Skip to content
Post Views: 722
“நீ சொன்னா எல்லாம் சரி தான் மா. என்னங்க அப்ப நம்ம ஜோசியர வர சொல்லுங்க. ரெண்டு பேர் பெயர் ராசி பாத்து ஒரு நல்ல நாள் சொல்லட்டும்”என்ற வள்ளியம்மைக்கு, “ நீ இத சொல்லுவனு எனக்கு தெரியும் அதான் நான் அப்பவே அவர வர சொல்லிட்டேன் இப்ப அவர் வர நேரம் தான்”என்றார் மயில்வாகனார்.
“தாத்தா பாட்டி சொல்றதுக்கு முன்னாடியே அவங்க யோசனையை கரெக்டா நீங்க கேட்ச் பண்றீங்க எப்படி தாத்தா உங்களால முடியுது ” என்றான் தீபக்
அதற்கு பாட்டி, “ சும்மாவா 45 வருஷம் நான் ட்ரெய்னிங் கொடுத்து இருக்கேன் அதனால தான் உங்க தாத்தா நான் நினைக்கிறது எல்லாத்தையும் கரெக்டா செய்றார்” என்றார் பெருமையாக
“ஓ அப்ப தாத்தா புருஷன் ஜாப் ஒழுங்கா செய்ய காரணம் நீங்க கொடுத்த ட்ரெயின் தான். அப்படி தான பாட்டி”
Advertisement
“ஆமா அதனாலதான் உங்க தாத்தா இப்ப எல்லாம் நான் சொல்லுறதுக்கு முன்னாடி கரெக்டா செய்றார் அதே மாதிரி தான் என் மருமகள்களும் அவங்க புருஷன கரெக்டா ட்ரெயின் பண்ணி வச்சிருக்காங்க” என்றார் பெருமையாக
“ஓ அப்போ இந்த கலைய உங்க பேத்திக்கும் சொல்லிக் கொடுத்திருப்பீங்க அப்படித்தானே பாட்டி. டேய் நண்பா உன் ஃபியூச்சர் இப்பவே என் கண் முன்னாடி தெரியுது. எதுக்கும் நீ தாத்தா கிட்ட எல்லாத்தையும் கற்று வைச்சிக்கோ அப்ப தான் உன்னால இவங்க கிட்ட சர்வே பண்ண முடியும்” என்றான் தீபக் இன்பாவை பார்த்து
“ஏய் சும்மா இருக்க மாட்டியா” என்று அவன் தலையில் தட்டி விட்டு இனியாவை திரும்பி பார்க்க அவளோ அவனை கொடூரமாக முறைத்துக் கொண்டு இருந்தாள்.
Advertisement
“அதானே இவளாவது நடந்த எல்லாத்தையும் மறக்குறதாவது சும்மா எல்லார்க்கிட்டியும் பேருக்கு அடிச்சி விட்டு இருக்கா நம்மள தான் வச்சு செய்யப் போறா போல. டேய் இன்பா எதுக்கும் இந்த கல்யாணம் முடியறவரைக்கும் இவகிட்ட தனியா சிக்கிராத சிக்குன உன் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை” என்று அவளைப் பார்த்துக் கொண்டு தனது மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருந்தவனை பார்த்து, “என்னடா இப்பவே கனவு காண தொடங்கிட்டியா” என்ற தீபகை பார்த்துக் கொடூரமாக முறைத்தான் இன்பா.
Advertisement
“ சரிடா டென்ஷன் ஆகாத உன் கல்யாணத்த சீக்கிரம் வைக்க சொல்றேன் சரியா பாரு அங்க பாரு ஜோசியர் வந்துட்டார்”என்று இன்பாவின் பார்வையை திசை திருப்பினான் தீபக்
“அப்பா ஜோசியர் வந்ததால தப்பிச்சிட்டோம். இல்லன்னா இவன் நம்மள வச்சு செஞ்சிருப்பான்” என்று மெதுவாக தனக்குள்ளே பேசிக் கொண்டான் தீபக்
“வாங்க ஜோசியரே வாங்க உங்களை தான் நாங்க எதிர்பார்த்துட்டு இருந்தோம்” என்று அழைத்து அவரை உட்கார வைத்தார் வள்ளியம்மை.
Advertisement
“அம்மா ஐயா எல்லாரும் எப்படி இருக்கீங்க. எதுக்காக என்ன அவசரமா போன் பண்ணி வர சொன்னீங்க ஐயா. யாருக்கும் எதுவும் இல்லல்ல எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க” என்றார் பதட்டமாக ஜோசியர்.
