Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கனவும், நினைவும் உனையே

Kanavum Nanavum Unaiyae 4 2

  “ஏன்” என்றாள்.

      “இல்ல, ஜஸ்ட் இந்த சைட் அடிக்கிறது, அந்த மாதிரி இதெல்லாம் தோணலையா”,என்றாள்.

     “எனக்கு தான் ஏதோ ஹார்மோன் டிபெக்ட் ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னவளுக்கு கண்ணுக்குள் வந்து சென்ற முகம் தான், ‘ஹார்மோன் டிபெக்ட் எல்லாம் ஒன்னும் இல்ல’ என்று மனதிற்குள் சொல்லி வைத்தது.,

   இவளும் தோழியிடம் சிரித்தபடி அவளை பார்த்து,  “எனக்கும் சீக்கிரமே தோணும்டி, தோணும் போது சொல்றேன்”, என்று சொன்னாள்.



Advertisement

    “இல்லையே பாத்தா அப்படி தெரியலையே, இப்ப கண்ணுல ஒரு ஸ்பார்க் வந்துட்டு போச்சே, ஜஸ்ட் பிபோர் யாரை நினைச்ச சொல்லு சொல்லு”, என்று கேட்டாள்.

      “அதெல்லாம் இல்லையே, ஒருத்தரையும் நினைக்கலையே”, என்று சிரித்தபடி சொன்னவளிடம்,

    “ஏய், நீ மறைக்கிற டி கள்ளி”, என்று சொன்னவள், “வீட்டில் நான் கேட்கட்டுமா”, என்றாள்.

Advertisement

       “அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஒரு சின்ன ஸ்பார்க் ஒருத்தரை பார்த்து தோனி இருக்கு., ஆனா அது  தானா அதுன்னு தெரியல”, என்று சொல்லவும்,

Advertisement

   “எது,  எது தானா”, என்று கேட்டாள்.

    “சும்மா இரு, நீ வேற”, என்று யோசனையோடு பார்த்தவளை அவள் தோழி தான்.,

       “அம்மாடி, நீ டாக்டராடி ச்சு போ, ஆனா இப்ப தான் டீன் ஏஜ் பொண்ணு மாதிரி யோசிக்கிற., முகம் பளபளக்குது”, என்று சொல்லவும்.,

Advertisement

        “அதெல்லாம் ஒன்னும் இல்ல”, என்று சொன்னவள்.
“கூடிய சீக்கிரம் சொல்றேன், அப்படி ஒரு வேலை எனக்கு பிடிச்சிருந்துச்சுன்னா., நான் சொல்றேன்”, என்று சொன்னாள்.

   அவளும் சிரித்துக் கொண்டே, “ஒருவேளை நீ போய் ப்ரொபோஸ் பண்ண போறியா”, என்று கேட்டாள்.

    “மேபி நான் தான் ப்ரொபோஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன், ஏன்னா அந்த பக்கம் எந்த ரியாக்ஷனும் இருந்த மாதிரி தெரியல”, என்றாள்.

    “ஹேய், அப்போ நீ பாத்துட்ட”, என்று சொல்லவும்.,

    “பார்த்தேன் அவங்களுக்கு பிடிக்குமா ன்னு தெரியலை, இன்னும் ரெண்டு தடவை அவங்களை நான் பார்த்து, அதுக்கப்புறம் எனக்கு மனசுக்குள்ள அந்த எண்ணம் இருந்துச்சுன்னா., நானே போய் சொல்றேன் ஓகே வா”, என்றாள்.,

    “ஏய் அப்ப ட்ரீட் வைப்ப இல்ல”, என்றாள்.

     “வைக்கலாம் வைக்கலாம், முதல்ல அந்த பக்கத்தில் இருந்து பதில் வரட்டும்”, என்று சொன்னாள்.

    “அது சரி உங்க வீட்ல ஒத்துப்பாங்களா”, என்று கேட்கவும்,

    “முதல்ல அந்த மனுஷன் ஒத்துக்கொள்கிறாரா ன்னு பார்ப்போம்”,என்றாள்.

