Skip to content
Post Views: 1,613
꧁☆☬ லயம் – 12 ☬☆꧂
நான்கு நாட்கள் அவளை பார்க்காத பொழுதில் தான், ரோஜாவின் மீது அவனது பிடித்தம் எத்தனை தூரம் ஆழமானது என அவனுக்கே புரிந்தது. அவ்வப்போது பார்த்து கொண்டாலும், அவளின் அருகாமையே அவனுக்கு போதுமானதாய் இருந்துள்ளது.
Advertisement
முழுதாய் அவளில்லா வெறுமை முகத்தில் அறைய, மனம் புரிந்தது. இதோ இன்று வந்து விட்டாள். சந்தோசமாய், உற்சாகம் பார்ப்பவர்களை தொற்றி கொள்ள வாய் ஓயாமல் பேசும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது அவனுக்கு. அவன் அறைக்கு வந்த போது அவளை நொடி பொழுது இமைக்காது பார்த்தவனின் விழி ஈர்ப்பில் கன்னியின் கண்களும் ஒரு கணம் நிலம் நோக்கியது. ஏன் இன்று தன்னை இப்படி பார்க்கிறான் ? மனம் யோசனையில் ஆள, அதன் பின்னோ வேலை அவர்களை இழுத்து கொண்டது.
Advertisement
Advertisement
லஞ்ச் டைம் சுபாவிடம் அவளின் ஊர் பெருமை பேச ஆரம்பித்தாள். ” எங்க மீனாட்சி கல்யாணம் கிராண்டா நடக்கும். எல்லா நாளும் ஏரியா களைக்கட்டும். டெய்லி காலையில சாமி வரும் போது கூட்டமே இருக்காது. பிரீயா பார்க்கலாம்.
ஸ்டார்டிங் பண்ணும் போது கம்மியா வர்ற கூட்டம் பட்டாபிஷேகம் முடிச்ச நாள்ல இருந்து லட்ச கணக்குல வரும். ஒரு கிலோ மீட்டர் தூரம் அம்மனுக்கு முன்னாடி ஊர்வலம் வருவாங்க பாரு. எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா.,? ” என்று சிலாகித்தவளோ.
Advertisement
” அப்படி என்னடி பண்ணுவாங்க ? ” சென்னை, செங்கல்பட்டை தாண்டி வேறெங்கும் செல்லாததால் சுபாவிற்கு திருவிழா அவ்வளவு பரிச்சயம் இல்லை. அவள் ஆவலில் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள்.
” கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், செண்டை மேளம், சிவாச்சாரியார் கூட்டம் சங்கு முழங்கிட்டு வருவாங்க. சம் டைம்ஸ் அகோரி கூட வருவாங்க, இதெல்லாம் விட ஹை லைட்ஸ் குட்டி குட்டி குழந்தைங்க சாமி வேஷம் போட்டு வலம் வர்றது தான் அழகா இருக்கும். த்ரீ மந்த்ஸ் பேபில இருந்து கூட்டி வந்துருவாங்க .., குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சொல்வாங்க. இங்க குழந்தே வடிவத்தில் தெய்வங்கள் எல்லாம் உலா வரும் செம்ம கியூட்டா இருப்பாங்க, அவங்களை பார்க்க தான் நான் முன்னாடியே போவேன். இங்கே பாரு…, போட்டோஸ்…,” என போனில் காட்ட ஆரம்பித்தாள்.
குட்டி கண்ணனின் ஒரு கையில் புல்லாங்குழல், மறு கையில் டைரி மில்க்,
அருவாள் தூக்கிய கருப்பணசாமி வாயிலோ ஐஸ்கிரீம், சிவன் உடை போட்டு கொண்டு, வாயிலே பபிள்கம் மென்று கொண்டு முட்டையும் விட, அனைத்தும் எமனுக்கு தெரியும் என கமலை அது ஞாபகப்படுத்தியது.
பீடிங் பாட்டிலில் பால் குடித்த படி வரும் முருகன், தண்ணீரை குடித்து வாயெங்கும் அபிஷேகம் செய்தபடி வரும் கிருஷ்ணன், கூலிங் கிளாஸ் போட்ட சரஸ்வதி, கையில் கதையோடு வாயில் பீப்பி ஊதி கொண்டு வரும் அனுமான், ஒற்றை மீனாட்சி பல்லக்கில் பவனி வர ஆயிரம் மீனாட்சிகள் தந்தை தோளில் உலா வந்தனர். ஆடி அசைந்து மாசி வீதியில் வரும் தேர் ஒரு வித அழகென்றால், அதற்கு போடும் ஹர ஹர மகாதேவா கோஷமும், கைதட்டலும், விசில் சத்தமும், ஆட்டம், பட்டம் கொண்டாட்டம் என களைகட்டும்.
