Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 23

அத்தியாயம்-23

முந்தைய நாளே அதாவது நேற்று, சந்தோஷமான விஷயத்துடன் வீட்டிற்க்கு வந்த நளன், நேத்ரா உறங்கியிருக்கவும் அவளிடம் எதுவும் கூறாமல், அவனும் உறங்கிவிட்டான்.

 

அந்த சந்தோஷமான விஷயம் என்னவென்றால் “நளனுக்கு கனடாவில் ஆன்சைட்க்கு ஆபர் வந்திருந்தது, இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பியாக வேண்டும், நேத்ராவுக்கும் விசா ஏற்பாடு செய்வதாக அவர்கள் நிறுவனத்தில் கூறியிருந்தனர்”



Advertisement

 

அந்த மகிழ்ச்சியைத் தன் மனையாளுடன் பகிர்ந்து கொள்ள வந்தவன், நேத்ராவின் தலைவலி மற்றும் தீரா உறக்கம் காரணமாக அவன் ஆன்சைட் பற்றி எதுவும் கூறவில்லை.

 

Advertisement

அடுத்த நாள் அதாவது இன்று, காலை வேலைக்குச் சென்றவன் அவனுக்கு விசாவுக்கு ஹெல்த் செக் அப் செய்வதற்காக நேத்ரா சென்ற அதே மருத்துவமனைக்கு சென்றிருந்தான்.

Advertisement

 

அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்த டாக்டரின் அறையின் வெளியே காத்திருந்தவனை, “ஹாய் நளன் எப்படி இருக்க? உன்னோட கல்யாணத் தன்னைக்கு பாத்தது” என்று ஆர்பாட்டமாக வினவினாள் உமா, நளனின் பள்ளிப் பருவத் தோழி.

 

Advertisement

“ஹாய் உமா, ஐ ஆம் பைன், நீ எப்படி இருக்க? ஹொவ் இஸ் யுவர் ஹஸ்பண்ட்?” என்றான் நளனும் புன்னகையுடன்.

 

“ம்ம் எல்லாரும் நல்லா இருக்கோம், என்ன புருஷனும் பொண்டாட்டியும் மாறி மாறி ஹாஸ்பிடல் வந்து போறீங்க, எனி குட் நியூஸ்?” என்றாள் உமா.

 

“வாட் டூ யூ மீன்?” என்று புருவத்தை சுருக்கி யோசனையாக வினவியவனிடம்,

 

“நேத்து தான் உன்னோட ஒய்ப் அ இங்க பாத்தேன், கூட யாரோ ஒரு லேடி… அவங்க அம்மா மாதிரி இருந்தது, பேசலான்னு பாத்தேன் அதுக்குள்ளே போயிட்டாங்க, உனக்கு தெரியாதா?” என்ற உமாவிடம்,

 

தலையை குனிந்து புருவத்தை நீவி சமாளித்தவன் “ம்ம் எஸ் ஐ நோ” என்றான், அதற்குள் அவனது அப்பாயின்மெண்ட் நேரம் வரவும் டாக்டர் அறையினுள் சென்றான், உமாவிடம் விடைபெற்று சரியான விளக்கம் எதுவும் கூறாமல்.

 

டாக்டரின் செக்கப்பின் போது நாளனது எண்ணம் முழுவதிலும் நேத்ரா மட்டுமே, “ஏன் ஹாஸ்பிடல் வந்தா? ஏன் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை?” என்று மனதினுள் ஆயிரம் கேள்விகளை தனக்குள் கேட்டவன் செக்கப்பை முடித்து சர்டிபிகேட் வாங்கிவிட்டு வெளியே வந்தான்.

 

வெளியே அவனின் கார் அருகே வந்தவன், அவன் அலைபேசியை எடுத்து நேத்ராவுக்கு அழைத்தான்.   

 

இரண்டு மூன்று முழு அழைப்புகள் சென்று அழைப்பு நிற்கப்படவும், காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தவன், ஸ்டேரிங் வீலை சுழற்றிக் கொண்டே,

 

 “நாம காலையில வரும்போது தூங்கீட்டு இருந்தா, இப்போ டைம் டுவெல் ஓ கிளாக், இவ்வளவு நேரமா தூங்குறா, ஒன் வீக்கா டயர்டா வேற இருந்தா, ஒரு வேளை உமா சொல்ற மாதிரி… இருக்குமோ! ஹனி…ஆர் யூ ஹவிங் அவர் பேபி? அப்படின்னாலும் என்னோட ஹனி என் கிட்ட தானே முதல்ல சொல்லுவா?” என்றவனின் உதடுகள் தந்தைக்குரிய கர்வத்துடன் புன்னகையில் மிளிர, காரை அவன் அப்பார்ட்மெண்ட் நோக்கித் திருப்பினான் குழப்பமாக.

