Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலென்பது கனவு அல்லவா

Kadhal enbadhu kanavu allava -17

17.

அக்கா அங்க என்னமோ கூட்டம் கூடுது வா பாப்போம் என்று கவிதா லதாவை அழைத்தாள். 

“அடியேய் சமோசா ஆறிப்போகும் டி”



Advertisement

“பரவால்ல வா கா”

Advertisement

இருவரும் அந்த கூட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்தனர்.

Advertisement

“சனியனே இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிற உன்னை என்ன பண்றது , இப்படி சொந்தம் பந்தம் முன்னாடி அசிங்க படுத்திட்டு கல்லு மாதிரி நிக்கிற” என்று அந்த பெண்மணி 18 வயது மதிக்கத்தக்க தன் மகளை திட்டுவதை பார்த்தாள் லதா. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு அடி உதையும் கிடைத்தது. வயிற்றில் எட்டி உதைத்தார் அந்த மகளின் தந்தை.

அப்போது தான் லதாவுக்கு கோபம் பீரிட்டு வந்தது.

Advertisement

“யோவ் நிறுத்து யா, மனிஷனா நீ,வயசு பொண்ணு, அவ வயித்துல எட்டி உதைக்கிறியே அறிவு இல்லை,உள்ள இருக்கிற organs ( ஆர்கன்ஸ்) எதாவது பாதிப்பு அடைஞ்சா என்ன பண்ணுவ ” என்று கோபத்தில் கத்தினாள் லதா.

“என் பொண்ணு அவ நான் அடிப்பேன் நீ யாரு கேட்க ” –  அவர்.

“கேட்கிறது யாரா வேணாலும் இருக்கலாம் ஏன்னா நீ அடிக்கிறது உன் வீட்டுக்கு வெளியே வச்சு , எப்போ நீ ஊர் முன்பு அடிக்கிறியோ அப்பவே இது பொது பிரச்சனை புரியுதா? அடிக்கிறது தப்பு இதுல உனக்கு நியாயமா ? ” – லதா.

“அது வந்து மா இந்த புள்ள ஒரு பையனை காதலிச்சு வந்து நிக்குது கண்ணாலம் கட்டி வைன்னு அதான் ஆத்திரத்தில அவ அப்பன் அடிக்கிறான். இப்படி திடுதிடுப்புனு எவனோ ஒருத்தனை காதல் பண்றேன்னு நின்னா யாருக்கு கோபம் வராது. அது மட்டுமல்ல அவன் நம்மலவன் இல்லை,என்ன கோத்ரம் குலம்னு கூட தெரியல “என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

“ஓஹோ இதான் உங்க பிரச்சனை. அதாவது யாரோ ஒருத்தன்,என்ன குலம்னு கூட தெரியலை. சரி அதெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? அவங்க மனசுல இருக்கிற காதலை முதல்ல புரிஞ்சிக்கங்க. காதல் நீங்க நினைக்கிற மாதிரி ஏற்ற தாழ்வு பார்த்து வருவது இல்லை,அது ஒரு உணர்வு ,ஒரு நாளைக்கு 64000 சிந்தனை ஒரு மனிதனோட மூளையில் இருக்கு ,அதுல காதலும் ஒன்னு. அட இது ஒரு நேர்மறையான உணர்வு. இதுல என்ன தப்பு இருக்கு. 18, வயசு ஆன அவ சட்டப்படி மேஜர் , தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்க எல்லா ரைட்ஸ் இருக்கு. ஐயோ என்னை அடிச்சு துன்புறுத்தல் செய்றாங்கன்னு இவ போய் கம்ப்ளைண்ட் பண்ணா உங்க எல்லாரையும் தூக்கி உள்ளே உக்கார வைப்பாங்க ம்ம் பார்த்துக்கோங்க ” என்று தைரியமாக வாதாடினாள் லதா.

இவ சொன்னதை கேட்டதும் பாதி கூட்டம் கலைந்து போனது. 

“ஹலோ மிஸ்டர் பாத்திங்களா உங்க சொந்தம் பந்தம் எப்படி எனக்கென்ன ன்னு நகர்ந்து போகுதுன்னு . உன் பொண்ணு லவ் பண்ணா அது உன் வீட்டு பிரச்சனை,அதை ஏன் சொந்தம் பந்தம்னு நீங்களே வெளியே போய் எல்லார்கிட்டயும் சொல்றீங்க. சொல்லி என்னத்த கண்டிங்க? சரி அதெல்லாம் இருக்கட்டும் காதல் தப்புன்னு சொல்றீங்களே அப்போ உங்க மனைவி மேல் உங்களுக்கு காதலே இல்லையா? காதல் இல்லாமையா இத்தனை வருஷம் வாழ்க்கை ஓடுச்சு? சரியானவனை காதலிச்சா அவனுக்கு கட்டி வைக்கிறதுல தப்பு இல்லை…”என்று சொல்லிவிட்டு அந்த மகளிடம். 

