Skip to content
Post Views: 2,002
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் -13
Advertisement
விஜயேந்திரன் அறையில் உள்ள
Advertisement
மெத்தையில் அழகாய் தூங்கிக்கொண்டு இருந்தாள் வைஷு..
Advertisement
யாழினி வைஷுவை பார்த்தவாறே அவளின் பக்கத்தில் அமர்ந்து இருக்க.
Advertisement
வைஷு மெல்ல கண் விழித்து பார்த்ததும்.. “மீ, ஓகே வா நீங்க, நானா சொன்னாங்க உங்களுக்கு பீவராமே” என்று கேட்க..
வைஷு யாழினியை பார்த்து “ஆமாம் டா” என்று தலையாட்டி மகளின் கன்னம் வருடி,, என் பிள்ளைடா நீ,, உன்ன இப்படி தனியா விட்டுட்டேனே, எனக்கு தெரியாதுடா என்று மனதினுள் வருந்தியவள்..
வீ. பி சார் எங்கே என்று அவளின் கண்தேட..
தேடி நாயகன் பால்கனியில் நின்று போன் பேசிக்கொண்டு இருந்தவன்..
வைஷு தன்னை பார்ப்பதை பார்த்தவன்.. “நேனு தர்வாத கால் சேஸ்தா” (அப்புறம் போன் பண்ணுறேன்) என்று போனை துண்டித்து விட்டு வைஷுவின் அருகில் வந்தான்..
அவன் அவளின் அருகில் வருவதை பார்த்தவள்.. தலையை குனிந்து கொள்ள..
“நானா மீ.. க்கு பீவர் இல்ல” என்ற மகளை பார்த்த விஜயேந்திரன்..
“நீ கீழே போய் மீ…க்கு சூஸ் கொண்டு வர்ரீயா” என்று யாழினி இடம் சொல்ல.
“ஓகே நானா” என்றவள், கீழே சென்று வைஷுவுக்கு சூஸ் எடுத்து வர சொல்ல..
“இப்போ நீ ஓகே வா பொம்மா” என்றான்..
“ம்ம்ம்ம்” என்று சத்தம் மட்டும் வர.. அவனை நிமிர்ந்து பார்க்காமல் இருந்தவளை பார்த்து..
“என்கிட்ட பேச மாட்டீயா? பொம்மா. என்னை உனக்கு பிடிக்கலையா?.. கோபமா இருக்கீயா?”.. என்றவன்.
“என்கிட்ட பேசு பொம்மா திட்டுனா கூட பரவால பேசு”.. என்றதும்..
கண்கலங்கியவளை பார்த்தவன்..”சும்மா, சும்மா அழாத வைஷு”.. என்றான்.. சற்று குரலை உயர்த்தி..
அதில் கண்களை துடைத்தவள்.. அவனை இன்னும் நிமிர்ந்து பார்க்காமல் இருந்தவளிடம்..
“சரி உனக்கு கொஞ்சம் டைம் குடுக்கிறேன்,, சீக்கிரம் சரியாக பாரு,, ரொம்ப எல்லாம் என்னை காக்க வைக்காதடா பொம்மா,, நான் உன்கூட பெருசா வாழ ஆசைபடுறேன்” என்றவன் அவளின் கைகளை பிடிக்க பார்க்க அது சிவந்து போய் இருக்க.. அவளின் கைகளை நீவி விட்டவன்.. “உன்னை இப்படி வருத்திக்காத”….
யாழினி சூஸ்சோட வர.. தன் கையை வைஷுவிடமிருந்து எடுத்துக்கொண்டவன்.. மகளை பார்த்து “மீ க்கு சூஸ் குடு யாழ்,, மீ யா.. தனியா விடாத”…
“ஓகே நானா, மீ. யா விட்டு எங்கும் போக மாட்டேன் நானா”… என்றாள் யாழினி…
“மீ.. சூஸ்..” என்று மகள் குடுத்ததை வாங்கிக்கொண்டவள்.. “நீ குடிச்சீயாடா”?…
” நான் இப்போ தான் டின்னர் சாப்பிட்டேன் மீ… நீங்க குடிங்க” என்றதும்..
“உங்க நானா டின்னர் சாப்பிட்டாங்களா யாழ்?” என்றாள் வீ. பியை பார்த்தவாறே…
“மீ… டாடி ஒன்னும் சாப்பிடல, நீங்க கண்ணு திறந்தா தான் சாப்பிடுவேன்னு. அம்மம்மா கிட்ட சொன்னாங்க”.. என்றதும்..
“உங்க நானாவை போய் சாப்பிட சொல்லு. நான் அப்பறம் சூஸ் குடிக்கிறேன்” என்றவளை..