“ நாங்கல்லாம் நல்லா இருக்கோம் ஜோசியரே. எங்க எல்லாருக்கும் ஒன்னும் இல்ல.நாங்க உங்களை அவசரமா வர சொன்னது என் பேத்தி இனியாவுக்கும் என் பக்கத்துல இருக்க என் பேரன் இன்பாவுக்கும் நாங்க கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டோம். அதான் ரெண்டு பேரோட பெயர் ராசியை பார்த்து ஒரு நல்ல நாள் குறிச்சி கொடுங்க ஜோசியரே”
“ ரொம்ப சந்தோசம் ஐயா இருங்க ரெண்டு பேரோட ராசியும் பார்த்து இப்ப சொல்லிடுறேன்” என்று சொல்லி இருவரின் பெயர் ராசியை வைத்து கட்டங்களை குறிக்க தொடங்கினார் ஜோசியர்.
“ ஐயா ரெண்டு பேரோட பெயர் ராசிய பாக்கும் போது ரொம்ப பொருத்தமா இருக்கு. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிறந்தவங்க இவங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாலேயே கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணி இருக்கீங்களா ”
“ஆமா சோசியரே 2 வருஷத்துக்கு முன்னாடி அவங்களுக்கு கல்யாணம் பண்றதா முடிவு பண்ணனோம் ஆனால் சில தடங்கலால அது நடக்கல”
“ நல்லவேளை அது நடக்கலன்னு சந்தோசப்படுங்கம்மா. அப்படி மட்டும் நடந்து இருந்தா இவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா இந்த ரெண்டு வருஷமும் பிரிஞ்சி தான் இருந்து இருப்பாங்க ஆனா இப்போ கட்டம் ரெண்டு பேருக்கும் சரியா பொருந்தி வந்திருக்கு அதனால இவங்க பேர் ராசிக்கும் அடுத்த வாரம் கல்யாணத்தை வைச்சா ரொம்ப நல்லா இருப்பாங்க. வேற எந்த நாளும் ரெண்டு பேருக்கும் அவ்வளவு நல்ல நாளா இல்ல ஐயா ”என்றார் ஜோசியர்.
” என்ன ஜோசியரே சொல்றீங்க வேற எந்த நாளும் இல்லையா”
” நாள் இருக்கு தான் ஆனா இதைவிட நல்ல முகூர்த்தம் இவங்க வாழ்க்கைல வரவே வராது அப்படி ஒரு நாள் அடுத்த வாரம் புதன்கிழமை வருது இதுல கல்யாணம் பண்ண இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருப்பாங்க”
“ என்ன அடுத்து வாரமா எப்படி முடியும் கிட்டத்தட்ட வெறும் அஞ்சு நாள் தான் இருக்குது அதுக்குள்ள எப்படி இவங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றது” என்றார் கவலையாக செந்தில் முருகன்.
” உங்க கவலை எனக்கு புரியுது ஐயா இருந்தாலும் இதைவிட நல்ல முகூர்த்த நாள் இவங்க ரெண்டு பேருக்கும் வராது கொஞ்சம் முயற்சி பண்ணி பண்ண பாருங்க அப்படியே உங்களுக்கு முகூர்த்த நாள் வேணும் சொன்னாலும் குறிச்சி தாரேன் ஐயா இருந்தாலும் இதைவிட நல்ல முகூர்த்தம் வராது அதையும் கொஞ்சம் உங்க கருத்துல எடுத்துக்கோங்க ஐயா” என்றார் மயில்வாகனார் பார்த்து பணிவுடன்
“வேற நாள் பார்க்க வேண்டாம் ஜோசியரே இந்த நாளே நாங்க பண்றோம் நாங்க கூப்பிட்ட உடனே வந்ததுக்கு ரொம்ப நன்றி. நீங்க கிளம்புங்க ஜோசியரை” என்று சொல்லி அவருக்கு கொடுக்க வேண்டியது கொடுத்து அனுப்பி வைத்தார்
“அப்பா என்னப்பா இப்படி சொல்றீங்க ஒரு வாரத்துல எப்படி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண முடியும் கொஞ்சம் யோசிச்சு பேசுங்கப்பா” என்றார் ஆதங்கமாக பழனி முருகன்
“அண்ணா ஏன் கவலைப்படுறீங்க பேசாம கல்யாணத்த சிம்பிளா கோவில வச்சிட்டு வரவேற்பு பெருசா பண்ணலாம். நீங்க என்ன சொல்லுறீங்க அப்பா”என்றார் ஈஸ்வரி.
“ ஆமா செந்தில் ஈஸ்வரி சொல்றதும் சரிதான் இவங்க கல்யாணத்தை இன்னும் நாள் தள்ளி போட நான் விரும்பல இதே நாள்ல செஞ்சிருவோம். அதுக்கப்புறம் வரவேற்பு பிரம்மாண்டமா நம்ம ஏற்பாடு பண்ணலாம் சரியா” என்றார் மயில்வாகனார்.
