Karuvin Kural 23
கருவின் குரல்
அத்தியாயம் 23
மதிய உணவு இடைவேளை சாப்பிட்டு முடித்தபின் அனிஷ் தனது கேபினில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.
போன் ஒலிக்க அது ரிஷி எனக் காட்டியது.முகம்கொள்ளாப் புன்னகையுடன் எடுத்து “சொல்லு ரிஷி எப்படி இருக்கே?” என்றாள்.
“பேசாதே ஊருக்கு போன உடனே என்னை மறந்துட்டே இல்ல.ஒரு போன் பண்ணி பத்திரமா வந்துடேனு சொன்னியா?நான வேற நீ அந்த ஆறடி வளர்ந்து கெட்டவன் கூட போறே,உன்ன அவன் பத்திரமா வீட்டுல விடுவானானு பயந்துட்டே இருந்தே” என்றான்
Advertisement
சாரிடா நா இங்கே கொஞ்சம் பாசத்துக்கும் கடமைக்கும் நடுவுல மாட்டிடே அதா உனக்கு போன் பண்ண முடியாம போச்சு,அதுமட்டுமல்ல அந்த வளர்ந்து கெட்டவன தினமும் பார்க்கர மாறி ஆயிடுச்சு என அன்று நடந்த அனைத்தையும் புலம்பி முடித்தாள்.
அனிஷ் அவன் மறுபடியும் எதாவது உன் ரூட்ல க்ராஸ் ஆன சின்ன வயசுல என்ன எப்படி மண்டைய ஒடைச்சையோ அப்படி அவனுக்கும் ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடு என்றான்.
அன்று அவன் மண்டையை உடைத்ததையும், அதனால் ஏற்பட்ட சங்கடங்களையும் ஒரு நிமிடம் நினைத்து பார்த்து, அவனிடம் சாரிடா ரிஷி அன்னைக்கு உனக்கு ரொம்ப வலிச்சு இருக்கும் இல்ல என்றாள்.
Advertisement
அனிஷ் வலி எல்லாம் ஒன்னும் இல்லை என்ன லைட்டா கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டு திரும்ப வந்துட்டேன் என்றான்.
Advertisement
பவி,”அனிஷ் நியூஸ் பாத்தியா?என யூடியூப்பை காட்டினாள்.அதில் வந்த செய்தி கேட்டு ஒருநிமிடம் உறைந்து போனாள்.
என்ன இருந்தாலும் வினய் அவளின் சகோதரன் ஆயிற்றே, முகத்தை இயல்பிற்கு கொண்டு வர பெரும் அவஸ்தைப்பட்டாள்.
ரிஷி நான் அப்பறோம் கால் பண்றே கொஞ்சம் வேலை இருக்கு என போனை கட் செய்தாள்.
Advertisement
கணேஷிடமும்,பவித்ராவிடமும் அனைத்தையும் விசாரித்துக் கொண்டாள்.அங்கு செல்லலாம் என்றால் மைதிலி, ராஜேஸ்வரி முகம் நினைவுக்கு வர வேண்டாம் என முடிவெடுத்தாள்.
இருந்தும் மனம் கேட்க வில்லை.தேவா சார் பாவம் இல்ல கணேஷ் தனியா எப்படி இவ்ளோ பெரிய விஷயத்தை சமாளிக்க போறாரோ என்றாள் , பவித்ரா.
கவலைபடாதே என் நண்பன் அர்ஜூன் அங்கதான் இருக்கான். அவன் பார்த்துக்குவா என்றான்.
அனிஷின் மனதில் அர்ஜூன் அங்கிருப்பது நன்றாக பதிந்து கொண்டது.
தேவா வீட்டு முன்பு போலீஸ்,மீடியா, மாதர் சங்கங்களின் போராட்டம் என அந்த இடம் ஒரே பரபரப்பாக இருந்தது.
விஷயம் கேள்விப்பட்ட சக்கரவர்த்தி மகனின் வீட்டிற்கு ஓடோடி வந்தார்.கருணா மார்பில் அடிக்காத குறையாக ஸ்வேதாவை கண்டு பொங்கிக் கொண்டே உள்ளே செல்ல முற்பட்டாள்.
ப்ரெஸ் அவர்கள் இருவரையும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தது.
அர்ஜூன் யாரையும் போட்டோ எடுக்க விடாமல் அவர்களை பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றான்.
மாமனாரை பார்த்தும் மைதிலிக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. கருணாவின் அருகில் அமர்ந்து கொண்டு, “மானமே போய்விட்டது மகள்தான் இப்படி செய்து விட்டாளே என கவலை படுவதா இல்லை மகன் அதற்குமேல் செய்து விட்டான் என கவலை படுவதா? என ஒப்பாரி வைத்தாள்.
தேவாவின் வளர்ப்பு ஊரார்முன் கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தது.
