Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலென்பது கனவு அல்லவா

kadhal enbadhu kanavu allava -1

அத்தியாயம் 1

காதலை சார்ந்த கனவுகளும், திருமணம் சார்ந்த கனவுகளும் இவ்வுலகில் நிறைய பேரிடம் உண்டு. தனக்கு வரப்போகும் கணவன் இப்படித்தான் என்றும்,தன் காதலன் தன்னிடம் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்றும் நிறைய பேருக்கு கனவு இருக்கும். ஆனால் ஆசைப்படும் படி வாழ்க்கை அமைந்துவிடுமா என்றால் சிலருக்கு அமையும், சிலருக்கு அமையாது. அப்படி என்றால் அமையாதவரின் வாழ்க்கை நரகமாக்கிடுமா? இல்லை எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தால் வாழ்க்கை இனித்திடுமா? வாருங்கள் கதையோடு பயணிப்போம்.



Advertisement

நெடுநேரம் பயணம் அது, இரண்டு இரவுகள் இரயிலிலே கடந்தது. பயண களைப்புகலை தாண்டி இருவருக்கும் புதுமணத்தம்பதிக்கு உண்டான உற்சாகம் அவர்களுக்குள் தோன்றியது. 

“ஏங்க இது தான் வாஸ்கடோகாமா வா. ரொம்ப நல்லாருக்குல ” என்றாள் ரித்விகா. 

Advertisement

சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு தான் முன் பதிவு செய்து வைத்திருந்த அறைக்கதவை திறந்தான். நல்ல விஸ்தாரமான அறை. மென்மையான பஞ்சு மெத்தை பக்கத்தில் ஒரு பெரிய டேபிள். ட்ரஸ்ஸிங் செய்வதற்கு கண்ணாடி வைத்த ட்ரஸ்ஸிங் டேபிள் என்று சகல வசதிகளும் அறையில் இருந்தது. ஜன்னலின் திரை சீலையை விலக்கினால் கடல் அலைகளின் தரிசனம் என்று பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது அந்த சூழ்நிலை. 

Advertisement

வந்த களைப்பில் முதலில் குளித்துவிட்டு வரலாம் என்று லதா தன் தேவைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். 

அது வரை தான் என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் லாபியில் அமரலாம் என்று சென்றான் கோபி. வயது 35 கடந்துவிட்ட நிலையில் தேடி தேடி அலைந்த கோபிக்கு உறவினர் வீட்டு பெண்ணான லதா அமைந்துவிட்டாள். அவனுக்கு பெண் தேடி அலைந்ததில் சலிப்பு ஒரு பக்கம் இன்னொரு பக்கம் திருமணம் வாழ்க்கை மீது நாட்டமே இல்லாமல் இருந்தவனுக்கு இந்த புது வாழ்வு எப்படியோ இருந்தது அவனை விட வயதில் எட்டு வருடம் சிறியவள் லதா. 

Advertisement

பார்க்க அழகாக இருக்கிறார் கோபி என்பதாலேயே எதையும் யோசிக்காமல் அவனை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாள் லதா. 

லதாவுக்கு கல்லூரி படிக்கும் போதே ஒரு காதல் கதையும் இருந்தது ஆனால் துரதிஷ்டம் அவனை திருமணம் செய்து கொள்ளாமல் போயிட்டு.‌ அவனை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்த லதாவுக்கு இறைவன் அனுப்பி வைத்த பரிசாக கோபி பெண் பார்க்க வந்தான். தன்னைவிட எட்டு வயது பெரியவர் தான் ஆனாலும் பார்ப்பதற்கு இளமையாக தான் இருக்கிறார் இவரை திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு ?வயது ஒரு பொருட்டே இல்லை அன்பு தான் முக்கியம் அந்த அன்பு அவர் காட்டுவார் என்ற நம்பிக்கையில் தான் லதா அவனை திருமணம் செய்து கொண்டாள். 

இவள் குளித்து முடித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டு லாபியில் தனக்காக காத்துக் கொண்டிருக்கும் கணவனை தேடிச் சென்றாள். 

“என்னங்க நான் குளிச்சிட்டு வந்துட்டேன் நீங்களும் உங்க குளிச்சிட்டு வந்துருங்க நம்ப லஞ்சுக்கு வெளியே போகலாம்” என்றதும் கோபி தலையசைத்து விட்டு அவனும் குளிக்கச் சென்றான். அவன் பின்னாடியே அவளும் சென்றாள். பையைத் திறந்து அவனே தன்னுடைய சட்டை பனியனை எடுத்துக் கொண்டிருக்க அதை சிறிதும் கவனிக்காமல் ஜன்னலின் வழியே கடலை நோட்டமிட்ட அவளை கண்டவன்.

“லதா…அங்க என்ன வேடிக்க இங்க நான் சட்டை எடுத்துட்டு இருக்கேன் உதவி பண்ண மாட்டியா” என்றான் அதிகார தொனியில்.

