Skip to content
Post Views: 2,288
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் -10
Advertisement
Advertisement
Advertisement
“சார் ரொம்ப சந்தோசம், எப்படி சார் மேம் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க?”..
Advertisement
“அவ எங்கே முதல்ல சம்மதிச்சா?.. யாழினியை பத்தி சொல்லி,, சஞ்சனாவை இதில் பொய்யா இழுத்து, என் போனை ஒடச்சி”..
“எந்த போன் சார்?”..
‘என்னுடைய செகெண்ட் போன், பாரின் போனா யூஸ் பண்ணுவேனே அந்த போன கோபத்துல ஒடைக்கிற மாதிரி ஒடச்சுட்டேன்”..
“ஏன் சார்?”..
“அப்படி நான் எதாவது பண்ண போயிதான் இவ அமைதியா, என்னாச்சுண்ணு கேட்டா,, இல்லண்ணா நான் தாத்தா வீட்டுக்கு போறேன்னு, அழுது அடம் பண்ணியிருப்பா”..
“சூப்பர் சார் மேடம்மா எப்படியோ கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டீங்க.. நாளைக்கு காலையில நான் உங்க குல தெய்வம் கோவிலுக்கு போயி உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடுபண்ணுறேன்..
“சரி பிரகாஷ் நாளை காலை 6 மணிக்கு மேல் நான் கிளம்பி வர்ரேன்” என்றவன் போனை வைத்து விட்டு..
வீ. பி ,வைஷு இருக்கும் அறைநோக்கி சென்றான்,, அந்த ரூம்பில் லைட்டெரிந்ததை பார்த்தவன்.. வெளியே இருந்த படியே ‘வைஷு” என்று அழைக்க…
“வாங்க சார்”.. என்றாள்..
“நீ இன்னும் தூங்கலயா?”..
“தூக்கம் வரல சார்”..
“ஏன் பொம்மா, என் மேல நம்பிக்கை இல்லையா?”..
“சார் அப்படியெல்லாம் இல்ல, என்ன சுத்தி என்ன? நடக்குதுன்னே எனக்கு தெரியல, நான் ஏன் ஹைதெராபாத் வந்தேன்?. இப்போ உங்கள கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லி இருக்கிறேன்.. ஒரே குழப்பமா இருக்கு சார்.. எல்லாம் சரியா வருமா?,”..
“கண்டிப்பா பொம்மா, ஆமா உங்க வீட்டுல நம்ம கல்யாணத்தை பற்றி பேசவா?”..
“வேண்டாம் சார்?”..
“ஏன் பொம்மா உங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் நம்ம கல்யாணம் தெரிஞ்சா வருத்தபடு வாங்க, ஒரு வார்த்தை சொல்லு,, நான் பிளைட்டில் வர வைக்கிறேன்”..
“நான் அப்பா, அம்மா கிட்ட பேசுறது இல்ல சார்,, தாத்தா, பாட்டிக்கு வர முடியாது வயசு ஆகிருச்சு,, என் சிஸ்டர் தான் திட்டுவா, சண்டை போடுவா, பார்த்துக்கலாம் சார்”…
“தாங்யூ பொம்மா, அப்போ தூங்கு காலையில 6 மணிக்கு கிளம்பனும்”..
“ஒரு நிமிசம் சார், உங்க கிட்ட என்னை பத்தி இரண்டு விசயம் சொல்லனும்”..
“இப்போ எதுக்கு பொம்மா வேண்டாம், கல்யாணத்துக்கு அப்பறமா நம்ம நிறைய பேசலாம்
தூங்கு”…
“இல்ல சார் இந்த விசயத்தை கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கனும்”… என்றாள்..
“சரி சொல்லு” என்று அவள் பக்கத்தில் அமர.
வைஷுவுக்கு எதில் இருந்து தொடங்குவது, எதிலிருந்து ஆரம்பிப்பது என்று தடுமாறி நிற்க..