மேடம்,” இப்ப அழுது எந்த ப்ரையோஜனமும் இல்லை.அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க,அதுமட்டுமில்லாம அதுல்யா மேடம் அந்த சம்பவங்களை மறந்து வெளியே வரனும்.
நீங்க திரும்ப திரும்ப அதையே ஞாபக படுத்தாதீங்க..என்றான்
தேவாவின் கண்டிப்பான பார்வை அவளது அழுகையை அடக்கியது.அதுவரை நடப்பதை எல்லாம் பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்த அதுல்யாவின் பார்வை மெல்ல அர்ஜூன் பக்கம் திரும்பி அவனிலேயே நிலை கொண்டது.
சக்கரவர்த்தியிடம்,” சார் நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு,நீங்க போலீஸ் கிட்ட பேசுங்க, பிரஸ்,மாதர் சங்கங்களை வீட்டு முன்னாடி இருந்து போக வைக்க சொல்லுங்க..
நம்ம வீட்டு பெண்களை விட்டு முதல்லே ஸ்வேதா மேடத்தை உள்ள கூப்பிடலாம். பாவம் காலையிலே இருந்து எதுவும் சாப்பிடுல போல, குழந்தைக்கு ஏதாவது ஆகிடப்போது என துரித்தப்
படுத்தினான்.
சக்கரவர்த்தியும் போலீஸிடம் பேசி அந்த பெண்ணை தன் பேரனுக்கே மணம் முடிப்பதாக வாக்கு கொடுத்தார்.அதன் பின்னே அனைவரும் கலைந்து சென்றனர்.
யார் சமாதானப்படுத்தியும் ஸ்வேதா உள்ளே வர மறுத்து விட்டாள்.வேறு வலி இல்லாமல் வினயே சென்று அழைத்து வந்தான்.
ராஜேஸ்வரியும்,மைதிலியும் அவளை எரித்து விடும் பார்வை பார்த்து ஓரமாக அமர்ந்து விட்டனர்.கருணா கணவரையும் மகனையும் தாண்டி அவளிடம் செல்லவில்லை.
அதுமட்டுமின்றி இந்த அளவு தன் குடும்ப மானத்தை காற்றில் பறக்க வைத்து விட்டளே என எண்ணி ஸ்வேதா பக்கம் பார்வையை கூட திருப்பவில்லை.
வேறு வழி இன்றி அர்ஜூன் ஆப்பிளை கட் செய்து ஜூஸாக அரைத்துக் கொடுத்தான். ஸ்வேதா வாங்க மறுக்க குழந்தைக்காக கொஞ்சம் எடுத்து குடிங்க… என்றான்.
எனக்கு இந்த வீட்டுல எந்த உரிமையும் இல்ல,என் வயித்தில வளர குழந்தையை தவிர…..,என்னை கவனிச்சுக்க வேண்டியவனே தூர தள்ளி நிக்கையிலே நான் ஏன் இதை குடிக்கனு வேண்டாம் என்றாள்.
இந்த வீட்டுல உங்களுக்கு என்ன உரிமை இல்ல,எல்லாம் இருக்கு எடுத்து குடிங்க என அதுல்யா முன்வந்தாள்.
ஒருநிமிடம் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவளின் தெளிவான பேச்சு பழைய நிலைக்கு அவள் திரும்பிவிட்டாள் என அங்கிருந்தவர்களுக்கு உணர்த்தியது.
காலையில் கூட ஏதோ பித்து பிடித்தவள் போல இருந்தாளே எப்படி திடீர் மாற்றம் என மைதிலி கூட மனதில் நினைத்துக் கொண்டாள்.
இங்க பாரு ஸ்வேதா உனக்கும் வினய்க்கும் கல்யாணம் ஆகற வரைக்கும் நீ என் பொறுப்பு கவலை படாமே ஜூஸ் எடு என அவளை குடிக்க வைத்தாள்.
அதுல்யாவின் மாற்றம் வினய்க்குகூட கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது.ஸ்வேதா மீது அளவுகடந்த காதல் அவனுக்கு ,அக்காவின் நிலையில் இவள் இவ்வாறு பிரச்சனை செய்தது சற்று கோபத்தை தந்தாலும், அவளை கடந்த வாழ்வை அவன் யோசித்தது இல்லை.
அக்கா இயல்புக்கு வந்தபிறகு வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணி இருந்தான்.
ஆனால் பெண்ணின் நிலை அவ்வாறில்லையே, தந்தை இழந்து சுற்றம் கைவிடப்பட்ட நிலையில் தாயுடன் ஸ்காலர்ஷிப்பில் படிக்க வந்தாள்.
வினய் மீது காதல் வயப்பட்டு வயிற்றில் பிள்ளையையும் சுமந்து கொண்டிருக்கிறாள்.
அக்கம்பக்க பேச்சு, தாயின் அழுகை என இன்று தர்ணாவிற்கு வந்து அமர்ந்து விட்டாள்.
