Skip to content
Post Views: 1,836
கீதம் – 9 
மாலை வேளையில் வீட்டிற்கு வந்த மகனை நோக்கி, ” என்ன ஆரவ் , இப்படி வீட்டுக்கு சாப்பிட கூட வராம காலையிலே இருந்து சுத்திட்டு இருக்கீங்க, கேம்ப் விஷயமா போனதுக்கு ஏன் இவ்ளோ நேரம்..,? “
Advertisement
” ப்பா!!!….காலையில் கேம்ப் நடத்த போற இடத்தை பார்க்கத் தான் அந்த ஊருக்கு போனேன். அப்போதான் நந்திதா மேடம் ஏஜென்ட் மூலமா இங்க சின்ன பொண்ணுங்களை வேலைக்கு கூட்டிட்டு போறாங்கன்னு ஜோதின்னு ஒரு பொண்ணு சொன்னதா சொல்லி இருந்தாங்க. சரின்னு அவங்கள பார்த்து நம்ம டிரஸ்ட் மூலமா படிக்க வைக்கிறோம். வேலைக்கு அனுப்ப வேணாம்ன்னு சொல்ல போனா.. என்னென்னமோ சொல்றங்கப்பா., “
” ஏன்.., என்னப்பா ஆச்சி.. ?”
Advertisement
Advertisement
” போய் விசாரிச்சா எல்லாருமே அண்டர் ஏஜ் தான். எங்க வேலைன்னு கேட்டா சரியா பதில் தெரியல. ஒரு லட்சம் கொடுத்து கூட்டிட்டு போவாங்களாம். பணம் மட்டும் தான் அவங்களுக்கு மாசமாசம் வருமாம். குழந்தைங்க கொஞ்ச வருஷம் கழிச்சு தான் திருப்பி வீட்டுக்கு வருவாங்களாம். இதுவரை அப்படி போன சில பெரிய பொண்ணுங்களை பத்தி யாருக்கும் ஒன்னும் தெரியல…”
Advertisement
” என்ன சொல்லுற. அந்த கிராமத்துல படிப்பறிவு இல்லாதவங்க தான் நிறைய பேர் இருக்காங்க. குழந்தைகளை ஏமாற்றி, கூட்டி போய் என்ன பண்றாங்க ? போலீஸ்ட சொல்லி விசாரிக்க சொல்லுவோமா ..,?” பதறி போய் அவர் கேட்க,
” ம்ம்., எனக்கு டவுட் வந்த உடனே கமிஷனர் அங்கிள்ட்ட பேசிட்டேன்பா. அவரு பாலோவ் பண்றதா சொல்லி இருக்கிறார். பாப்போம். வர்ற வெள்ளிக்கிழமை அங்கே தான் கேம்ப். அங்கேயும் விசாரிச்சு பாப்போம்…,”
” சரிப்பா . எதுக்காக பொண்ணுங்களை மட்டும் வேலைக்கு அனுப்புறாங்களாம் அந்த ஊர்ல ? அது பத்தி விசாரிச்சியா.. ?”
“கேட்டேன்ப்பா, பசங்கள வயல் வேலிக்கு அனுப்பி விடுவார்களாம். இல்லைனா சித்தாள் கொத்தனார் வேலைன்னு எங்கேயாவது சேர்த்து விடுறாங்க. படிக்க வசதி இல்லாத வீட்ல தான், அதுலேயும் சிலபேர் குடிக்க பணம் இல்லாம, கடன் தொகைக்கு ஈடாக அவங்களை அனுப்புறாங்களாம். கொடுமையா இருக்குப்பா…,” தலையில் கை வைத்து கொண்டு வருத்தத்தோடு பேசிய மகனிடம்.
” நானும் வர்றவங்ககிட்ட எல்லாம் சொல்லி தான் அனுப்புறேன். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுங்கிற கதை தான். பேசி பேசி தொண்டை தண்ணி தான் வத்துது. எப்போதான் திருந்த போறாங்களோ? தெரியல., மொத கேம்ப் நடத்தி முடிப்போம். அந்த ஊர்லதானே இருக்க போறோம். திருப்பியும் பேசி பாப்போம்..”