 

பாவம் நளனுக்குத் தெரியவில்லை அவனுக்குக் கிடைக்கப் போவது அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் மட்டுமே என்பது.

 

காரை அப்பார்மெண்ட் பார்க்கிங்கில் நிறுத்தியவன், புன்னகை முகத்துடனும் சந்தோஷமான மனதுடனும் அவன் வீட்டின் வாயிலை அடைந்தான். வீட்டின் கதவு அடைத்திருக்கவும் மீண்டும் நேத்ராவுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

 

இப்போதும் அழைப்பு சென்று கொண்டே இருக்கவும், அவன் வைத்திருந்த அவனது வீட்டின் மற்றொரு சாவியை எடுத்து வீட்டின் கதவைத் திறந்தான்.

 

வீட்டைச் சுற்றிக் கண்களைச் சுழல விட்டவன், மீண்டும் அவன் அலைபேசியை எடுத்து நேத்ராவுக்கு கால் செய்தான், இப்போது அழைப்பு அவனுக்கு அருகில் கேட்கவும் நேத்ராவின் போனைத் தேடியவன் கைகளில் அகப்பட்டது அவளது கைபேசி.

 

“ச்ச போன இங்க வச்சுட்டு எங்க போனா?” என்றவன் சலிப்புடன் “இப்போ என்ன செய்யிறது” என்று யோசித்துக் கொண்டிருந்தவன் எழுந்து கிச்சன் வந்து பிரிஜ்ஜில் தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்டிருந்த வேளை,

 

கரு கலைப்பிற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் வெற்றுக் கவர், அங்கே அடுப்பு மேடையில் வீற்றிருந்தது. 

 

அதைக் கையில் எடுத்தவன் மாத்திரையின் பெயரை படித்து கூகுளில் டைப் செய்தான். அங்கே மாத்திரை எதற்கு எடுத்துக்கொள்வது என்ற முழு விளக்கமும் தரப்பட்டிருக்கவும், கைபேசியை பிடித்துக் கொண்டிருந்த அவனது கைகள் தானாக நடுங்கியது, நளனின் மனதைப் போல்.

 

“நோ அப்படியெல்லாம் இருக்காது, என்னோட ஹனி அப்படி பண்ணியிருக்க மாட்டா? அப்புறம் எதுக்கு இந்த டேப்லெட் இங்க வந்தது” என்று குழம்பியவன்,

 

அவர்கள் படுக்கை அறையினுள் சென்று எதாவது கிடைக்கிறதா என்று ஆராய்ந்தான்.

 

கட்டில் மெத்தை அடியில் தேடியவன், பின்பு நேத்ராவின் கப்போடைத் திறந்தான். அவள் உடைகளை களைத்து தேடியவன் கண்களில் பட்டது, ஹாஸ்பிடல் ரிப்போர்ட் கவர்.

 

கண்கள் கலங்க, கைகள் நடுங்க அதைக் கைகளில் எடுத்தவன், அப்படியே பின்னே அடியெடுத்து வைத்து அவன் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான். 

 

அந்த ரிப்போர்ட்டில் நேத்ராவின் கர்பம் ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க, ஒரு நொடி சந்தோசம் கொண்டவன்,

 

அடுத்த நொடி “ஏன் ஹனி என் கிட்ட சொல்லலை? ஏன் என் கிட்ட இருந்து மறைச்சா? அதுவுமில்லாம எதுக்கு இந்த டேப்லெட் இங்க இருக்கு?” என்று படுக்கையறையில் மாட்டியிருந்த அவர்கள் புகைப்படத்தில் இருந்த நேத்ராவைப் பார்த்துப் பேசினான்.

 

 யோசிக்க யோசிக்க தலையே வெடித்துவிடும் போல் இருந்தவனுக்கு ஒரே தீர்வு அந்த ரிப்போர்ட்டில் இருந்த ஆஸ்பத்திரி பெயரும் அவளுக்கு செக் அப் செய்த டாக்டரின் பெயரும் மட்டும் தான்.

 

ரிப்போட்டைக் கையில் எடுத்தவன் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு வேகமாக காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்தான்.

 

ஆஸ்பத்திரியில் டாக்டர் சாவித்ரி கைனகாலஜிஸ்ட், என்ற பெயர் பலகையைத் தாங்கிய ரூமுக்குள் நுழைந்தவனை வரவேற்ற டாக்டரிடம்,

 

முயன்று தன் குரலை மீட்டவன் “டாக்டர் என்னோட பேர் நளன், ஐ நீட் ஒன் இன்பர்மேஷன்” என்று ரிப்போர்டைக் டாக்டரின் கைகளில் கொடுத்தான்.

