KAK 12-2
“ஏன் சகோ கடைசி வரைக்கும் நம்ம வேடிக்கை மட்டும்தான் பாப்போமா”என்றாள் கவலையாக பிரியா
“ஆமாம் சகோ நமக்கு அந்த குடுப்பினை இல்ல போல”என்றாள் ஏக்கமாக பூஜா.
“ அடக்காலக் கொடுமையே ஒரு லவ்வர்ஸ்டே அதுவுமா தம்மா துண்டு சாக்லேட் வாங்கி தர நமக்கு ஆள் இல்லையா என்ன சகோ நம்ம நிலைமை இப்படி கேவலமா இருக்கு” என்றாள் வருத்தமாக பிரியங்கா.
“ அது என்னவோ கரெக்ட் தான் சகோ” என இருவரும் கன்னத்தில் கை வைத்து சோகமாக சுற்றியுள்ள அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
அப்போது அங்கு வந்து கொண்டிருந்த இனியாவையும் இன்பாவையும் பார்த்து, “நம்ம கூடவே வெட்டியா சுத்திட்டு இருந்தா எப்படி சகோ இவளுக்கு மட்டும் ஆளு கிடைச்சது”
“அதான் சகோ எனக்கும் தெரியல அவ மூஞ்ச பாரு எவ்ளோ பிரைட்டா இருக்கு. அதோட அவ கைல வெச்சிருக்கறத பாரு சகோ ”
“சரி விடு சகோ சின்ன சிறுசுங்க ஜாலியா இருக்கட்டும். இப்ப நம்ம புண்பட்ட நெஞ்ச பப்ஸ் வச்சு ஆத்துவோம் சகோ. அப்புறமா அவ கையில இருக்குறத ஓகே வா சகோ ” என்று இருவரும் கண்ணாலே எதையோ பேசிவிட்டு, மீண்டும் அவர்களை வேடிக்கை பார்த்தனர்.
Advertisement
“இனி குட்டி மாமா தந்த கிப்ட் பிடிச்சிருக்கா”
Advertisement
“இவ்வளவு அழகான பொக்கே யாருக்கு தான் பிடிக்காது. உங்களுக்கு எப்படி இவ்வளவு கிரியேட்டிவா வாங்க தெரிஞ்சுச்சி. ஆக்சுவலி இந்த பொக்கேக்காக தான் நான் உங்களுக்கு ஓகே சொன்னேன் தெரியுமா” என்று தனது கையில் இருந்த ஃகிரே அண்ட் ஸ்கை ப்ளூ பேப்பரினால் சுற்றப்பட்ட பெரிய லாலிபாப் பொக்கே பார்த்து சொன்னாள் . அதில் கிட்டத்தட்ட நூறு லாலிபாப் இருந்தது. அதனை பார்த்து மயங்கி போய் தான் இனியா இன்பாவின் காதலை ஏற்றுக்கொண்டாள்.
“ஆமா தின்னி மூட்டைக்கு வேற எப்படி கிப்ட் வாங்கி தர முடியும்” என்று தனது மனதுக்குள் சொல்லிக்கொண்டு, “உனக்கு என்ன புடிக்கும் எனக்கு தெரியாத இனி குட்டி” என அவளை நெருங்கி முத்தமிட முயற்சி செய்ய கிட்டே வர அப்போது பார்த்து குனிந்து தனது கையில் இருந்த லாலிபாப் பொக்கேயை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் இனியா.
அதனைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு தனது முத்த ஆசையே மனதில் புதைத்து கொண்டு, “கடவுளே இருந்திருந்து எனக்கு இவ மேலயா லவ் வரணும்” என மேலே பார்த்து தனது விதியை நொந்து கொண்டான் மனதினுள்.
Advertisement
“கிப்ட் சூப்பராக இருக்கு. ஆனா எனக்கு ஸ்டாபெரி பிளவர் பிடிக்காது. ஆரஞ்ச் பிளவர் வாங்கி இருக்கலாம்” என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு அவளை பார்த்து புன்னகைத்து, “சரி டார்லிங் நெக்ஸ்ட் டைம் உனக்கு பிடிச்ச ஆரஞ்சு பிளேவர் மட்டும் வாங்கி தரேன் என்ன” என்றான் பல்லை கடித்துக் கொண்டு இன்பா.
இவ்வளவு ரணகளத்தையும் சற்று தள்ளி கேட்டுக் கொண்டிருந்த இன்பாவின் நண்பர்கள் அனைவரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
“மச்சான் உன் ஃப்யூச்சர் எப்படி இருக்குன்னு இப்பவே தெரிய தொடங்கிடுடா” என்று சத்தமாக சொல்லி சிரித்தான் தீபக்.
அதில் கடுப்பானவன், “இனிக்குட்டி இங்க கொஞ்சம் வெயிட் பண்ணுடா நான் இப்ப வந்துடுறேன்” என்று சொல்லி தீபக் நோக்கி செல்ல தொடங்கினான்.
தன்னை நோக்கி வரும் இன்பாவை பார்த்து அலர்ட் ஆனவன், “ மச்சான் எதா இருந்தாலும் பேசிக்கலாம். அங்கேயே நின்னு பக்கத்துல வராத ” என்று சொல்லி ஓட தொடங்கியவனை, “டேய் என்ன வெறி ஏத்தாத மரியாதையா நின்று” என்று சொல்லி அவன் பின்னே ஓடினான் இன்பா.
