Skip to content
Post Views: 3,841
பானுவுக்கு என்னவென்று தெரியவில்லை அடிக்கடி கோபம் வந்தது. வாஜிதா பானுவை பார்த்து “என்ன பானு உனக்கு திடிர், திடிர்னு கோபம் வருது. நேத்து கூட சிவாவ திட்டிட்ட. சூர்யா மேல கோபப்பட்ட, என்னாச்சு பானு உனக்கு”..
“என்னன்னு தெரியல வாஜி கோபமா வருது, உச்சன் தலை வேற வலிக்குது, வேற சொல்ல தெரியல ஆ!.. அப்பறம் தூக்கம் நல்லா வருது ” என்றாள்.
Advertisement
பானுவை பார்த்த வாஜீ “உனக்கு எப்போ பீரியட்ஸ் வந்துச்சு”..
“அதுவா அது ரொம்ப மாசமா வரல வாஜி, ஏன் கேட்குற”.
Advertisement
Advertisement
“எனக்கு நீ சொல்லுற சிம்டம்ம பார்த்தா நீ மாசமா இருப்பியோன்னு தோணுது.
பானுவுக்கு அப்படியும் ஏதாவது இருக்கோம் என்று நினைக்க.
Advertisement
“இரு பானு செக் பண்ணி பாத்திரலாம்” என்று பக்கத்தில் உள்ள மெடிக்கல் சாப்பிற்கு போன் செய்து பிரக்கன்சி கிட்கொண்டு வர சொல்லி, அதை யாருக்கும் தெரியாமல் பானுவிடம் தந்து டெஸ்ட் பண்ண சொல்ல..
பானு அதை வாங்கி கொண்டு பாத் ரூம் சென்று டெஸ்ட் பண்ணி பார்த்தவள்.. கண்களை மூடி ‘பிஸ்மில்லாஹ் னிர்ரஹ் மான் னிர்ரஹீம்'(அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு ஆரம்பிக்கிறேன்) என்றவள். கண்களை திறந்து பார்க்க. இரண்டு சிவப்பு கோடுகள் இருந்தன. அல்லாவுக்கு நன்றியை சொன்னவள்..
வெளியே வந்து பானு, வாஜிதாவிடம் டெஸ்ட் பண்ணி பார்த்ததை காண்பிக்க..
வாஜிதா அதில் இரண்டு கோடுகளை பார்த்தவள். பானுவை அணைத்துக்கொண்டவள்…
“ரொம்ப சந்தோஷம் பானு வாழ்த்துக்கள், என்றவள் விக்ரம் மச்சான் கிட்ட போன் பண்ணி சொல்லு” என்றாள்.
“இல்ல வாஜி, நான் அவங்க கிட்ட நேருல சொல்லிக்கிறேன்” என்றவள்.. “நீயும் யார்கிட்டயும் சொல்லாத’ என்றாள்..
“சரி பானு நாங்க இப்போ கிளம்புறம். நீ நாளை லண்டன் போயிட்டு விக்ரம் மச்சான் கிட்ட சொல்லிட்டு கால் பண்ணு பத்திரம்” என்று பானுவிடம் சொல்லிவிட்டு. அவள் விட்டுக்கு சென்றாள்..
சாயங்காலம் சுந்தர் வந்து விட்டார்.. மருமகளையும், பேரப்பிள்ளைகளை லண்டன் அழைத்து செல்ல..
மறுநாள் பானு மஹாமுதுவிடம் சொல்லி கொண்டு பிள்ளைகளை அழைத்து கொண்டு லண்டன் சென்று இறங்கினாள்..
இவர் சென்று இறங்க மதியம் மேல் ஆகியிருந்தது, வீட்டுக்கு வந்ததும் கணவனை தேடினாள் பானு. விக்ரம் வீட்டில் இல்லை ஒரு மீட்டிங்கில் இருப்பதால் அவன் சென்று இருந்தான்..
அனைவரும் உடல் சோர்வில் உண்டு விட்டு ஓய்வு எடுக்க. பானுவிற்கு எப்போது தன்னவனிடம் சொல்லுவோம் என்றிருந்தது. விக்ரமுக்கு பானு போனில் அழைக்க.
விக்ரமனின் போன் சைலன்டில் இருந்தது.. விக்ரம் தான் போனை எடுக்க வில்லை என்று நினைத்து கோபம் கொண்டவள். உடல் அசதியில் பிள்ளைகளோடு சென்று தூங்கிவிட..
இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த விக்ரம் மனைவியையும், பிள்ளைகளையும் பார்க்க அனைவரும் நன்றாக தூங்க. குளித்து விட்டு சாப்பிட்டு வந்தவன்.
