Skip to content
Post Views: 1,044
அலைவரிசை-5
“டேய் கவின் இவர் என்னடா சொல்லுறாரு. அப்ப உன் கூட இருந்தது உன் வைஃப் இல்லனா அது யாருடா” என்றான் குழப்பமாக சதீஸ்
Advertisement
“கொஞ்சம் நேரம் வாய முடிகிட்டு இருடா”என்றவன் பக்கத்தில் நின்ற ராமுவை கண்ணால் காட்டினான். அதை புரிந்து கொண்டு அவனும் அமைதியாக நின்றான். இருவரும் பேசுவது புரியாமல் அதனை கேட்டுக் கொண்டு நின்றவன், “ சார் இந்த பக்கம் வாங்க” என மேனேஜர் அறைக்கு அழைத்து சென்றான் ராமு.
கதவை தட்டிக்கொண்டு உள்ளே இருவரையும் விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டான். அங்கே நடுத்தர வயதுடைய ஒருவர் மேனேஜர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement
“ ஹலோ சார் வாங்க உக்காருங்க நீங்க ரெண்டு பேரும் போலீஸ் இல்லன்னு எனக்கு தெரியும் என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க” என்றார் மேனேஜர் இருவரையும் பார்த்து
இருவரும் அவருக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்து, “எப்படி சார் கண்டுபிடிச்சீங்க” என்றான் ஆச்சரியமாக சதீஷ்.
Advertisement
“ உங்க ஐடி கார்டு பார்த்து தான் என்றவர் கவினை
பார்த்து என்ன விஷயத்துக்காக என்னை பார்க்கணும் சொன்னீங்க”
“ சார் நீங்க வேற லெவல் தான் என பாராட்டிவிட்டு, நான் கவின் இவன் சதீஷ் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கோம். ஒரு கேஸ் விஷயமா உங்க ஹோட்டல் புட்டேஜ் கொஞ்சம் பார்க்க முடியுமா” என்றான் கவின்.
“ நாங்க ஏன் உங்களுக்கு புட்டேஜ் காட்டணும். நீங்க ரெண்டு பேரும் போலீசுனு பொய் சொல்லி தான் உள்ள வந்து இருக்கீங்க அப்படி இருக்கும்போது இதுவும் ஏன் பொய்யா இருக்க கூடாது” என்றார் இருவரையும் சந்தேகமாக பார்த்துக் கொண்டு மேனேஜர்
“ இந்த ஹோட்டலோட முதலாளி எங்க பிரெண்டுனு சொல்லி இப்ப நான் அவனுக்கு கால் பண்ணி தந்தா நீங்க என்ன பாக்க விடுவீங்க தானே” என்றான் கெத்தாக கவின்
“ம் அப்ப கூட நீ என்கிட்ட பேச மாட்ட இல்ல மச்சான்” என்றார் கவலையாக
“ என்ன மாமா நீங்க இவ்ளோ பீல் பண்றீங்க அவன பத்தி தெரியாதா அவனுக்கு தான் பொண்ணு மேல கை வச்சா பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும் தானே அப்படி இருக்கும்போது அவன் முன்னாடி ஏன் அக்காவை அடிச்சீங்க” என்றான் சதீஷ்
“ டேய் அதுக்கு தான் உங்க அக்கா கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேட்டேன்ல இருந்தும் ஏன் என்கிட்ட பேசாம இருக்கான் அவனை என்கிட்ட பேச சொல்லு” என்றார் சதீஷ் அக்கா சுமதியின் கணவர் சுரேஷ்
“ அவர் சொல்றதும் கரெக்ட் தானே நீ ஏன் இன்னும் பேசாம இருக்க அவர்கிட்ட பேசுடா” என்றான் சதீஷ்
இவ்வளவு சொல்லியும் அமைதியாக இருக்கும் கவினை பார்த்து “இன்னும் என்னடா இவன் கிட்டயும் மன்னிப்பு கேட்கணுமா” என்றவர் இருக்கையில் இருந்து எழுந்து வர
“ மாம்ஸ் நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் நான் உங்க கூட பேசுறேன் போதுமா” என்றான் கவின்
“ அப்பா பேசியாச்சா இனிமே உங்க ரெண்டு பேருக்கு இடையில இருந்து நான் படாதபாடு பட வேண்டாம்” என்றான் நிம்மதியாக சதீஷ்
“ அது எப்படி உன்னை நிம்மதியா இருக்க விடுவோம்” என கோரசாக இருவரும் கத்தினார்கள்.
