மை பேசன் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.பெங்களூரில் இருந்து வந்த வெட்டிங் காண்ட்ராக்டிற்கு மணப்பெண்ணின் லெகங்கா டிசைன் முடிந்து விட்டது. மணமகனுக்கு அனிஷ்கா டிசைன் செய்து கொண்டிருக்கிறாள்.
அர்ஜூன் மணமகளுக்கான டிசைன்ஸை தேவாவிடம் காட்டி விட்டு வெளியே வர,அவன் மீது வந்து வேகமாக மோதினாள், அனிஷ்
மேடம் மணி பத்து எல்லா எம்ப்ளாயிஸ்ஸும் ஒன்பதரைக்கு வந்துருவாங்க நாளைலே இருந்து, கொஞ்சம் நேரமா வாங்க என்றவனை முறைத்துக் கொண்டு தனது கேபினுக்குள் சென்றாள்.
Advertisement
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.ஒருத்தன் மூச்சு வாங்க ஓடி வந்து அவனிடம் ,”சார் கீழே ஒரு ஜூபிடர் நிக்குது அதுல ஒரு பொண்ணு வந்துச்சு அவங்க எங்கே என கேட்டான்.
வேலைக்கு செல்ல டிப்டாப் ஆக கிளம்பி வந்தவனை போல இருந்தான்.தலையெல்லாம் கலைந்து , வேர்த்து போய் வந்து நின்றவனிடம், ஏன் எதுக்கு அவங்கள கேட்கறீங்க என்றான்.
சார் நான் வண்டிலே வந்துட்டு இருந்தே அந்த பொண்ணு ரைட்லே இண்டிக்கேட்டர் போட்டு லெஃப்ட்ல திருப்புனாங்க, நான் அவங்க ஏம்மா பார்த்து வரக் கூடாதானு கேட்டேன்.
Advertisement
என் பைக் சாவியை தூக்கிட்டு வந்துட்டாங்க, வேலைக்கு டைம் ஆச்சு சார், வண்டிய தள்ளிட்டு அவங்க பின்னாடியே வந்தேன்.
Advertisement
அவங்ககிட்ட இருந்து சாவியை மட்டும் வாங்கி கொடுங்க சார் என்றான். பரிதாபமாக ,
அவகிட்ட… நானு?என தன் கையில் இருந்த கட்டை ஒருநிமிடம் பார்த்துக் கொண்டே நினைத்தான்.
பின் அவளருகில் சென்று மேடம் ஒருத்தரோட வண்டி சாவியை அவங்க அனுமதி இல்லாம நாம்ம எடுக்க கூடாது என கூறினார்.
Advertisement
இவனை ஒரு பொருட்டாக கூட அவள் மதிக்க வில்லை, நேரே அந்த வண்டிகாரனிடம் சென்று,இந்தா உன் வண்டி சாவி நீ என்னைப்பார்த்து ஏம்மா பார்த்து வரக் கூடாதானுதா கேட்டியா? பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது பார்த்துக்க என்றாள்.
அவன் சாவி கிடைத்ததே போதும் என சாரி மேடம் இனிமே அப்படி பேச மாட்டேன் என கூறிவிட்டு சென்றுவிட்டான்.
ஓ அவன் என்னிடம் சொன்ன அனைத்தையும் இவள் இவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டுதான் இருந்தாளா? என்ற கேள்வி அவனுள் எழுந்தது.
அவன் அப்படி என்ன சொன்னா மேடம் -அர்ஜூன்
அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே என்று அவள் கேட்ட கேள்வியில் ஏளனம் மிகுந்திருந்தது.
அவன் அம்மா,உடன் படித்த பெண்களிட மெல்லாம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்குப்பின் பெண் என்றால் இப்படித்தான் என்று ஒதுங்கிக் கொள்வான்.
