வைஷுவின் காலில் இருந்து இரத்தம் கசிவதை பார்த்து “வா வைஷு” என்று அவளை அழைத்து கொண்டு ரூம் வந்தவர், அவளின் காலுக்கு மருந்திட்டு, “நாளை வேற டான்சரை ஆட சொல்லலாமே” என்று கூற..
அவரை பார்த்து சிரித்தவள்.. “நாளை மாரத்தான் டான்ஸ் போட்டியில் சிங்கப்பூர் சார்பா யாருகலந்துக்குறாங்க தெரியுமா,, 7 வருசமா ஆடுற அதே ஜெனிதா டான்சர் தான்,, அவளை கண்டிப்பா இந்த தடவை வின் பண்ண விடகூடாது மேம், நீங்க கவலை பாடதீங்க, நாளைக்கு கண்டிப்பா நான் ஆடி வின் பண்ணுவேன்,, இது என் குழந்தைகள் மேல் ஆணை”…
Advertisement
“வைஷு அப்படியெல்லாம் சொல்லாத வைஷு,, எனக்கு பயமா இருக்கு.”.
“நீங்க வேற மேம்,, எப்பையும் எனக்கு கொஞ்சம் ஐட் மேல போனவே தலை சுத்தும், இன்னைக்கு ஒன்னுமே ஆகல.. அப்போ என் பிள்ளைகள் என்னை தொந்தரவு தரலண்ணு தானே அர்த்தம், நீங்க கண்டிப்பா பாருங்க, நாமா வின் பண்ணுவோம்” என்று கூற..
Advertisement
Advertisement
சொர்ணமுகி “சரி” என்று சென்றுவிட..
வைஷுவுக்கு மனது ஏதோ நெருடுவது போல் இருக்க, நீண்ட வருடம் கழித்து அவள் தம்பி பத்ரிக்கு போனில் அழைத்திருந்தாள்..
Advertisement
புது நம்பராக வர.. அழைப்பை பத்ரி ஏற்காதவன்,, மீண்டும், மீண்டும் அழைப்பு வருவதை பார்த்து போனை ஆன் பண்ணி, “யாரு?” என்று கேட்க..
“பத்ரி நாராயண, கிருஷ்ணா மூர்த்தி” என்று அவனின் முழுபெயரை சொன்னவுடன்..
“அக்கா வைஷுகா, எங்கே இருக்க, எப்படி இருக்க” என்றவன் என்னை மறந்துட்டல” என்றவுடன்.
“டேய் டாக்டரே, நீ அழுமூஞ்சி டாக்டரா இருப்ப போலவே,” என்றாள்…
“போக்கா” என்றவன் யாழினியை தூக்கியவன், “மாமா உனக்கு ஒன்னும் வாங்கிட்டு வரலடா,, என்னோட வர்ரீயா” என்று கேட்டவன்.. இரவு நெறுங்கிய இருப்பதை பார்த்து .
“வைஷுகா வா நம்ம வெளியே போகலாம்,, டின்னர் முடிச்சிட்டு கொண்டு வந்து விடுறேன் வா” என்று அழைக்க..
வைஷு சொர்ணமுகியிடம் சொல்லி விட்டு வெளியே செல்ல..
தம்பியோடு இரவு உணவை முடித்து விட்டு,, ஹோட்டலில் உள்ள பார்கில் யாழினியை விளையாட சொல்லி விட்ட வைஷு.. தம்பியிடம் தான் கர்பமாக இருப்பதை சொல்லியவள்..
நாளை அவள் ஆடும் நடனத்தை பற்றி தம்பியிடம் விலக்கி சொன்னவள்..
“எனக்கும் என் குழந்தைகளுக்கும் எதுவும் ஆககூடாது” என்று தம்பியிடம் உதவி கேட்க..
“நீ எத பத்தியும் கவலை படாதே கா.. மிடிசன் எவ்வளவோ அட்வான்சா இருக்கு,,” என்றவன். அவன் சீனியர் டாக்டரிடம் வைஷுவை பற்றி சொல்ல..
அவர் கர்பத்தில் உள்ள குழந்தைக்களுக்கு ஏதும் ஆகாமல் பாதுகாப்பாக இருக்க.. இரண்டு ஊசியை வாங்கி அவளுக்கு போட சொன்னார்….
அவர் சொல்லியது போல், அந்த மருந்தை வாங்கி வைஷுவுக்கு ஊசியை போட்டு விட்டவன்,, “அக்கா உன் வையித்துல உள்ள குழந்தைக்கு எதுவும் ஆகாது,, எதற்கும் வயித்துல அடி படமா பாத்துக்கோ போதும்” என்று சொல்ல..
தம்பி சொல்லியதும் புது தெம்பு வந்தது போல் உணர்ந்தாள்,
பத்ரிக்கு போல் கால் வந்து கொண்டே இருக்க..