காலையில் வரும் மொத்த கூட்டமும் மதியமே அழகர்கோயிலில் இருந்து கிளம்பும் கள்ளனை அழைத்து வர ஓடி விடும். தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி, கோவிந்தா கோசம் கூப்பாடு போடும். எங்கும் திருவிழா கூட்டம் தான். ஆனந்தம், அவஸ்தை ஒருங்கே இருந்தாலும் அதை காணாமல் யாரும் வீட்டில் அடைத்து கிடைக்க மாட்டார்கள்.
அதை லட்சம் பேர் பார்க்க, கோடி தரிசனம் கிடைக்கும் உணர்வு கொந்தளிப்புகள், திருத்தேரோட்டம், அழகரின் எதிர் சேவை, ஆற்றில் இறங்குதல் என அனைத்தையும் வீடியோ, போட்டோ என எடுத்து தள்ளி இருந்தாள். செவிக்கு தான் அன்று உணவு உட்சென்றது. அவர்களின் வாய்க்கு உணவே செல்லவில்லை.
” நல்லா என்ஜோய் பண்ணிட்டு வந்து இங்கே கதை அளந்துட்டு இருக்குற., என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டியா நீ ., ” சுபாவிற்கும் ஆவல் மேலிட அவளிடம் ” அடுத்த வருஷம் நானும் வரவா…, ” தயங்கி தயங்கி கேட்டாள்.
” உனக்கு இதெல்லாம் பிடிக்குமா, பிடிக்காதோன்னு தாண்டி கூப்பிடல.., நெஸ்ட் இயர் கண்டிப்பா என்கூட வா.., ” உறுதியாக கூறினாள் ரோஜா.
” இதெல்லாமே வருஷா வருஷம் நடக்குமா., “
” ஆமாம் .., கல்யாணம் ஆனா ஒரு வருஷம் தான் புது பொண்டாட்டி மேல பாசம் இருக்கும், அதான் நாங்க வருஷா வருஷம் ஒரே ஆளை, ஒரே லயத்தில் எதுவும் மாறாம காதல் பண்ணி, அவங்களை கல்யாணம் பண்ண வைக்குறோம்., புருஷன் பொண்டாட்டி அன்பு எத்தனை ஜென்மம் ஆனாலும் தொடர்ந்து இருக்கணும்., பிரிவுங்கிறதே அங்க வர கூடாது., கட்டுன ஒரு வருசத்துல பிரிஞ்சி போற ஜோடிங்க எல்லாம், சாமிங்க திருக்கல்யாணத்தை பார்த்து இதே மாதிரி நம்மளும் பிரியமா, பிரியாம இருக்கணும்னு மனசுல நினைக்கனும்., எனக்கு மீனாட்சி கல்யாணம் பார்க்கும் போது இது தான் தோணும். என் கல்யாணமும் லயம் மாறா காதலோடு எப்பவும் இருக்கனும். ” சென்று வந்த ஒரு வாரம் வரையும் இவளின் கச்சேரி களை கட்டியது.
செவி வழி இவையனைத்தும் சுபா மூலம் ராஜாவிற்கும் கடத்தப்பட, அவள் மேல் இன்னும் காதல் பெருகியது அவனுக்கு. அவன் பார்வைகள் அவளை தொடர்ந்து வர தொடங்கின தனிமை பொழுதுகளில் அவன் அறைக்கு செல்லும் போது. எந்த கல்மிஷமும் இல்லாமல் நேசமாக ஒரு பார்வை. ஆனாலும் அந்த பார்வை அவளையும் ஏதோ செய்தது.
அவன் பார்க்கின்றானோ என அவள் பார்க்க, பார்க்கும் பொழுதுகளில் அவன் பார்க்கவேவில்லை. பாவைக்கும் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. பாவையும், பாவையின் பார்வையும் அவனோடு மல்லு கட்ட, பார்வையில் பாவை மட்டுமே தெரிந்தாள். வேறொன்றும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை.
****
இதோ இமை சிமிட்டும் நேரத்தில் ஆறு மாதங்கள் கடந்து இருந்தது. இளாவின் தூரதிர்ஷ்டம் எங்கும் லயாவை அவன் சந்திக்கவே இல்லை. அடுத்தடுத்து வேலை பளுவில் மனதின் ஓரத்தில் அவள் நினைவும் ஒளிய தொடங்கியது.