“ஏங்க உங்க சட்டை நீங்க எடுக்குறீங்க நான் வந்து இதுல ஹெல்ப் பண்ண என்ன இருக்கு? கிட் பேக்ல டிரஸ் இருக்குன்னு நல்லாவே தெரியும் அத ஜிப் திறந்தா எடுத்துக்க போறீங்க இதுல என்னோட உதவி என்ன தேவைப்பட போகுது”என்றாள் எதார்த்தமாக

“புருஷன் மேல கொஞ்சமாவது அக்கறை ,அன்பு இருந்தால் இதெல்லாம் நீ கண்டிப்பா பண்ணுவ உங்க வீட்ல இதெல்லாம் எதுவும் சொல்லிக் கொடுக்கல போல இருக்கே என்றான் நக்கலாக”

“ஆமா ஆமா எங்க வீட்டுல இதெல்லாம் சொல்லி கொடுக்கல உங்க வீட்ல மட்டும் உங்களுக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்து இருக்காங்களா என்றாள் பதிலுக்கு பதிலாக”

“கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ள என்ன பதிலுக்கு பதில் பேசுற லதா இதெல்லாம் சரியில்லை” என்றான் கோபி.

“எது சரியில்ல கோபி நீங்க தான் இப்போ வம்பு இழுக்கிற மாதிரி பேசுறீங்க பேக்கை திறந்து உங்க டிரஸ் நீங்க எடுத்துக்கறதுக்கு இவ்ளோ பெரிய பஞ்சாயத்து தேவையான்னு நீங்களே யோசிச்சு பாருங்க, உங்களுக்கே புரியும் இப்ப நடந்தது எல்லாமே வீண் வம்பு தான்னு”என்றாள் லதா சற்றும் பயப்படாமல்.

ஆம் அவள் ஏன் பயப்பட வேண்டும் இதில் அவள் தவறு எதுவும் இல்லையே சரிதான் அவள் சொல்வது சரிதான் என்று வாசகர்கள் ஆகிய உங்களுக்கு நன்றாகவே புரியும்.‌ஆனால் கோபியின் எதிர்பார்ப்போ சற்று வித்தியாசமானது. பணிவிடைகள் செய்வது மட்டும்தான் அன்பு காட்டுவது என்று அர்த்தம். அன்பு என்றாலே பணிவிடை செய்வது என்பது அவன் பார்த்து வளர்ந்து தெரிந்து கொண்ட விஷயம் அவன் அம்மா அவனுடைய அப்பாவுக்கு பணிவிடைகள் தவிர வேறு எதிலும் அன்பு காட்டி அவன் பார்த்ததில்லை போலும் அதனால் தான் மனைவியானவள் அன்பு என்றால் பணிவிடை மூலமாகத்தான் காட்டியாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் கோலூன்றி இருக்கிறது.

அப்படியானால் லதா சொல்வது தவறா? என்ற கோணத்தில் பார்க்கும் போது அதுவும் தவறில்லை. சரி கதைக்குள் செல்வோம்.

ஒரு வழியாக அவனும் குளித்து முடித்துவிட்டு அவளுடன் சேர்ந்து வெளியே ரெஸ்டாரன்ட் சென்றான் கோபி. கோவா வரவேண்டும் என்பது பல ஆண்களுக்கு அது ஒரு மிகப்பெரிய கனவு தான் அப்படி இருக்கும் போது தன் நண்பர்களுடன் கோவா வந்திருந்த ஞாபகம் அவனுக்குள் எட்டிப் பார்த்தது இந்த இடத்துக்கு நம்ம வந்திருக்கோம்ல இன்று அவனுக்குள் அவனே நினைத்து பார்த்து சிரித்துக்கொண்டான்.

“என்னங்க எதையோ நினைச்சு சிரிச்சுக்கிறீங்க என்ன விஷயம் “என்றாள் லதா

“இங்க நான் ஏற்கனவே வந்து இருக்கேன் அதான் அதை நெனச்சு பார்த்தேன் , இங்க ஏற்கனவே வந்த ஞாபகம் எல்லாம் வந்துச்சு .ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணி இருந்தோம் நானும் என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும்”என்றதும் அவள் முறைத்தப்படி‌ அவனிடம் ஒரு கேள்வியை கோபமாக கேட்டாள்.

“ஏன் அப்போ என் கூட வந்தது உங்களுக்கு ஜாலியாவே இல்லையா”என்றாள்.

“நான் அப்படி சொல்லவே இல்லையே லதா என்னுடைய பழைய நினைவுகளை நினைத்து பார்த்தேன் அவ்வளவுதான் இதுல நீ ஏன் கோபப்படுற” என்றான் கோபி.