“அக்கா நைட் ஒரு ஆப்ரெசன் இருக்கு, நான் போகனும்” என்றவன்..
இருவரையும் ரூம்பில் விட்டு, விட்டு,, “நாளைக்கு கண்டிப்பாக வருவேன்” என்றவன்..
“அப்பறம் உனக்கு போட்ட ஊசியால, கொஞ்சம் தலை சுத்தல் வாமிட் மாதிரி கூட வரலாம், அது எல்லாம் நார்மல் தான், வாமிட் அதிகமாக வந்தாள் இந்த மாத்திரை போடு” என்று வைஷு விடம் மாத்திரியை கொடுத்து விட்டு சென்றான்..
பத்ரி சொல்லியது போலவே.. வைஷுவுக்கு இரவு முழுவதும் சாப்பிட்டது எல்லாம் வெளியே வந்துகொண்டே இருக்க..
இதை பார்த்து சொர்ணமுகி பயந்து போனவர்..
இவள் எப்படி நாளைக்கு நடனம் ஆடுவாள் என்று.. அவள் உடல் நலத்தை பார்த்து பயந்தவர்..
வீ. பிக்கு போனில் அழைத்து நாளை நடக்கும் நடனத்தில் வைஷுவை கலந்துக்க வேண்டாம் என்று சொல்ல சொல்லி போன் போட..
வீ. பி ஊட்டிக்கு வந்துகொண்டு இருந்தான்..
அவன் வைஷுவை கண்காணிக்க சொல்லியவர் வைஷுவை பற்றி முழுவிவரத்தை சொல்லியது முதலில் அவன் தந்தையாவதை எண்ணி மகிழ்ந்தவன்.. பின்பு வைஷு பண்ணிக்கொண்டு இருப்பதை எண்ணி கடும் கோபத்தில் அவளை காண வர..
சொர்ண முகியால் அவளை தடுக்கமுடியமால் வெளியில் நிற்க..
வந்து விட்டான் வீ. பி…
சொர்ணமுகிக்கு வீ. பியை பார்த்ததும் உயிர் வந்தது போல் உணர்ந்தவர்,, அவனிடம் வைஷுவை பற்றி அனைத்தையும் கூற..
அவர் சொல்லி முடித்ததும்.. “இன்னைக்கு வேற டான்சரை வைத்து டான்ஸ் போட்டியை முடிச்சுக்கோங்க” என்றவன்..
வைஷுவே தேடி அவள் அறைக்கு சொல்ல..
அவளோ கரும்சிவப்பு வண்ண ஆனார்கலி சுடி அணிந்து கதக் டான்ஸ் ஆட அனைத்து ஆலகாரமும் பண்ணிவிட்டு.. கண்ணாடி முன் நின்று தன் மணி வயிற்றை தடவி பார்த்து கண்மூடி நின்று “அம்மா வயித்துல இருக்குறப்பவே என்னை ஆடி ஜெயிக்க வைக்க துணையா வர்ரீங்களா, என் செல்லங்களே.. உங்க அப்பா வந்ததும் நம்ம வின் பண்ணதோடு சேர்த்து, நீங்க வந்ததை சொல்லலாமா?”.. என்றவள் கண்மூடி நின்று இருக்க..
அவள் இடைமீது ஒரு கரம் படர்வதை உணர்ந்தவள்.. அது என் பாவாவின் கை என்று உணர்ந்தவள். அப்படியே கண்மூடி தன் கணவனின் மேல் சாய்ந்து அவனை உணர..
அவனின் கை அவளின் மணிவயிற்றில் படற.
தன் கணவனுக்கு விசயம் தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்டவள்…
அவன் கை பட்டதும் உருகி நின்றவள் “பாவா, பாவா” என்று விசும்பும் சத்தம் கேட்டவன்…
அவளை தன் முன்னாடி நிற்க வைத்தவன்.
“பங்காரம்” என்று அவளை அழைக்க..
அவளோ அவனை பார்க்காமல் “பாவா, பாவா” என்று அவன் மார்பில் சாய்ந்து கொள்ள..
“நா தல்லி செப்புறா” என்றவன் அவளை அணைந்து நிற்க..
அவள் சொல்ல முடியாமல் தவிப்பதை பார்த்தவன்,,
“நாக்கு தெரியும் ரா, நமக்கு இரண்டு பாப்பா வர போகுது தானே” என்றதும்..
தலையாட்டியவளை தூங்கி சுத்தியவன், அவளை இறக்கிவிட்டு அவள் முகம் முழுக்க முத்தமிட்டவன்.
“தாங்யூ றா நா அம்மாயி” என்று அவளின் கைகளை எடுத்து அவன் கன்னங்களில் வைத்துக்கொள்ள..