Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 22 2

சௌசன்யாவின் குழந்தை அழும் சத்தம் கேட்டு, அவள் அறைக்கு சென்ற வைஷு குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடிக்கொண்டு இருந்தாள்..

 வீ. பி தூங்கி  எழுந்து  கீழே வந்தவன் மனைவியை தேட..



Advertisement

மகன் முகத்தை பார்த்த இந்திரா தேவி,, “வைஷு சௌசன்யா ரூம்பில் இருக்கா  வீ. பி”..  என்றதும்…

நேராக அக்காவின் அறைக்கு சென்ற மகனை பார்த்து சிரித்து சந்தோஷபட்டார்.. இந்திரா தேவி..

Advertisement

Advertisement

தம்பி தன் அறைக்குள் வருவதை பார்த்த சௌசன்யா “வா வீ. பி”  என்று அழைக்க, அக்காவிற்கு ஒரு தலை அசைப்பை கொடுத்தவன்.. வைஷுவை  அவன் கண்  தேட,,..

தம்பியை  அறிந்த சௌசன்யா “இதோ வர்ரேன்”  என்று வெளியே சென்று விட..

Advertisement

கணவனை பார்த்தது முகம் மலர்ந்தவள்.. “மாமா பாருடா, உன்னை பார்க்க மாமா வந்து இருக்காரு”. என்று வைஷு குழந்தையிடம் பேச..

மனைவியின் அருகில் வந்தவன்.. குழந்தையை, மனைவியை சேர்ந்து அணைத்துக் கொண்டவன்,,  வைஷுவின் கழுத்தில்  தன் முகத்தை புதைத்தவன்,, “ஏன்டி என்னை விட்டு கீழ வந்தா?”..

“பசிச்சிச்சு பாவா,, உங்க பிள்ளைகள், பசி தாங்க மாட்டாங்க, அது தான், அப்புறம் அவங்க உங்களை மாதிரி காரம் சாப்பிடாதான் ரொம்ப  பிடிக்குது தெரியுமா?.. இன்னைக்கு நம்ம வீட்டுல  நல்லா சாப்டேன்” என்றவளை. தோள் அணைத்து முத்தமிட்டவன்..

“என் பிள்ளைக்கடி அப்படி தான் இருப்பாங்க,, உனக்கு கஷ்டமா இருக்கா?”..

“இல்லை பாவா,, எனக்கு உங்களை மாதிரியே இரண்டு வீ. பி பாவா  வேணும்,, அவங்க உங்களை மாதிரி இருக்கனும்,, உங்களை பார்க்குற மாதிரி இருக்கனும்,  நான் அவங்களை கொஞ்சி கிட்டே  என் காலம் பூரா இருக்கனும்”..

“கொஞ்சம் உங்க புருஷனை கொஞ்சலாம்,, எல்லாம் உங்க வீ. பி பாவா  பிள்ளைகளுக்கு மட்டுமே  தானா?,, இந்த பாவாவையும் கவனி, பங்காரம் என்றவன்,, அவள் இதழ் ஒற்றி எடுக்க..

“பாவா பாப்பா” என்று   சௌசன்யாவின் குழந்தையை  காட்ட..

“அவளுக்கு ஒன்னு கொடுத்த போச்சு”  என்றவன்..

“அப்படி தானே செல்லம்”  என்று மருமகளை தூக்கி கொஞ்ச.. குழந்தை சிரிப்பில் இருவரும் மயங்கி இருக்க..

“நம்ம பிள்ளைகளும் இப்படி தானே இருப்பாங்க”..

“ஊம்ம்,,”.. என்றவன்..

“இரண்டு பிள்ளைகளை  எப்படி பாத்துகிறது பாவா, பயமா இருக்கு,, அண்ணி இவள ஒருத்தி வச்சு கிட்டே கஷ்ட படுறாங்க”..

“நான் எதுக்கு இருக்கேன்,, யாழினியை தனியா நான் தானே வளத்தேன்,,  நம்ம ரெண்டு பேரும் பாத்துக்கலாம்”.. என்றதும்..