     “ஒரு வேளை ஒத்துக்கலைன்னா” என்று தோழி கேள்வியாக கேட்கவும்,

    இவள் சற்று அதிர்வோடு அவளை பார்த்தாலும், “பசங்க மட்டும் தான் விரட்டி விரட்டி லவ் பண்ணனுமா என்ன?, பொண்ணுங்க விரட்டி விரட்டி லவ் பண்ணா தப்பா என்ன?, என்றாள்.

  “அடிப்பாவி” என்ற தோழியிடம்,

   “பண்ணலாம் பண்ணலாம், தப்பு இல்ல” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.

    “பார்ப்போம், என்னோட லவ்வ நான் சொல்ல போறேன்., மே பி எனக்கு அந்த பீல் அப்படியே இருந்துச்சுன்னா., ஜஸ்ட்  பார்த்த உடனே ஒரு சின்ன ஜாலிக்கு அப்படின்னு தோணுச்சுன்னா விட்டுடுவேன்., மைண்ட் வந்து இல்லவே இல்ல அவர்தான் அப்படின்னு தோணுச்சுன்னா.,  கண்டிப்பா நானே சொல்லிடுவேன்., அதுக்கப்புறம் அவரு விரும்புகிறாரா, இல்லையா என்பதை அவர் பேச்சிலேயே கண்டுபிடிக்க முடியும்., சப்போஸ் நான் மறுபடி மறுபடி சொல்லியும் அவங்க ஏத்துக்கலைன்னா., நான் ஒதுங்கி தான் வரணும்”, என்று சொல்லிக் கொண்டவள்., “பார்ப்போமே”, என்றாள்.

     “ஏய் வீட்டுக்கு தெரியுமா”, என்று தோழி கேட்க.,

    “இன்னும் நானே கன்ஃபார்ம் பண்ணலை, அப்புறம் எங்க வீட்டுக்கு சொல்ல., வீட்டுக்கு மெதுவா சொல்லுவோம்., எல்லாம் கன்ஃபார்ம் ஆனதுக்கு அப்புறம் தான், அங்கே ஓகே சொன்னதுக்கு அப்புறம் பார்ப்போம்”, என்று சொன்னவள்.

     “இப்போதைக்கு வீட்டில் நான் எதுவும் சொல்ல மாட்டேன், ஏன்னா எனக்கு ட்ரெய்னிங் முடியனும், அம்மா அப்பாவும் உடனே கல்யாணம் பண்ணும்ப்பாங்க, அதெல்லாம் செட் ஆகாது, கொஞ்ச நாள் லவ் பண்ணனும், லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ்வா இருக்கணும்., அப்படி ஒரு லவ் பண்ணதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணனும்”,என்றாள்.

“ஏண்டி கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணா ஆகாதா”, என்று கேட்கவும்,

    “அது அவரோட மைண்ட் பொறுத்து, அவங்க பேமிலி சிட்டுவேஷன் பொருத்து, லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணனுமா, கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணனுமாங்குறத யோசிக்கணும்”, என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்தவளை.,

    கன்னம் பிடித்து கிள்ளிய தோழி., “ஐயோ உன் முகம் எவ்வளவு க்யூட்டா இருக்கு தெரியுமா., இப்போ அப்படி உன்  கன்னம்  செவக்குதுடி”, என்று சொல்லவும்.,

      “அடியே இது அநியாயம் தெரியுமா, நான் முகம் சிவக்கிற அளவுக்கு எல்லாம்  இல்ல”, என்று சொல்லவும்,

     “நான் வேணா போட்டோ எடுக்கட்டா, நீ இப்ப எவ்வளவு ஷைனிங்கா இருக்க ன்னு தெரியுமா”, என்று சொல்ல,

     “நீ வேற இப்ப காலேஜ் இல்ல, எக்ஸாம் இல்ல, ஹாயா ஹாஸ்பிடல் வர்றோம், வீட்டுக்கு போய் சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், அதனால் தான் முகம் பளபளப்பா தெரியுது”, என்று செய்கையோடு சொல்லிக் காட்டியவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தோழியோ,

    “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ டி”, என்று சொன்னாள்.

