Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 18

அத்தியாயம்-18

அவன் பாத்திரம் கழுவுவதை எட்டிப் பார்த்தவள் “உங்களுக்கு இதெல்லாம் கூட செய்ய தெரியுமா” என்று ஆச்சரியமாக வினவியவளிடம்,

“ம்ம்ம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும், படிக்கும் போது நானும் வினோத்தும் தான் ஒரே ரூம்ல இருந்தோம், அப்போ வினோத் சமைப்பான் நான் எதாவது சின்ன சின்ன வேலைகளை செய்வேன்” என்றவன், வேறு பாலை எடுத்து ஊற்றி அடுப்பை பற்ற வைத்தான்.



Advertisement

அடுப்பில் வைத்தவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு நேத்ரா புறம் திரும்பி, “ஹனி… ஒன்னு மட்டும் நீ நல்லா புரிஞ்சுக்கோ, இனிமே இது தான் நம்மளோட வீடு, நமக்கு புடிச்ச மாதிரி நாம நம்மளோட லைப்அ வாழப்போற இடம்,

Advertisement

நம்ம ரெண்டு பேருக்குள்ள யாரு வந்தாலும் என்னால அஃசெப்ட் பண்ணிக்க முடியாது. இன்க்ளுடிங் மை மாம் அண்ட் டாட், அண்ட் யூவர்ஸ், அதுக்காக அவங்க யாரும் இங்க வரக்கூடாதுன்னு அர்த்தம் இல்ல நாம போகக் கூடாதுன்னும் இல்ல, எவ்ரிதிங் ஹாஸ் அ லிமிட்.

Advertisement

 நான் எந்த ஒரு டெஸிஸ்ஸன் எடுத்தாலும் உன்னை கேக்காம பண்ணமாட்டேன், அதே மாதிரி தான்… நானும் உன் கிட்ட இருந்து எதிர் பாக்குறேன், எனக்கு நீ முழுசா வேணும். நம்மளோட லைப்அ நாம சந்தோஷமா வாழறதுக்கோ இல்லை கஷ்ட்டப்பட்டு வாழறதுக்கோ நாம எடுக்குற முடிவுகள் தான் காரணம்” என்றான் அவள் முகத்தைக் கூர்மையாக நோக்கி.

Advertisement

திரு திருவென விழித்தவளைக் கண்டு சிரித்தவன் “ஹே ஏன் முழிக்கிற, டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று வினவியவனிடம் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் நேத்ரா.

“வீட்டு வேலைக்கு வேணா ஆள் வச்சுக்கலாம், அதுவும் நமக்கு பிரைவசியா இருக்காது, ஏன்னா நாம வொர்க் முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம் தான் அவங்கள உள்ள விட முடியும், பட் இட்ஸ் ஓகே” என்றவன்,

காஃபியை கலக்கி அவளுக்கு ஒரு கப்பைக் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்புடன் அவள் தோள் மேல் கைபோட்டு கூட்டிச் சென்றவன் அங்கிருந்த சோபாவில் நேத்ராவுடன் அமர்ந்தான்.

“அப்புறம் உனக்கு ஜாப கன்டிநியூ பண்ற ஐடியா இருக்கா? என்றவன் இட்ஸ் யுவர் சாய்ஸ் புடிச்சா கன்டிநியூ பண்ணு, இல்லான்னா நோ ஒர்ரீஸ், எனக்கும் சீக்கிரமாவே ஆன்சைட் வந்திரும்,

சோ ரெண்டு பேரும் ஷ்…ஷ்…” என்றவன் கையை விமானத்தில் செல்வது போல் வைத்துக்காட்டவும்,

“இல்லை இல்ல அம்மா கண்டிப்பா ஜாப விடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க” என்றாள் பட்டென்று,

“வாட்…? என்றவன் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு ஹனி இப்போ தான் நான் சொன்னேன் நம்ம ரெண்டு பேருக்குள்ள யாரும் வரக்கூடாதுன்னு” என்றவன்,

நேத்ரா தலையைக் கவிழ்ந்து கொள்ளவும் “ஹனி இங்க பாரு நான் சொல்றத கொஞ்சம் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கோ, எப்பவுமே நமக்கு எது சரின்னு படுதோ அதை நாம தான் டிசைடு பண்ணனும், இதுல உங்க அம்மா வந்தாலும் பிரச்சனை தான் எங்க அம்மா வந்தாலும் பிரச்சனை தான்” என்றவனிடம்,

“இல்ல எனக்கு ஜாப் போயே ஆகணும், நான் இப்போ இந்த கம்பெனில நியூ ப்ராஜெக்ட் ஜாயின் பண்ணப் போறேன், சாலரியும் அதிகமா கொடுப்பாங்க, அதை எதுக்கு விடணும், எனக்கும் வீட்ல இருந்தா போர் அடிக்கும்” என்றாள் அவள் பங்கு விளக்கமாக.