யாழினி நினைவு வீ. பிக்கு..

வைஷுவோ என் பிள்ளை எப்படி இருப்பாளோ, இந்த சஞ்சனா அவளைநல்லா பாத்துப்பாளா, அவ ஒழுங்கா சாப்பிட்டாளோ தெரியலையே என்று எண்ணி வருத்தபடுவதை உணர்ந்த வீ. பி.

“நீ பாப்பா வோட இரு நான் சாப்பிட்டு வர்ரேன்”   என்று அவளை குழந்தையிடம் திசை திருப்ப..

“நானும் வர்ரேன்”, என்று  கணவனோடு  வெளியே வர..

அவளுக்கு குழந்தை தூங்கி நடப்பதற்கு  சிரமமாக இருக்க, அவளை பிடித்து இருப்பது போல் குழந்தையும் சேர்த்தபடி வந்த மகனை பார்த்த நாகில்லி,,

“இப்படியே இருடா மகனே”  என்று சிரித்தார்..

அவனோ தந்தையை பார்த்து “ஓகே டாடி”  என்றவன், யார் இருக்கிறார்கள்   என்று எல்லாம் பார்க்கவில்லை வைஷுவை சோபாவில் அமர வைத்து விட்டு உண்ண செல்ல.. “நீ இரு, நான் சாப்பிட்டுக்கிறேன்”  என்று சென்றவனின் பின்  வர..

இரு என்பது போல் வீ. பி பார்க்க..

“நான் பரிமாருறேன்” என்று அவன் பின்னாடி செல்ல சௌசன்யா வந்து வைஷுவிடம் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள்..

“ஏன் பங்காரம் கஷ்டபடுற?”..

“உங்களுக்கு சாப்பாடு போடுறது கஷ்டமா”  என்று வீ. பிக்கு உணவு பாரிமாற, மனைவி பரிமாறியதும் நன்றாக உண்டான் வீ, பி..

ஆதித்தியா  வைஷு வந்ததை தெரிந்து  கொண்டு அவளை பார்க்க வந்தான்..

ஆதித்தியா வீட்டில் நுழைந்தது கண்ணீல் பட்டது வைஷுசும், வீ. பியும் தான்,, நேராக அவர்களிடம் செல்ல..

“வாங்க, அண்ணா” என்றாள் வைஷு..

“நீ எப்படி இருக்கேமா,, ஹெல்த்  இப்போ  பரவாயில்லையா,,?”..

“ஊம்ம்  ,,,,, நல்லா  தான் இருக்கேன்,, நீங்களும் சாப்பிடுங்க  அண்ணா”..

“இல்லம்மா  உன்னைய பார்க்க தான் வந்தேன், தண்ணீர் மட்டும் குடு” என்று வைஷு விடமிருந்து நீரை வாங்கி குடித்தவன்.. நண்பனை பார்க்க..

அவனோ அக்காவின் மகளை தூக்கி கொஞ்சி கொண்டு இருக்க..

“என்னடா, உன் தங்கச்சி வைஷுவை நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்ததா”…

“உனக்கேன்டா காண்டு”,,

“உன் முன்னாடி இவ்வளவு பெரிய உருவம்  உட்கார்ந்து இருக்கேன், என் கிட்ட பேசமா,, வைஷுவை பாசமா நலம் விசாரிச்சியே,, அத சொன்னேன்”..

“உன்ன தான் டெய்லி பாக்குறேனே, அப்பறம் எதுக்கு விசாரிக்கனும்”..

“இங்கே பாரு டா செல்லம் உன் அப்பன் என்னை கண்டுக்க  மாட்டுறான்,, நீ அவன் கிட்ட பேசாத”.. என்றான்..

வீ. பி ஏதோ தன்னிடம் பேசியதும் குழந்தை குழுங்கி, சிரிக்க.. “இங்கே பாருடா உன் பொண்ணு  என்  பேச்சை கேட்டு சிரிக்குற”  என்றவன் மீண்டும் பேச.

