கூட்டி போய் விட்டாங்களாம். அடுத்து ரெண்டு வாரம் கழிச்சு திருப்பி கூட்டி போய் மயக்க மருந்து கொடுத்து என்ன என்னமோ பண்ணாகலாம். அவளுக்கு ரொம்ப வலிச்சுதாம். பாவம் ” தன் அக்காவின் துயரத்தை உச்சு கொட்டி சொல்லி முடித்தாள்.
” சரி, இந்த மாசம் எதுவும் வலி இருந்ததா ? “
” எப்போவும் போல தான் போச்சுன்னு சொன்னா. ஒன்னும் வலி இல்லை. திரும்ப ஊருக்கு போய் இந்த மாதிரி வலிச்சா என்ன பண்ணணு தெரியாம அழுதுட்டு இருந்துச்சே.அம்மாக்கு தெரிஞ்சா அதுவும் அழுகும்னு என்கிட்டே மட்டும் சொல்லி அழுதுச்சு. அதான் நீங்க அவகிட்ட பேசி பார்க்குறீங்களானு கேட்க தான் வந்தேன்.”
” இதுல என்னடா இருக்கு. அவளுக்கு வலி எதுவும் வந்துச்சுன்னா என்னை கூப்பிட சொல்லு. நான் சார்கிட்ட கேட்டு மாத்திரை தர சொல்றேன். இல்லை அவ வந்தா ஹாஸ்பிடலுக்கு வர சொல்லு. என்னனு பார்ப்போம், நீயும் பயப்படாதே. ஒன்னும் இருக்காது” என ஆறுதல் சொல்லிவிட்டு அவளின் அலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு அன்று வந்து விட்டாள். இப்போது யோசித்து பார்த்தால் எதுவோ தப்பாக பட உடனே விஜய்க்கு அழைத்து விட்டாள்.
error: Content is protected !!