ஆனால் இன்று,குறுக்கு வழியில் வெற்றி பெற்றவளை கத்தியால் குத்த போனது,தகாத வார்த்தை பேசியவனின் வண்டி சாவியை தூக்கி வந்து அவனிடம் வம்பு செய்தது என அவளின் துருதுரு செய்கை அவளை நோக்கி அவனை ஈர்த்தது.
ஏதோ ஒரு நேர்மை அவளிடம் இருப்பதாக தோன்றியது.டீ ப்ரேக்கில் இவனுடன் சேர்ந்து பவி, கணேஷ் ,அனிஷ் என நால்வரும் ஒன்றாக அமர்ந்து ஏதாவது பொதுவாக விவாதித்து கொள்வது வழக்கம்.
அப்போது கூட இவனிடம் ஒரு ஒதுக்கத்தை அவள் கடைபிடிப்பாள். ஆனால் மற்ற இருவரிடம் தோழமையோடு கள்ளம்கபடமில்லாமல் அவள் பழகுவது, இவனுக்கு ஒருவித ஏக்கத்தை தந்தது.
அவனை அறியாமல் தானாகவே வலிய சென்று அவனிடம் பேசினால் கூட ஆம்,இல்லை என்ற ஒற்றை பதிலோடு நிறுத்தி விடுவாள்.இல்லையென்றால் தலையசைப்பு மட்டுமே இருக்கும்.
அவளின் மீதான இவனது எண்ணம் இப்படி இருக்க, அவளோ இவனை அதிகபிரசந்தி,அவளுடைய தனிப்பட்ட விஷயங்களில் தேவையில்லாமல் அவன் மூக்கை நுழைப்பதாக நினைத்தாள்….
தேவாவின் வீட்டில் எல்லாம் பழைய படிதான் இருந்தது. ஆனால் அதுல்யா மட்டும் அன்று இரவு நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீண்டு வர வில்லை.
கண்ணை மூடும் போதெல்லாம் கருங்கல் பங்களா,அந்த இரவின் இருட்டு, ஓநாய் அலறல் எல்லாம் அவளை நடுங்க செய்து கொண்டிருந்தது.
நாள் முழுவதும் ரூம்மில் அடைந்து கொண்டிருந்தாள்.
மைதிலி உணவை கொடுக்க வரும் போது, தட்டும் கதவின் சத்தம் கூட அவளுக்கு பயங்கர பீதியை கிளப்பும்.
தேவாவிற்கு அவளை எப்படி தேற்றி கொண்டு வருவது என தெரியவில்லை.யாரிடம் போனால் அவளின் தற்போதைய நிலை சரியாகும் என குழம்பிக் கொண்டிருந்தான்.
ஜானகியும் இப்படித்தானே ஒரு பித்துபிடித்த நிலையில் இருந்திருப்பாள்,அதுவும் வயிற்றில் குழந்தையுடன்,அதுல்யாவிற்காகவாது குடும்பத்திலுள்ள அனைவரும் ஆறுதலாக அவளை அன்று நடந்த நிகழ்வுகளில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஜானகிக்கு அதுகூட இல்லையே, ஒற்றை ஆளாக இவ்வளவு தூரம் பிள்ளையை வளர்த்து அவள் அடைந்திருக்கும் உயரம் இதுவெல்லாம் ஒருநாளில் நிச்சயமாக நடந்திருக்காது.
அதுல்யா போன்று எத்தனை நாட்கள் அரண்டு இருந்திருப்பாளோ,ஆனால் ஒரு போதும் அவளின் தன்னம்பிக்கையை அவள் இழந்திருந்த மாட்டாள் என மனதினுள் எண்ணிக் கொண்டான்.
ஜானகியையும்,அதுல்யாவையும் நினைத்து இரவெல்லாம் தூக்கமில்லாமல் இருந்தான்.அதிகாலை நான்கு மணிக்குதான் லேசாக கண் அசைந்து தூங்கினான்.
