Skip to content
Post Views: 1,696
மறு நாள் காலையில் ராஜா வருமுன்பே கிரௌண்ட்டில் நின்றிருந்தான் இளா. சூரிய ஒளி சிறுகச்சிறுக தன் கதிர்களை பரப்புவது போல, அந்த விடலை சிறுவர்களுக்கு சிறு சிறு நுணுக்கங்களை கற்று கொடுத்து கொண்டிருந்தான்.
” ஏன்டா நான் வர்றதுக்குள்ள வந்த ” அடுப்பில் இருந்த கங்கின் சூடு ராஜாவின் வார்த்தையில்.
Advertisement
அவனை நிமிர்ந்து பார்த்தும் எதுவும் கூறாமல் இருக்க, இன்னும் கொதித்தான்.
Advertisement
அவன் கரங்களை பற்றி கொண்டு விடுவிடுவென சற்றே தள்ளி அழைத்து வந்தவன்
Advertisement
” என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குடா. ரொம்ப சோதிக்காதே. “
Advertisement
பொறுமையாய் கையை கட்டி கொண்டு ராஜாவின் முகம் நோக்க..
” ப்ச்… அறைஞ்சேன்னா பல்லு தெறிச்சிரும். பேசுடா “
“அறைஞ்சி தான் பாரேன். அப்போ தான் நிம்மதியா இருக்கும்.”
” கடுப்பை கிளப்பாம பேசுடா, இல்லை நிஜமா அறைஞ்சிருவேன். “
” பண்ண தப்புக்கு அடிக்க சொல்லி தான் நானும் கேக்குறேன். ” வார்த்தைகளும் அழுத்தமாய் வர.
” உன்னை ஏன்டா அடிக்கனும். என்கிட்ட பேச கூட பிடிக்காம இருக்குற, உன் பின்னாடியே திரியிரேனே என்னை தான் அடிச்சுக்கனும். “
” அதுக்கு தாண்டா அடிக்க சொல்றேன். “
மீண்டும் மீண்டும் அவன் பேசியும் அதை புரிந்து கொள்ளும் மனநிலை கூட இன்று ராஜாவிற்கு இல்லை. மூன்று நாட்களாய் அவனை பாராது, பழைய நிகழ்வுகள் மனதை அழுத்த மொத்தமாய் தன்னையே மறந்து நிற்கிறான். மாணிக்கம் ” பசங்க மேட்ச் பிராக்டீஸ் இருக்குனு சீக்கிரம் வர சொல்லிட்டாங்க, அதான் கிளம்பிட்டான் ” என்றதை கூட நின்று கேட்கும் நிலை அவனிடம் இன்றில்லை. அவன் இல்லை என்ற உடனே மனம் தவிக்க இங்கே ஓடி வந்திட்டான்.
” பேசுவியா, மாட்டியா, சொல்லுடா ” என்றவனை பார்த்தவனோ அழுத்தமாக,
” ஏன்டா அன்னைக்கு என்னை அம்போன்னு விட்டுட்டு போன, என் நம்பர வேற பிளாக் பண்ணி வச்சிட்ட. யாருமில்லன்னு எனக்கு எப்படி வலிச்சிச்சு தெரியுமா? இன்னைக்கு ஒரு வாரம் நான் பேசலைன்னா உனக்கு வலிக்குதோ “
” காலேஜ் வாசல்ல நின்னு ஐ ஆம் பிசி, ஐ ஹெவ் டோன்ட் டைம் டு டாக் வித் யூ, டோன்ட் டிஸ்டர்ப் மீன்னு அந்த கத்து கத்துனா, எனக்கும் ரோசம் இருக்காதா, என் கிளாஸ் மேட்ஸ் எல்லாம் நக்கலா எப்படி சிரிச்சுட்டு போனாங்க தெரியுமா? நீ மட்டும் தான் என் பிரண்டுன்னு அவங்கட்ட ஜம்பமா பேசுவேன், எல்லாரையும் தள்ளி நிறுத்தினேன். இன்னுமே அவங்க பார்த்து சிரிச்சது கண்ணுல நிக்குதுடா, நினைச்சு நினச்சு எனக்கும் வலி இருக்குடா, புரிஞ்சுக்கோடா ” என்றவனை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு இறுக்க அணைத்து கொண்டான். ஒற்றை அணைப்பு இரு ஜீவன்களின் வலிக்கு மருந்திட்டு, வழியை காட்டியது.