“ ஐயோ கடவுளே என்னை காப்பாத்த யாருமே இல்லையா இருங்க உங்க ரெண்டு பேரையும் என் அக்கா கிட்ட சொல்லி கொடுக்கேன்” என்றான் குழந்தையாக சதீஸ்
“ போடா டேய் என்றவர் அது சரி எதுக்கு புட்டேஜ் கேக்கீங்க டா” என்றார் சுரேஷ்
“ அது ஒரு மேட்டர் மாமா நம்ம பையன் எங்கேயோ போய் வசமா சிக்கிட்டான் அதான்” என்றான் நக்கலுடன் சதீஷ்
“ டேய் நீ கொஞ்ச நேரம் வாயை மூடுடா எப்ப பார்த்தாலும் பேசிகிட்டு” என்று காண்டானவன் “மாமா வாங்க நான் சொல்ற டைம்ல உள்ள புட்டேஜ் காட்டுங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு செக்யூரிட்டி ரூமுக்கு சென்றான் கவின்.
“ மாப்பிள்ளை எப்பனு சொல்லு எடுத்துக்காட்டுறேன்” என்றவருக்கு நேரத்தை சொன்னான் கவின்.
உடனே அவன் சொன்ன நேரத்தில் உள்ள கேமராவை பிக் ஸ்கிரீன் செய்து காட்டினார். அதில் கவின் அரை மயக்கத்தில் ஏதோ புலம்பி கொண்டு ஒரு பெண்ணின் மேல் சாய்ந்து இருக்க அவள் முகத்தில் ஒரு பகுதி மட்டுமே தெரிந்தது. அவள் கவனமாக கேமராவில் முகத்தினை காட்ட வில்லை என்பதும் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை தாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அதைப் பார்த்துவிட்டு, “மச்சான் இது நம்ம அன்னைக்கு புக் பண்ண ரூம் டா” என்றான் சதீஷ்
பின்பு ஒரு நான்கு மணி நேரம் கழித்து அந்த அறையில் இருந்து அவள் பதட்டமாக போன் பேசிக்கொண்டு மறுபடியும் தனது முகத்தினை மறைத்துக் கொண்டு அவசரமாக வெளியே செல்வது தெரிந்தது. அதனைப் பார்த்துவிட்டு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ டேய் மாப்ள என்னடா நடக்குது யாருடா இந்த பொண்ணு” என்றார் சுரேஷ்
“ எனக்கு யாருன்னு தெரியல மாமா என்றவன் அவ எந்த வண்டியில் ஏறி போறானு பாரு மாமா” என்றான்
“ டேய் இங்க பாரு பார்க்கிங்ல அவ போற வண்டியோட நம்பர் பிளேட் தெரியுது பாரு” என்றான் சதீஷ்
உடனே அந்த நம்பரை தனது மொபைலில் போட்டோ எடுத்தான் மற்றும் அவளின் ஒரு புற முகத்தினையும் போட்டோ எடுத்துக் கொண்டான் கவின்
“சரிடா மாப்பிள்ளை நீ எங்கடா போன இது எங்கேயும் இல்லை” என்றார் சதீஷை சந்தேகமாக பார்த்துக்கொண்டு சுரேஷ்.
“ யோவ் நீ எல்லாம் நல்ல மாமா தான எப்ப பாரு என் மேல சந்தேகம் தான் அன்னைக்கு நல்லா யோசிச்சு பாரு நீ பெத்து வச்சிருக்கியே ஓன்னு அது என்னை விடாம உங்க வீட்ல புடிச்சு வச்சுக்கிட்டு இவனையும் சேர்த்து தான் இவன் தான் யாரோ கிளையண்ட் ஃபோன் பண்ணுனாங்க சொல்லிட்டு அவங்களை மீட் பண்ண வந்தான்” என்றான் அவரை முறைத்துக் கொண்டு சதீஸ்.