காலை ஏழு மணி சூரியன் சுள்ளென கதிர்களை அவன் முகத்தின் மீது வீச மெதுவாக எழுந்து வெளியே வந்தான்.
மைதிலி ஹாலில் எதையோ வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தாள்.
அவளருகே சென்று ஏன் ? என கேட்டான். “அதுல்யா இரவு முழுவதும் தூங்கல, பயந்தபடி இரண்டு காலையும் குறுக்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தாள்,”என்றாள்.
எப்போது இந்த நிலை சரியாகும்?என்று தேவாவை பார்த்து கேள்வி எழுப்பினாள்.
அவனும் எங்கோ வெறித்துப் பார்த்தபடி கூடிய சீக்கிரமாக என்றான்.
வேலைக்காரப் பெண் வேகமாக வந்து, “அம்மா யாரோ ஒரு பெண் கேட் முன்பு அமர்ந்துள்ளாள்” என்றாள்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு வெளியே வந்தனர்.
மைதிலியின் பார்வை அவளது முகத்தில் இருந்து வயிற்றில் நிலைத்து நின்றது. அதுல்யா வயதுடைய ஒரு பெண்.
அவர்கள் வீட்டு முன்பு சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.ஒரு கை அவளது வயிற்றில் இருந்த கருவின் மீது வைத்திருந்தாள்.
தேவா அவளை பார்த்து,” யாருமா நீ என்ன வேணு உனக்கு எதுக்காக இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே?” என்றான்.
அவள் இவனை நோக்கி அழுத்தமான குரலில், “எனக்கு எதுவும் வேண்டாங்க,இதோ என் வயிற்றில் வளர உங்க பையனோட கருவிற்கு பதில் சொல்லுங்க” என்றாள்.
இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. அதற்குள் அவனது காம்பவுண்ட் வீட்டைச் சுற்றி நாலைந்து பேர் கூடி விட்டனர்.சிலர் தங்கள் வீட்டு கேட்டின் உள்ளே நின்று இவர்கள் வாசலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லோரும் இவர்களை பார்ப்பது மைதிலிக்கு அவமானத்தை தர,இது என் பையனோட கருனு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?எதை வைச்சு நாங்க நம்பறது என்றாள்.
அவள் கேட்ட கேள்வி அமர்ந்திருந்தவளுக்கு நெஞ்சில் கத்தியை குத்துவது போன்று இருக்க,இதோ மெடிக்கல் ரிப்போர்ட் என்று அவர்கள் முன்பு வைத்தாள்.
வினய் அப்போதுதான் ஜாகிங் போய்விட்டு வந்தான்.வீட்டின் முன்பு கூட்டமாக இருக்க அதுல்யா எதாவது தவறாக செய்து விட்டாளோ என்று எண்ணி கூட்டத்தை விலக்கி பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்.
அவமானமாக உணர, “இவ யாருனே எனக்குத் தெரியாது ஏன் இங்க நின்னு பார்த்துட்டு இருக்கீங்க? அவங்கவங்க வீட்டுக்கு போங்க”, என சுற்றி இருந்தவர்களை விரட்டினான்.
பெற்றவர்களிடம் திரும்பி வாங்க உள்ளே போலாம் என்றான்.
வினய்,”ஒரு நிமிஷம் அந்த பொண்ணு நீதான் அவ வயித்தில வளர கருவுக்கு அப்பானு சொல்றா, கையிலே மெடிக்கல் ரிப்போர்ட் வேற வைச்சு இருக்கா”, என மைதிலி கேட்க..
அம்மா நான் சொல்றதே நம்புங்க அவ யாருனே எனக்கு தெரியாது என அவன் சொன்ன அடுத்த நொடி ஸ்வேதா ஆவேசமாக எழுந்து அவன் சட்டையை பற்றி நான் யாருனு உனக்கு தெரியாதா? என கேட்டாள்.