“ நீங்க சொன்னா சரி தான் பா. என்ன நம்ம வீட்ல முறைப்படி நடக்கிற ஃபர்ஸ்ட் கல்யாணம் அதான் பார்த்தேன். வேற ஒன்னும் இல்ல சரி இவங்க கல்யாணம் இப்படித்தான் நடக்கணும்னா நம்ம என்ன பண்ண முடியும்” என்றார் வருத்தமாக செந்தில் முருகன்.
“நீங்க வருத்தப்படாதீங்க அண்ணா எல்லாத்தையும் சேர்த்து வைச்சி நம்ம ரிசப்ஷன்ல கிராண்டா பண்ணலாம்”
“ மாமா நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க இன்னும் ஒரு கல்யாணம் நீங்க நடத்த வேண்டியது இருக்கு அதுல உங்க ஆசை எல்லாத்தையும் நீங்க பண்ணலாம் இப்போம் இந்த கல்யாணத்தை அம்மா சொல்ற மாதிரி சிம்பிளா பண்ணுவோம்” என்றான் அதுவரை பேசாமல் இருந்த கவின்.
“நீ யாரப்பா சொல்ற விசாகன சொல்றியா அவனுக்கு கல்யாணம் ஆக இன்னும் ரொம்ப வருஷம் இருக்கு. இருந்தாலும் என் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் இப்படி கிராண்டா கல்யாணம் முடிக்க முடியலையே என் மனசுல ஒரு வருத்தம் இருந்துட்டே தான் இருக்கும்” என்றார் வருத்தமாக செந்தில் முருகன்.
“ மாமா நீங்க வருத்தப்பட தேவையே இல்ல உங்களோட ஒரு பொண்ணுக்கு சிம்பிளா தான் கல்யாணம் நடக்கும் அது நீங்க ஒன்னும் பண்ண முடியாது ஆனால் இன்னொரு பொண்ணுக்கு நீங்க கிராண்ட் தான் கல்யாணம் பண்ணுவீங்க பாருங்க. அதனால நீங்க பீல் பண்ணாதீங்க மாமா இப்போதைக்கு இந்த கல்யாணத்தை மட்டும் பாருங்க” என்றான் தனது மனைவி தங்கி இருந்த அறையின் வாயிலை பார்த்துக் கொண்டு கவின்
“ நீ என்ன சொல்றனு எனக்கு புரியல பா. ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டு. இதோ இரண்டாவது பொண்ணு ஆகப்போகுது இதுல எப்படி இன்னொரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுங்க நீ சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியலப்பா” என்றவரை பார்த்து, “ நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க மாமா உங்களுக்கு எல்லாம் புரியும் உங்க ஒரு பொண்ணுக்கு நீங்க நினைச்சதை விட அதிகமா கிராண்டா கல்யாணம் பண்ணுவீங்க இப்போதைக்கு அதை மட்டும் மைண்ட்ல வச்சுட்டு அடுத்த வேலையை பாருங்க மாமா” என்றவனை புரியாமல் அனைவரும் பார்த்தார்கள். அதில் அனைத்து விஷயங்களையும் தெரிந்த மயில்வாகனார் மட்டும் கவினை அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னவோ சொல்ற ஆனா எனக்கு ஒன்னும் புரியல சரிப்பா நாளைக்கு வரைக்கும் நாங்க எல்லாரும் வெயிட் பண்றோம்” என்றவர், “ ஆமா அத்தை மாறன் எங்க ஆளையே காணும் நானும் அவனை நேத்துல இருந்து தேடுறேன் ஆனா காணவே இல்ல” என்றார் பார்வதி அத்தை பார்த்து
“ நானும் அவன பாக்கலப்பா அண்ணன் தான் வேலையா அவனை வெளியே அனுப்பினாங்க எனக்கு ஒன்னும் தெரியாது அண்ணன் கிட்ட கேளு” என்றார் அவர்.
“ அப்பா மாறன் எங்கப்பா நம்ம வீட்ல இவ்ளோ பெரிய விஷயம் நடக்குது ஆனா அவன் இல்லாம என்ன பண்றான் நீங்க எங்க அனுப்புனீங்க அவனை. இந்த வீட்ல எங்க எல்லாத்துக்கும் தெரியாம என்னதான் நடக்குது கொஞ்சம் சொல்லுங்கப்பா என்னால முடியல எதுவுமே புரியாம மண்ட காயுது ” என்றார் கோபமாக.
“மாமா டென்ஷன் ஆகாதீங்க எல்லாத்துக்கும் சேர்த்து பதில் நாளைக்கு சொல்றேன். மாறன் அண்ணா ஒரு முக்கியமான வேலையா தான் வெளியே போய் இருக்காங்க. அண்ணன் நாளைக்கு வந்துரும் அவங்க வந்த பிறகு உங்களுக்கு எல்லா உண்மையும் நான் சொல்றேன். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க மாமா” என்றான் கவின்
error: Content is protected !!