“நான் சொல்லவா, உன் பிரண்ட் ஹேமாவை பத்தி தானே”. …என்றான் வீ. பி..
“உங்களுக்கு எப்படி தெரியும்?”…
“எனக்கு உன்னை பத்தி எல்லாமே தெரியும் வைஷு”..
“எப்படி” என்றாள்.
“ஊம்” என்றவன்..
“உன்னையும் உன் பிரண்டு ஹேமாவையும் நான் முதல், முதலில் டெல்லியில பார்த்தேன்.. நீயும் அவளும் டான்ஸ் உற்சவம் நிகழ்ச்சிக்கு டான்ஸ் ஆடவந்தீங்க ஞாபகம் இருக்க?”..
“ஊம்” என்று தலையாட்ட..
“நீங்க இரண்டு பேரும் தான் வெல்கம் டான்ஸ் ஆடுனீங்க, பீக்காக். டான்ஸ் ஆடுனீங்க ஞாபகம் இருக்க?”..
அவன் சொல்லியதும் ஞாபகம் வந்தவலாக “உங்களுக்கு எப்படி தெரியும்”..
அவளிடம் நெருங்கி அமர்ந்தவன். அன்னைக்கு நான் தான் சீப் கெஸ்ட், உனக்கு ஞாபகம் இல்லையா””..
“இல்லை” என்று தலையாட்டினாள்..
“அம்மா வர வேண்டியது, அவங்களால வர முடியல நான் தான் வந்தேன், உன்னை முதல் முதலில் பார்த்ததும் அன்னைக்கு தான் பொம்மா”…
“அப்போ என்னை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?”..
“தெரியுமே உன்னை மட்டும் இல்ல, உன் பிரண்ட் ஹேமாவையும் தெரியும்,, ஆனா அவளுக்கு என்னாச்சு பொம்மா? அவ ஏன் சூசைட் பண்ணிக்கிட்ட?”…. என்றவுடன்..
வைஷுவின் கண்ணீல் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்ட..
“டேய், டேய் பொம்மா அழாதடா வேணாம் இதுக்கு தான், நான் இப்போ வேண்டாமுன்னு சொன்னே, நீ முதல்ல கூல்லாகு, நாம அப்பறம் பேசலாம்”…
“இல்லை நான் சொல்லியிருறேன்,, நானும் ஹேமாவும் எல், கே,ஷியில இருந்து 12 வரைக்கு ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். ஒரே தெரு, எதுத்த வீடு,, அவ எப்பேயும் பஸ்ட் ரேங் தான் எடுப்பா,, நான் ஐந்து ரேங்குல்ல வருவேன்.. ரெண்டு பேரு எப்பையும் ஒன்னா தான் இருப்போம்,, பரத நாட்டியம் கத்து கிட்டோம், நிறைய கச்சேரி பண்ணியிருக்கோம்..
இரண்டு பேரும் 12 டாம் கிளாஸ் முடிச்சுட்டு, என்ன படிக்கலாமுன்னு யோசிச்சோம்.. ஹோமாவுக்கு பரத நாட்டியத்துல பீ, எச், டி படிக்க ஆசை பட்டா,, நானும் கதக் கத்துக்க ஆசை பட்டு,, கேரளாவுல உள்ள ஒரு பெரிய காலேஜில் சேர்ந்தோம்.. எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது..
ஹேமா திடிர்னு என் கிட்ட சரியா பேசல.. நிறைய பொய் சொன்னா, அடிகடி கிளாஸ் லீவ் போட்டா,, எனக்கு ஒன்னும் புரியல.. நான் அவளை வாச் பண்ண ஆரம்பிச்சேன், அப்போ தான் எனக்கு தெரிஞ்சது, அவ ஒரு மலையாளி பையனை லவ் பண்ணுறான்னு,, அந்த பையனும் எங்க காலேஜ் தான் பேரு ஸ்ரீதரன்,, நடிப்பு கத்துக்க வந்து இருந்தான்..