அவர் குழந்தையை சொல்லியதும் கடுப்பானவர் “ டேய் பச்ச பிள்ளையை என்ன பேசுற இதனால தான் உனக்கு லவ்வே செட் ஆகல” என்றார் நக்கலுடன்.
இருவரும் பேசிக் கொண்டிருக்க ஏதோ யோசனையில் நின்ற கவினை பார்த்து விட்டு, “அது சரி மாப்ள அன்னைக்கு யாரு உனக்கு போன் பண்ணது” என்றார் சுரேஷ்
“ அன்னைக்கு ஒரு முக்கியமான கிளைண்ட் ஒருத்தர் பார்த்து பேசனும் சொன்னார் . அதான் வந்தேன் ஆனா கொஞ்ச நேரத்துல அவர் கிளம்பி போயிட்டாரு அதுக்கு பிறகு தொண்ட வறண்டு இருக்குன்னு சொல்லி நான் தண்ணி தான் வாங்கி குடிச்சேன் எப்படி மயக்கம் ஆனேனு தெரியல. இதுல அந்த ராமு வேற நான் போதையில் இருந்தேனு சொல்றேன் எனக்கு ஒண்ணுமே புரியல மாமா” என்றான் குழப்பமாக கவின்.
“ சரிடா குழம்பாத ஆமா நீ யாரு கிட்ட தண்ணி வாங்கி குடிச்சே அந்த வெயிட்டர் யாருனு ஞாபகம் இருக்கா”
“ அது ஏன் அவன் கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க அதையும் சிசிடிவீல பாத்துட வேண்டியதுதானே” என்றான் சதீஷ்
“ அதுவும் கரெக்ட் தான். ஆமா மாப்பிள்ளை உனக்கு எப்படி இப்படி எல்லாம் மூளை வேலை செய்து” என்று சதீஷை கலாய்த்து கொண்டே சிசிடிவியில் அந்த வெயிட்டரை பார்த்து அவனை போனில் அழைத்தார்.
“ இவருக்கு இருக்க குசும்ப பாத்தியா” என்று கவின் காதில் கடித்தான் சதீஷ்
“ டேய் கொஞ்ச நேரம் பேசாம இருடா நானே நொந்து போய் இருக்கேன்” என்றவன் உள்ளே நுழைந்தவனை பார்த்துவிட்டு “ மாமா இவன்தான் மாமா அன்னைக்கு தண்ணீ தந்தான்” என்று சொல்லி அவன் சட்டையை பிடித்து அடிக்க சென்றான்.
உடனே அவனைப் பிடித்துக் கொண்டான் சதீஷ். “ டேய் மாப்பிள்ளை கொஞ்ச நேரம் சும்மா இருக்குடா” என்றவர் அந்த வெயிட்டரிடம், “டேய் அன்னைக்கி என் மாப்பிள்ளைக்கு என்னடா கலந்து கொடுத்த” என்று மிரட்டல் ஆக கேட்டார்
அவரின் மிரட்டலுக்கு பயந்து தன்னிடம் ஒருவன் காசு கொடுத்து கவினுக்கு தண்ணீரில் போதை மருந்து கலந்து கொடுக்க சொன்னதை சொல்லிவிட்டான். மேலும் அவனிடம் இருந்த அந்த நபரின் புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டனர்.