ராஜாவின் கம்பெனியிலும் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு, பிசினசும் சீராய் நடக்க தொடங்கி விட்டது. ரோஜாவும் இளாவின் ஆலோசனைகளின் படி செயல்பட்டு அனைத்து செலவுகளையும் கனிசமாய் குறைத்து லாபத்தினை அதிகரிக்க உதவினாள். ஏமாற்றிய அக்கௌன்ட் மேனேஜரை வேலை நீக்கம் செய்து, அந்த பதவிக்கு இவளையே நியமித்தான்.
செலவுகளை ரோஜாவும், விற்பனையை சுபாவும் பார்த்து கொள்ள, ராஜாவின் வேலை பளுவும் குறைந்தது. இத்தனை நாளும் நட்டத்தில் சிக்கி தவித்து, உலன்ற ராஜாவின் மனது சந்தோசமாக காதல் வானில் சிறக்கடித்து பறக்க துவங்கியது.
ரோஜாவின் ராஜா யார்? என்று கேட்டால் கண்ணை மூடி கொண்டு நேரு இல்லை, ராஜா தான் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டான். ஆனால் இதழ் வழி காதலை பகிராமல், இருவரும் விழி வழியே அனைத்தையும் கடத்தி, ஒருவர் மனதை ஒருவர் அறிந்தும் மௌனமாய் நாட்களை கடத்தினர்.
இன்டெர்னல் ஆடிட்டிங் என்று சிலமுறை ராஜாவின் நிறுவனத்திற்கும் நேரடியாக வந்தும் செக் செய்ய ஆரம்பித்து இருந்தான் இளா. நேராய் வருபவன் ராஜாவின் அறையின் உள்ளே சென்று சரி பார்ப்பான். யாரையும் நோக்காது வந்த வழியே சென்று விடுவான். ஒரு முறை கூட சுபாவை அவன் பார்க்கவே இல்லை. அது விதியின் சதியோ என்றே தோன்றுகிறது.
அன்றும் அப்படிதான் வந்து ராஜாவின் அறையிலே அமர்ந்து கணக்கில் அவன் ஆழ்ந்து இருக்க, ரோஜாவும் அவனுக்கு அருகே அமர்ந்து கர்மசிரத்தையாய் அனைத்தும் சொல்லி கொண்டிருக்க, ராஜாவோ விழியகற்றாது அவளையே பார்த்து இருந்தான்.
நிமிடங்கள் கழிய ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்தவளோ, மெல்லிய பதட்டம் மனதில் இழையோட தடுமாற ஆரம்பித்தாள். வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கி தவிக்க, பதில்கள் முன்னுக்கு பின் முரணாய் வர தொடங்கின. என்ன முயன்றும் கவனம் சிதற பேதையவளும் என்ன செய்திடுவாள். விழிகளால் அவனையே பார்த்து கொண்டிருக்க முடியாமலும், விழியகற்ற முடியாமலும் புதியதாய் ஒரு உணர்வு அவளுள்ளே.
” நீ பார்க்கும்
பார்வைகள் பூவாகும்…
நெஞ்சுக்குள் தைக்கின்ற
முள்ளாகும்…”
தங்கள் உலகில் இருவரும் கற்பனை உலகில் பாடியபடி மிதக்க ஆரம்பித்து விட்டனர். தங்களையே மறந்து இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டிருக்க, அங்கே கரடியாய் ஒருவன் கேள்வி கேட்டு கத்தி கொண்டிருப்பது அவளின் காதிலே விழவே இல்லை. வினாவுக்கு விடையும் வராத நிலையில் தான் இளா நிமிர்ந்து பார்த்தான்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்க, இளாவும் நோக்க அங்கே நோக்கியா மொமெண்ட் நடந்து கொண்டிருந்தது. இருவருக்கும் இடையே சென்று சொடக்கிட்டு பார்க்க அப்போதும் காதல் தவம் கலையவில்லை. அவர்கள் நிலை கண்டு சிரிப்பு வந்தவனோ சட்டென்று ராஜாவின் காலில் ஓங்கி மிதிக்க, ” ஸ்ஸ்.., ஆஆ..” வலியில் கத்திய பின் தான் காதல் யோகிக்கு உணர்வும் வந்தது. பெண்ணவளின் மோனமும் கலைந்தது.