அவன்ன பாத்தவுடனே தெரிஞ்சது. அவன் பெரிய பணக்கார வீட்டு பையன் மாதிரி இருந்தான். எனக்கு பயம் ஹேமாவுக்கு எதாவது தப்பா நடந்துருமோன்னு பயம்.. நான் அவ லவ் பண்ணுற விசயம் எனக்கு தெரியாத மாதிரி இருந்துகிட்டேன்..
ஹேமா வீட்டுல அவ லவ் பண்ணு விசயம் அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சுபோச்சு..
இவள பெங்களூருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. நான் என் சிஸ்டர் கூட அவ வீட்டுல இருந்தேன்,, அவளுக்கு ஒரு உதவி பண்ண போயிருந்தேன் எனக்கு எதுவும் தெரியாது..
திடிர்னு ஹேமா எனக்கு போன் பண்ணி,,எல்லா விசயத்தையும் சொன்னா,, எனக்கு வர முடியாத சூழ்நிலை,, ஒரு வாரம் கழிச்சு தான் போக முடிஞ்சது,, ஹேமா வீட்டுல ஒரே பிரச்சனை அவள, காலேஜுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நான் ஹேமா அப்பா, அம்மா கிட்ட பேசி பார்த்தேன்,, அவங்க ஒத்துக்கல.. ஹேமாகிட்ட கொஞ்சம் பொறுமையா இரு,, நான் பேசி காலேஜுக்கு போக சம்மதம் வாங்குறேன்னு சொல்லிட்டு தான் என் வீட்டுக்கு வந்தேன்…
திடிர்னு ஹேமா வீட்டுல இருந்து ஒரே சத்தம்,, என்னன்னு போயி பார்த்தா வீடு முழுக்க புகை, எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியல.. என் பிரண்ட் கத்துற சத்தம் தான் கேட்டுச்சு கதவு மூடி இருந்தது,, ஹேமாவோட அப்பா, அம்மா கதவை திறக்க முயற்சி பண்ணாங்க முடியல.. நான் சன்னல் வழிய ஹேமாவை பார்தேன், அவ மேல நெருப்பு எரிஞ்சது, அவள பார்த்து கத்தி மயக்கமாகிட்டேன்..
ஹேமாவோட அம்மா கதவை திறந்த அவள காப்பாத்த போயி அவங்களுக்கு தீ காயம்..
இரண்டு பேரையும் ஹாஸ்பெட்டல சேர்த்தோம்,, ஹேமா அம்மா இரண்டு நாளுல பேச ஆரம்பிச்சாங்க..
ஹேமா 10 நாள் ஐ, சி, யுவுல இருந்தா,, நான் அவ கூட தான் இருந்தேன்,, ஹேமா அப்பா, அவங்க அம்மாவா பாத்துகிட்டாங்க.. ஹேமா நாற்மல் வாடுக்கு வந்துட்டா, பேசுனா ஆனா சாப்பிட.. எப்பா பாத்தாலும், எரியுது, எரியுதுன்னு கத்துவ.. என்னால அத தாங்கிக்க முடியல.. நெஞ்செல்லாம், வலிக்கும் எப்படியாவது அவளை காப்பாத்தி கூட்டிட்டு வந்திருலாமுன்னு நெனச்சோம்.. 20 நாள் கழிச்சு கொஞ்ச, கொஞ்சமா சூஸ் குடிக்க ஆரம்பிச்சா.. ஸ்ரீதரன் வந்தான், ஹேமாவை பார்க்க,, வந்தவன் அவளை பார்த்து கதறி அழுதவன், அவ கூடவே இருந்தான், அவளை நல்லா பார்த்துகிட்டான்,, எனக்கு ரொம்ப சந்தோஷம், எப்படியோ எல்லாம் நல்லபடியா நடக்குது, ஹேமாவை இதுல இருந்து மீட்டு கொண்டு வந்திரலாமுன்னு நம்பிக்கை வந்துச்சு..