“ம்ம்..ஓகேப்பா.. நந்திதா மேடம் எல்லாம் ரெடி பண்ணிட்டேன்னு சொன்னாங்க. நாளைக்கு ஒருதடவை செக் பண்ணிருவோம். இந்த தடவை ரெண்டு ஊர் மக்களும் சேருவாங்கன்னு உமையாள் ஆன்ட்டி சொன்னாங்க. நா அவங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். அதை மட்டும் ஆட் பங்கிட்டு வெள்ளிக்கிழமை நடத்தி முடிச்சுருவோம்..,” என்றவனிடம்
” அப்புறம் அந்த ஜோதியும் அவங்க பாட்டியும் இப்போ இங்கே தான் இருக்காங்க. நீ அவங்கட்ட யாருக்கும் தெரியாம பேசி பாரு. தகவல் கிடைச்சதை அங்கிள்கிட்ட சொல்லு. அவர்கிட்ட நானும் பேசி கொஞ்சம் கவனிச்சு பார்க்க சொல்லுறேன். நீ ஈவினிங் op வராதே., ரெஸ்ட் எடு., ” என்றார் ரவி.
” இல்லைப்பா., வேணாம்., நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்., ஏம்பா.., கேஸ் நிறைய வர்றாங்களே. எக்ஸ்ட்ரா ஜூனியர் டாக்டர்ஸ் போட வேண்டியது தானே. நீங்களே ஏன் கஷ்டப்படுறீங்க..,” டெலிவரி கேஸ் முடித்து விட்டு அரக்க பறக்க சாப்பிட்டு ஓடும் தந்தையின் பணிச்சுமையை குறைக்க தான் அவன் கேட்டான் .
” என்ன பண்றதுனு எனக்கும் தெரியலடா., புதுசா வந்த டாக்டர்ஸ்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் பண்ண சில பேர் ரொம்ப யோசிக்கிறாங்க. ரெண்டு மூணு பேரை பீக் ஹௌர்ஸ் அப்போ மட்டும் வர்ற மாதிரி அப்பாய்ன்மெண்ட் பண்ணி இருக்கேன். இன்னைக்கு திடிர்னு டெலிவரி கேஸ் 2 வந்ததாலே அவங்கள அங்க மாத்த வேண்டியதா போச்சு. நீ ஊருக்கு போன அப்புறம் எக்ஸ்ட்ராவா ரெண்டு பேரை வர சொல்லி இருக்கேன். லேடி டாக்டர் அப்பாயின்மென்ட் பண்ணி இருக்கேன். நெஸ்ட் வீக் வந்துருவாங்க. அப்புறம்., ” அவர் கேட்க வந்த கேள்வியை புரிந்து அவனே பதில் சொல்ல தொடக்கி விட்டான்.
” மேன் பவர் பார்த்து ஸ்டாப்ஸ் கொஞ்சம் சேர்க்கிற வேலை ஆரம்பிச்சிட்டோம். அதை நானும் நந்திதா மேடமும் சேர்ந்து இந்த வாரத்துல முடிச்சிருவோம். டோன்ட் ஒர்ரிபா., அதை நான் பார்த்துகிறேன்.”
” அவகிட்ட சொல்லி ரூம் ஆரெஞ்செமென்ட் மாத்த சொல்லணும். நீயே பேசிரு. நந்து மேடம் என்னை விட ரொம்ப பிஸியா இருக்கா. நம்ம வேலைக்காக அவளை தான் ரொம்ப கஷ்டப்படுத்துரு மாதிரி இருக்கு. பட் வேற வழி இல்லை. பார்த்துக்கோப்பா அவளை ., என சொல்லி சென்றவரிடம் சொல்லவா முடியும் அவளை விட்டு பிரிய முடியாமல் அவளோடு சுற்றி கொண்டே இருக்கும் அவன் மனதின் நிலையை. மனதின் எதோ ஓரத்தில் அவள் வாசம் வீச தொடங்கிவிட்டதை அறியாமல் தானே அவனும் இருக்கின்றான்.
*****
” ம்மா., ஆரவ் வேற என்னமா ஹெல்ப் பண்ணான்., சொல்லுங்க., “
” உன்னை ஹாஸ்டெலில் வச்சி கடத்தி, இங்கே கூட்டி வர பாத்தாங்க. ரெண்டு தடவை வாட்ச் மேன் பார்த்து தொரத்தி விட்டாங்கனு செய்தி கிடைச்சதும், நீ இப்போ இருந்த ஹாஸ்டெலில் ஆரவ் தம்பி தான் சேர்த்து விட்டாங்க. அப்புறம் தான் உன்கூட நட்பா பழகி, உன்கூடவே இருந்து பார்த்துக்கிட்டாரு. அவரு சொல்லி போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்தா, அப்படி எதுவும் நடக்கலைனு உங்கத்தைங்க சாதிச்சுட்டாங்க…,”
” என்னை பத்தி மட்டும் யோசிச்சு இருக்கீங்க. உங்களுக்கு யார் இங்க ஹெல்ப் பண்ண இருக்காங்க. அங்கேயே வந்து இருக்கலாமே…, ஏம்மா.., எதுவும் சொல்லல..,” என்றவாறே விசும்பியபடி வந்து தாயை கட்டி கொண்டு அமர்ந்தாள். தாய் மட்டும் தனித்து இங்கே இருக்க தான் மட்டும், சுகமாய் இருந்ததை எண்ணி வேதனையில் அவள் மனம் துவண்டது.