நண்பன் தோற்றாலும் நட்பு தோற்பதில்லை, நண்பன் மறைந்தாலும் நட்பு மறைவதில்லை. பிறப்பையும் இறப்பையும் நாம் முடிவு செய்ய இயலாது.ஆனால் இடைப்பட்ட களத்தில் நட்பை நாம் முடிவு செய்யலாம். தன்னை பற்றி எண்ணாது நம்மை மட்டுமே யோசிக்கும் உறவு கிடைப்பதும் ஒரு வரம் தானே. ராஜா மாறாவுக்கு கிடைத்த வரம், அவன் இதனை புரிந்து கொண்டு விட்டான். இனி கைவிட மாட்டான். மாறாவோடு சேர்ந்து ராஜாவும் இன்று கால் பந்தாட்டம் ஆட ஆரம்பிக்க, சிறுவர்கள் வியப்பாய் பார்த்தனர்.
*****
” ம்மா.., ” என மடியில் வந்து படுத்த மகனின் முகம் பார்த்தவர், தலை கோதியப்படி ” அம்மாட்ட என்ன சொல்லனும்.”
” ஏன் எதுவும் சொல்லனும்னா தான் வந்து படுப்பேனா? “
“அதுக்குத்தான் காலையில இருந்து யோசனை பண்ணிட்டு சுத்திட்டே இருக்கியா? ” புருவம் உயர்த்தி கேள்வியாய் அவனை பார்க்க.
” ஹ்ம்ம்ம்… அது….. “தயக்கமாய் மீண்டும் தமயந்தியின் முகம் பார்க்க
” என் மருமக பேரு என்ன? எப்போ கூட்டி வர்ற? ” சட்டென்று கேட்டதில் சிரித்தவன்.
” எப்படிம்மா… நான் சொல்லாமலே புரியுது உனக்கு” கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு.
” அவ உன் மருமகளா என்னனு எனக்கு இன்னும் தெரியல, எங்கே இருக்கா, என்ன பண்றான்னு எனக்கு தெரியாது. பட் பேரு மட்டும் லயா. அது மட்டும் தான் எனக்கு தெரியும். ” என்றவன் அவளை பார்த்த கதையை எல்லாம் கூறி முடித்தான்.
” அது லவ் எல்லாம் இல்லைம்மா, ஒருத்தங்கள பார்த்த உடனே இப்படி ஒரு லைப் பார்ட்னர் நமக்கு கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணும்ல. கிரஸ் அந்த மாதிரி … அவ சிரிக்கிறப்போ மியூசிக் மாதிரி மனசு அமைதியா இருக்கு. அவ கண்ணு செம்ம கியூட் , பார்த்துட்டே இருக்கலாம். சில பேருக்கு தான் அப்படி இருக்கும். எப்படி சொல்றதுன்னு தெரியல., ரொம்ப டிபரண்டா அழகா இருந்தாம்மா., ” என்றவனின் முகத்தையே ஆழ்ந்து பார்க்க, அவன் பொய்யுரைக்கவில்லையென தோன்றியது.
” தென் வாட் நெஸ்ட்.. “
” அவளை திருப்பி எங்காவது மீட் பண்ணா தான் என்னனு தெரியும். அதனால் இப்போ மேரேஜ் பிளான கொஞ்சம் தள்ளி வைங்க. அப்புறம் பார்க்கலாம். ” நேற்று காலை பெண் பார்க்கவா என்று கேட்டதற்கு மகன் யோசித்து கூறும் பதில் தான் இது.
மகன் மனதில் காதலுக்கான விதை வேர் விட ஆரம்பித்ததை கண்டு கொண்டவரோ, அவனுக்கான நேரத்தை கொடுக்க முடிவு செய்து சரியென்று தலையாட்டினார்.
**
சீக்கிரம் பணி முடிந்து சுபா வந்திருக்க, ரூம் மேட் சினேஹாவுடன் பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்திருந்தாள். பொருட்களை எடுத்த படியே பேசி கொண்டிருக்க, மாப்பிள்ளை பற்றி பேச்சு எழுந்தது.