அந்தப் புகைப்படத்தை பார்த்து விட்டு, “டேய் மச்சான் இவன் யாருன்னு உனக்கு தெரியுதா அந்தப் பொண்ணு அவ பேரு கூட.. ஆ ஷாலு அவளை ஒருத்தன் ரேப் பண்ணிட்டேன்னு சொல்லி நம்ம டீம் எல்லாரும் சேர்ந்து பிடிச்சு கொடுத்தோமே அந்த தாமஸ் டா” என்ற சதீஷ்
“ ஆனா இவன் எப்படி வெளியே வந்தான்” என்றான் யோசனையாக
“ தெரியல மச்சான் கண்டுபிடிக்கணும் எல்லாத்தையும் கண்டுபிடிக்கணும் அத கண்டுபிடிச்சா தான், இந்த பிரச்சனை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். அதுக்கு பிறகு தான் இருக்கு. என்னை தப்பு சொன்ன எல்லாத்துக்கும்” என்றான் வெறியுடன்
அவன் முகத்தில் தெரிந்த வெறியில் ஜெர்க் ஆகி, “டேய் இவ்ளோ கோபம் ஆகாது. உன்ன நம்பி வீட்ல ஒரு பொண்ணு காத்து இருக்கு நீ வீட்டுக்கு போகலாம்ல” என்றான் மெதுவாக
“ வீட்டுக்கா நோ நெவர் நான் எப்படி பட்டவன்டா. பொண்ணுங்க மேல கைய வச்சாலே எனக்கு பிடிக்காது அப்படிப்பட்ட என்னை போய் ஒரு பொம்பள பொறுக்கி ரேஞ்சுக்கு பேசினாங்கடா. இதுவரைக்கும் ஒருத்தர் கூட என் முகத்துக்கு நேரா நின்னு பேசுனது கிடையாது ஆனால் என் கேரக்டர தப்பா பேச வச்சுட்டா அவ. இதுவரை நான் ஒரு பொண்ணை லவ் பண்ணி இருக்கேனா அட்லீஸ்ட் அவங்கள கேலி பண்ணி இருக்கேனா. அப்படிப்பட்ட என்னை போய் என்ன எல்லாம் பேசினாங்க. வலிக்குதுடா ரொம்ப வலிக்குது என் கூட பிறந்தவனே என்னை நம்பலடா எனக்கு அவன் சப்போர்ட் பண்ண வரல. இதுக்கெல்லாம் காரணம் யாரு அவ தானே. அது எப்படி டா தப்பு பண்ணாத என் மேல இப்படி ஒரு பொய்யை போட்டு என் கையாலே தாலி வாங்கிட்டு என் வீட்டில் இருக்க முடியுது அவளுக்கு. இதுவரை நான் அவளை பார்த்தது கூட கிடையாது அப்படிப்பட்ட என்னை அவ வயிதுல வளர குழந்தைக்கு அப்பா சொல்றாருடா. எங்கே எப்படி தப்பு நடந்து எனக்கு சத்தியமா புரியலடா. என்னை யோசிக்க விடாம லாக் பண்ணி என்ன தாலி கட்ட வெச்சாடாஅவ. நான் அவள சும்மா விடமாட்டேன் டா. அது எப்படிடா என் அண்ணன் என்னை நம்பல. அப்ப அவன் என்னை புரிஞ்சிக்கவே இல்லையாடா.” என்றான் கண்ணில் வலியுடன்
“ இந்தக் காலத்துல தப்பு பண்ணவங்க எல்லாம் நான் தான் செஞ்சேன்னு நல்லா நெஞ்ச நிமித்திட்டு போவாங்க. அவங்கள இந்த சமூகம் ஒன்னும் சொல்லாது. ஏன்னா இங்க தப்பானவங்கதான் நிறைய பேரு இருக்காங்க ஆனா எந்த தப்பும் பண்ணாம ஒருத்தன் இருந்தா போதும் அவன் மேல எப்ப சேத்த வாரி இறைக்கலாம்னு காத்துட்டு இருப்பாங்க. சின்னதா ஒரு விஷயம் கிடைச்சா போதும் அத
பேசி பேசி ஒன்னு அவங்கள கொன்னுடுவாங்க இல்லையா அவங்களோட சேர வச்சிருவாங்க” என்றான் வெறுப்பாக
“ நீ சொல்றது கரெக்ட் தான் மாப்பிள்ளை ஆனா உங்க அம்மா உன் மேல நம்பிக்கை வச்சிருக்காங்க தான அவங்களுக்காக நீ வீட்டுக்கு போலாம் தானே இல்ல போன் பண்ணி பேசலாம்ல ” என்றார் சுரேஷ்
“ எப்படி மாமா பேச சொல்றீங்க என்ன புள்ள வளர்த்து வச்சிருக்கனு அம்மா தானே எல்லாரும் பேசுறாங்க. யார் என்ன சொன்னாலும் என் அம்மா என் புள்ள இத பண்ணி இருக்க மாட்டானு நின்னாங்கள அந்த நம்பிக்கையை நான் காப்பாத்த வேண்டாமா அந்த நம்பிக்கை காப்பாத்துற ஆதாரத்தோடு தான் நான் வீட்டுக்கு போவேன். இப்ப அம்மா கூட பேசினா அழுது அடம் பிடிச்சி ஏதாவது பண்ணி என்னை வீட்டுக்கு வர வச்சிருக்காங்க அதான் நான் பேசாம இருக்கேன்” என்றான் வலியுடன் கவின்.