பிள்ளைகளின் முகத்தை பார்த்தவள். மெல்ல பானுவின் அருகில் சென்று அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான்..
பானு ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருக்க. விக்ரம் அணைத்தது தெரியவில்லை.
காலையில் முதலில் எழுந்தது சிவாக்குட்டி தான். “டாடி, டாடி” என்று கத்தியவள். பானு பக்கத்தில் படுத்து இருந்த விக்ரமனின் மேல் ஏறி படுத்து கொண்டவள். “டாடி, டாடி” என்று கதை பேச..
இவர் எப்போ வந்தார். என் பக்கத்துல படுத்து இருக்கார். என்றவள்.
“எப்போ வந்தீங்க ஜீ” என்றாள்..
“நைட்டே வந்துட்டேன்” என்றவன். மகளிடம் பேச.. “சிவா டாடி மேல இருந்து எழுந்துரு” என்றாள் பானு.
” போம்மா நான் டாடி மேல தான் உட்காரு வேன், போ”என்றாள்..
“சிவா! முதல்ல நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு வா” என்றாள்..
“டாடி ஆபீமா திட்டுறா” என்று அழுத மகளை தூங்கி கொண்டவன்..
“ஏன்டி பிள்ளையை திட்டுற, குழந்தை டி அவ. நீ வாடா தங்கம் டாடி உன்னை ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போறோன்” என்று மகளை ரெஸ்ட் ரூம் அழைத்து சென்று வந்தவன்… மகளுடனே இருக்க..
பானு விக்ரமிடம் பேச வேண்டும் என்று நினைக்க. விக்ரமும் சிவாவும் “நீ எங்கள திட்டிட்ட அதனால நாங்க பேச மாட்டோம்” விளையாட்டுக்கு கூற..
விக்ரம் இப்படி சொன்னவுடன் பானுவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது.
அதை பார்த்த விக்ரம் கோபம் கொண்டு. “சின்ன குழந்தையா பானு நீ, விளையாட்டுக்கு சொன்னா அழுவீயா, அழுமுஞ்சி” என்றான்..
“ஆமாம் நான் அழுமுஞ்சி தான் யாரும் என்கிட்ட பேசாதீங்க” என்றவள் எழுந்து சென்று விட்டாள்..
பானு ஆஷிக்கிடமும், சூர்யாவிடமும் மட்டும் பேச..
விக்ரம் சிவாவிடம் “அம்மா பாவம் அழுற, சாரி சொல்லுவோம் ” என்று கேட்க.. “உம் டாடி” என்றாள் சிவாக்குட்டி..
“இருவரும் சேர்ந்து பானுவிடம் சாரி கேட்க “.. அவளோ மூஞ்சை திருப்பிக்கொண்டு போக.”போடி” என்றவன்..
நீயே வந்து பேசு என்று ஆபீஸ் சென்று விட்டான்…
ஆபீஸ்வந்தவனுக்கு பானுவை நினைத்து சிரித்துக்கோண்டு இருந்தான்.
அவன் இரவு வீடு வர. அனைவரும் தூங்கிகொண்டு இருந்தனர்.. தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவன். பிள்ளைகளை பார்த்து விட்டு.
பானுவின் அருகில் வந்தவன். அவளை அலேக்காக தூங்கி அவன் அறைக்கு வந்து. பானுவோட சேர்ந்து பெட்டில் சரிய..
விக்ரமனின் கழத்தை கட்டி கொண்டு விடவே இல்லை பானு…
விக்ரம் பானுவின் தலையை வருடி விட்டவன். “என்னாச்சு பானு. ஏன் என் மேல கோபமா” என்றான்.
விக்ரம் அவளின் முகம் பார்க்க. அவளோ அவனுக்கு முகம் காட்டாமல் அவனை அணைத்துகொண்டு இருந்தவளை.
“சொல்லுடா என்னா என் கிட்ட சொல்லனும்”..
“ஜீ” என்றவள். எழ பார்க்க.
“என்ன பானு எங்க போற படு” என்றான்..
“இல்ல ஜீ உங்க கிட்ட ஒன்னு காட்டனும்” என்றவள் அவள் பேக்கில் இருந்து எடுத்து வந்து விக்ரமிடம் அந்த பாக்சை தர..
“என்ன பானு இது?” என்று வாங்கி திறந்து பார்த்தான்..
முதலில் அது என்னவென்று தெரியவில்லை, பின்பு அதை உத்து பார்த்து தெரிந்து கொண்டவன்..