நிமிர்ந்து பார்த்தவன், தன் பொம்மா அவனுக்காக பேசியதும் சந்தோஷம் ஆனவன்..
“நாக்கு பசியில்ல பங்காரம்,, உங்க மீ… கிட்ட சொல்லுங்க” என்றான்..
“எனக்கு சூஸ் வேண்டாம்”…. என்று சூஸ்சை யாழினியிடம் திருப்பி தர..
“யாழ் உன் மீ யை சூஸ்ச குடிக்க சொல்லு,, எனக்கு பசிச்சா, சாப்பிட தெரியும், இவ்வளவு நாள் உங்க மீ சொல்லித்தான் நான் சாப்பிட்டேனா?”….என்றதும்…
வைஷு என்ன பேசுவது என்று அமைதியாக இருக்க.. “மீ நீங்க சூஸ் குடிக்க, நானாவுக்கு நான் புட் எடுத்துட்டு வர்ரேன்” என்ற யாழ் கீழே சென்று விட..
“ரொம்ப அக்கரை தான் என் மேல” என்று வைஷுவை பார்த்து முறைத்தவன்.. “குடி பொம்மா” என்றான்..
அவளோ சூஸ்சை டேபள் மேல் வைத்தவள்.. மெல்ல எழுந்துக்கொள்ள பார்க்க.. அப்போது தான் அவளின் உடையை பார்த்தாள்.. இரவு உடையில் இருக்க.. காலையில் புடவையில் தானே இருந்தோம் என்பது ஞாபகம் வர ,, வீ. பி நிமிர்ந்து பார்த்தவள். தன் உடையை தடவிய வாறே அவனை பார்க்க..
அவள் பார்த்ததின் அர்த்தம் புரிய.. “சௌசன்யா தான் உனக்கு ட்ரெஸ் சேஞ்சு பண்ணி விட்டா” என்றான்..
‘” ஊம்” என்று எழுந்து கொள்ள பார்க்க.. அவளால் காலை அசைக்க முடியவில்லை.. அப்படி ஒரு வலி,, வலியில் “மா” என்று சத்தம் வர..
“இரு, இரு வலிக்குதா பொம்மா என்றவன்.. “காலை அசைக்காத, இப்படியே இரு”.. என்றான்..
அவளோ அவனை திரு, திரு வென பார்க்க..”ரெஸ்ட் ரூம் போகனுமா?” என்றான்..
அவளோ அவனின் முகம் பார்க்காமல்..
“ஆம்” என்று தலையாட்ட, அவளை தன் இரண்டு கையாள் தூங்கியவன் ஓய்வு அறை வாசலில் இறக்கி விட.
அவளோ தனக்கு கைகொடுத்து, தூக்கி விடுவான். என்று வைஷு நினைத்து இருக்க.. அவன் தூக்குவான் என்று எதிர் பாராதவள்..
அவன் தன்னை உரிமையாக தூங்கியதும், அதிர்ச்சியானவள்.. அவனின் சட்டையை பிடிமானத்துக்கு பிடித்துக்கொள்ள..
அவளை ஓய்வு அறைவாசலில் இறக்கி விட்டவன்.. “காலில் தண்ணி படமா பாத்துக்கோ” என்றான். அப்போது தான் கவனித்தாள் அவளின் அடிப்பட்ட காலில் சிறு கட்டு போட்டு இருக்க.. மெல்ல நடந்து ஓய்வு அறை சென்று வந்தவளை, மீண்டும் தூக்கியவன்.. அவளை கட்டிலில் விடும் போது, அவளின் முகம் பார்த்து மெல்ல சிரிக்க..
அவன் புன்னகையை எதிர் கொள்ள முடியாமல் தலைகுனிந்தவளை பார்த்தவன்..
“கழுத்து வலிக்க போகுது” என்றான்..
அவள் தன்னை பார்க்க வில்லை என்ற கோபத்தில் பேச.. அதற்கும் எந்த வித எதிர்ப்பு இல்லை வைஷுவிடமிருந்து….
யாழினி அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணோடு இரவு உணவை எடுத்து வந்திருந்தாள்..
வீ. பி பணி பெண் கொண்டு வந்த உணவை வாங்கி டேபள் மீது வைத்து விட்டு,, அவளை அனுப்பி விட்டவன்..
“பொம்மா சாப்பிடு , மாத்திரை போடனும்” என்றான்..
அவளோ “வேண்டாம் வீ. பி சார்” என்று கூற..
யாழினி வைஷுவை பார்த்து சிரித்தவள்..
“என்ன மீ டாடியை சார் சொல்லுறீங்க”… என்று சிரிக்க..