 குழந்தை தன் கையை காலை ஆட்டி  சிரிக்க,, கொள்ளை அழகாய் இருந்தது,,

“ஏய் உன்  குழந்தை என் கட்சி டா” என்று நண்பனை வேறுப்பேற்ற..

“வச்சுக்கோ” என்றான் ஆதித்தியா..

“உன் அப்பன்  உன்னை இங்கே இருக்க சொல்லுறான் நீ இங்கேயே இருடா புஜ்ஜிகுட்டி”  என்று  மருமகளை  கொஞ்ச..

ஆதி வீ. பிக்கு கண் காட்டா..

“இதோ”  என்று..

குழந்தையை சௌசன்யாவிடம் தர.. அவளோ ஆதியை பார்த்து குதித்துக்கொண்டு அவனிடம் தாவ.

தன்னை பார்த்தது தாவிய, தன் மகளை அள்ளி அணைத்து முத்தமிட்டவன்,, “நாக்கு பணி  உந்திறா சின்னுலு,”  என்று மகளை கொஞ்சி சௌசன்யாவிடம் கொடுத்தான்..

“ஆதி ஆபிஸ் ரூம்  வா, பேசனும்”  என்று வீ. பி  முன்னே செல்ல, ஆதி அவனை பின் தொடர்ந்தான்…

நண்பர்கள் இருவரும் தனியா பேசிக்கொண்டு  இருக்க..

இருவருக்கும் குடிக்க  காபி கொண்டு ஆபிஸ் ரூம் வந்தாள் வைஷு, இவர்கள் இருவரும் பேசியதை கேட்டு விட்டவள்..

அவர்களுக்கு  தான் கேட்டது தெரியாது போல் முகத்தை இயல்பாக  வைத்து கொண்டு இருவருக்கும்  காபியை  கொடுத்து விட்டு செல்ல…

வைஷு சென்றதும்..

“என்ன பண்ண போற?”..

“மறு விசாரனைக்கு அப்பில் பண்ண போறேன், இந்த தடவ சஞ்சனா வால ஒன்னும் பண்ண முடியாது, யாழினி நம்ம கிட்ட வந்திருவா” என்றான் வீ. பி..

“சரிடா நான் எல்லா ஆதாரத்தையும்  உனக்கு  அனுப்பி வைக்கிறேன்”  என்று ஆதி கிளம்பிவிட..

வீ. பி நீண்ட நேரம் தன் கையில் உள்ள ஆதாரத்தை  பார்த்திருந்தவன்.. அவன் வக்கீலுக்கு  அனுப்பி வைத்துவிட்டு அவன் அறைக்கு வர..

வைஷு ஏதோ பெரிய சிந்தனையில் இருந்தாள்..

வீ. பி சொல்லுற மாதிரி என்னால அவ்வளவு நாள் எல்லாம் யாழினி இல்லாமல்  காத்து இருக்க முடியாது  என்றவள்.. ஒரு முடிவு எடுத்தவளாக. தம்பிக்கு போனுக்கு குறுஞ் செய்தி அனுப்பி வைத்து விட்டு அமர..

வீ. பி, வைஷுவை  பார்த்துக்கொண்டே வந்தவன்.. “என்னடா பங்காரம் ரெஸ்ட் எடுக்காம உட்கார்ந்து இருக்க”..

“தூக்கம் வரல  பாவா?”..

“வா  ரெண்டு  பேரும் சேர்ந்து தூங்கலாம்” என்று   அவளை தன் கை அணைப்பில் வைத்து  தூங்கவைத்தான்..

மறுநாள் வீ. பி ஆபீஸ் கிளம்பி விட..

வீ. பி சென்ற ஒரு மணி நேரம் கழித்து. பத்ரி அக்கா சொன்ன மாதிரி வீட்டிற்கு வந்தான்..

தம்பி மகனை பார்த்து சந்தோச பட்ட இந்திரா அவனை உட்கார  வைத்து  உபசரிக்க..

வைஷு ரெடியாகி  வந்தவள் தம்பியிடம் கிளம்பலாம், என்று கூற..