” ஏன்டா கரடி., காலை மிதிச்ச,” என்பது போல வாயே திறக்காமல் கண்ணாலே எரித்து விடுவதை போல முறைத்து பார்த்து கொண்டிருந்தவனை கண்டு,
நக்கலாய் சிரித்து ” வொய் ஆர் யூ கியர் பார் ..,? புருவம் உயர்த்தி இளா கேட்க.,
“இருந்தா உனக்கு என்னடா., ” குறுக்கே புகுந்து கடுப்பை கிளப்பி விட்டானே, என பல்லை கடிந்து கொண்டு மிடுக்காய் பதில் சொல்ல.
“என்ன என்னடா., ” என்றான் அழுத்தி.,
” ப்ப்ச்.., டேய்.., நான் இங்கே பாஸ், இருப்பேன் உனக்கென்னடா ” சலித்து கொண்டே சொல்ல.
இருவரையும் முறைத்து பார்த்தபடி ” எஸ், யூ ஆர் ரைட்., நீங்க பாஸ். நான் ஆடிட்டர்., ரோஜா மானேஜர் .., வந்த வேலையை மட்டும் பார்க்கலாமா ” என்றவன் அவன் காதருகே குனிந்து அடிக்குரலில் ” திருப்பி அவளை பார்த்த, கண்ணை நொண்டி கையில கொடுத்திருவேன்., மூடிக்கிட்டு உட்காருடா., ” என்றான் மெதுவே.
” சாரிண்ணா..,” என்றாள் ரோஜா தலை குனிந்து. தாயிடம் மாட்டி கொண்ட சிறு பிள்ளை போல் குற்ற உணர்வில் அவள் தவித்தாள். இத்தனை நாட்கள் பழக்கத்தில் இளா அவளின் பாசமான அண்ணனாக என்றோ மாறியிருந்தான். அவன் முன் தன்னை மறந்து நின்ற கழிவிரக்கத்தில் தத்தளித்தவள் தன் தலையில் தானே மானசீகமாக கொட்டி கொண்டவள், அதன் பின் மறந்தும் ராஜா புறம் திரும்பி பார்த்தால் இல்லை.
இருவரும் காதல் வயப்பட்டு உள்ளனர் என்றும் தெரியும், இன்னும் சொல்லாமல் உள்ளனர் என்றும் அவனுக்கு நன்கு தெரியும் . அதன் பின் இளா வேளையில் மட்டுமே இருவரையும் கவனம் செலுத்த வைத்தான்.
பணியை முடித்து விட்டு அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்தவன் ” ரோஜா…! போயும் போயும் உனக்கு இந்த பன்னி மூஞ்சி வாயன் தான் வேணுமா., நான் வேற நல்ல மாப்பிள்ளை பார்க்குறேனே.., இவன் வேண்டாம்..” என்றான் ராஜாவை நக்கலாய் பார்த்து கொண்டே.
அவள் ஒன்றும் கூறாமல் மௌனமாய் இதழ் கடித்து நிற்க..” இந்த பெட்ரோமாக்ஸ் லைட் தான் உனக்கு வேணுமா., இவன் உனக்கு சரிப்பட மாட்டான்.., நாம வேற .., ” என ஆரம்பிக்கும் போதே இளாவின் வாயை கை கொண்டு இறுக பொத்தியவன்,
” ரோஸ்..! என்னை தவிர உன்னை யாரும் கல்யாணம் பண்ண முடியாது., விடவும் மாட்டேன், நீ எனக்கு தான், இந்த குரங்கு சொல்றத எல்லாம் நம்பாதே, ” என்றவன் அவன் வாயிலிருந்து கையை எடுத்தபடி,
” உன்னை குண்டுக்கட்டாய் கட்டி தூக்கிட்டு போய், உன்னை வச்சே என் மாமனார்கிட்ட நாளைக்கே பொண்ணு கேக்குறேன்டா., பெருசா பேசுறான் ..,நீ வேற ஒருத்தன பார்த்துருவியா., கொன்னே போட்ருவேன் ” என்றான் முதுகில் பட்டென அடித்து.
” அதை முதல்ல பண்ணு., அப்புறம் பாரு.., பேசு.., நான் ஒன்னும் சொல்லவே மாட்டேன் ” என்றான் நல்ல அண்ணனாய் தோளை குலுக்கி கொண்டு.