    “ஓஹோ மேடம்க்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சின்னு என்னையும் கோர்த்து விட பாக்குற”,  என்று சொல்லி தோழியை கலாய்த்து கொண்டிருந்தாள்.

    வீட்டிற்கு சென்றவளோ, கல்யாண வேலைகளில் அவளும் அவளால் என்ன செய்ய முடியுமோ அந்த வேலைகளை செய்து கொடுத்தாள்.

உடை எடுக்கப் போக வேண்டும் என்று சொல்லும் போது, மனமும் அவனை எதிர்பார்க்கத்தான் செய்தது., ஆனால் ‘இங்குதான் உடை எடுப்பார்கள் என்பதால் பெண் வீட்டினர் எல்லோரும் வருவார்களா என்பது தெரியாது’ என்ற யோசனையோடு எப்போதும் அவர்கள் சேலை எடுக்கும் கடைக்கு செல்லலாமா?, இல்லை மதுரைக்கு சென்று எடுக்கலாமா, என்று பேசிக் கொண்டிருந்தனர்.

     ‘எங்க எடுத்தாலும் இந்த தடவை பின்னாடியே வால் புடிச்சிட்டு போயிரணும்’ என்று  முடிவு செய்து கொண்டாள்.

    அதன் பிறகு தன் தோழிகளுக்கும் பத்திரிக்கை வைத்தவள்,  “மா சீக்கிரம் டிரஸ் எடுக்கறத டிசைட் பண்ணுங்க., பிளவுஸ் தைக்க கொடுத்து வாங்குவதெல்லாம் ரொம்ப கஷ்டம்”, என்று சொல்ல,

    பாட்டி தான், “யாரு உனக்கு கஷ்டம், டெய்லரை மிரட்டி உருட்டி பிளவுஸ் வாங்கிட்டு வந்துற மாட்ட நீ”, என்றார்.

   “அதெல்லாம் வாங்கிக்கிடுவேன், ஆனா கொஞ்சம் கிராண்டா தைக்கணும் இல்ல., மாப்பிள்ளைக்கு தங்கச்சி மாதிரி இருக்கணும்ல., யாரோ மாதிரி இருக்க கூடாது இல்ல”, என்று சொன்னாள்.

    “அம்மாடி நீ தான் பேசுறியா, இதே நிச்சயதார்த்தம் அன்னைக்கு மட்டும் யாரோ மாதிரி போய் உட்கார்ந்து இருந்த”, என்று தாத்தா கேட்டார்.

   “அதெல்லாம் இல்ல தாத்தா, அது அவங்க வீட்டு பங்க்ஷன், நம்ம அதிகமா தலையிடக்கூடாது, அதனால தள்ளி இருந்தேன், இது  நம்ம வீட்டு பங்க்ஷன், அதனால நம்ம தான் நிக்கணும்., நம்ம தான் செய்யணும்”, என்று சொல்லவும்,

    “ஓஹோ இங்க உரிமைப் போராட்டமா”, என்று பாட்டி தாத்தாவும் ஆவலோடு பேசிக் கொண்டு.,

    “சரி சரி” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

    இவள் தான், “பாட்டி வடபழனி கோயிலில் அந்த பூஜை பண்ணுற அங்கிள் ட்ட சொல்லி வச்சிருக்கேன்,  அண்ணா கல்யாணத்து அன்னைக்கு காலைல வருவேன்,  மாலை கொண்டு வர்றேன் எனக்கு சாமி பாதத்தில் வைத்து எடுத்து தரணும்னு சொல்லி இருக்கேன்., போய் சாமி பாதத்தில் வைத்து வாங்கிட்டு வந்துருவேன், கல்யாணத்தண்ணிக்கு காலைல நீங்க கொஞ்சம் ஏர்லியரா எனக்கு மாலை மட்டும் எடுத்து அனுப்பிட்டிங்கன்னா., நான் சாமி பாதத்தில் வைத்து வாங்கிட்டு வந்துருவேன்”, என்று சொன்னாள்.