“பானு இது உண்மையா, நீ, என்றவன், நமக்கு இன்னொரு
பாப்பா பிறக்க போகுதா” என்றான்..
“ஆமாம் ஜீ” என்று வெட்கப்பட்டு சிரித்தவளை.
தூக்கி சுத்தி இருந்தான் பானுவை.
“ஜீ, ஜீ, தல சுத்துது” என்றவுடன் தான் அவளை இறக்கி விட்டவன்..
“தாங்யு, தாங்யூடா பானு” என்றான்..
“எனக்கு எதுக்கு தாங்யூ சொல்லுறீங்க ஜீ” என்றாள்..
“என்னை மறுபடியும் அப்பா ஆக்கிட்டல அதுக்கு தான்” என்றான்..
“இதை தான் நீ என்கிட்ட நேத்து சொல்ல வந்தீயா பானு” என்றான்..
“ஆமாம்” என்றவளை.
மெல்ல அணைத்து தலையில் முத்தமிட்டவன். “ரொம்ப சந்தோஷமா இருக்குடா”. என்று பானுவின் கன்னம் வருடியவன்.”நாளைக்கு ஹாஸ்பெட்டல் போலாம் பானு. நேரம் ஆச்சு தூங்கலாம், காலையில் எல்லார்கிட்டையும் சொல்லுவோம் வா” என்று இருவரும் சேர்ந்து தூக்க..
விக்ரம் காலையில் எழுந்தவுடன் தந்தையிடம் சொல்ல.
மிகவும் சந்தோஷ பட்டவர். மருமகளிடம் “வாழ்த்துக்கள் மா” என்றார்.
விக்ரமை அணைத்துக் கொண்டவர் , இந்த வீடு நிறையா பிள்ளைகளா இருக்கனும் விக்ரம்” என்றார்..
“டாடி இதுவே போதும் டாடி” என்றான்..
மலேசியாவில் உள்ளவர்களுக்கு, ஆபீதா பானு குழந்தை உண்டாகி இருப்பதை சொல்ல. அனைவரும் சந்தோசம். போன் செய்து அனைவரும் பானுவை விசாரிக்க..
மஹாமுது லண்டன் வந்து மகளை பார்த்து சென்றார்..
பிள்ளைகளுக்கு மிகவும் சந்தோஷம். ஆஷிக்கும், சூர்யாவும் எங்களுக்கு தம்பி பாப்பா வேணும் என்றனர். அண்ணன் சொல்வதை பார்த்து சிவாக்குட்டி தம்பி பாப்பா ஆபீமா வயித்துல இருக்கு என்று சொல்லி வயிற்றில் முத்தமிட்டு சொல்வாள்..
பிள்ளைகள் தூங்கியவுடன் பானுவை தன்னறைக்கு தூக்கி சென்று விடுவான் விக்ரம். மனைவியையும் , பிறக்க போற பிள்ளையையும் தினமும் கொஞ்சிவிட்டே தூங்குவான்.
பானுவுக்கு இப்போது 6 வது மாதம் நடந்து கொண்டு இருந்தது. விக்ரம் பானுவை செக்கப் பண்ண அழைத்துக்கொண்டு ஹாஸ்பெட்டல் வந்து இருந்தான்.
ஆபீதாவுக்கு செக்கப் பண்ணி முடித்து விட்டு,இரண்டு பேரும் சேர்ந்து டாக்டரிடம் வந்து டிப்போர்டை காண்பித்து ஆலோசனை கேட்க.
டாக்டர் ஆபீதாவும், பேபி நன்றாக இருப்பதாக சொல்ல. ஆபீதா சாப்பிட வேண்டிய மாத்திரையை எழுதி வாங்கி விட்டு, கார் பார்கிங் வந்தனர்..
யாரோ ஒருவர் பல்லவி என்று பானுவை அழைக்க. இருவரும் திரும்பி பார்த்தனர்.
ஞானதுரை பல்லவி என்று அழைத்து கொண்டே அருகில் வர. விக்ரம் நீ எதுவும் பேசாதே என்று கண்களால் சொல்ல. சரி என்பது போல் தலையாட்டியவள் வாயை மூடிக்கொண்டாள்.
ஞானதுரை பல்லவி மேடிட்ட வயிறோடு இருப்பதை பார்த்தவர். இவளா. இவ எப்படி விக்ரமோடு என்று பார்த்து கொண்டே வர..
யார் நீங்க என்றவன். காருல ஏறு பல்லவி என்று அவளை காரில் ஏறசொல்ல . பானுவும் காரில் ஏறிஇருந்தாள். ஞானதுரை பல்லவியிடம் நீ எப்படி இங்கே என்று கேட்க..