 

அதை வாங்கிப் பார்த்த டாக்டர் “ஓகே இந்த பொண்ண பத்தி நீங்க எதுக்கு கேக்குறீங்க? பேஷன்ட் டீடெயில்ஸ், அவங்க எதுக்கு வந்தாங்க, ஏன் வந்தாங்க அப்டிங்கிறதெல்லாம் கான்பிடென்சியல், யாருகிட்டயும் சொல்ல முடியாது” என்றவர்,  

 

கோபம், ஆற்றாமை, ஏமாற்றம் போன்ற அணைத்து உணர்வுகளையும் முகத்தில் தேக்கி வைத்திருந்த நளனின் வாடிய முகத்தைக் கண்டவர் “சரி நீங்க அவங்களுக்கு என்ன வேணும்” என்றார்.   

 

“ஐ ஆம் ஹேர் ஹஸ்பண்ட்…” என்றான் முகத்தை கடினமாக வைத்துக்கொண்டு,

 

“வாட்? அவங்க ஹஸ்பண்ட் பாரின்ல இருக்கிறதா தானே அந்த பொண்ணோட அம்மா சொன்னாங்க” என்றவர்,

 

நளனின் புரியாத பாவனையில் “நான் முடியாதுன்னு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த பொண்ணுக்கு டிஅன்சி பண்ண சொல்லிக் கேட்டாங்க, இன்னைக்கு காலையில தான் செஞ்சோம்” எனவும்,

 

புருவங்களை சுருக்கி “யூ மீன்….?” என்றவன் கேள்வியாக நிறுத்தவும்,

 

“எஸ், கருக்கலைப்பு செஞ்சாச்சு” என்றார் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.

 

டாக்டர் கூறியதை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தவன் சிறிய யோசனையின் பின் “டாக்டர் இதுக்கு நேத்ரா ஒத்துக்கிட்டாங்களா?” என்றான் கண்களில் மின்னும் கடைசித் துளி நம்பிக்கையுடன்,

 

“எஸ் மிஸ்டர் நளன், பேஷண்ட்டோட ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி முடியும், என்றவர் நளனின் முகத்தைக் கண்டு, இட்ஸ் ஓகே உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலை, நடந்தது நடந்து போச்சு, எதுவா இருந்தாலும் கொஞ்சம் பாத்து ஹண்ட்ல் பண்ணுங்க, உங்களுக்கு இன்னும் வயசிருக்கு என்றவர் சற்று நிறுத்தி வேற எதாவது கேட்கணுமா?” என்றுவிட்டு நளன் குனிந்த தலையுடன் இல்லை என்றதும் அடுத்த பேஷண்ட்டை பார்க்கச் சென்றுவிட,

 

தன் உயிரைத் தன்னிடமிருந்து உருவி எடுத்தது போன்ற வலியை உணர்ந்தவன், கண்கள் எதையோ வெறிக்க, நடைபிணமாக அவன் காரில் ஏறி அவன் அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தான்.

 

நளன் இழந்தது அவன் குழந்தையை மட்டுமல்ல, அவன் நேத்ராவின் மேல் வைத்திருக்கும் காதலை, அவள் மேல் கொண்ட நம்பிக்கையை…

 

“தான் உயிராய்க் காதலித்த

 

பெண்ணொருத்தி,

 

அவளைத் தன் மனதின் சிம்மாசனத்தில்

 

ஏற்றி வைத்துக் கொண்டாடும் மணாளன்,

 

கணவன் என்ற பெயரில் தனக்குக் கிடைத்த

 

அந்த விலையுயர்ந்த பொக்கிஷத்தைக்,

 

காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத

 

பேதையவள் நேத்ரா…

 

என் உயிர்நீரில் உதித்த உதிரத்தை

 

என் அனுமதியின்றி துடைத்தெறியும்

 

உத்தரவை உனக்கு யார் பிறப்பித்தது?

 

அளவில்லாக் காதலை உன்மேல்

 

சுமற்றினேன், அதன் பாரம் தாங்காமல் தான்

 

இறக்கி வைத்து விட்டாயா?

 

இப்போது என் மூளைக்கு

 

நான் என்ன கட்டளை பிறப்பிப்பது?

 

உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளச் சொல்லவா?

 

அல்லது

 

என் காதலை… என்னை… ஏமாற்றிய உன்னை விட்டு

 

வெகு தூரம் செல்லச் சொல்லவா?

 

நளன் எனும் நற்பெயர் கொண்ட நான் என்செய்வேன்?”

Link👉குட்டி கவிதை (யார் நல்ல கணவன்? மனைவி?)

 

Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)

 

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇
Please Subscribe & Support🙏

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!