“இல்லைங்க உங்களுக்கு என் கூட இங்க வந்தது எல்லாம் சுத்தமா விருப்பம் இல்லைன்னு தோணுது ரூம்ல கூட பாருங்க ஒரு சாதாரண டிரஸ் எடுப்பதற்கு நீங்க அவ்வளவு பெரிய வாக்குவாதம் பண்ணீங்க என் கூட. இப்ப கூட பாருங்க உங்க பக்கத்துல நான் இருக்கேன் ஆனா உங்க பிரெண்ட்ஸ் அண்ட்அவங்க தான் உங்களுக்கு ஞாபகம் வருது அப்படின்னா உங்களுக்கு என் கூட இப்ப வந்தது  பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்”என்றாள் லதா.

“ஐயோ அது வேற இது வேற லதா ரூம்ல நடந்த வாக்குவாதமும் இப்ப நீ பண்ற வாக்குவாதமும் வேற வேற நீ புரிஞ்சுக்கவே மாட்டியா லதா” என்றான் கோபி.

“ஏங்க எப்பவுமே பொண்ணுங்க மட்டும் தான் புரிஞ்சுக்கணுமா ஏன் பசங்க நீங்க உங்க மனைவியை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா”

“பொண்ணுங்களுக்கு பொதுவாக பொறுமை இருக்கணும் லதா அது இருந்தாலே பொதுவாக கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை வராது”என்றான் கோபி.

“ஓஹோ அப்போ பொண்ணுங்க மட்டும் தான் பொறுமையா கடைபிடிக்கணும் நீங்க பொறுமையே இல்லாம நிதானமே இல்லாமல் என்ன வேணாலும் பேசுவீங்க அதை நாங்க கேட்கணும் அப்படித்தானே” என்றாள் லதா.

“அடிப்பாவி எது சொன்னாலும் குதர்க்கமாக யோசிக்கிறியே இப்போ உன்கிட்ட நான் எப்படி தான் பேசுறது”

“நீங்க என்கிட்ட பேசவே வேண்டாம் என்றாள்”கோபமாக.

“சரி இப்போ சாப்பிட வந்திருக்கும் உனக்கு என்ன வேணும் சொல்லு என்ன பிடிக்கும் சொல்லு” என்றான் கோபி.

“எனக்கு பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும் அதுவே ஆர்டர் பண்ணுங்க”என்றாள் கோபம் தனிந்தபடி.

‘அப்பாடா பிரியாணி ஞாபகம் வந்தவுடனே சண்டையை மறந்துட்டாடா என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டான் கோபி’

‘ஆஹா பிரியாணி பார்த்தவுடனே இவ கோபத்தை மறந்துட்டான்னு நெனச்சுப்பாரு, எதுக்கும் நம்ம மூஞ்சிய கோபமாக வைத்து சாப்பிடுவோம்’ என்றபடி முகபாவனையை மீண்டும் மாற்றிக் கொண்டாள் லதா.

“சாப்பிடறப்போ ஏண்டி கோபமா இருக்க லூசு சாப்பிடு ஒழுங்கா” என்றான் கோபி.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் நீங்க சாப்பிடுங்க”

“ஆமா எனக்கு என்ன பிடிக்கும் நீ கேட்கவே இல்லையே லதா “என்றான் கோபி‌ ஆசையாக.

“சரி சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன் இனிமே” என்றாள் சாதாரணமாக.

“எனக்கு உனக்கு பிடிச்ச பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும்” என்றான் கோபி.

“யப்பா நல்லா தான் ஐஸ் வைக்கிறாரு”என்றவள் உணவை ரசித்து சாப்பிட்டுவிட்டு கணவனின் கைகளை கோர்த்தபடி வெளியே நடந்து வந்தாள். 

வெளியிடங்களில் கைகோர்த்தபடி நடப்பது அவனுக்கு பிடிக்காது என்றாலும் கோபமாக இருக்கும் தன் மனைவி லதாவை சமாதானமாக வைத்துக்கொள்ள  இதை தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை தனக்கு பிடிக்காவிட்டாலும் அவள் கைகளை கோர்த்தபடி நடந்து வந்தான் கோபி.

“இப்படி கைகோர்த்துட்டே நடக்கிறது எனக்கு எவ்வளவு ஹாப்பியா இருக்கு தெரியுமா” என்று லதா அவன் முகத்தை பார்த்து சொன்னதற்கு.

“ம்ம் நீ எப்பவுமே ஹேப்பியா இருந்தா அதுவே எனக்கு போதும் “என்றான் கோபி.

கோவாவை சுற்றிப் பார்க்கும் ஆவல் லதாவுக்கு மட்டுமல்ல இப்போது கோபியிக்கும் இருந்தது ஏற்கனவே பார்த்த இடங்களாக இருந்தாலும் மனைவியுடன் சுற்றிப் பார்ப்பது இதுதான் முதல் தடவை என்பதாலோ என்னவோ அவனுக்கும் ஒருவித ஆர்வம் தொற்றிக் கொண்டது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!