விக்ரம் ஞானதுரையிடம் “நீங்க நெனச்ச மாதிரி நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். பல்லவி மேல உங்க காத்து கூட பட கூடாது” என்றவன் காரை கிளப்பி கொண்டு சென்றான்..
ஞானதுரை பல்லவியிடம் “சித்தப்பா டா பல்லவி பேசுடா” என்று ஞானதுரை பல்லவியிடம் பேச. அவளோ அவரை பார்த்தாளே தவிற பேசவில்லை..
அவரின் குரலை கேட்டவளுக்கு. ஏதோ தெரிந்த குரல் போல் தெரிய. விக்ரம் காரை ஓட்டிக்கொண்டு ஹாஸ்பெட்டலில் இருந்து வெளியே வந்து இருந்தான்.
“யார் அவரு “? என்றாள் பானு..
“நீ அவர பத்தி தெரிஞ்சுக்க வேணாம் பானு. இப்போ உன் ஹெல்த் தான் ரொம்ப முக்கியம். நீ நம்ம பேபியை மட்டும் பாரு” என்றான்..
“சரி” என்றவள் கண்னை மூட. “பல்லவி” என்று ஞானதுரை அழைத்து குரல் காதில் கேட்க.
ஞானதுரை அன்று கோரமாக சிரித்தது அவள் காதில் கேட்டது. நீ இன்னும் சாகல விக்ரம் கொஞ்சம் நேரத்துல செத்துருவான். நீயும் சாகு என்று சொல்லியது காதில் கேட்க.
“பானு, பானு வீடு வந்து இருச்சு வா என்று விக்ரம் பானுவை வீட்டுக்குள் அழைத்து வந்தவன். கொஞ்சம் நேரம் படு. அப்பறம் சாப்பிடலாம் என்றவன். பானுவை பெட்ரூம்பில் படுக்க வைத்து விட்டு. கதவை சாத்தி வந்தான்..
பானுவுக்கு தலைவலி உயிர் போனது. கண்களை இறுக மூடி படுத்து விட்டாள்.. அவள் வாழ்வில் நடந்தது எல்லாம் படம் போல் பானுவின் கண்ணீல் தெரிய. பைரவி அன்று கல்யாணம் மண்டபத்தில் பேசியது. விஷாலை கல்யாணம் பண்ணியது, தண்ணியில் குதித்தது என்று அனைத்தும் ஞாபகம் வர.
தண்ணீரில் மூழ்கி எழுந்தது போல் எழுந்து உட்கார்ந்தாள்.
பானு சென்று பல்லவி திரும்ப வந்து இருந்தாள்..
பானுவின் நினைவு எல்லாம் மறந்து போக. பல்லவி அன்று தண்ணியில் குதித்தது மட்டும் ஞாபகம் வர. எழுந்து உட்கார்ந்தவள் ரூம்பை சுற்றி பார்க்க. யார் வீடு இது என்றவள். தன் வயிறை தொட்டு பார்த்தவள்.
நான் மாசமா இருக்கேன். யார் இதற்கு காரணம் என்று யோசிக்க.
“ஆபீமா” என்று சூர்யா வந்து “அப்பா சாப்பிட கூப்பிட்டாங்க வாங்க” என்று அழைக்க.
ஆபீமா வா.
சிவாக்குட்டி ஓடிவந்தவள். “பானும்மா வாங்க டாடி” என்றவள். ஆஷிக்ண்ணா அம்மா வா சொல்லு என்றாள்.
என்ன எனக்கு மூன்று பிள்ளைகளா. அப்பறம் வயித்துல வேற. ஜெனி வந்தவள் மாசமா இருக்குற பொண்ணு வாம்மா சாப்பிடு என்று வெளியில் அழைத்து செல்ல..
ஜெனியிடம் பிள்ளைகளை காண்பித்து இவங்க யாரு என்றாள்.
என்னம்மா ஆச்சு உனக்கு பெத்த பிள்ளைகளை யாருன்னு கேட்குற என்றவள்.
விளையாடுறீங்களா என்றாள். ஆமாம் என்று பல்லவி தலையாட்ட.
பிள்ளைகள் பானுவுக்கு சாப்பிட உணவுஎடுத்து வந்து ஊட்டி விட.
பசியில் இருந்தவள். சாப்பிட்டு கொண்டே.யாரு பானு, யார் ஆபீதா. நான் பல்லவி தானே. இந்த நான்கு பிள்ளைகளின் தந்தை யார் என்று முளித்து நின்றாள்….
error: Content is protected !!