இந்திரா தேவி எங்கே போறீங்க என்று கேட்க தோன்ற ஒன்றும் பேசாமல் அவர்கள்  முகத்தை பார்த்தவரிடம்  “கொஞ்சம் வெளியே  போறேன் அத்தை வந்துடுவேன்”  என்றவள் தம்பியோடு அவன் காரில் ஏர்போர்ட் செல்ல..

அவள் வீட்டை விட்டு  எங்கோ செல்கிறாள் என்று தகவல் மட்டும் வீ.பிக்கு   வர.. சரி தம்பியோட தானே செல்கிறாள் என்று  அமைதியாக இருந்தவன்..

அவள் ஏர்போர்டில் இருக்கிறாள் என்று தகவல் வர.

இவளை,,,,… .. இப்போ  என்ன  பண்ண போறாளோ ஏதாவது ஏலரை இழுத்து விட போறா அடியேய் என்று பல்லை கடித்தவன் வைஷுவுக்கு போனில் அழைக்க..

கணவன் அழைத்ததும், அவனுக்கு  விசயம் தெரிந்து விட்டது போலவே, போனை எடுத்தால் திட்டுவாறே என்ன செய்ய  என்று  யோசிக்க..

பத்ரி போனுக்கு அழைத்து விட்டான் வீ. பி..

“அக்கா மாமா”  என்றதும்..

“போனை எடுக்காதடா”,   என்றாள் வைஷு..

“அக்கா   மாமா திட்டுனாலும் பரவாயில்ல”..

என்றவன்..

போனை எடுத்து  ஆன் பண்ண ..”அறிவு இருக்காடா  உனக்கு,  அவ என்ன சொன்னாலும் கேட்பியா,”..

“மாமா அக்கா தான்”..

“அவ சொன்னா நீ செய்வீயா,, யோசிக்க மாட்டீயா, எங்கேடா இரண்டு பேரும் கிளம்புறீங்க?”..

“இலங்கைக்கு”  என்றான் பவ்வியமாக..

“போனை உன் அக்கா கிட்ட கொடு”…

பத்ரி  போனை  வைஷுவிடம் நீட்ட..

“போனை வாங்க மாட்டேன், நேருல பேசுறேன்னு சொல்லுடா உன் மாமா கிட்ட”..

அவள் பேசியது அவனுக்கு கேட்டு விட..

“மாமா”  என்றான்  பத்ரி..

“போனை உன் அக்கா காதில் வைடா”.. என்றான் வீ. பி.

அவள் முகத்தை திருப்பினாலும்,, அவளின் காதில் போனை வைத்து விட..

“ஹலோ”  என்றான் வீ. பி..

வைஷுவுக்கு உள்ளுக்குள் கணவன் மீது  பயம் இருந்தாலும்..

“கேட்குது”  என்றதும்..

“ஒட்டு கேட்டு யாடி”..

“ஆமாம் கேட்டேன்,, ஒட்டு எல்லாம் கேட்கல, காபி குடுக்க வந்தப்போ நீங்களும்,, ஆதி அண்ணாவும் பேசுனது காதில் விழுந்துச்சு”…

“சரி இப்போ என்ன பண்ண போறா?”..

“என் பொண்ணை பாக்க போறேன்”…

“எப்படி இலங்கைக்கு போயி தெரு, தெருவா தேட  போறீயா? “..

“எப்படியோ தேடியாவது  என் பொண்ணை  கூட்டிட்டு வந்திடுவேன்”…

“அடிச்சு  பல்ல கலட்டிடுவேன், மரியாதையா வீட்டுக்கு வா, நான் சொன்னதை கேளு, யாழினி என் பொறுப்பு, இன்னும் ஒரு மாசத்துல யாழினி நம்ம வீட்டுல இருப்பா, நீ வா”..

“அவ்வளவு நாள் எல்லாம் என்னால காத்து இருக்க முடியாது?”…

“அப்போ என்ன பண்ண போறா”?..

“இலங்கைக்கு  போறேன்”…

“போயி?”..  என்றான்..

“சஞ்சனா கிட்ட பேசி என் யாழினி கூட்டிட்டு வர போறேன்”..