” சுபா, அன்னைக்கு உன்னை பார்க்க வந்தவங்களை ஏன் வேணாம்னு சொன்னிங்க, “
” இல்லைப்பா., பையனுக்கு பாரின் போக ஆபர் வந்திருக்காம்., பத்தே நாள்ல கலியாணம் முடிச்சி, அவரு கிளம்பிருவாராம், கொஞ்ச நாள் கழிச்சு முடிஞ்சா பொண்டாட்டியை கூட்டி போவாங்கலாம்., அதனால அப்பா வேணாம்னு சொல்லிட்டாங்க., “
” ஏன் மொத உங்கட்ட சொல்லலியா., “
” இல்லை., ஜாதகம் பார்க்கும் போது இந்தியால தான் இருப்பாங்கனு சொன்னாங்களாம்., இப்போ மொத நாள் போன் பண்ணி பையன் வர மாட்டான். நம்ப நிச்சயம் முடிச்சுருவோம்னு நிக்குறங்கா., ஸ்டார்டிங்லேயே மாத்தி பேசுறவங்கள நம்பி எல்லாம் பொண்ணு கொடுக்க முடியாதுனு அம்மாவும் சொல்லிட்டாங்க., சோ வேற இடம் பார்க்க சொல்லி அப்பா பேசி முடிச்சிட்டார்.”
” பையன் போட்டோ பார்த்தியா., எப்படி இருந்தான்., “
” ப்ப்ச்…, ” என்று உதடு பிதுக்கியவள் ” எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்லை, நான் பார்க்கல., “
” எதே, இன்ட்ரெஸ்ட் இல்லையா., ஏண்டி இப்படி சொல்லுற., ” என சிரித்தவள் ” இரு, உனக்கு எப்படி பட்ட பையன் வேணும் சொல்லு., நம்ம இங்கேயே தேடுவோம்., அப்பாட்ட அப்படி பார்க்க சொல்லுவோம்., ” என சுற்றுமுற்றும் பார்த்தவள் அழகான பசங்களை எல்லாம் கை காட்ட தோளை குலுக்கி, உதடு பிதுக்கினாள்.
இரண்டாம் தளத்தில் இருந்து சிகை கோதியபடி, இரண்டிரண்டு படிகளாய் தாவி குதித்தபடி ஆளை அசத்தும் அழகில் வந்து கொண்டிருந்த ஒருவனை காட்டி.., ” செம்மையா இருக்கான்., இவன் ஓகேயா பாரு..,” என்க.,
அவள் உதடுகள் மென்மையாக ” மாறா….,” என உச்சரித்தது. கண்கள் அவனை விட்டு நகராமல் விரிந்து பார்த்து கொண்டிருக்க, சுபாவின் தோளை இடித்தவளோ ,
” என்னடி பிரீஸ் ஆகி நின்னுட்ட. இப்படி ஒரு ஆளை பார்க்கலாமா… இல்லை இவனையே பார்க்கலாமா… ” சினேகாவின் நக்கலில் முறைத்தவள்.
” கொன்றுவேன். அவன் இவன்னு சொன்னா…” என்றாள் ஒற்றை விரலை கை நீட்டி, கண்களை உருட்டி.
” யாருன்னு தெரியாத ஒருத்தன்.. “அவள் முறைக்க ” சரிடி சரிடி… சாரி, ஒருத்தருக்காக என்னையே திட்ற. என்னடி… கண்டதும் காதலா.., ” என்றாள் கண் சிமிட்டி.
” அம்மா தாயே .., லவ் எல்லாம் இல்லை. அவரு எனக்கு தெரிஞ்சவரு. அண்ணாவோட பிரண்ட்…,”
” அப்போ ரூட் கிளியர். வாடி போய் பேசுவோம்…,”
” என்னத்த பேச.., போடி உனக்கு வேற வேலை இல்லை., ஒழுங்கா சாமானை தூக்கிட்டு வா, பில் போட்டு கிளம்புவோம்.., “
” அழகா இருக்க ஒருத்தனை பார்த்தும், தெரிஞ்சிருந்தும் பேச கூட தோணாமா போறோம்கிரியே .., உன்னை எல்லாம் வச்சிட்டு ஆணி கூட புடுங்க முடியாது., “
” நீ புடுங்கிறது எல்லாம் தேவையே இல்லாத ஆணி., இப்போ வா நீ., எனக்கு மாப்பிள்ளை எங்கப்பா பார்ப்பார்., அது நம்ம வேலையில்லை., வாடி ., ” இழுத்து கொண்டு ஓடுபவளை திட்டி கொண்டே வீடு போய் சேர்ந்தனர் இருவரும்., நாளை நடப்பதை யாரறிவார்., அவனே அவளுக்கு என்று வந்திட்டால் வேண்டாம் என்றா சொல்லுவாள்.
error: Content is protected !!