@@@@@@@@@@@@@@
“இன்னைக்கு தான் காலேஜ் லாஸ்ட் டேட் இதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் எப்படி மீட் பண்ணுவோம்” என அழுகையுடன் இன்பா தோளில் சாய்ந்தவளை, “ஏன் டா இங்க தானா நீயும் வேலைக்கு சேர போற அப்புறம் என்ன நம்ம ரெண்டு பேரும் எப்பவும் போல மீட் பண்ணலாமே”
“மீட் பண்ணலாம் தான் ஆனா இனிமே எப்பவும் போல நெனச்ச நேரம் உன்ன பாக்க முடியாதே. அதோட நம்ம வேலை பார்க்கிற கம்பெனி ஒண்ணும் ஒரே கம்பெனி கிடையாது. நீ எங்கேயோ வேலை பார்க்க போற நான் எங்கேயோ வேலை பார்க்க போறேன். அப்படி இருக்கும்போது வீக் எண்டு மட்டும் தான் நம்மளால மீட் பண்ண முடியும்” என்றாள் சோகமாக.
“ஏய் செல்லம் இதுக்கெல்லாம் யாராவது ஃபீல் பண்ணுவாங்களா நீ என்ன பாக்க நினைச்சா போன் பண்ணு நான் உடனே உன்னை வந்து பாக்க போறேன் அவ்வளவு தான். இதுக்கெல்லாம் யாராவது பீல் பண்ணுவாங்களா பாரு கண்ணு எல்லாம் கலங்கிட்டு எப்பவும் இனியா சிரிச்சுக்கிட்டே இருக்கணும். இந்த அழுகை என்னால உன் கண்ணுல வரக்கூடாது சரியா” என்றான் பாசமாக அவளின் கண்களை துடைத்து விட்டு
“ஐயோ உங்க படம் ஓட்டுனது போதும் வாங்க. அங்க குரூப் போட்டோ எடுக்க எல்லாரும் கூப்பிடுறாங்க” என்று சொல்லி இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான் தீபக்.
அப்படியே ஆறு மாதங்கள் செல்ல “ செல்லம் ப்ளீஸ் டா அழாத இன்னும் மூணு மாசம் தான் ஃபாரின் போய் இந்த ப்ராஜெக்ட் மட்டும் நான் முடிச்சிட்டு வந்தேனா என்னை எப்படியும் ஆபீஸ்ல ப்ரொமோட் பண்ணிடுவாங்க. அதுக்கப்புறம் அம்மா கிட்ட பேசி உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்க சொல்றேன். இன்னும் ஆறே ஆறு மாசம் தான் நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம் சரியா” என்றான் தனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தவளை பார்த்து
“இப்படித்தான் காலேஜ் முடிஞ்ச புதுசுல சொன்னேன். நீ போன் பண்ண உடனே வந்துருவேன் சொன்னேன். ஆனா நீ வந்தியா வரவே இல்ல”
“ ஏய் அதுக்கு தானே போன மாசம் என்னோட ஆபீஸ்ல உனக்கு வேலை வாங்கி கொடுத்தேன். இப்ப நம்ம நெனச்ச நேரம் ரெண்டு பேரும் பாத்துக்குறோம் தானே”
“ஆனா இப்ப நீ அன்சைட் போறியே”
“மூணு மாசம் தானே டா ப்ளீஸ் டா வந்துடுறேன் இது நம்ம லைஃப்க்காக தானே” என அவளை கெஞ்சிக் கொண்டே இருந்தவனை, “டேய் என்ன போற ஐடியா இல்லையா என்ன. போடா டைம் ஆகிட்டு அனஸ்மென்ட் பண்றது கேக்கலையா”என்றான் தீபக்
“சரி டா நல்லா சாப்பிடு. உடம்ப பாத்துக்கோ பீல் பண்ணாத சரியா. கால் பண்றேன்” என்று லேசாக அணைத்து நெற்றியில் முத்தம் வைத்து, “பாய் டா” என லேசாக அணைத்துவிட்டு செக்கிங் கவுன்டர் உள்ள சென்று மறைந்தான் இன்பா.
அவனையே பார்த்துக் கொண்டு சோகமாக நின்றவளின் அருகே வந்து, “என்ன ரொம்ப பீலிங்ஸ்சோ” என்றாள் நக்கலாக பிரியா.
ஆமாம் என்பதைப் போல தலையாட்டியவளை பார்த்து, “ சரிடி ரொம்ப பீலிங்ல இருக்கா இப்ப அவளுக்கு பசிக்காது அதனால போற வழியில நம்ம மட்டும் சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்” என்றாள் பூஜாவை பார்த்து
“ என்ன சிக்கன் பிரியாணியா என்ன சகோ இப்படி பண்ற வா நாம போய் சாப்பிடலாம்” என தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு அவர்களுக்கு முன்பு சென்றவளை பார்த்து, “ஏய் இருடி நாங்களும் வரோம்” என்று சொல்லி அவள் பின்னால் வேகமாக ஓடினார்கள் பிரியங்காவும் பூஜாவும்.
இவர்கள் மூவரையும் பேசுவது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கோ தனது தலையில் அடித்துக் கொண்டு, “இதுங்கெல்லாம் என்ன டிசைன் தெரியல கடவுளே. இதுங்க உங்களோட பியூச்சர் ஹஸ்பண்ட் நினைச்சா பாவமா இருக்கு ” என்று சொல்லி அவர்கள் பின்பு சென்றான்.