“சரி ஓகே, நான் அம்மா கிட்ட சொல்லி வேலைக்கு ஒரு லேடியை அனுப்ப சொல்றேன், உனக்கு கொஞ்சம் ஹெல்ப்புள்ளா இருக்கும்” என்றவன் வீட்டிற்கு அழைத்துப் பேசினான்.

நளனும் நேத்ராவும் அவர்கள் வாழ்க்கையை இந்த அப்பார்ட்மெண்ட்டில் ஆரம்பித்து ஒரு மாதம் கடந்திருந்தது.

நளன் காலையில் வேலைக்குச் செல்லும் போதே நேத்ராவையும் உடன் அழைத்துச்சென்று விடுவான். வரும்போது மட்டும் ஆபீஸ் கேப்பில் வருவாள். வேலையாள் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, காலை உணவாக பிரட், பழங்கள், பால் என்று உண்டவர்கள் மதிய உணவை ஆபீஸ் கேன்டீனில் கழிப்பார்கள். இரவு ஆன்லைனில் என்று ஆகிப்போனது.

வீட்டிற்கு வந்தவுடன் ஹனி… என்று அழைத்துக்கொண்டு சோபாவில் அமர்பவன், அவள் வந்தவுடன் அவள் மடியில் தலைவைத்து அவள் கைகளை எடுத்து அவன் தலைமுடியைக் கோதச் சொல்லி விட்டு கண்களை மூடிக்கொள்வான்.

சற்று நேரத்தில் கண் விழிப்பவன் “ஹப்பா எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் உன்னோட மடியில படுத்து உன்னோட விரல்கள் என்னோட தலையை கோதும் போது எல்லா டென்ஷனும் பறந்து போயிடுது” என்பவன் மெல்லிய இதழ் ஓற்றலை பரிசாக வழங்கி விட்டு அதன் பின்பு தான் குளிக்கச் செல்வான்.

இரவில் ஒருவருக்கு மற்றொருவர் போர்வையாக மாறிப்போக, விடுமுறை நாட்களில் நேத்ராவை விட்டு துளியும் பிரியமாட்டான். சில விடுமுறை நாட்களில் இருவரும் சேர்ந்தே உணவு சமைப்பார்கள், அந்த சமையலில் அவர்களின் கொஞ்சல், சீண்டல், சிணுங்கல், மற்றும் காதல் அதிகமாகவும் உப்பு மற்றும் காரம் போன்ற மற்றவை கூடுதல் குறைவாகவும் இருக்கும். நேத்ராவும் நளனுடன் இருக்கும் வேளைகளில் தன்னை மறப்பாள்.

இரவில் கண் மூடும்போது கட்டிலின் எதிரில் மாட்டியிருக்கும் அவர்களது புகைப்படத்தைப் பார்த்து கண் மூடுபவன், காலை எழும் போது அதில் தான் கண் விழிப்பான், ஹனி… என்னும் குரலுடன்.

அவ்வப்போது நேத்ராவின் தாய், தந்தை மற்றும் நந்தன் வந்து போவதும், நளன் நேத்ராவை நந்தினி மற்றும் கார்திகேயனிடம் அழைத்துச் செல்வதுமாக நாட்கள் சந்தோசமாய் கழிந்தது.

ஒருநாள் ஞாயிறன்று காலை, நேரம் சென்று கண் விழித்தவன், ஹனி… என்ற அழைப்புடன் கைகள் அருகில் இருக்கும் தன்னவளைத் தேட, கண்களோ அவர்களது புகைப்படத்தைத் தழுவியது.

 சுவற்றில் மாட்டி இருக்கும் போட்டோவை பார்த்தவன், அது அங்கு இல்லாமல் போகவும் உச்சுக்கொட்டி முகத்தைக் கோபமாக மாற்றியவன், அவனது போனில் டைம் பார்க்க அது பத்து என்று காட்டியது. எழுந்து வெளியே லிவிங் ரூமுக்கு வந்தான்.

அங்கே லிவிங் ரூமில் சோஃபாவுக்கு மேலே உள்ள சுவற்றில் அந்தப் படம் மாட்டப்பட்டிருக்க, சுற்றிலும் கண்களால் நேத்ராவைத் தேடினான். கிச்சன், ஹால், பால்கனி என்று அவர்கள் வைத்திருந்த பொருட்களின் இடங்கள் மாற்றப்பட்டிருக்க, அவள் அங்கு இல்லாமல் இருக்கவும் போனை எடுத்து அவளுக்கு கால் செய்தான்.

போனை எடுத்தவள் “அம்மு எழுந்துட்டீங்களா, அம்மா, அப்பா வந்தாங்க அதான் கீழ பார்க்ல இருக்கோம், இதோ வரோம்” என்றவளிடம் பதில் ஏதும் கூறாமல் ம்ம்…. என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

Link👉குட்டி கவிதை

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,👇👇

Please Subscribe & Support🙏🙏🙏

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!