“ சரிடா எல்லாத்தையும் நாம சேர்ந்து சரி பண்ணலாம். சரி நெக்ஸ்ட் எங்க போகனும்” என்றான் சதீஷ்.
“ முதல்ல அந்த தாமஸ் எங்க இருக்கான்னு பாக்கணும் நெஸ்ட் இந்த நம்பரை வச்சு அவ யாருன்னு கண்டுபிடிக்கணும்” என்றான் முகம் சிவந்து கோபத்துடன் கவின்
@@@@@@@@@@@@@@
“ அண்ணா,அண்ணி, சிவகாமி எல்லாரும் எங்க இருக்கீங்க” என்று வந்தார் மயில்வாகனார் தங்கையும் சிவகாமியின் அன்னையுமான பார்வதி அம்மாள்
“ வா பார்வதி எப்போ வந்த வெளிநாட்டு பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு நீ எப்படி இருக்க” என்று வந்தார் வள்ளியம்மை
“ இப்பதான் ரெண்டு நாளும் முன்னாடி வெளிநாட்டிலிருந்து வந்தேன் அண்ணி என்ன நாடோ எப்படித்தான் அங்க மனுசங்க இருக்காங்களோ” என்று அலுத்துக் கொண்டார்
“ ஏன் பார்வதி இப்படி சொல்ற அவனவன் வெளிநாட்டு போக ஆளா பறக்குறாங்க நீ என்ன இப்படி சொல்ற”
“ அட போங்க அண்ணி ஃப்ரீயா நடமாட முடியல வெளியில வந்து உட்கார்ந்து பக்கத்துல உள்ளவங்க கிட்ட பேச முடியல அது கூட விடுங்க தமிழ்லே காதுல கேட்கல அவன் என்ன சொல்றான்னு எனக்கு புரியல நான் என்ன சொல்றேன்னு அவனுக்கு புரியல எப்படியோ ஆறு மாசம் ஜெயிலில் இருந்த மாதிரி ஓட்டிட்டு வந்தாச்சு இனி வெளிநாடு போறதா இருந்தா இந்த மாறன் பையன கல்யாணம் முடிச்சு அவன் பொண்டாட்டியோட போக சொல்லனும் நம்மளால எல்லாம் முடியாதுபா. ஆமா அண்ணா சிவகாமி எல்லாம் எங்கே வீட்டில் ஒருத்தரையும் காணோம்” என்றார் பார்வதி அம்மாள்
“ உங்க அண்ணன் இப்ப முன்ன மாதிரி இல்லை நடந்து முடிந்த பிரச்சனைல ரொம்ப சோர்ந்து போய்ட்டாங்க நைட்ல தூக்கமே இல்ல அவருக்கு அதான் இப்போ சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்குறேன்னு உள்ள போனாங்க” என்றவர் அடுத்து சொல்லும் அங்கே வந்த சிவகாமி தனது அம்மாவை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வந்தாள்.
“ அம்மா” என்று அவரை கட்டிக்கொண்டு, “ மாறன்,அப்பா எங்க ம்மா” என்றாள் சிவகாமி.
“ மாறன் வெளியில கார் நிப்பாட்டிட்டு வருவான். உங்க அப்பாக்கு ஏதோ போன் வந்துச்சுன்னு வெளிய பேசிட்டு இருக்காரு . ஆமா நீ எப்படி இருக்க தங்கம்” என்றவருக்கு பதில் சொல்லாமல் அவரை கட்டிக்கொண்டு அழ தொடங்கி விட்டாள்.