ஹேமாவுக்கு உடம்புல மட்டும் தான் காயம்,, முகத்துல ஒரு காயம்கூட இல்ல,,
ஸ்ரீதரன்,, ஹேமாவுக்கு குணமானவுடனே அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னான்,, ஹாஸ்பிடல்ல இருந்து நேரா அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு கூடசொல்லிட்டு இருந்தான்.. ஹேமா நல்லா பேச ஆரம்பிச்சா.. அன்னைக்கு மதியம் ஒரு 12 மணி இருக்கும்,, நான் தான் ஹேமாவுக்கு தயிர்சாதம் ஊட்டிவிட்டேன்.. திடிர்னு குளிருதுன்னு சொன்னா,, டாக்டர் வந்துஊசி போட்டாரு,, ஊசி போட்டா பத்து நிமிசத்துல மூச்சு விடமுடியாம என் கண்முன்னாலே இறந்து போயிட்டா,, நானும் ஸ்ரீதரனும் அவளை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுதோம்,, திடிர்னு ஸ்ரீதரன் அவளை விட்டு எழுந்தவன்,, “அவ அங்க தனியா இருப்பா,, அவ பயப்படுவா, நான் போறேன், நான் போறேன் சொல்லிட்டு போனாரு,, எனக்கு அவர் என்ன சொல்லுறான்னு புரியல அவர் பின்னாடியே போயி..
“என்ன? ஸ்ரீதரன் என்ன சொல்லுறீங்கன்னு கேட்டேன்”..
“ஹேமா அங்க தனியா இருப்பா,, நான் போறேன் வைஷு,, அவள விட்டு என்னால இருக்க முடியாது,, நான் போறேன், போறேன்னு ஹாஸ்பெட்டல விட்டு வெளியே ஓடினார் , நான் அவர் பின்னாடியே போய் சமாதானம் பண்ணலாமுன்னு ஓடுனேன்..
நான் அவர் கிட்ட வர்ரதுக்குள்ள..அவர் மெயின் ரோடுக்கு போயிட்டார்,, ஒரு லாரி அவரை தூக்கி வீசியிடுச்சு,, எனக்கு என்ன பண்ணறது, யாரா பாக்குறது,, ஒன்னும் தெரியல என் கண்முன்னாடியே இரண்டு உயிர் போயிடுச்சு,, நான் ஹேமா நெனச்சு அழுவுற,, ஸ்ரீதரன நெனச்சு அழுவுறத,, என்று கதறி அழுதவளை,, தோள் அணைந்து சமாதானம் பண்ணினான் வீ. பி..
“சரி பழச நினைக்காத,, தூங்கு”.. என்றான்
“நான்” என்றவள்,, ” நான் ஒரு வருஷம் மெண்டல் ஹாஸ்பெட்டல இருந்தேன்”.. என்றவளை பார்த்தவன்..
“எனக்கு தெரியும் வைஷூ, அத நினைக்காத, தூங்கு” என்றான்..
“உங்களுக்கு நான் ஹாஸ்பெட்டல இருந்தது தெரியுமா?”..
“ஊம்” என்றான் வீ. பி…
“தெரிஞ்சும்மா! என்னை கல்யாணம் பண்ணுறீங்க?”..
“ஆமாம்” என்றவனை கண்யிமைக்காமல் பார்த்தவள்..
“என்னை நீங்க லவ் பண்ணீங்களா?”..
“10 வருசமா,, உனக்காக காத்துட்டு இருக்கேன் போதுமா”…
அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன்..
“நமக்கு பேச நிறைய இருக்கு பேசலாம், தூங்கு” என்று அவளை படுக்க சொல்லி விட்டு.. அந்த அறையில் உள்ள சோபாவில் வீ. பி படுத்துக்கொள்ள..
“நீங்க போங்க சார், நான் ஓகே தான்”.. என்றாள்..
error: Content is protected !!