” எனக்கு என் உயிரை விட நீ தான் முக்கியமா தெரிஞ்சமா. நான் தான் செத்து செத்து பிழைக்கிறேன். நீயாவது சந்தோசமா வாழணும் தான் ஆசைப்பட்டு, இங்கே நடந்த எதையும் ஒன்னும் சொல்லல..,” அவளின் முகத்தை வருடியபடி பேச்சினை தொடர்ந்தார்.
” அதுவும் இல்லாம உன் படிப்பு எந்த விஷயத்திலும் கெடக்கூடாதுன்னு தம்பி சொல்லுச்சு. அங்க தம்பி இருக்கிற தைரியத்தில் தான் நான் இங்கே உசிரு வாழ்ந்தேன். நான் ஒன்னும் இங்கே தனியா இல்லை.
நம்ம வீட்டுல வேலை பார்க்கிற ராமசாமி அண்ணா ஆர்மியில் இருந்தவர். ஆரவ் தம்பி தான் அவரை சேர்த்து விட்டு கணக்கு பிள்ளை மாதிரி வேலை பார்த்துட்டு, எனக்கு இங்கே துணையா இருக்க வச்சார். அதே மாதிரி உங்க அத்தைங்க பண்ற எல்லா விஷயத்தையும் வாட்ச் பண்ணி, தம்பிட்ட சொல்லி உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்கிட்டார்.
இவ்வளவு முன்னேற்பாடா இருந்தும், ரெண்டு வருஷம் முன்னுக்க, உன்னை பார்க்க ஊர்க்கு வந்தேன் தானே. அப்போ என் பின்னாடியே வந்து, நம்ம ரெண்டு பேரும் வெளியே போகும்போது கொல்ல பார்த்தாங்க. ஆனால் அவங்களால ஒன்னும் பண்ண முடியல, செக்யூரிட்டி பின்னாடி வந்துட்டு இருக்காங்கனு பயந்துட்டு தப்பிச்சி போய்ட்டாங்களாம். அன்னைக்கு நடந்த எதுவும் எனக்கும் தெரியாது. ஊருக்கு வந்த பிறகு தான் மருது யாருகிட்டயோ போன் பேசுனது கேட்டு ராமசாமி அண்ணா சொன்னாங்க.
அதுக்கு அப்பறம் தான் கமிஷனர் சார்கிட்ட போய் புகார் கொடுத்தேன். நம்ம ரெண்டு பேர் உயிர்க்கும், சொத்துக்கும் ஆபத்து வந்தா இவங்கதான் காரணம்னு கமிஷனர்ட்ட லெட்டர் கொடுத்ததும் தான் கொஞ்சம் அடங்கி இருந்தாங்க…,”
” இவ்ளோ பண்ணிட்டு என்கிட்டே நல்லவங்க மாதிரி சீன் போட்டாங்களா? கேட்டதை ஜீரணிக்க முடியாமல் கோபத்தில் அவள் கண்கள் சிவக்க.
” நான் அவங்ககிட்ட எந்த பேச்சு வார்த்தையும் ரெண்டு வருசமா வச்சுக்கவே இல்லைமா.. இன்னைக்கு தான் பேசுனேன். ஊருல நிறைய பேருக்கு விஷயம் தெரியும். அதான் உன் சொத்தைங்க நீ வந்ததும் ஆலம் சுத்துறேன்னு வந்து சீனை போட்டு நின்னால்க. நான் மூஞ்சை கூட பாக்கலைனதும் வீட்டுக்கு கிளம்பிட்டாள்க..,”
” இனி எதாவது சொல்லிக்கிட்டு என்கிட்டே வரட்டும். மூஞ்சை பேக்குறேன். சரி., அவனை எப்படி போலீஸ்ல புடிச்சி கொடுத்தீங்க., “
” இப்பவும் ராமசாமி அண்ணன் தான் மருது பண்ண கொலையை பத்தி தெரிஞ்சுக்கிட்டு போலீகிட்ட சொல்லி, துப்பு எல்லாம் கொடுத்தாரு. அவன் பக்கத்து ஊர்ல ஒருத்தரை கொலை பண்ணிட்டு சப்தம் காட்டாம ஆந்திராவுல போய் தங்கி இருந்தான். அங்கேயே புடிச்சி ஜெயில்ல போட்டாச்சு. இனி வெளியே வர முடியாதுனு தம்பி சொல்லுச்சு..,”
” நம்மகிட்ட உள்ள சொத்துக்காக இவ்ளோ பண்றங்கன்னா, நாளைக்கு திருப்பியும் பிரச்சனை பண்ண மாட்டாங்களா. அவங்க பக்கம் தான் பிரிச்சு கொடுத்துட்டோமே., திருப்பியும் என்னவாம்.,?”