“ என் தங்கமே அழாதடா அதான் அம்மா வந்துட்டேன் இல்ல இனி எல்லாம் பிரச்சனையும் சரி பண்ணிடலாம் நீ அழாதே” என அவள் கண்ணீரை துடைத்து அவளை அனைத்து கொண்டு முதுகில் தட்டி
கொடுத்தார் பார்வதிஅம்மாள்.
“ என்ன சிவகாமி இது சின்ன புள்ள மாதிரி அழுதுட்டு இருக்க இப்பதான் அவ வந்து இருக்கா அவளுக்கு காப்பி தண்ணி கொண்டு வா போ” என அதட்டினார் வள்ளியம்மை
உடனே தன் கண்ணீரை துடித்துக் கொண்டு, “ சாரி அத்தை மறந்துட்டேன். அம்மா நீ இரு நான் இப்ப காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சமையலறையை நோக்கி சென்றாள்.
போகும் அவளைப் பார்த்துக் கொண்டு வலியுடன் “ என்ன அண்ணி இது எல்லாம் நல்ல விசாரிக்காம ஏன் அவங்கள வர சொன்னீங்க”
“ நான் என்ன பண்ண பார்வதி எல்லாம் உன் பேத்தி தான். லவ் பண்றேன்னு சொன்னா உடனே உங்க அண்ணன் அந்த பையனை பற்றி விசாரிச்சு அவங்கள வர சொன்னாங்க. அங்க சென்னையில இவ ஆசைப்பட்டான்னு இந்த பெரிய வீட்டை விட்டுட்டு அவ சம்பளத்துல நாங்க எல்லாம் ஒரு சின்ன வீட்ல குடி இருந்தோம். அந்தப் பையனோட அம்மா அந்த சின்ன வீட்ட பார்த்துட்டு இதுதான் நம்ம வீடு நெனச்சு அவங்க பெரிய ஆளு மாதிரி பேச தொடங்கிட்டாங்க. நான் அவங்கக்கிட்ட நம்ம வீட்டு பத்தியும் சொத்து பத்தியும் பேச வந்தா அவங்க என்ன மட்டும் பார்த்தா போதும். என் சொத்தை பாக்க கூடாதுன்னு உன் பேத்தியும் அண்ணனும் சேர்ந்து என்னை வாய மூட வச்சிட்டு அந்த அம்மாவை பேசிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைமைக்கு கொண்டு வர வச்சிட்டாங்க” என்றார் அன்றைய நிலமையில் எதுவும் செய்ய முடியாத கடுப்புடன் வள்ளியம்மை.
“ சரி விடுங்க அண்ணி எல்லாத்தையும் சரி பண்ணலாம் ஆமா அண்ணே இன்னுமா தூங்குது”
“ இன்னும் கொஞ்ச நேரத்துல முடிச்சிடுவாங்க இரு நான் வேணும்னா போய் எழுப்பிட்டு வரேன்” என்று எழுந்தவரை மீண்டும் அமர செய்துவிட்டு
“ நீங்க இருங்க அண்ணி அண்ண எழுந்து வர்ற நேரத்துக்கு வரட்டும்” என்றார் பார்வதி அம்மாள்.
“ அதுவும் சரிதான்” என்றவர் “ இன்னுமா இவ காப்பி போடுறா சிவகாமி என்ன பண்ணிட்டு இருக்க சீக்கிரம் வா” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்தார்.
“ இதோ வந்துட்டேன் அத்தை தம்பிக்கு காபி பிடிக்காது இல்ல அதான் டீ போட்டு எடுத்துட்டு வந்தேன்” என்றவள் தன் அன்னையைப் பார்த்து “அம்மா தம்பி இன்னுமா வரல நான் போய் வெளியே பாத்துட்டு வரேன்” என்று வாசலை நோக்கி அடி எடுத்து வைக்க “அக்கா” என்ற சத்தத்தில் அப்படியே நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே நின்றவர்களை பார்த்து “ டேய் மாறா,அப்பா என சந்தோஷமாக அவர்களை நோக்கி அடி எடுத்து வைத்தவள் அவர்களோடு நின்றவளை பார்த்து கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டு தனது அறையை நோக்கி சென்றாள் சிவகாமி.
error: Content is protected !!