இத்தனை நாள் தன் காதல் சொல்ல தயங்கி கொண்டு இருந்தவன் நாளையே வந்து பெண் கேட்பதாய் சொன்னவுடன் மகிழ்ச்சியில் அவளுக்கு அழுகையே வந்து விட்டது. ராஜா கல்யாணம் பற்றி கேட்டவுடன் காதலாய் கசிந்துருகி அவனை பார்த்தவள், அப்பாவிடம் சென்றால் என்ன சொல்வாரோ என்றும் பயந்தாள். அச்சமும், நாணமும், பயமும், பதட்டமும், தயக்கமும், தடுமாற்றமாக கண்ணீர் விழி படலம் சூழ , இமை சிமிட்டி அதை கட்டுப்படுத்தியவள் சம்மதமாய் தலையாட்ட
பின் அவனே ” ராஜா, நீ அவளை லவ் பண்ணல, உன் அப்பா அம்மாவிற்கு பிடிச்சி போய் தான் பொண்ணு கேக்க போறாங்க. அங்கிள் கிட்ட நான் பேசுறேன். அப்புறம் ரோஜா வீட்டிலும் அவங்களே பேசட்டும்., . நீங்க இதில இண்டெர்வியர் ஆக வேண்டாம். ” என்றவுடன் புரிந்ததாய் தலையாட்டினாள்.
“இவ்வளவு தான் .., முடிஞ்சி போச்சு ..,இதுக்கு சொல்ல பயந்துகிட்டு., தயங்கி கிட்டு., என்னங்கடா உங்களோட ” ஈசியாக சொல்லிவிட்டான் இளா. தனக்கு வந்தால் தானே அதை சொல்வதும், வெல்வதும் எவ்வளவு கடினம் என்று அவனுக்கு புரியும்.
அவன் அருகே சென்று ” தேங்க்ஸ்ணா.., ” என இளாவின் கையை பற்ற ராஜாவிற்கு தான் பற்றி எரிந்தது. ” நான் லவ் சொல்றேன், ஒரு வார்த்தை பதில் சொல்லாம உன்கிட்ட வந்து நிக்குறா ” மனதில் பொறுமியவனின் உணர்வுகள் விழி வழி தெரிந்திட காட்டமாய் ரோஜாவை பார்த்து நின்றவனின் முதுகில் தட்டியவன்
” அவளுக்கும் புடிச்சதால தானே தலையாட்டிட்டு பேசாம இருக்குறா, இது கூட புரியல, நீ எல்லாம் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, விளங்கிரும் ., ” என்ற இளாவை முறைத்தவனோ
” ஆமா, இவரு பெரிய லவ் கிங், கண் முன்னாடி பொண்ணு நின்னாலும் கடிவாளம் போட்ட குதிரை மாதிரி கணக்கு மட்டும் பார்க்கிற மூஞ்சியெல்லாம் என்கிட்டே இப்படி பேசவே கூடாது, போடா….” என முறுக்கி கொள்ள.
இதற்கு மேலும் தானிருந்தால் அவள் அவனிடம் பேசவே மாட்டாளென எண்ணியவன் காதல் பறவைகளுக்கு தனிமை கொடுக்க எண்ணி ” சரி நான் கிளம்புறேன்., அப்புறம் கழுத்து பிடிச்சு கூட வெளியே தள்ளுவான் உன் ஆளு .., ” எள்ளலாய் தோளை குலுக்கி கொண்டு ரோஜாவிடம் மட்டும் சொல்லிவிட்டு, “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்…,” விசிலடித்தபடி வெளியேறி கதவின் அருகே சென்றவன் மீண்டும் திரும்பி பார்த்து, ” ரோஜா…!!!!, அவன் ஒரு தண்டம்., அவனை பார்த்து எல்லாம் பயப்படாதே., ஏதாவது சொன்னா என்கிட்டே சொல்லு., ஒன்னும் பண்ண மாட்டான்.., இருந்தாலும் சொல்றேன்.., ” நமட்டு சிரிப்போடு சொல்ல.,
” அடேய் , இன்னும் போகலையா நீ., கிளப்பி போடா., காத்து வரட்டும்., ” ராஜாவின் கடுப்பில்,
” நான் போய் பத்து நிமிசமாச்சு., மச்சான்., உனக்கு தான் நான் கூடவே இருக்கிற மாதிரி மனப்பிராந்தி., ” இன்னுமே கலாய்க்க ரோஜாவே அவனின் அலும்பில் சிரித்து விட்டாள். அதன் பின் தான் வெளியேறினான் நிம்மதியாய் புன்னகையோடு.
error: Content is protected !!