“ஓ நீ போனதும் அவ யாழினியை உன்கிட்ட கொடுத்திடுவா… உன்  மரியாதையை  நீ கெடுத்துக்காத, நான் பாத்துக்கிறேன், எனக்கு ஒரு மாசம் டைம் கொடுடி, நான் யாழினியை உன்கிட்ட  கொடுக்கிறேன்.. திரும்பி வந்திடு பங்காரம் வீட்டுக்கு,  நான் பாத்துக்கிறேன்”..

“சாரி பாவா”.

“வைஷு என் பொறுமையை   ரொம்ப சோதிக்குறா”…

“நான் யாழினியோட தான், திரும்ப வருவேன்”..  என்று போனை கட் பண்ணியவள்.. போனை சைலன்டீல் போட்டு விட்டு இலங்கைக்கு  செல்லும் விமானம் ஏறினாள்…

வீ. பிக்கு பயங்கரமாக  கோபம் வர, இவளை என்று திட்டியவன்,, அடுத்து  இலங்கைக்கு செல்லும் பிளைட்டில் டிக்கெட் போட்டு கிளம்ப தயாரானான்..

வைஷு  நேற்று  வீ. பிக்கும், ஆதிக்கும் காபி எடுத்துக்கொண்டு அவர்கள்  ஆபிஸ்   அறைக்கு செல்ல..  ஆதி பேசியது வைஷுவுக்கு கேட்டது..

‘சஞ்சனா   அவ ஹோட்டல் தான் இருக்க”..

“ஏன் அவங்க வீட்டுல அவ இல்லையா?”.. என்றான் வீ. பி.

“இல்ல வீ. பி  சஞ்சனா  வோட  வீட்டுல யாழினியை  ஏத்துக்கல, யாழினியை  உன்கிட்ட கொடுக்க சொல்லிட்டு அவளை கல்யாணம் பண்ண சொல்லுறாங்க.. இவ தான், நான் கல்யாணம் பண்ண  மாட்டேன்.. யாழினியை வளப்பேன்னு சொல்லிட்டு, அவங்க ஹோட்டலுல்ல யாழினியோட தங்கி இருக்கா”  என்றான்  ஆதி..

“இது ஒன்னும் போதும் ஆதி, சஞ்சனா குடும்பம் யாழினி ஏத்துக்கல, சஞ்சனா தனியா  யாழினியை பார்த்துக்க முடியாதுன்னு   கோர்ட்டுல சொல்லலாம்,, அப்பறம் இந்த தடவை நம்ம பக்கம் உள்ள ஆதாரம்  எல்லாம்  சரியா இருக்கு,, யாழினி  நம்ம வீட்டுக்கு வந்திடுவா”.. என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்க..

வைஷு கதவை தட்டி விட்டு இருவரும் காபி கொடுத்து விட்டு எதுவும் கேட்காதது போல் சென்று விட..

ஆதி  சஞ்சனா இலங்கையில்  இருப்பது போல்  வீடியோ எடுத்து அவனுக்கு அனுப்புதாக  சொல்லி சென்று விட..

இதை  அனைத்தையும் கேட்ட வைஷு.. சஞ்சனா  இலங்கையில் இருக்கிறாள், யாழினியோடு,, என்று தெரிந்து கொண்டவள்..

 வீ. பிக்கு  தெரியாமல்  இலங்கைக்கு  சென்று   யாழினியை அழைத்து வந்து விடலாம்.. என்று கிளம்பி விட…

அங்கே நடக்க  போகும்  விபரீதம் தெரியாமல் மகள்  பாசத்தில் வைஷு கிளம்ப..

தன் உயிரை பணயம் வைத்து மகள் உயிரை  காப்பாற்ற  போகிற சூழ்நிலை வரும் என்று  வைஷு நினைக்க வில்லை…

தன் இரண்டு உயிரும், தன் கண்முன்னே உயிருக்கு போராடும் நிலைமையை பார்த்த வீ. பி  என்ன செய்வானோ… பார்க்கலாம்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!