” வந்த சொத்தை எல்லாம் குடிச்சு, வெட்டி செலவு செஞ்சு, தின்னு அழிச்சு முடிச்சாச்சு. இனி காசு இல்லை. அதுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணி நோகாம இருக்கணும்னு ரெண்டும் பின்னாடி அலையுதுங்க. விமலா மகன் மருது மாறி இல்லை. கொஞ்சம் நல்லவன் . அவன் எடுத்து சொன்னா கூட இதுங்க கேக்க மாட்டேங்குதுங்க. மருதுவை வச்சி இல்லாத தில்லு முல்லு பண்ணாங்க. அவனை தூக்கி உள்ளே வச்சிட்டோம். இனி பொட்டி பாம்பா அடங்கி தான் இருப்பாங்க. பாப்போம். எதுவும் பிரச்சனை பண்ணா இன்னைக்கு பதிஞ்சதை கொண்டு போய் போலீஸ்ட கொடுத்துருவேன். இனி பயப்பட எல்லாம் மாட்டேன். பாவம் பாத்துட்டு பேசாம தான் இருந்தேன். ரொம்ப துள்ளுனா, என்ன பண்றது…,” மூச்சு விடமால் தன் மகளிடம் அனைத்தையும் கூறி முடித்தவர் மேலும் தொடர்ந்து
” அப்புறம் உயிலையும் மாத்தி எழுதிட்டேன். உனக்கும், உன்னை கல்யாணம் பண்ண போறவருக்கும் தான் சொத்துல உரிமை இருக்குன்னு உள்ளதை மாத்தி, உனக்கு மட்டுமே உரிமை என்றும், உனக்கு ஏதாவது ஆனா சொத்து முழுசும் அனாதை ஆசிரமத்திற்கு போற மாதிரியும் மாத்தி எழுதி வச்சிட்டேன். நாளைக்கு உனக்கு வர்ற மாப்பிள்ளை மத்தவங்க பேச்சை கேட்டு கொடுமை எதுவும் பண்ண கூடாதுன்னு பயமா இருக்கு. நான் இருக்க வரைக்கும் இதெல்லாம் காப்பாத்தி கொடுத்துருவேன். அப்புறம் நீ தானே பாத்துக்கணும், சரியாடா..,” என பெண்ணின் கன்னம் தடவி, நிம்மதி பெருமூச்சு விட்டார். நீண்ட நாட்கள் மனதில் அழுத்தி கொண்டு இருந்த விஷயங்களை இறக்கி வைத்த மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.
” சரிம்மா., நீ கொஞ்சம் தூங்கு., ரொம்ப நேரமா பேசிட்டு இருக்க., நான் கீழே இருக்கேன்., என்றவள் கதவை ஒருக்களித்து சாய்த்து விட்டு கீழே வந்தாள்.
மனம் முழுவதும் ஒரு பாரம். இத்தனை விஷயங்களை தன்னிடம் கூட சொல்லாது மறைத்து, எப்படி இவர் தனித்து இருந்து இருப்பார்., ஆரவ் உதவி இல்லை என்றால் தன் அன்னை மிகவும் கஷ்டப்பட்டிருக்க கூடும் என்பது அவளுக்கு உரைத்தது. அவளின் தந்தை இருந்த போது பண்ணைக்கு நடுவே அழகாய் பெரிய வீட்டில் வாழ்ந்த நினைவுகள் மனதில் நிழலாய் வலம் வந்தது. பின் இந்த பூர்விக வீட்டில் ஊருக்கு நடுவே வந்து வாழ்ந்தவையும், அவளின் வாழ்வில் அடுத்து நடந்தவைகளை எண்ணி யோசனையில் கழித்தாள். இரவு ஆரவிடம் பேசினால் தான் மனம் நிம்மதி அடையும் போல் தோன்றியது. நித்தமும் இரவில் அவளிடம் பேசுவதை வழக்கமாய் கொண்டவன் ஊர்க்கு சென்றும் தன் வழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை. இப்போதும் தொடர்கிறான்.
error: Content is protected !!