“இங்க வா டா மா, என்னை உன் அக்கா மாதிரி நினைச்சுக்கோ . எப்போ உன் காதலை தைரியமாக உன் வீட்ல வந்து சொன்னியோ அப்பவே தெரியுது அந்த காதல்ல உண்மை இருக்குன்னு தைரியமா இரு எல்லாம் சரியாகிவிடும் “என்றாள் லதா.

ஒருவழியாக பிரச்சனை முடிஞ்சு வீட்டுக்கு வந்தனர் லதாவும் கவிதாவும். சமோசாவை பரிமாறியபடி கவிதா எல்லோரிடமும் நடந்ததை கூறினாள்.

“என் பொண்ணு பண்ணது சரி” என்று சொன்னாள் தாய் ராக்காயி.  கவிதா மனதுக்குள்…

‘லதாவுக்கு இருக்கிற தைரியம் நமக்கு ஏன் வரலை இப்படி சின்ன பிரச்சனைக்கு கிணத்துல குதிக்க நினைச்சன் எவ்ளோ பெரிய முட்டாள் நான் ‘ என்று யோசித்துவிட்டு தன் கணவனுக்கு போன் போட்டாள்.

“என்னங்க நான் ஊருக்கு வரேன் அழைச்சிட்டு போங்க”- கவிதா.

சரி என்று கணவன் சொல்லிவிட்டு போனை வைத்தான். 

நாட்கள் இப்படியே போய்க்கொண்டே இருந்தது. லதாவும் கோபியும் தற்போது சென்னையில் இருக்கின்றனர். சிங்கப்பூர் செல்லும் நேரம் நெருங்க ஆரம்பித்தது.

அவனுடைய திங்க்ஸை பேக்கிங் செய்தாள் லதா.

“லதா உன் கிட்ட ஒன்னு சொல்லனும்”

“சொல்லுங்க”

“உனக்கும் விசா சீக்கிரம் வந்திடும் இனி நீ என் கூடவே வந்திடு.”

“வரேன்ங்க ஆனால் அங்க மட்டும் என்னால சந்தோஷமா இருக்க முடியுமா”

“அதெல்லாம் தெரியலை “

“அப்போ நான் வரலை. ” – லதா.

“லதா நீ அங்க வந்தா நான் ஹேப்பியா இருப்பேன்”- கோபி.

” சரி உங்க சந்தோஷத்துக்காக கொஞ்ச நாள் அங்க வந்து இருக்கேன்” என்றாள் லதா. 

கோபியின் பிரிவு அவளுக்கும் துயரத்தை ஏற்படுத்தியது. கோபி சிங்கப்பூர் பறந்தான். கோபியுடன் தன் தாய் வீட்டில் தங்கிய நாட்களை நினைத்து பார்க்க பார்க்க எல்லையற்ற மகிழ்ச்சி அவளுக்கு. 

‘இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா’ என்ற பாடல் வரிகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது‌ அவளுக்கு.  மீண்டும் தன் கவனத்தை வேலையில் செலுத்தினாள்.

“வருண் இந்த பைல்ஸ் எல்லாம் செக் பண்ணி பாத்துட்டேன் எல்லாம் ஓகே தான் இதுல சைன் மட்டும் பண்ணிடு ” என்க அவனும் அதே போல் செய்து அவளிடம் நீட்டினான். 

“ஏய் என்ன லதா டல்லா இருக்க”

“இல்லையே ஐயம் ஆல்ரைட்” என்றாள் லதா. 

“இல்லை லதா , நீ ஏதோ வருத்தமா இருக்கிறாப்ல தெரியுது”

“அது வந்து …..கோபி கிளம்பிட்டாங்க அதான் ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு” 

“ஓஹோ அதான் நான் இருக்கேன் லதா லிவ் இட் ” – வருண்.

“சி.. வாட் டூ யூ மீன்” – லதா.

“நந்திங். ஜஸ்ட் ப்ரண்டு “

என்னவோ அவன் சொன்னது சரியாக படவில்லை என்றாலும் கடந்து சென்றாள் லதா. 

வேலை முடிந்து வீட்டுக்கு ஆட்டோவை பிடித்து கொண்டு சென்றாள். ரோட்டில் போவர் வருவோரை பார்த்தப்படி பயணித்தாள். தம்பதிகள் பயணிக்கும் காட்சிகள் பார்க்கும் போது கோபி நியாபகம் வந்தது. 

‘காதல் என்பது கனவு அல்லவா அது கனவு தேசத்தின் கோவிலல்லவா ‘ என்ற வரிகள் நியாபகம் வந்தது. 

கோபி ஐ ரியலி லவ் யூ.. உங்களை மிஸ் பண்றேன் கோபி. இந்த டைம் நீங்க என் கூட நிறைய நேரம் செலவழிச்சிங்க என் அம்மா வீட்ல அவ்ளோ சந்தோஷமா நம்ம இருந்தோம் ப்ளீஸ் கோபி இந்தியா வாங்க நம்ம குடும்பமா இங்கேயே இருக்கலாமே ,எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு தனியா வீடு எடுத்து நீங்க நான் நம்ப குழந்தைங்கன்னு சந்தோஷமா வாழனும். என்று நினைத்தபடி பயணம் செய்தாள்.