மெதுவாக சக்கரவர்த்தியிடம் தாத்தா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்றான் வினய், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…. எழுந்து இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அரைந்தார் சக்கரவர்த்தி.
உங்க அப்பன்தான் அந்த அப்பாவி ஜானகி வாழ்க்கையை கெடுத்து என் மானத்தை வாங்குனானா நீ இந்த அப்பாவி பிள்ளை வாழ்க்கையை கெடுத்து வச்சிருக்கே எனக்கு வர கோபத்துல உன்னை இங்கையே துவம்சம் பண்ணிருவேன், உன் புள்ளைக்கு அப்பன் இல்லாம போய்ருமேனு கட்டுப்பட்டு இருக்கிறேன்.
வர வெள்ளிக்கிழமை சுப்பிரமணியர் சன்னதிலே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் அவங்க அம்மாகிட்ட பேசி கூட்டிட்டு வா நம்ம பக்கம் முக்கியமான சொந்தம் மட்டும் போதும்.
குழந்தை பிறக்கட்டும் பெயர் வைக்கற விழாவை பெரிய அளவிலே செஞ்சுக்கலாம் என இயந்திரத்தனமாக யாரையும் பார்க்காமல் கூறி கருணாவை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.
இதுவரை ஜானகி விஷயம் அரைகுறையாக அதுல்யாவும் வினய்உம் கேட்டு உள்ளனர் இன்று இப்படி வெளிப்படையாக சக்கரவர்த்தி கூற ஒரு நிமிடம் அனைவருமே ஸ்தம்பித்து நின்றனர்.
தேவா தன் மகன், மகளை நிமிர்ந்து பார்க்க கூட கூச்சப்பட்டு ரூமினுள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
மைதிலி ,ராஜேஸ்வரி, சுப்பிரமணியம் வேறு ரூம்மில் அடைந்து புலம்பி கொண்டிருந்தனர்.
நிறைய சீர் வரிசையோடு ராஜேஸ்வரி வழியில் ஒரு வரன் வர அதை வளைத்து போட்டு வினய்க்கு பேச முடிவு செய்திருந்தனர்.
அவர்களின் ஆசையில் இன்று அவன் மண்ணள்ளி போட்டு விட்டான்.இப்படி ஒன்னுக்கும் உதவாத இடத்துல போய் பொண்ணு புடிச்சு இருக்கா பாருனு ராஜேஸ்வரி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவரின் வார்த்தை ஒவ்வொன்றும் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த மைதிலிக்கு எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது.
வினய் ஸ்வேதாவை சமாதானபடுத்தினான்.
இந்த உலகமே எதிர்த்தாலும் நான் உன்னை கைவிட மாட்டேன்.என்னை நம்பு இனிமேல் இப்படி முட்டாள்தனமான வேலையை செய்யாதே என்று கெஞ்சினான். கண்களில் நீர் பெருக அவனை அணைத்துக் கொண்டாள்.
அனைவரும் அவரவர் வேலையை பார்க்க அர்ஜூன் கிளம்ப எழுந்தான்.அவனை ஒரு நிமிடம் நிறுத்தி ரொம்ப தேங்க்ஸ் என்றாள் அதுல்யா.
பரவா இல்லைங்க மேடம்.உங்கள பத்திரமா பார்த்துக்கோங்க நான் வர என கிளம்பினான்.
அவனின் ஆறடி உயரம்,அன்று அவள் மயங்கி விழும் போது அவளை தாங்கிபிடித்து சுனில் இடம் சண்டை இட்ட விதம், இன்று தன் வீட்டு பிரச்சினையை அவன் பிரச்சினையாக முன்னின்று தீர்த்தவிதம், அவனின் அமைதியான குணம் எல்லாம் அவனை நோக்கி அவளை ஈர்த்தது.
இது வெறும் ஈர்ப்பு மட்டுமல்ல,வாழ்க்கையில் இவ்வளவு பெரிய அடிக்கு பின்பு அவள் எடுத்திருக்கும் தெளிவான முடிவு இது.
காதல் என்பது வெறுமனே ஊர் சுற்றி பொழுது போக்குவது அல்ல,தன்னை முழுமையாக ஒருவரிடம் ஒப்படைப்பது.
அப்படி ஒப்படைக்கும் நபர் சுனில் போன்று அல்லாமல் தன்னை பாதுகாப்பாக வைத்திருக்கும் நபராக இருக்க வேண்டும் என பக்குவமடைந்தாள்.
அர்ஜூனுடைய அருகாமை தன்வாழ்நாள் முழுவதும் வேண்டும் என எண்ணினாள்.
காரில் போகும் போது சக்கரவர்த்திக்கு மீண்டும் அர்ஜூனை பற்றிய யோசனை.
நிச்சயமாக அவன் நம்மிடம் சம்பளம் வாங்கி வாழ்க்கையை ஓட்டுபவனாக தெரியவில்லை.ஏதேனும் பெரிய இடத்து பையனாகதான் இருக்க வேண்டும்.