ஆமா நீ யாருனே எனக்குத் தெரியாது என்றான் வினய்.அவன் கையை எடுத்து அவள் வயிற்றின் மீது வைத்து, இந்த கரு மேலே சத்தியம் செஞ்சு சொல்லு என்னை உனக்கு தெரியாது என கேட்டாள்.
ஆத்திரம் கண்ணை மறைக்க அவள் கண்ணத்தில் ஒரு அறை விட்டான்.
அவள் ஒருநிமிடம் நிலைகுலைந்து கீழே அமர்ந்தாள்.நீ இந்த குழந்தை உன்னுடையதுனு ஏத்துக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என முன்பை விட அழுத்தமாக அமர்ந்து கொண்டாள்.
கேட்டை இழுத்து அடைத்துவிட்டு உள்ளே சென்று தலையை பிடித்து அமர்ந்து கொண்டான்.
ஸ்வேதா வினயின் கல்லூரி தோழி இருவரும் ஒரே வகுப்பு.அந்த வயதிற்கேற்ப ஈர்ப்பு இருவரும் காதலித்தனர்.
ஸ்வேதாவிற்கு தாய் மட்டுமே தந்தை இல்லை.பார்ட் டைம் வேலைக்கு சென்று அவளது கல்லூரி செலவை சமாளித்து வந்தாள்.
முதலில் வினயின் காதலை ஏற்க தயக்கம்தான் இருந்தும் அவனை பிடித்து விட்டது.
வெளி இடங்களுக்கு சுற்றி திரிந்ததின் விளைவு இன்று அவள் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளாள்.
ஸ்வேதாவை கைவிடும் எண்ணமெல்லாம் வினயிடம் இல்லை. அதுல்யாவின் பிரச்சனை முடியட்டும் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்கிறேன் என ஸ்வேதாவிடம் வாக்கு கொடுத்திருந்தான்.
கடந்த இரண்டு நாட்களாக அதுல்யாவின் பிரச்சனையால் ஃபோன் எடுக்கவில்லை.
உடனே ஸ்வேதா வீட்டு முன்பு வந்து அமர்ந்து விட்டாள்.அவள் இவ்வாறு வீட்டு வாசலில் தர்ணா செய்து அமர்ந்திருப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது.
இப்போது இருக்கும் பிரச்சனையில் தன்னுடையதையும் கொண்டு சென்று பெற்றவர்களை கலங்கடிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தான்.
மதிய நேரம் ஆக ஆக கடுமையாக வெயில் ஸ்வேதா எதையும் பொருட்படுத்தாமல் வேர்வை ஒழுக கண்ணீரோடு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள்.
தேவாவும்,மைதிலியும் எவ்வளவோ சொல்லி உள்ளே அழைத்துப் பார்த்தனர்.வினய் வந்து அழைத்தால் மட்டுமே உள்ளே வருவேன் என பிடிவாதமாக அமர்ந்து விட்டாள்.
மொட்டை வெயிலில் ஒரு கருவுற்ற பெண் தேவாவின் வீட்டு முன்பு அமர்ந்திருக்கும் செய்தி போலீஸ்,பிரஸ் என வேகமாக பரவியது.
ஜானகி அப்போதுதான் மதிய உணவிற்காக சாம்பார் சாதமும், வடகமும் எடுத்துக் கொண்டு டீவியை ஆன் செய்து அமர்ந்தாள்.
பொள்ளாச்சியின் பிரபல தேங்காய் ஏற்றுமதி நிறுவனர் சக்கரவர்த்தியின் பேரனும்,மைபேசன் நிறுவனர் தேவராஜின் மகனுமாகிய வினய் தன்னுடன் படித்த மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார்.
தற்போது அந்த பெண் ஆறுமாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால்,தேவராஜ் வீட்டின் முன்பு தர்ணா செய்து கொண்டுள்ளார் என பிரபல சேனலில் செய்தி வாசித்ததை பார்த்து ஜானகி அதிர்ந்து விட்டாள்.
–கருவின் குரல் ஒலிக்கும்..