அவள் பதில் சொல்லும் முன்…
“உங்க மீக்கு என்மேல மரியாதை சாஸ்தி, அதனால தான் சார்ன்னு மரியாதையா கூப்பிடுறா, இல்ல வைஷு” என்றவனை இப்போது இவள் அவனை முறைத்து பார்க்க..
யாழினியை எப்படி சமாளிக்க.. இவரை எப்படி கூப்பிட என்று மனதில் ஒரு பட்டி மன்றமே நடத்தியவள்…
எந்த வார்த்தையும் இவளுக்கு அவனை சரியாக, கூப்பிட தோன்றாமல்
வீ. பியை எப்படி கூப்பிட என்று குழப்பம் ஆனாள்..
வீ. பி கைகழுவி வந்தவன், உணவை எடுத்து ஒரு தட்டில் பரிமாறி கொண்டு வைஷுவின் அருகில் வர..
“வேண்டாம்” என்பது போல தலையாட்ட..
அவனோ சாப்பிட்டே ஆகா வேண்டும் என்று பிடிவாதமாக அவளின் வாயை அருகே கையில் உணவை கொண்டு போக..
அவள் வேண்டாம் என்பது போல் அவனை பார்க்க..
நீ சாப்பிட்டே தீர வேண்டும் என்பது அவளின் வாயில் ஊட்ட வர. இவன் விட மாட்டான், என்று நினைத்தவள்.. வாயை திறந்தாள்..
அவளுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே. அவனும் உண்டான்..
வைஷு ஸ்ஸ்… உஸ் என்று காரம் தாங்காமல்,, தண்ணீரை மீண்டும், மீண்டும் குடிக்க..
“காரமா இருக்கா பொம்மா,” என்றவன்.
அவளுக்கு கொஞ்சமாக சட்னியை தொட்டு இட்லியை ஊட்டிமுடித்தவன்.. “சீக்கிரம் காரம் சாப்பிட பழகிக்கோ , பொம்மா! இங்கே எல்லா புட்டும், காரம் தான்,, உனக்காக தான் கம்மியா காரம் போட சொன்னேன்” என்றான்..
மிச்சம் இருந்த உணவை உண்டுவிட்டு கைகழுவியவன்,, வைஷுவுக்கு மாத்திரையை தந்து போட சொல்ல,, எதற்கு என்று பார்த்தவளை..
“நீ ஆடுன ஆட்டத்துக்கு, உன்னால கால் வலியில்லாம தூங்க முடியாது, மாத்திரை போட்டு தூங்கு”. என்றான்..
“நான் யாழினி ரூம் போறேன்” என்றவளை.. முறைத்தவன்..
“யாழ் உன் பெட்ஷீட்டை, உன் ரூம்புல இருந்து எடுத்துட்டு வா” என்றதும்,
“ஓகே நானா”. என்று. அவளின் அறைக்கு ஓடினாள் யாழினி..
வைஷுவின் அருகில் வந்தவன். அவளின் கழுத்தை தொட்டு தடவி, அவன் காலையில் அணிவித்த தாலியை எடுத்து அவளிடம் காட்டியவன்..
“இது என்னன்னு தெரியுமுல, நீ என் பொண்டாட்டி, நான் தான் உன் புருஷன், ஞாபகம் இருக்குல..இந்த ரூம்புல தான் நீ இருக்கனும், புரிஞ்சதா” என்றவன்..
அவளோ நான் என்று ஏதோ சொல்ல வர..
“நீ என்கிட்ட எதுவும் சொல்லாத.. நீ யா என்கிட்ட வர்ர வரைக்கும், நான் உன்கிட்ட வரமாட்டேன் போதுமா தூங்கு” என்றவன். யாழினியை தேட,,
“நானா” என்று வீ. பியின் அருகில் வர..
“மீ..பக்கத்துல, படுத்து தூங்கு, அப்பாவுக்கு சிலவேலை இருக்கு. ஆபிஸ் ரூம் போயிட்டு வர்ரேன்”.. என்றதும்..
யாழினி துள்ளி குதித்து வந்தாள்.. வைஷுவின் அருகில் படுக்க..
“மீ இனி உங்க பக்கத்துல,, தான் தூங்கம் போறேன்” என்றவள்..
வைஷுவின் மேல் கையையும், காலையும் போட்டு நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க.. மகளின் தலை கோதி விட்டவள்.. பின்பு முதுகை தட்டிகொடுத்து,, தூங்க வைத்தவள்.. மகளிடம் சாரி, சாரிட,, பாப்பூ நீ இருக்குறது இந்த அம்மாவுக்கு தெரியாது தெரிஞ்சு இருந்ததானா,, கண்டிப்பா உன்னை தேடி வந்து இருப்பேன்டா
என்று மகளை அணைத்தவாறே இருவரும் தூங்கியிருக்க”..
error: Content is protected !!