“அம்மா நீங்க இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சு” – ட்ரைவர்.

இறங்கிவிட்டு காசை தந்து சென்றாள். உள்ளே கனகா வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தாள். அதை பார்த்ததும் ஓடிச்சென்று அவளை ஆசுவாச படுத்தினாள். குடிக்க கொஞ்சம் தண்ணீரை எடுத்து வந்தாள். 

“போ அவளுக்கு இரண்டு துண்டு மாங்கா கட் பண்ணி கொடு மாசமா இருக்கா வாய் என்னவோ போல் இருக்கும்” என்றார் மாமியார் மீனாட்சி.

“சரிங்க அத்தை” என்று ஓடிவந்து மாங்கா பத்தை போட்டாள். மாங்காய் பார்த்ததும் அவளுக்கும் குழந்தை ஆசை வந்தது. கடவுளே நானும் கன்சிவ் ஆனா நல்லாருக்கும் வர மாசம் டேட் தள்ளிப்போகனும் ” என்று நினைத்துக்கொண்டு மாங்காவை எடுத்து வந்து கனகாவுக்கு தந்தாள். 

கணவனிடம் போன் பண்ணும் போதெல்லாம் குழந்தை விஷயத்தை பேச துவங்கினாள். 

“போன மாசம் எல்லாம் நம்ம ஒன்னு சேர்ந்த நாட்கள் ரொம்ப கம்மி தானே லதா. ரொம்ப எக்ஸ்பெட் பண்ணாத பாத்துக்கலாம் விடு… நீ சிங்கப்பூர் வா எல்லாம் சரியாகிவிடும் ” – கோபி.

“சரிங்க ” – லதா.

இதையெல்லாம் கவனித்த கனகா..

“அக்கா ரொம்ப வருத்தம் படாதிங்க. இதெல்லாம் நடக்கிறப்போ தானாவே நடக்கும். எனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமான்னே பயமா இருந்துச்சி. திடிர்னு அதுவா நடந்துச்சு வீட்லயே . விடுங்க கா” – கனகா.

“எல்லாம் சரி தான் கனகா. எதுக்கும் என்னோட ஹெல்த் ஒருவாட்டி செக் பண்ணவா”

“ம்ம் தாராளமா பண்ணுங்க எனக்கு தெரிஞ்ச லேடி டாக்டர் கிட்ட தானே கூட்டிட்டு போறேன்” – கனகா.

இருவரும் குழந்தை விஷயம் பேச துவங்கிய நாள் முதல் தோழிகளாக மாறினர். 

“அக்கா டாக்டர் கிட்ட அப்பாய்மெண்ட் போட்டேன் வாங்க போலாம் “

டாக்டர் க்ளீனிக் நெருங்கியதும் அவளுக்கு படபடவென்று இருந்தது. டாக்டர் லதாவை மட்டும் உள்ளே அழைத்து பரிசோதித்து பார்த்ததில் அவளுக்கு கர்ப்பம் தரிக்க எல்லா வாய்ப்பும் இருப்பதாக கூறினார். கர்ப்பப்பை நன்றாகவே இருக்கு கவலை வேண்டாம் என்று வெறும் வைட்டமின் மாத்திரைகள் மட்டும் பரிந்துரை செய்தார். 

“அக்கா இப்போ சந்தோஷமா “

“ஹாஹா ரொம்ப ஹேப்பி தேங்க்ஸ் கனகா”

“தேங்க்ஸ் எல்லாம் வேணாம் சீக்கிரம் என்னை சித்தி ஆக்குங்க அது போதும்”

“ஹாஹா… அதுக்கு உங்க மூத்தார் கோபி முதல்ல ஊருக்கு வரனும் “என்க.

“அய்யோ டா நீங்க கிளம்பி சிங்கப்பூர் போங்க ஜாலியா இருங்க வெளிநாடு போறதுக்கு இவ்ளோ கஷ்டமா உங்களுக்கு ” – கனகா.

“விசாவும் வந்திடுச்சு கண்டிப்பா போறேன் ” என்றாள் லதா. இருவரும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. போனில் இரவு கணவனிடம் டாக்டர் சந்தித்து வந்த விஷயத்தை கூறினாள்.

“அட நல்ல விஷயம் தானே லதா சீக்கிரம் நீ அம்மா ஆயிடுவ ” என்றான் கோபி.

“அதுக்கு உங்க உதவி வேண்டுமே ” என்று நக்கல் நையாண்டி செய்தாள் லதா.

“அடிப்பாவி சீக்கிரமே எல்லாம் நடக்கும் வெயிட் பண்ணு ” என்று கோபி சொல்லி சிரித்தான். இவர்கள் ஆசை கொள்வது போல சிங்கப்பூர் செல்லும் நேரம் தற்போது நம் கதாநாயகி லதாவுக்கு கிடைத்தது. அவளும் சிங்கப்பூர் பறந்தாள். அங்கு அவர்கள் வாழ்க்கையில் என்ன நேரும்? சந்தோஷமாக இருப்பாங்களா ? தடைகள் ஏதும் வருமா ? பார்ப்போம்.

தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!