    “சரிமா எடுத்து தாரோம்”, என்று பாட்டி மறுபேச்சி பேசாமல் சொல்ல,

   தாத்தா தான், “இதுல மட்டும் உன் பேத்தியை பட்டிக்காடு ன்னு சொல்ல மாட்டியே”, என்று சொல்லவும்,

         “பக்தில சொல்றா” என்று சொல்ல,

      “உன் பேத்திக்கு பக்தியா, முருகன் மேல் அவளுக்கு ஒரு நம்பிக்கை, அந்த நம்பிக்கைல சொல்றா”, என்று சொல்லவும்,

       இவளும் தாத்தாவை திரும்பிப் பார்த்து சிரித்தவள்,   “ஏதோ ஒன்னு தாத்தா, நமக்கு மேல ஒரு சக்தி இருக்குல்ல, அதுக்கு நம்ம ஒரு உருவம் கொடுத்து விடுவோம் அவ்வளவுதான்., நீங்க பிரபஞ்சத்துல எது கேட்டாலும் கிடைக்குமாம்”, என்று சொல்ல.,

          “அம்மாடி நீ எப்போ இதெல்லாம் பேச ஆரம்பிச்ச, இதெல்லாம் படிக்க ஆரம்பிச்ச”, என்று சொல்ல,

     பாட்டி தான் “நான் சொல்லல, இவளுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி வைங்க, இவ இப்படியே பேசிட்டு திரிஞ்சான்னா, நாளைக்கு பிரபஞ்சம், சாமி, நமக்கு மேல ஒரு சக்தின்னு பேசிட்டே இருக்க ஆரம்பிச்சிடுவா, சீக்கிரம் புடிச்சு சட்டுபுட்டுன்னு கல்யாணத்த பண்ணுங்க”, என்று சொல்லவும்,

    “இப்ப மாட்டேன், நானே எனக்கு மேல இருக்க ஒரு சக்தியை நினைச்சு, அந்த வடபழனி முருகன் கிட்ட போய் தான் ப்ளீஸ், எனக்கானவன கண்ணுல காட்டு காட்டுன்னு கேட்டுட்டு இருக்கேன், உங்களுக்கு அது பொறுக்கலையே., பிரபஞ்சத்து ட்ட வேற சொல்லி வச்சுட்டே இருக்கேன், உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கூட்டிட்டு வாப்பா., அல்லது என்ன கூட்டிட்டு போப்பா ன்னு சொல்லிட்டு இருக்கேன்”, என்று சொல்லவும்.

   வீட்டில் சிரித்துக் கொண்டவர்கள்,  “அப்ப நீ  முடிவோட தான் இருக்க”, என்று அவள் அம்மா கேட்க.,

      “என்ன முடிவு”, என்றாள்.

     “அதுதான் பார்த்தா பிடிக்கணும், கண்ணுல ஸ்பார்க் வரணும், நெஞ்சு படபடன்னு அடிக்கணும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கணும்”, என்று சொல்லவும்.,

    அம்மாவை பார்த்து சிரித்தவள், “மம்மி சோ க்யூட் மம்மி நீ ன்னு”, என்று சொல்லிவிட்டு.,

     “அதேதான் அதேதான், அது வரும்போது நான் சொல்றேன்”, என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

      அவளோ, மனதுக்குள் ‘ஏன்டா உன்ன பார்க்கும் போது அது மட்டும் வரல’, என்று நினைத்துக் கொண்டாள்.

    ‘ஆனா ஏனோ புடிச்சிருக்கே’ என்று யோசித்தவள், ‘பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டிருக்க.,

     அவள் முகபாவத்தையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த, அம்மா தான் “என்னடி”, என்றார்.

  “ம்ஹூம்”, சொல்லவும்.,

     கேள்வியாக  பார்த்த பாட்டியிடம், “உங்க பேத்திக்கு பைத்தியம் முத்த போகுது” என்று சொல்லி விட்டு நகரவும்,

    இவளோ “உங்க மருமகளுக்கு தான் பைத்தியம் முத்திட்டு., என் மூஞ்சி மூஞ்ச பாத்துகிட்டு இருக்கு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அங்கு வீட்டில் கல்யாண கலை கட்டியதோ இல்லையோ., இவளுக்கு காதல் கலை கட்ட தொடங்கி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!